“ஒன்னும் இல்ல மதர், சிஸ்டர் சொன்னாங்க, உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்க ன்னு அதனால தான் வந்தேன்”, என்று சொன்னாள்.

      “உன்ன பாக்க இல்லடா, உங்க க்ளாஸ் தர்ஷினி ஸ்கூல் மாத்த போறாங்க இல்ல அது விஷயமா ஒருத்தங்க வந்திருக்காங்க”,என்று சொன்னவர், “நீ போ மா”, என்று சொல்லி அனுப்பினார்.

        “ஓகே மதர்” என்று தலையாட்டிக்கொண்டே திரும்பி நடந்தவள் தோழிகளோடு சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டிருக்கும் போது,

    மதரோடு பேசிக் கொண்டிருந்த இருவர் வெளியே வந்து நின்று பேசினர்., அவர்களின் முதுகு பக்கம் மட்டும் தெரிந்தது,

   அதே நேரம் மதர் அவர்களிடம் கொஞ்சம் கோபமாக பேசியது போல தான் தோன்றியது., மதர் முகமும் விவாதத்தின் போது இருக்கும் ஒரு இறுகிய தன்மையே இருந்தது. சற்று நேரத்தில் அவர்கள் கிளம்பி விட மதரும் தன்னறைக்கு சென்று விட்டார்.

    அதன் பிறகு அவளுடைய படிப்பு அதன் போக்கில் சென்றது. “படிப்பு மட்டும் தான் உன்னுடைய வாழ்வை உயர்த்தும்” என்று அடிக்கடி மதர் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

   அதுவே அவளுக்கும் ஆழப் பதிந்து போனது. அதன் பிறகு அவளுடைய பதினொன்றாம் 12 ஆம் வகுப்பு பாடங்கள் அத்தனை கஷ்டப்பட்டாலும் நல்ல மதிப்பெண்களோடு பாஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தன் மன கஷ்டங்களை கடந்து படிக்கத் தொடங்கி இருந்தாள்,

   பரீட்சை முடிந்த சமயம் மதர் “அடுத்து என்ன எடுத்து படிக்கப் போற”  என்று கேட்டார்.

    “என்ஜினியரிங் படிக்கலாம்னு நினைக்கிறேன் மதர்”, என்று சொன்னாள்.

அவள் அலைபேசி என்ற ஒன்று அவள் உபயோகித்ததே கிடையாது.

    மதர் ரூமில் இருக்கும் தொலைபேசியை பார்த்து இருக்கிறாள்.,  தன் அறை தோழிகள் மற்றும் பள்ளி தோழர்கள் தோழிகளிடம் இருக்கும் அலைபேசியையும் பார்த்திருக்கிறாள்.,  ஆனால் என்றும் அவர்களது பார்த்து ஆசைப்பட்டது கிடையாது.

     அது அவர்களுக்கான சொந்த அழைப்புக்கான போன் என்பது இவளுக்கு நன்றாகவே தெரியும் .

    ஒரு முறை மதர், “உனக்கு போன் எது வேணுமா” என்று கேட்கும் போது.,

    “எனக்கு எதுக்கு மதர் ” என்று சிரித்துக் கொண்டே கேட்டவள்.,

    “அவங்களுக்கெல்லாம் பேசுவதற்கு வீட்டில் ஆள் இருக்காங்க., கைல போன் வச்சிருக்காங்க, எனக்குன்னு பேச யார் மதர் இருக்கா,  நீங்க தான் இருக்கீங்க.,  உங்க கூட நான் இங்கே பேசுகிறேன் இல்ல., அப்புறம் எதுக்கு எனக்கு போன்., நீங்க எங்கேயும் வெளியூர் போனா உங்களோட ரூம்ல இருக்க போனுக்கு தான் கூப்பிடுவீங்க.,  அப்ப சிஸ்டர் உங்க ரூமுக்கு தான் என்னை  கூப்பிட்டு பேச கொடுப்பாங்க.,  அப்புறம் எதுக்கு மதர் எனக்கு போன்”, என்று கேட்கும் போதே தர்ஷனாவின் குரல் கலங்குவது அவருக்கு தெரிந்தது,

  இருந்தாலும் எதுவும் சொல்ல முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர்., “எல்லாம் ஒரு நாள் மாறும், தானாகவே சரியா போகும் தனா”, என்று மட்டுமே சொன்னார்.

