கடவுளோ மதருக்கு இதோ உனக்கான பதிலை அனுப்பி வைக்கிறேன் என்பது போல.,  மறுநாளே தர்ஷனாவை தேடி பள்ளியின் வளாகத்தில் இரண்டு பேர் வந்து நின்றனர்

    மதர் அங்கிருந்த சிஸ்டரிடம் “தர்ஷனாவை கூட்டிட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

   சிஸ்டரிடம்”மெதுவா வாங்க” என்று சொல்லி அனுப்பி விட்டு வந்திருந்தவர்களிடம் வந்து அமர்ந்தார்.

     அவர்களோ எட்டிப் பார்க்க., “சொல்லி விட்டிருக்கேன்.,  சிஸ்டர் கூட வருவா” என்று சொல்லி விட்டு.,

    “சொல்லுங்க உங்களை  பத்தி சொல்லுங்க”, என்று சொன்னார்.

இருவரும் ஒருவரும் முகத்தை  பார்த்துக் கொண்டனர். பின்பு தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டனர்.

   ” தப்பா எடுத்துக்க கூடாது மதர்,  நாங்க பேசுற தமிழ் அந்த அளவுக்கு சுத்தமா இருக்காது”, என்று முதலில் ஆரம்பித்தவன்.,

      “நான் முகேஷ் ஃப்ரம் கர்நாடகா”, என்று சொன்னவுடன் மதர் அவனை கூர்ந்து பார்த்தார்.

   அவனும் “தர்ஷனாவோட தாய் மாமா பையன்”, என்று சொன்னான்.

    ” ஓகே எதனால் இப்ப நீங்க வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா”, என்று கேட்டார்.

     “இல்ல இதுவரைக்கும் எங்க வீட்ல இருந்து யாரும் வந்து அவளை பார்த்தது கிடையாது., ஆனால் இந்த முறை அப்பா என்ன போய் பார்த்துட்டு வா., அப்படின்னு சொன்னாங்க., நான் சென்னையில் மெடிக்கல் காலேஜ்ல இப்ப பைனல் இயர் பண்ணிட்டு இருக்கேன்”, என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

மதர் மற்றவனை திரும்பிப் பார்க்க ., அவனும் “நானும் அப்படித்தான்.,  நான் வினித் ப்ரம் கேரளா”, என்று சொன்னான்.

    “கேரளா” என்று மதர் கேட்க.

    “அவங்க அப்பா வழியில அப்பாவோட தங்கச்சி பையன் நானு” என்று சொல்லிக் கொண்டான்.

    “சரி இப்ப எதுக்காக ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க”, என்று கேட்டார்.

    “எங்க வீட்லயும் இதுவரைக்கும்  தர்ஷனாவை பத்தி பேசினதே கிடையாது., இந்த தடவை தான் ஊருக்கு போயிருக்கும் போது தாத்தாவும் சொன்னாங்க., பெரிய மாமா.,  சொன்னாங்க அம்மா சொன்னாங்க., கண்டிப்பா போய் பாத்துட்டு வரணும் அப்படின்னு சொல்லி.,  அவங்க தான் அட்ரஸ் கொடுத்தாங்க”, என்று சொன்னார்.

    அவரோ, “சரி இப்போ நீங்க ரெண்டு பேரும் வந்து தர்ஷனா ட்ட என்ன கேட்க போறீங்க”, என்று கேட்டார்.

    “தப்பா எடுத்துக்காதீங்க மதர்., நாங்க ரெண்டு பேருமே இங்க தான் வாரோம்னு தெரியாது., ஆக்சுவலா ரெண்டு பேரும் காலேஜ்ல ஒண்ணா படிக்கிறோம்., ரெண்டு பேரும் பைனல் இயர் மெடிசன்., சென்னை மெடிக்கல் காலேஜ்ல.,

நாங்க ரெண்டு பேருமே பிரண்ட்ஸ்., முகேஷ் தற்செயலா என்கிட்ட சொன்னான்,  நான் கொடைக்கானல் போறேன், அப்பா ஒரு முக்கியமான வேலை கொடுத்து இருக்காங்க போறேன்னு சொன்னான்,  அதனால தான் நானும் எனக்கும் கொடைக்கானலில் ஒரு வேலை இருக்குன்னு சொன்னேன்,  அவன் என்னை ஆச்சரியமா தான் பார்த்தான்.,

