3

       பள்ளி வளாகத்திலே சற்று தூரம் நடந்தவள், திரும்பி சிஸ்டர் சற்று தள்ளி வருவதை பார்த்துக்கொண்டாள்.

     பின்பு அவர்களிடம், “என்ட்ட என்ன பேசணும்”, என்று கேட்டாள்.

    அவர்களோ “நீ என்ன படிக்கப் போற”, என்று கேட்டனர்.

      மதரிடம் சொன்னதையே திரும்ப சொன்னாள், “ஏன் மெடிசன் எடுக்கலாமே”, என்று கேட்டான்.

     “எனக்கு வேண்டாம்”, என்று சொன்னாள்.,

     முகேஷ் தான், “ஏன் உங்க அம்மா டாக்டர் தானே, ஏன் நீ மெடிசன் பண்ணலாம்  இல்ல”, என்று கேட்டான்.

     அவளோ “இல்ல எனக்கு அந்த லைன் அப்படி ஒன்னும் இஷ்டமில்லை”, என்று சொல்லி விட்டு தன்னுடைய விருப்பம் இன்ஜினியரிங் தான் என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னாள்.

       “ஏன் இன்ஜினியரிங்” என்று மீண்டும் கேட்டனர்.

     இவளோ  “உண்மையை சொல்லனும்னா., எனக்கு படிச்சு முடிச்ச உடனே வேலை வேணும்.,  நான் தனியா இருக்கேன், எத்தனை நாளைக்கு அடுத்தவங்க ஹெல்ப் ல இருக்க முடியும்.,  எனக்கு என்னோட வேலை மட்டும் தான் ஹெல்ப் பண்ணும். சோ மெடிசன் பண்ணினா, அதுக்கு மேல ஹையர் ஸ்டடீஸ் பண்ணனும், அது எல்லாம் செட் ஆகாது, இந்த மாதிரி அடுத்தவங்க கிட்ட ஒட்டுண்ணியா வாழுற எண்ணங்கள் எல்லாம் எனக்கு இல்லை”, என்று தன்னுடைய எண்ணத்தையும் தெரிவித்தவள்,

    “இதை கேட்க தான் வந்தீங்களா”, என்றும் கேட்டாள்.

     வந்த இருவரும், “சரி மெடிக்கல் ஃபீல்ட் வேண்டாம்., ஏன் வேற எதுவும் சூஸ் பண்ணலாமே, எவ்வளவோ படிப்பு இருக்கே”, என்று சொன்னார்கள்.

     இவளோ, “இந்த அளவு எனக்கு படிப்பதற்கான சான்ஸ் கிடைத்ததே பெரிய விஷயம்., எனக்கு இது போதும்., இதுக்கு மேல நான் எதுக்கும் ஆசை படல”, என்று சொன்னாள்.

        அவளிடம் “எட்டு வருஷமா இதே ஹாஸ்டல்ல இருக்கியே., லீவுக்கு வெளியே போகணும்னு தோணலையா”, என்று கேட்டார்கள்.

    அவளோ அவர்களை பார்த்து சிரித்தபடி, “எங்க போக.,  கொடைக்கானல்ல எல்லா இடமும் தெரியும்,  மதர் என்னை கூட்டிட்டு போவாங்க.,  மதர் எங்க கூட்டிட்டு போறாங்களோ அங்க மட்டும் தான் என்னால போக முடியும்”, என்றாள்.

      “சரி, உன்னோட போன் நம்பர் குடு”, என்று கேட்டான்.

    “போன் நம்பரா”, என்று கேட்டவள், “மதர் ரூம்ல லேன்ட் லைன் இருக்கும், அந்த நம்பர் தான் என்னோட நம்பர்”, என்று சொன்னாள்.

   “செல்போன்” என்றான்.

    “அதற்கான தேவை எனக்கு இருந்ததில்லை, அதனால வாங்கல”, என்று சொன்னாள்.

    அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர், பின்பு இருவரும் இவளை திரும்பிப் பார்த்தனர்.

    இவளோ, “வேறு எதுவும் கேட்கணுமா, இல்ல இத கேட்க தான் வந்தீங்கன்னா நீங்க கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு ஹாஸ்டலில் உணவு தயாரிக்கும் இடம் அருகே வந்திருந்தாள்.

    அங்கு சமையல் செய்து கொண்டிருந்தவரிடம், “என்ன ஃபுட் இன்னைக்கு”, என்று கேட்டு, அவர்  பதில் கேட்டவுடன் “ஓ சூப்பர்” என்று  சொன்னாள்.

