“அது கூட குட் தான்” என்று சொல்லிவிட்டு “கொஞ்சம் ஜூஸாவே குடுங்க., தண்ணி குடிக்க பிடிக்கலன்னாலும் கொடுத்து தான் ஆகனும்., ஆனா எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணி கொடுக்குறீங்களோ, அது நல்லது”, என்று சொன்னார்.

  மலையாளத்தில் டாக்டர் சொன்னது எதையும் கவனிக்காமல், ஆங்கிலத்தில் அவரிடம் பேசியதோடு நிறுத்திக் கொண்டாள்.

    வீட்டினருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லியதால் அவனும் வேறு எதுவும் கேட்கவில்லை.,

   தாத்தா தான் “இனிமேலாவது அங்கு வந்து இரு, அவளை தனியா விட்டுட்டு, நீ பேசாம கம்பெனி போனேன்னா எப்படி, நீ வேற வர்றதுக்கு லேட் ஆகும்.,  அவ வீட்ல உட்கார்ந்து ஆபீஸ் வேலையவே பாத்துட்டு இருப்பா., அதெல்லாம் சரி வராது., இனிமேல் கொஞ்சம் ஒர்க்கை குறைத்து கொடுக்க சொல்லு., கொஞ்சம் தூங்கி எந்திரிக்கட்டும்”, என்று சொன்னார்.

     “லீவு போட்டுக்கலாம் தாத்தா., ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொன்னவன்.

    அவளை பார்க்க, அவளோ காரில் ஏறி உட்கார்ந்த உடனே தூங்க தொடங்கி இருந்தாள். பின்பு வீட்டுக்கு வந்து சேரவும் பெரிய வீட்டில் அவர்களுக்கான அறைக்கு சென்றவள்.,

   அடுத்த பத்து நிமிடத்தில் உடையை மாற்றிக் கொண்டு வரவும், பாட்டி அவளுக்கு உணவு எடுத்துக்கொண்டு அவர்களது அறைக்கே வந்துவிட்டார்.

    “தனா சாப்டுட்டு படு” என்று சொல்லி உணவை கொடுத்தார்.

   “இது என்ன பாட்டி வித்தியாசமா இருக்கு” என்று கேட்டான்.

   “டேய் அவளுக்கு கொடுப்பதெல்லாம் என்னது என்னதுன்னு கேட்க கூடாது”, என்று சொன்னவர்., அவளிடம் சாப்பிட கொடுத்தார்.

அவளோ ஒருவாய் எடுத்து சாப்பிட்டு பார்த்துவிட்டு, விழி விரித்தவள், பாட்டியிடம் விரல் அசைத்து செய்கையில் சூப்பர் எனும் விதமாக சொன்னவள், ரசித்து ருசித்து சாப்பிட தொடங்கினாள்.

    பாட்டியிடம் “இதை எப்படி செய்வீங்கன்னு எனக்கு சொல்லித் தரீங்களா”, என்று கேட்டாள்.

    பாட்டியோ, “நீ கொஞ்ச நாளைக்கு இங்கதான் இருப்ப., நான் உனக்கு விதவிதமா செஞ்சு தாரேன்., கத்துகிறது அப்புறமா கத்துக்கலாம்”, என்று சொன்னார்.

    அவர்களுடைய இருப்பிடம் இன்னும் கொஞ்ச நாள் இங்கு தான் என்பது போல் மாற்றப்பட்டிருந்தது.

    மூன்றாவது மாதம் ஸ்கேனில் அவளுக்கு இரட்டைக் குழந்தை என்று தெரிய, டெலிவரி  வரை என்று நிமலனிடம் பேசி மொத்தமாக இங்கு தான் இருக்க வேண்டும் என்றபடி மாறிவிட.,  அவன் தான் திருதிருத்தான்.

     பின்பு மருத்துவரின் ஆலோசனைப்படி, அவர்கள் இருந்து கொண்டாலும் அவளை பத்திரமாக பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

      ஏனெனில் ஐந்தாவது மாதமே வயிறு நன்றாக பெரிதாக தெரிய தொடங்கியிருந்தது., இரண்டு பிள்ளைகள் என்பதால் சில விஷயங்களில் கொஞ்சம் கஷ்டப்பட்டு  கொண்டிருந்தாள்.

     ஏழாவது மாதம் தமிழகத்தில் செய்வது போல அங்கேயும் அவளுக்கு வளைகாப்பு செய்ய., வயிறு நன்றாக பெரிதாக இருந்தது.

    மெடிக்கல் செக்கப் எல்லாம் ஆளாளுக்கு பார்த்துக் கொண்டாலும்., அவளுக்கு பிரஷர் ஏறுவது இறங்குவது என்பது கொஞ்சம் மாறுபட்டிருந்தது.

     உணவு கட்டுப்பாடு, மருத்துவ சோதனை அடிக்கடி செய்வது என மாறி போயிருந்தது.

