பிளைட் இன்னும் ஒரு மணி நேரம் தாமதம் என்ற அறிவிப்பு வந்தது, இவளோ காத்திருப்பு அறைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டாள்.
இவளும் தன்னுடைய ஹேண்ட் லக்கேஜ் எடுத்துக் கொண்டு, அந்த பிளைட்டில் செல்லக்கூடியவர்கள் எல்லாம் இருந்த காத்திருப்பு அறையில் இவளும் சென்று அமர்ந்தாள்,
அங்கு சென்று அமர்ந்த பிறகு தான் டிவியில் ஓடிக் கொண்டிருந்த படத்தில் பள்ளி வளாகத்தை காட்ட, இவளுடைய நினைவுகளோ தன்னுடைய பள்ளி கால நினைவுகளை அசை போட துவங்கியிருந்தது.
கொடைக்கானல் அமெரிக்கன் ஸ்கூல் என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இன்டர்நேஷனல் ஸ்கூல் அது தான் அவள் படித்த பள்ளி., அதன் நினைவுகள் அவளுக்கு அத்தனை சந்தோஷத்தை கட்டி வைத்து கொடுக்கக் கூடியது.
சரியாக அவளுடைய ஒன்பதாவது வயதில் தந்தை இறந்துவிட., அந்த வருட படிப்பிலேயே பாதியில் கொண்டு போய் அங்கு சேர்க்கப்பட்டாள் தர்ஷனா.
அங்கு இருக்கும் மதர் சுப்பீரியர் மட்டுமே இவளை தனா என்று அழைப்பார். அதன்பிறகு அங்கிருந்த எட்டு வருடங்களும் அவளுக்கு மதரின் கண்காணிப்பும் கவனிப்பும் தான்
பள்ளியில் எத்தனை தரமான கல்வி கிடைத்ததோ., அதற்கு தகுந்தார் போல அவளது பழக்கவழக்கங்களும் அவள் கற்றுக் கொண்ட பிற கலைகளுமே அவளுக்கு ஒரு தனி அழகை கொடுத்தது.
அது மட்டும் இல்லாமல் மற்ற பிள்ளைகள் எல்லாம் லீவ்க்கு வீட்டிற்கு சென்றாள் கூட இவள் மட்டும் மதர் சிப்பீரியர் பொறுப்பிலேயே இருந்தாள்,
தர்ஷனாவின் தாய் மாமா அவளைக் கொண்டு வந்து பள்ளியில் சேர்த்தது கூட அவளுக்கு தெரியாது.
அவள் பள்ளிக்கு அழைத்துச் சென்றது, அவருடைய அப்பாவின் தொழில் சம்பந்தமான விஷயங்களை பார்க்கக்கூடிய வக்கீலும், ஆடிட்டரும் அவர்களது மனைவியரும் தான் கொண்டு பள்ளியில் விட்டனர்.
இவள் பள்ளியில் சேரப் போகும் போது மதர் சுப்பீரியர் வக்கீல் , ஆடிட்டர், மனைவியிடம் சொன்னதை இவளும் அப்போது கேட்டிருந்தாள் ,
அது சிறிதளவு அவளுக்கு ஞாபகம் இருக்கிறது., “அவளோட மாமா இங்கே பீஸ் எல்லாம் கட்டினாரு., அவளுக்கு தேவையானது எல்லாமே நாங்க பாத்துக்குவோம், மத்தபடி நீங்க அவளை பார்த்துக்கணும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.,
நான் கேட்டேன் லீவுல என்ன பண்ணனும்னு கேட்டேன்., உங்க பொறுப்பிலேயே இருக்கட்டும் அப்படின்னு சொல்லி இருக்காங்க., அதற்கு இங்க ஸ்பெஷல் பெர்மிஷனும் வாங்கி இருக்காங்க., இப்போ வெளிநாட்டிலிருந்து வந்து படிக்கிற பிள்ளைகள் சில சமயம் லீவுக்கு ஊருக்கு போக மாட்டாங்க., அப்ப இங்க தான் இருப்பாங்க, அதனால இவளுமே இங்கேயே இருக்கட்டும் சொல்லிட்டாங்க”, என்று சொன்னார்.
அவளுக்கு தேவையான உடைகள், அவளுக்கு தேவையான பொருட்கள் என்று வக்கீலின் குடும்பம் சேர்ப்பித்தனர்.