    “எப்படி இருந்தாலும், எனக்கு அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மதர்., நீங்க சொன்னது தான், நான் படிக்கணும்.,  படிச்சு முடிச்சிட்டேனா,  என்னை திருப்பி இங்க சேத்துப்பீங்களா., நான் வேணா டீச்சர் ஆகட்டுமா., அப்படின்னா இதே ஸ்கூல்ல எனக்கு வேலை கொடுப்பீங்களா”, என்று கேட்டாள்.

   அவரோ சிரித்தபடி அவள் தலையை கோதிவிட்டு, “கர்த்தர் உனக்கு நல்லதே செய்வாரு தனா., நீ ஆசைப்பட்ட மாதிரி இன்ஜினியரிங்  படி , அதுக்கு என்னென்ன பண்ணனும்னு பாரு”, என்று சொன்னார்.

  “கம்ப்யூட்டர் கிளாஸ் மேம்  சொல்லுவாங்க.,  அப்ப நிறைய ஆஃப் அவங்க சொல்லிப் பார்த்திருக்கோம். அதுக்கு என்ட்ரன்ஸ் எல்லாம் எழுதணும் சொன்னாங்க மதர்”, என்று சொன்னாள் .

   “என்ட்ரன்ஸ் இல்லாமலும் போகலாமாம், ஆனால் என்ட்ரன்ஸ் எழுதின நல்ல காலேஜ் கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க”, என்று சொல்லி அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தாள்.

     மதரோ “நிச்சயமா எல்லாம் அப்ளை செய்யலாம்” என்று சொன்னார்.

    “ஓகே மதர்”, என்று சொன்னாள்.

   “தனா” என்று அழைத்தவர் “உங்கம்மா டாக்டரா இருந்தாங்களாம்., நீ மெடிசன் ஏதும் படிக்கணும்னு ஆசைப்பட்டா,  சொல்லு” என்று சொன்னார்.

   “இல்ல மதர் அப்படி எல்லாம் ஒரு ஆசை  இல்லை., தெரியும் நான் கேள்விப்பட்டு இருக்கேன்., அது மட்டும் இல்லாம எனக்கு லைட் லைட்டா ஞாபகம் இருக்கு., அம்மா டாக்டர்., அப்பா பிசினஸ் அதெல்லாம் ஞாபகம் இருக்கு ., வேண்டாம் மதர் , அப்பா என்ன படிச்சிருந்தாங்கன்னு எனக்கு தெரியாது.,  ஆனா அப்பா பிசினஸ்ல சூப்பரா பண்ணாரு அப்படின்னு சொல்லுவாங்க., அம்மா டாக்டர் இருந்தாங்க நல்ல கைராசி அப்படி எல்லாம் சொல்லி நான் காதலா கேட்டு இருக்கேன்., எனக்கு அந்த மாதிரி எல்லாம் தோணல மதர்.,  இன்ஜினியரிங் படிக்கிறேன். இப்போ ஐடில போனா நல்ல பியூச்சர் இருக்குன்னு சொன்னாங்க.,

   எனக்கு படிச்சு முடிச்ச உடனே ஒரு வேலை கிடைச்சா போதும்., வேற ஒன்னும் பெருசா எல்லாம் எனக்கு ஆசை இல்லை”, என்று சொன்னாள்.

   “படிக்கும் போதே கேம்பஸ் வருவாங்க மா, நீ நல்ல படிச்சா தான் உனக்கு கேம்பஸ் ல வேலை கிடைக்கும்”, என்று சொன்னார்.

     “அதெல்லாம் படிச்சிருவேன் மதர்”, என்று சொல்லி அவளுடைய எண்ணங்களை மதரோடு பகிர்ந்து கொண்டாள். அதே நேரம் அவருக்கு அழைப்பு வர.,

     இவள் “நான் ரூமுக்கு போறேன்” என்று சொல்லி விட்டு சென்றாள்.

    அவருக்கு வந்த அழைப்போ தர்ஷனாவை பற்றி விசாரித்தது.,

அந்தப்புறம் இருந்த குரல், “டீடைல்ஸ் கேட்டீங்களா”, என்றது.

இவரோ அவளிடம் பேசிக் கொண்டிருந்த படிப்பு விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொண்டார்.