     அவள் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தாலும், மனதிற்குள் சிறு பயம் இருக்கத்தான் செய்தது.

    முகேஷ் அவனுக்கு குழந்தை பிறந்திருக்கும் போதே இவள் போய் பார்க்க முடியாமல் இருக்க., அவன் தான் குழந்தையோடு இவளை வந்து பார்த்து சென்றிருந்தான்.

     இப்போது வினித் மனைவிக்கும் குழந்தை பிறந்து இருந்தது, அப்போதும் அவர்கள் தான் இவளை வந்து பார்த்து சென்றிருந்தனர்.

      ஏழாவது மாத வளைகாப்பிற்கும் குடும்பங்கள் அனைத்தும் சேர்ந்து நின்று செய்து முடித்திருந்தது.

     சென்னை வீட்டை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வினித் முகேஷ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இடை இடையே திவ்யா போய் பார்த்து கொண்டாள்.

    இவளுடைய சூழ்நிலையின் காரணமாக எட்டு மாதம் முடியவும்., டாக்டர் ஏற்கனவே சொல்லி தான் இருந்தார்,  “8 மாதம் முழுவதும் காத்திருந்ததே பெரிய விஷயம், ஒன்பதாவது மாதம் தொடங்கிய பிறகு அவளுடைய ஹெல்த்தை பொறுத்து குழந்தையை எடுத்து தான் ஆக வேண்டும்”, என்று சொல்லி இருந்தார்.

   அந்த சூழ்நிலையை பார்த்து, வினித் தான் நிமலனிடம் பொறுமையாக எடுத்து சொல்லி இருந்தான்.

    அவளிடம் சொல்ல, அவளோ “என்கிட்ட எதுவும் சொல்லாதே, எதுவா இருந்தாலும் நடக்கட்டும்., நான் எதையும் யோசிக்கல”, என்று சொல்லிவிட்டு அமைதி காத்தாள்.

     அவர்கள் சொன்ன அந்த செக்கப்பிற்கு பிறகு., அடுத்த 10 நாட்களுக்குள் அவளை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

    அறுவை சிகிச்சை முறை தான் என்று சொல்லும் போது அவனை “அவளோடு வருகிறானா”, என்று கேட்டனர்.

     நிமலன் பயந்து போய் “இல்லை”, என்று சொன்னான்.

     அதற்குள் முகேஷ் வந்து சேர்ந்திருந்தான்.

     “முகேஷ் வினித், உள்ளே சென்று விட அனஸ்தீசியா கொடுக்க செல்லும் போது., டாக்டரிடம், “ப்ளீஸ் டாக்டர் எனக்கு ஃபுல் அனஸ்திஷ்யா குடுங்க., முதுகுல இன்ஜெக்ஷன் போடாதீங்க”, என்று சொல்லி விட்டு டாக்டரிடம், “இல்ல னா நீங்க எல்லா சி செக்ஸனுக்கு பண்ணுற மாதிரி இருந்து, அதை நான் பாத்துட்டு இருந்தேன்னா ஏதாவது பயத்துல கூட.,  ஏற்கனவே பிரஷர் மாறுதுன்னு சொன்னீங்க இல்ல.,  இப்ப இன்னும் வேரியேஷன் வர வாய்ப்பு இருக்கு”, என்று சொன்னாள்.

    அப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டிருந்தாள்.,

     முகேஷ் தான், “இவ இன்னும் மலையாளம் பேசலையா டா”, என்றான்.

    “இப்ப ரொம்ப முக்கியம்”, என்று சொல்லி விட்டு, “சரி வா அண்ணனை எப்படியாவது இழுத்துட்டு வரலாம்”, என்று சொன்னான்.

“பொறு டா, அவளுக்கு சடேஷன் கொடுத்து முடிக்கட்டும்”, என்று சொன்னான்.

    அவர்கள் இருவருமே வெளியே சென்று விட்டனர்.

  அவளுக்கு அறுவை சிகிச்சை முறைக்கு அனைத்தையும் தயார் செய்து விட்டே,  மயக்க மருந்து செலுத்தவும் தான், அதன் பிறகு வினித்ம் முகேஷ்ம் உள்ளே வந்து பார்த்து விட்டு நிமலனை கட்டாயப்படுத்தி உள்ளே அழைத்து வந்து அவள் அருகில் அமர வைத்தனர்.

    “நீங்க அந்த பக்கம் திரும்பியே பார்க்க வேண்டாம்.,அவ கைய புடிச்சிட்டு இப்படியே உட்காருங்க.,  நாங்களுமே அங்கே போக போறது இல்ல., உங்க பக்கம் தான் நிக்க போறோம்”, என்று சொன்னான்.