    அவர்களுக்கு அப்போது தான் ஒரு எண்ணம் தோன்றியது., இவள் அங்கே பேசிக் கொண்டிருக்க இவர்கள் இருவரும் தனியே நின்று ஒருவரை ஒருவர் பார்த்தபடி., “முதல்ல நம்ம ரெண்டு பேரும் நிறைய பேச வேண்டியது இருக்குடா., நாளைக்கு மறுபடியும் இவளை வந்து மீட் பண்ணனும்., மதர் கிட்ட சொல்லிட்டு நம்ம இப்போ வெளியே போலாம்”, என்று சொன்னான்.

    பின்பு அவன் திரும்பி சிஸ்டரை பார்த்து.,  “மதரை பார்த்து பேசணும்”, என்று சொல்லிவிட்டு அவளிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் மதரை பார்க்க சென்றனர்.

     இருவரும் மதர் முன்னிலையில் சென்று அமரவும்.,  மதர் “என்ன அவட்ட விஷயம் பேசிட்டீங்களா”, என்று கேட்டார்.

    அவளிடம் சரியான பதில் கிடைக்கவில்லை என்பதை சொன்னவர்கள்.,  “நாங்க நாளைக்கு வரட்டுமா”, என்று கேட்டனர்.

மதரோ, “நாளைக்கு எதற்காக இன்னைக்கு பேசிட்டீங்க இல்ல”, என்று கேட்டார்.

     “இல்ல மதர் இப்போ அவளோட  எக்ஸாம் முடிஞ்சு லீவுல இருக்கா., அடுத்த வருஷம் அவளை காலேஜ் சேர்க்கணும்”., என்று சொன்னவர்கள்.,

       “எப்படியும் அவளோட ஸ்டடீஸ் பத்தி நாங்க தெரிஞ்சுகிட்டே ஆகணும்., அவ இஷ்டப்படி இன்ஜினியரிங் படித்தாலும்., அவளுக்கு தேவையானத நாங்க தான் பார்த்து செய்யணும்., அவளை இதே மாதிரி ஹாஸ்டல்ல வைக்க முடியாது இல்லையா”, என்று கேட்டனர்.

    மதரோ, “தம்பி நீங்க சொல்றது புரியுது., ஆனா நா அவளுக்கு எந்த காலேஜ் கிடைக்குதோ., அதை பொறுத்து அங்கு உள்ள சர்ச் உடன் சேர்ந்த ஹாஸ்டல்ல கேட்டு  சேர்த்து விடுறேன் அப்படின்னு தர்ஷனாட்ட சொல்லி இருக்கேன்., அவளுக்கு நானே  நல்ல ஹாஸ்டல் பார்த்து கொடுப்பேன்”, என்று சொன்னார்.

      “இத பத்தி தான், நாளைக்கு நாங்க பேச வரோம் ன்னு சொன்னோம்., முதல்ல நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிறோம்., அதுக்கப்புறம் வர்றோம்”, என்று சொல்லி படி கிளம்பியவர்கள்.,

    “நிச்சயமா வருவோம் மதர், நீங்க வேணா எங்க அப்பா கிட்ட பேசிக்கோங்க., அவன் தாத்தா கிட்டையும்  கேட்டுக்கோங்க”, என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றனர்.

      அன்று இரவே திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தில் வந்திருந்தவர்கள்., இப்போது வீட்டிற்கு அழைத்து சொல்லி விட்டு கூட ஒரு நாள் தங்குவதாக  சொன்னார்கள்.

“ஏன்” என்று வீட்டில் கேட்டதற்கு “அதெல்லாம் உங்ககிட்ட நேர்ல தான் பேசணும்” என்று சற்று கோபமாகவே வீட்டினரிடம் பேசியது போல தோன்றியது.

     இருவரும் தங்கியிருந்த அந்த பெரிய ஹோட்டலில் உணவகப் பகுதியில் அமர்ந்திருந்த இருவரும் தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்திருந்தாலும்., ஏனோ உணவு உள்ளே செல்வேனா என்றது.,

   இருவரும் அந்த உணவை பார்த்துக் கொண்டே அமர்ந்தபடி பேசினர்.

    “நல்ல ஸ்கூல் தான், நல்ல ஹாஸ்டல், நல்ல ஃபுட், எல்லாமே ஓகே., ஆனா அந்த பொண்ணோட நிலை”, என்று முகேஷ் ஆரம்பிக்க.,

     வினித்தும்,  “நானும் அதைத்தான் நெனச்சிட்டு இருந்தேன், ஏன் இரண்டு வீட்டிலும் இப்படி பண்ணாங்க”,

இருவரும் அவரவர் வீட்டை குறை சொல்லியபடி., “ஓகே இனிமேல் நம்ம இவளை இப்படி விடக்கூடாது., நாம இவள பொறுப்பு எடுத்துக்குவோம்”, என்று சொன்னார்கள்.

    “நம்மள நம்பி எப்படி விடுவாங்க”, என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் .