” மற்றவை எல்லாம் இனி அவள் மாமா மூலம் வந்துவிடும்”, என்று மதர் சொன்னார்.
வக்கீல் ,ஆடிட்டர் தான்., “இல்ல, அவங்க அப்பாவோட ஏர்னிங் இருக்கு, அதிலிருந்து நாங்க ரெடி பண்றோம்”, என்று சொல்லும் போது,
“இல்ல இல்ல, இது அவங்க மாமா சொல்லிட்டு போனது, அது மட்டும் இல்லாம அவங்க அப்பா பேமிலில உள்ளவங்களும்., நாங்களும் தேவையானதை வாங்கி கொடுக்கிறோம் சொல்லி இருக்காங்க., மத்தபடி எங்களுக்கு தெரியாது, உங்க கிட்ட வேற எதுவுனா நான் சொல்றேன்., அல்லது அவங்களை உங்ககிட்ட காண்டாக்ட் பண்ண சொல்றேன்”, என்று சொன்னது மட்டும் அவர்கள் பேசுவதில் புரிந்தது.
அதுபோலவே இவளுக்கென வரும் உடைகளும் பொருள்களும் எல்லாம் தரமானதாகவே இருந்தது.,
அதை அப்போது மதர் சொல்லி தான் தெரியும்., பின்பு வளர வளர அவள் கைகளில் வந்து கிடைக்கும் பொருட்களை பார்க்கும் போதே அவற்றின் தரத்தை இவளால் மதிப்பிட முடிந்தது., ஏனெனில் அப்பள்ளியில் படித்த அத்தனை பேருமே பெரும் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள்.,
எனவே அவர்கள் கையில் இருக்கும் பொருட்களும் அவர்கள் வைத்திருக்கும், உடுத்தியிருக்கும் துணி முதற்கொண்டு அத்தனையும் அவளுக்கு தெரியும்., அங்கிருந்த ஹாஸ்டல் அத்தனை வசதிகளோடு கூடியது., அதில் அவள் இருந்து பழகியதால் அவளுக்கு அதுவே பழக்கம் ஆயிற்று.
அவள் பெரிய பெண்ணாக ஆனபோது அவளின் உடல் மாற்றங்களை அதை பற்றி சந்தேகங்களை மதர் சுப்பிரியரிடம் போய் கேட்டே நின்றாள்.
அவர் தான் “இது பெண்களுக்குள் நடக்க கூடிய மாற்றம் தான்., இதில் பயப்பட ஒன்றும் இல்லை”, என்று சொல்லி அதற்கான அறிவுரைகளையும் அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லிக் கொடுத்தார்.
அதன்படி இருந்து இவளும் கற்றுக் கொண்டாள்.
அவளுடைய பெற்றவர்களின் வீட்டுக்கு தெரியப்படுத்தவும்., இரண்டு வீட்டிலும் இருந்து உடை மட்டுமே பார்சலில் வந்து சேர்ந்தது., மதர் சுப்பீரியர் தான் அவ்வப்போது கடவுளிடம் பிரேயர் செய்யும் போது வேண்டிக் கொள்வார்., அதை அவ்வப்போது அங்கு உள்ள சிஸ்டர் இடம் சொல்லும் போது இவள் எப்போதாவது கேட்டதுண்டு.,
அவள் பெரிய பெண்ணாக ஆகி இருக்கும் போது அவளை ஒரு வாரம் பள்ளிக்கு லீவு எடுக்க வைத்து மதர் சுப்பியரின் கண்காணிப்பில் வைத்து பார்த்துக் கொண்டார்.
அப்போது அவர் அங்கிருந்த சிஸ்டர் இடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.