   நானும் ஒரு முக்கியமான வேலைப்பா, இந்த தடவ ஊருக்கு போயிருந்தேன் இல்ல, குடும்பமே மொத்தமா என்ன போய் பாத்துட்டு வா ன்னு  சொல்லி இருக்காங்க.,  அந்த வேலையை முடிக்கணும் அப்படின்னு சொல்லி தான் நாங்க ரெண்டு பேரும் கிளம்பினோம்.,

    ஆக்சுவலா சென்னை டு மதுரை பிளைட்ல வந்தோம்., மதுரையிலிருந்து பஸ் ஏறி கொடைக்கானல் வர்ற வழியில தான்., எங்க போற என்னன்னு ரெண்டு பேரும் பேசும் போது தான் இங்க வாரேன்னு தெரியும்.,

   அதுக்கப்புறம் தான் தெரியும், தர்ஷனாக்கு அவன் அம்மாவழி உறவு,  நான் அப்பா வழி உறவு,   நிஜமா எங்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கும்னு நாங்க நினைச்சு கூட பார்த்ததில்லை.,

    இப்போ நாங்க தர்ஷனாவை பார்த்து பேசணும்”, என்று சொன்னான்.

    “என்ன பேச போறீங்க”, என்று கேட்டார்.

    “இல்ல ரெண்டு பேர் வீட்லயுமே சொல்லி அனுப்பி இருக்காங்க, ஜஸ்ட் அத பத்தி கேட்கணும்”, என்று சொன்னார்கள்.

   “முதல்ல அவ உங்க கிட்ட பேசுறாலா, இல்லையா ன்னு பாருங்க, ஏன்னா அவளை தேடி இதுவரைக்கும் யாரும் வந்தது கிடையாது., அந்த குழந்தை இங்க வந்து சேரும் போது அதற்கு ஒன்பது வயசு., இப்போ அந்த குழந்தையோட வயசு 17 வயசு., கிட்டத்தட்ட இந்த எட்டு வருஷத்துல அவளை பாக்கனு எந்த  உறவும் வந்தது கிடையாது.,

    அவளிடம் யாரும் உறவு சொல்லி பேசினது கூட கிடையாது., அப்படி இருக்கும் போது திடீர்னு வந்து நின்னீங்கன்னா அவ உங்கள அந்நியமா தான் பார்ப்பா., பேசி பாருங்க., பேசுறாளான்னு பாருங்க., பேசினா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொன்னார்.

    “இல்ல அவளோட ஹையர் ஸ்டடிஸ் பத்தி தான் நாங்க கேட்கணும்., முக்கியமா எங்க ரெண்டு பேரு வீட்லயும் சொல்லி அனுப்புனது அவளோட படிப்பு., இதுக்கப்புறம் என்ன பண்ண போறா அப்படிங்கறத தான்., ரெண்டு பேமிலியும் மெடிசன் ஜாயின் பண்ண வைக்கணும் அப்படிங்கிற ஒரு எண்ணம் இருக்கு”, என்று சொன்னார்கள்.,

   “இதை நீங்க அவ ட்ட பேசிக்கோங்க.,  நான் சொல்ல மாட்டேன்., நான் சொன்னேன் அப்படின்னா நான் சொல்லித்தான்  அவ பதில் சொல்றா ன்னு நீங்க நினைச்சிட கூடாது”, என்றவர்.

     “இது அவளோட 12 த் லீவு. அவ நிறைய எக்ஸாம்ஸ் ப்ரீப்பர் பண்றா, எழுதுறா ஆனா எல்லாமே அவளோட சாய்ஸ், நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்., இது உங்க அப்பாவுக்குமே தெரியுமே தம்பி”, என்று முகேஷ் பார்த்து கையை காட்டினார்.

    “அப்பா சொல்லி இருக்காங்க”, என்று சொன்னவன்.