     “நாளைக்கு மதர் கிட்ட பேசுவோம்., முதல்ல உங்க வீட்ல நீ பேசு.,  எங்க வீட்ல நான் பேசுறேன்., அவளோட படிப்பு பொருத்தவரைக்கும் அவளோட இஷ்டப்படி அவ படிக்கட்டும். அவளுக்கு படிப்புக்கு உண்டான செலவை நம்ம ரெண்டு பேர்  பேமிலியும் ஏத்துக்கிடுவோம்.,  ஏன் எப்படினாலும் நம்ம வீட்டு  ஆள்கள் தானே செய்யணும்.,

  அவளுக்கு தனியா ஒரு வீடு பார்க்க சொல்லுவோம். அந்த வீட்ல அவளுக்கு ஒரு குக் ரெடி பண்ணி கொடுப்போம்., இல்ல காலேஜ்ல ஹாஸ்டல்ல இருக்கேன்னு சொன்னானா., வேண்டாம் ன்னு சொல்லுவோம், அவளுக்கு தேவையான அத்தனையும் செய்யணும்.,  அவளை அப்பப்ப வெளிய கூட்டிட்டு போகனும், முதல்ல அவளுக்கு வெளி உலகத்தை பழக்கணும்.,

   இந்த ஸ்கூல் அட்மாஸ்பியர் மட்டும்தான் அவளுக்கு தெரிஞ்ச விஷயம் ன்னு எனக்கு தோணுது”, என்று முகேஷ் சொன்னான்.

   வினித்தும் அதை ஆமோதித்தவனாய்., “நானும் இன்னைக்கு இதுதான் ஃபீல் பண்ணேன்., அவளுக்கு அந்த ஸ்கூல், மதர்., அங்க இருக்க சிஸ்டர்., அதைத் தவிர அங்க இருக்க ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ்., நியூ ஸ்டுடென்ட்ஸ்., இதை தவிர ஸ்டாப்ஸ் அவங்கள தவிர இவளுக்கு வேற யாரும் தெரியல”, என்று சொன்னான்.

     “உண்மை தானே ஒரு போன் கூட இந்த காலத்துல இல்லாம இருக்கிறா, அப்படிங்கறது யோசிக்க வேண்டிய விஷயம் தானே., நம்ம இன்னும் கொஞ்சம் கேர் எடுத்து இருக்கணும்.,  தப்பு பண்ணிட்டோம்., நம்ம காலேஜ் ஜாயின் பண்ண புதுசுலையே இவள வந்து பார்க்க ஆரம்பித்து இருந்தோம் னா இதுக்குள்ள இவளை வெளியே கொண்டு வந்து இருக்கலாம்.,  பட் நிச்சயம் நோ தான் சிஸ்டர் சொல்ற மாதிரி சர்ச்சில் இருக்கிற ஃஹாஸ்டல் அந்த மாதிரி எங்கேயும் விடக்கூடாது.,  இனி அவ நம்மோட பொறுப்பு., இன்னைக்கு வீட்ல பேசுவோம்”, என்று சொல்லி அவரவர் வீட்டில் பேசி இருவரும் பிடிவாதமாக முடிவு செய்ய போய் வீட்டில் உள்ளவர்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை.,

     இவர்களோ, “நீங்க எதை எதிர்பார்த்து அவள வளர்த்தீங்களோ., அது உங்களுக்கு வேணும்னா, நாங்க சொல்றபடி நீங்க கேட்டா மட்டும் தான்., நாங்க அவ கிட்ட பேசி வாங்கி தருவோம்., இல்ல அப்படின்னு சொல்லியாச்சுன்னா எதுவுமே உங்களுக்கு கிடைக்காத படி செஞ்சு விட்டுருவோம்”, என்று இருவருமே மிரட்டி தான் வீட்டினரை சம்மதிக்க வைத்திருந்தனர்.

     அதன் பிறகு அவள் தந்தையின் வக்கீல் நம்பர்., ஆடிட்டர் நம்பர், என  நம்பரை வாங்கி அன்றே அவர்களோடு பேசி சில விஷயங்களை பற்றிய தெளிவான  முடிவுக்கு கொண்டு வர.,

   அவர்களும் இவர்கள் பேசியதற்கு சரி என்று சொன்னார்கள்.

    ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்தில் அவளுடைய 18 வது வயது நிறைவுபெறும்., அதற்காக தான் குடும்பமே கழுகு போல காத்திருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும் என்பதால் இவர்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்து.,

    அவள் படிப்பு முடியும் வரை ‘யாரும் இவளிடத்தில் எதையும் பேச விடாதபடி, நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

     நம்மளுடைய பீஜியும் சென்னையிலே படிப்போம்., அப்போது தான் இவளை பாதுகாக்க முடியும்’, என்று இருவரும் பேசி முடிவு பண்ணினார்கள்.