“எப்படி இப்படி டிரஸ் எல்லாம் வாங்கி அனுப்புறாங்க., டிரஸ் வாங்கி அனுப்புனா போதுமா இந்த நேரத்துல அந்த பொண்ணுக்கு என்ன வேணும் அப்படின்னு பாக்கணும் ன்னு கூட யாருக்கும் தோணவில்லையே, எல்லார் வீட்டிலும் பொம்பள பிள்ளை இருக்கும் இல்ல., பொம்பள பிள்ளைகளுக்கு காட்டிலும் பெண்களாவது இருப்பாங்க இல்ல., அவங்களுக்கு இந்த நேரத்துல ஒரு பொண்ணோட மனசுக்கு என்ன தேடும், அந்த பொண்ணுக்கு என்ன தேவைப்படும் அப்படின்னு கூடவா தெரியாது., ஏன் ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போனா என்ன, இந்த பொண்ண இதுவரைக்கும் யாரும் வந்து பார்க்க கூட வரல., அவளும் கேட்டது இல்லை, ஏத்துக்கிட்டா அப்படின்னு தான் எனக்கு தோணுது.,
சின்ன குழந்தையா இருக்கும் போது கேட்டு இருக்கா., மத்தவங்களுக்கு விசிட்டர்ஸ் வரும் போது எல்லாம் கேப்பா., ஏன் மதர் என்ன பாக்க யாரும் வரல அப்படின்னு அடிக்கடி கேட்பா.,
அப்போ நான் சொல்லுவேன்., கடவுள் வந்து எல்லாருக்கும் எல்லாம் கொடுக்கிறது இல்ல தனா, அவங்களுக்கு மனுஷங்க துணை இருக்குறது னால, அவங்க கடவுளை, கூப்பிட்டா மட்டும் தான் வருவார், ஆனா உனக்கு மனுஷங்க துணை இல்ல, அதனால கடவுளே உன் கூட துணையா இருப்பாரு, கவலைப்படாத அப்படின்னு சொல்லுவேன்”., என்றார்.
“ஆனா இவ ஒரு ஹிந்து குடும்பத்தில் பிறந்த பிள்ளை நம்ம அவளை கிறிஸ்தவ பெண்ணா மாத்த முயற்சி பண்ணக்கூடாது., அப்படின்னு சொல்லி தான், அவளுக்கு நாம் பொதுவா எந்த மதத்தையும் சார்ந்த எந்த விஷயமும் சொல்லிக் கொடுக்கல., இங்க பள்ளியில் பண்ற பிரேயர் அவ எல்லாரும் போல சேர்ந்து பண்றா., ஆனா அவளோட குடும்பப் பழக்கம் பொட்டு வைக்கிறதுன்னு சொன்னதுனால தான்., அதை இப்போ வரைக்கும் அவளை பாலோ பண்ண வச்சுக்கிட்டு இருக்கேன்., ஆனா அவ சில நேரங்களில் பொட்டு வைக்காம இருந்தா எங்க நம்ம மதம் மாத்திட்டோம் ன்னு நாளைக்கு அவங்க வீட்ல உள்ளவங்க சொல்லிரக்கூடாது என்பதற்காக., நான் சில விஷயங்களை அவ ட்ட ஸ்ட்ரிக்ட்டா பாலோ பண்ண வச்சுக்கிட்டு இருக்கேன்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது.,
சிஸ்டர் தான் “ஏன் மதர் அந்த பொண்ணு யாரும் இல்லை ன்னு ஏத்துக்குச்சா”, என்பதை கேட்கும் போது.,
“அவ குழந்தையாக இருக்கும் போது இந்த அளவுக்கு விவரம் தெரியல., தேடுனா அதுக்கப்புறம் இப்ப அவ தேடுறது இல்ல., அவளே புரிஞ்சுகிட்டா., ஆனாலும் மனசுக்குள்ள ஏக்கம் இருக்கும் இல்ல., சின்ன பொண்ணு தானே”, என்று அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டவளுக்கு இன்னும் மனம் கடினப்படத் துவங்கியது.,
“தனக்கு யாருமில்லை என்று யாரும் தன்னைப் பார்த்து பரிதாபப்படக்கூடாது., தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும்”, என்ற உந்துதலோடு எல்லா கலைகளையும் கற்றுக் கொள்ள தொடங்கினாள்.
இவள் பத்தாவது படிக்கும் போது யாரோ வந்து சிஸ்டரை பார்த்து பேசி விட்டு மதர் சுப்பிரியாரை பார்க்க செல்லும் போது.,
சிஸ்டரோ தலையை தடவி கொடுத்துவிட்டு, “உன்ன பாக்க தான் யாரோ விசிட்டர்ஸ் வந்து இருக்காங்க போல”, என்று சொன்னார்.
இவளோ ‘நம்மள பாக்க யார் வந்திருப்பா’, என்று யோசித்துக் கொண்டே அங்கு செல்ல.,
மதர் தான் இவள் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்தவர்., வேகமாக வெளியே வந்து “என்ன தனா” என்று கேட்டார்.