   சற்று நேரத்தில் விமலனின் குழந்தைகளை எடுத்து முடித்திருக்க நிமலனும் கண்மணியின் கையைப் பிடித்தபடி அவள் படுத்து இருந்த ஆப்ரேஷன் டேபிளில் தலை சாய்த்து இருந்தான்.

   குழந்தைகளின் அழுகுரல் கேட்கும் போது கூட அவன் தலை நிமிரவில்லை.,

    முகேஷ் தான் தலையை தடவ, “நீங்களே போய் பாருங்கடா”, என்று சொன்னவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

ஒரு பையனும், ஒரு பெண்ணும், ஆக இரண்டு பிள்ளைகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்திருக்க.,

    அவற்றை குழந்தை மருத்துவர் கையில் வைத்து அதற்கான சோதனைகளை முடித்து, சுத்தம் செய்து குழந்தைகளை துணியில் சுற்றி வினித்., முகேஷ்., கையில் கொடுக்க இருவரும் குழந்தையை எடுத்து வந்து நிமலனை நிமிர்த்தி காட்டினர்.

அவன் இரண்டு குழந்தைகளையும் ஒரு முறை பார்த்தவன்., “என் கண்மணி எந்திரிச்சதுக்கு அப்புறம் தான், நான் கையில வாங்குவேன், கொண்டு போயிருங்க”, என்று சொன்னான்.

    வினித் தான், “என்னன்னா இப்படி பேசுறீங்க., அவளுக்கு ஒன்னும் இல்ல., நார்மலா  பண்ணுற சிசேரியன் தான்., அவளுக்கு பிரஷர் ஏறி இறங்க போய்  ஃபர்ஸ்ட் டாக்டர்ஸ் பயந்தது உண்மை தான்,  இப்போ ஓகேவா இருக்கா.,  பிரஷர் கூட பாருங்க நார்மலா தான் இருக்கு.,  என்ன  ஆப்டர் டெலிவரி கொஞ்சம் பாத்துக்கணும் அவ்வளவு தான், வேற ஒன்னும் இல்ல., நார்மலா ரெண்டு நாள்ல ரூமுக்கு மாத்திடுவாங்க, பயப்படாதீங்க., நீங்க இப்படி பயந்தீங்கன்னா, அவ கூட கொஞ்சம் பயந்துருவா”, என்று சொன்னான்.

   “இல்லடா, அவ எனக்கு கண்ணு முழிச்சு வந்தா போதும்,  என்று சொல்லி அவள் கைகளை தன்  கைகளுக்குள் பொத்தி வைத்திருந்தான்.

    “இங்க பாருங்க, இப்படி இருந்தீங்கன்னா, பக்கத்திலேயே உங்களுக்கு பெட் போட வேண்டியது ஆயிடும்., டென்ஷனாகாதீங்க,  வீட்டில் உள்ளவங்கள டென்ஷன் ஆகாதீங்க., வாங்க அவள கிளீன் பண்ணி வெளிய கூட்டிட்டு வருவாங்க”, என்று சொன்னான்.

    “இல்ல அவ கண் முழிக்கட்டும்”, என்று சொன்னான்.

   “அண்ணா இனிமேல் அவங்க கிளீன் பண்ண ஆரம்பிக்கும் போது, நம்ம இங்க இருக்க கூடாதுபாங்க” என்று சொல்லவுமே,

     அங்கு டாக்டர் “ஓரளவுக்கு  முடிஞ்சது. இன்னும் கொஞ்ச நேரத்துல  ஐசியூவுக்கு மாத்திருவோம்., அதுக்கப்புறம் வந்து பாருங்க”, என்று அவனிடம் சொன்னார்.

    இருவரும் குழந்தைகளை எடுத்து வந்து வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு காட்டிவிட்டு., மீண்டும் குழந்தைகளை அவள் அருகில் சென்று வைத்தனர்.

   நர்ஸ் உதவியோடு அவள் இரண்டு கைகளுக்குள்ளும் இரண்டு குழந்தைகளையும் வைத்தனர்., பின்பு “அண்ணா இங்க பாருங்க”, என்று சொல்லவும்.,

     நிமிர்ந்து பார்த்தவன், அவளையே பார்த்தபடி இருந்தான். அவள் தலையைக் கோதி அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.,

    அவள் அருகே குனிந்து, “கண்மணி வெளியே வெயிட் பண்றேன், சீக்கிரம் வந்துரு”, என்று சொல்லிவிட்டு வெளியே வந்து அமர்ந்தான்.

   அனைவரும் அவனிடம் பேசினாலும், சாதாரணமாக பதில் கொடுத்தாலும், அவனது மனநிலையை வினீத் முகேஷ் மட்டும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

    ஏனெனில் சிசேரியனுக்கு தயார் செய்யும் போது, இவள் தான் முழு அனஸ்திஷ்சியா கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தாள்.

      டாக்டர் தான் “அப்படி கொடுப்பது ரிஸ்க்”, என்று சொன்னார்.