    மற்றவற்றை கேட்காமல் விட, அந்த புறம் இருந்த குரல் “போன் பத்தி பேசினீங்களா”, என்று கேட்டது.

அவள்  சொன்னதை சொன்னவுடன் அந்த பக்கம் எந்த பதிலும் இல்லாமல் போனது.,

    “நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க”, என்று மதர் சற்று கோபமாக கேட்பது போல இருந்தவுடன்.,

   ” இல்ல மதர், நான் பேசுறேன், ஆனா பத்திரமா பாத்துக்கோங்க., நாங்க உங்ககிட்ட வந்து பேசுனது உண்மை தான்.,  அவ ரொம்ப முக்கியம் அதை மட்டும் பார்த்துக்கோங்க”, என்று சொன்னார்.

   “இதே மாதிரி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க., அவங்க மாமா அப்படித்தான் சொன்னாரு., அவங்க அப்பா பேமிலி அப்படித்தான் சொன்னாங்க., நீங்க புதுசா வந்து பேசுறீங்க., அவ ரொம்ப முக்கியம் சொல்றீங்க., ஆனா உங்கள பத்தின தகவல் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்றீங்க., பின்ன எப்படி நாங்க உங்களை நம்புறது., அது மட்டும் இல்லாம அவங்க மாமா ஃபேமிலிக்கு உங்களை பத்தின தகவல் தெரியக்கூடாது.,  அப்பா பேமிலிக்கு உங்களை பத்தின தகவல் தெரியக்கூடாதுனா., அப்ப நீங்க யாரு., நான் எப்படி உங்களை நம்பி அவளை பத்தின டீடெயில்ஸ் சொல்ல முடியும்”, என்று சொன்னார்.

   “நம்புங்க மதர், நம்பிக்கை தான் வாழ்க்கை.,  அவளை எந்த நம்பிக்கையில அவங்க மாமா, அன்ட் அவங்க அப்பா பேமிலி இரண்டும் நன்றாக பார்த்துக்கொள்ளும் ன்னு நினைக்கிறீர்களா., கண்டிப்பா இல்ல., அதுக்கான உண்மையான விஷயம் உங்களுக்கு ஒரு நாள் தெரிய வரும்.,  அப்ப நீங்க என்னை கூட நம்புவீங்க., அவங்கள நம்ப மாட்டீங்க”, என்று சொன்னது அந்த குரலுக்கு சொந்தமான ஆள்.

     “அது எப்படி இவ்ளோ ஸ்டாங்கா சொல்றீங்க”, என்று இங்கு மதர் கேட்டார்.

    “ஏன்னா விஷயம் அவ்வளவு பெரிய விஷயம்”, என்று சொன்னது அக்குரல்.

    “நான் உங்களுக்கு தகவல் கேட்டு விட்டு மற்ற விஷயங்களை சொல்றேன். அவளை தேடி யார் வந்தாலும், நீங்க தயவு செய்து எனக்கு தகவல் சொல்லுங்க”, என்று சொல்லிவிட்டு அந்தப்புறம் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

    இந்த அழைப்பு வந்தால் மட்டும் சற்று நேரம் கடுகடு என்றே இருப்பார்

  ‘ என்ன ஒரு டாமினேஷன், இவங்க சொன்னதெல்லாம் நம்ம கேட்கணும்னு என்ன கட்டாயமா’, என்று கோபப்பட்டாலும் தனாவின் நலம் விரும்பி மதர் என்பதால் வேறு வழி இல்லாமல்.,

    :ஏதோ ஒரு விஷயத்துல நல்லது நடந்து, அவ வாழ்க்கையில ஏதாவது ஒரு ரிலேஷன் அவளுக்கு கிடைச்சிருச்சுனா.,  நல்லா இருக்குமே ன்னு எல்லாத்தையும் பொறுத்து போக வேண்டியதா இருக்கு.,

  “ஆனா இவங்க அவங்கள பத்தி தகவல் என்கிட்ட சொன்னாங்க., ஆனா அவங்க வீட்டு ஆட்கள் கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்றாங்களே, எதுக்குன்னு புரியலையே., என்று குழம்பிக் கொண்டவர்., தன் மன பாரத்தை எல்லாம் கடவுளின் பாதத்தில் வைக்க சென்றார்.