   “நாங்க பார்க்கலாமா” என்று சொல்லவும் மதர் வாசலை எட்டிப் பார்க்க.,  அவள் சிஸ்டரோடு நடந்து வருவது தெரிந்தது.

   தலைக்கு குளித்து இருப்பாள் போலும்., தலையை விரித்து விட்டிருந்தாள். இங்கு இருந்து மதர் பார்க்கும் போது மதர் கண்களுக்கு அவள் வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல தான் தெரிந்தாள்.

    அவரவர் வளர்க்கும் பிள்ளைகள் அவரவர்க்கு உயர்வு தானே.,  மதர்க்கும் அப்படித்தான் தர்ஷனா உயர்ந்தவளாக தான் தெரிந்தாள்.

   ஏனெனில் ‘எந்த தவறான எண்ணங்கள் கூட அவள் மனதில் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.,  குழந்தை முகம் என்பது போல அத்தனை தெளிவான முகம். நிச்சயமாக மனதில் எந்த சஞ்சலமான எண்ணங்களும் அவளுக்கு இருப்பதில்லை., என்பது அவருக்கே தெரியும்.,

   மற்றவர்கள் போல கையில் செல்போனோ,  அதிகமான நட்புகளுடன் கூடி சேர்ந்து பேசுவதோ அவளது பழக்கம் இல்லை’ என்பதால் அவருக்கு ஒரு பெருமூச்சு தான் வந்தது.

   ‘முதல் முதலாக இரண்டு ஆடவர்களுடன் அவள் என்ன பேசப்போகிறாள்’, என்பதை யோசித்தவர்.

    ‘தனியே பேசட்டும் அவளே ஒரு முடிவுக்கு வரட்டும்’, என்று நினைத்தார் .

பின்பு எழுந்து கொண்டவர் “நான் அவ கிட்ட ஒரு வார்த்தை பேசியே அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே வரவும் இருவரையும் அறிமுகப்படுத்தியவர்.,

    அவர்களது உறவு முறையை அவளுக்கு சொன்னார். இவளும் அவர்களை பார்த்து “ஹாய்” என்று மட்டும் சொல்லி விட்டு

    மதரை பார்த்து “எதுக்கு மதர் வந்து இருக்காங்க”, என்றாள்.

     “உன்கிட்ட பேசணுமாம், உன்னோட ஸ்டடிஸ் பத்தி கேக்கணுமாம் வந்திருக்காங்க.,  நீ பேசு”, என்று  சொன்னவர்.,

  ” நம்ம ஸ்கூல்ல இவங்களுக்கு சுத்திக்காட்டிட்டு, அப்படியே பேசிட்டு வா”, என்று சொன்னார்.

   அவள் யோசனையோடு மதரை பார்க்க,  “சிஸ்டர் உனக்கு பின்னாடியே கொஞ்சம் தள்ளி வருவாங்க, அதனால நீ போ”, என்று சொன்னார்.

    தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு முன்னாள் நடக்க தொடங்கினாள்.

    இருவரும் மதரை பார்த்து விட்டு தேங்க்ஸ் மதர் என்று சொல்லிவிட்டு , அவள் அருகில் சென்றனர்.

   அவளோ அவர்களிலிருந்து சற்று தள்ளியே நடக்க தொடங்கினாள்.

   உறவு என்று வந்தவர்களை கண்டு முதலில் சற்று பதட்டமாக இருந்தாலும்.,  ‘அப்படி என்ன நம்மிடம் பேசுவதற்காக இத்தனை வருஷம் கழிச்சு தேடி வந்திருக்காங்க’ என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது.

   அதற்குள் மதரும் அவருக்கு அடிக்கடி போன் செய்து இவளைப் பற்றி விசாரிக்கும் அவர்களிடம், அவளின் ரத்த பந்தங்கள் அவளை தேடி வந்திருப்பதாக சொன்னார்.

பல சோகங்களை மனதில் வைத்துக்கொண்டு.. நான் நலம் நீ நலமா.. என்று எழுதுகிறது நம் விரல்கள்.. இது மனித இயல்பு.!