“பர்ஸ்டு எல்லாம் மரியாதையா மாம்ஸ்னு கூப்பிட்டு இருந்தா., அப்புறம் மாம்ஸ் போ, மாம்ஸ் வானா, இப்ப வாடா போடான்னு சொல்ற லெவெலுக்கு பேச ஆரம்பிச்சிருக்கா., உங்க கூட சேர்ந்ததுக்கப்புறம் தான் இப்படி மாறிட்டா”, என்று சொன்னான்.
“என்னை ஏன்டா இழுக்கிறீங்க., நீங்க செல்லம் கொடுத்து அப்படி கெடுத்துட்டீங்க., நீங்க செல்லம் குடுக்க போய் தான்., அவ மாம்ஸ் ல இருந்து இறங்கி, வாடா போடா வரைக்கும் வந்து இருக்கா”., என்றான் நிமலன்.
“இனிமேலாவது மாறுவாளா”, என்று கேட்டான் முகேஷ்.
“சான்சே இல்ல, உங்கள பார்த்து என்னையும் அப்படித்தான் சொல்ல போறா”, என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்.
ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் ஒரு புறமும் நின்றாலும் அனைவரும் சேர்ந்து தான் நின்றிருந்தனர்.,
இவர்கள் பேசுவது லேசாக கேட்டது, இவளோ வினித்தின் மனைவியிடம் “இருந்தாலும் மாம்ஸ்க்கு ஓவர் திமிராயிடுச்சு., எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னாள்.
“ஏன் நான் நல்லா இருப்பது உனக்கு பிடிக்கலையா”, என்று கேட்டாள்.
இவர்களுக்கான முறை வரவும், திருமணம் நடக்கும் மேடைக்கு மேலே ஏறி சென்றனர்.
நிமலன் அருகில் அவனுடைய அம்மா அப்பா நிற்கும் போது, அவள் உறவினர் சூழ நின்றாலும் “அம்மா அப்பாவை வர சொல்லுங்கள்” என்று கோவிலை சார்ந்தவர் சொல்ல.,
யாரை நிக்க சொல்லலாம்., என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே.,
இவள் முகேஷ் வினித் இருவரையும் கையை பிடித்து, தன்னருகில் அழைத்துக் கொண்டாள்.
நிமலனும் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க., அவளும் அவனை தான் பார்த்தாள்.
முகேஷ் வினித் முக்கியத்துவம் பற்றி அனைவரும் அறிந்ததே, ‘ஏற்கனவே அவள் தங்களை அப்படி ஒரு இடத்தில் தான் வைத்திருக்கிறாள்’, என்பது தெரிந்தாலும் இன்று அத்தனை பேரும் முன்னிலையிலும் தன் அருகில் இருவரையும் நிறுத்திக் கொள்ள., இருவரும் அவளது இரு பக்கமும் நின்றனர்.
முறைப்படி திருமணம் நடக்க, பெற்றவர்களின் ஸ்தானத்தில் இருந்து தர்ஷனாவை நிமலனுக்கு திருமணம் செய்து வைத்தது வினித்தும் முகேஷ் ம் தான்.
அவள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து, மாலை மாற்றும் போது கூட அருகில் தான் இருந்தனர்.
எல்லாம் முடிந்த பிறகு நிமலன் தான், “இனிமேல் உங்களை சொல்லி, நான் அவளை கலாய்க்க கூட முடியாதுடா, டக்குனு அம்மா அப்பா ஸ்தானத்தில் கொண்டு வந்து நிப்பாட்டிட்டா”, என்று சொன்னான்.
அவள் ஏற்கனவே சொத்தை அப்படித்தான் எழுதி வைத்திருக்கிறாள் என்பது அவனுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால்.,
“தெரியாத மாதிரியே கலாய்க்க கூடாது அண்ணா”, என்று சொன்னான்.
“லைட்டா ஒரு பொறாமை இருந்துச்சுடா., நீங்க எனக்கு முந்திடீங்க ன்னு, அவள அப்படி கேர் எடுத்துக்கிட்டீங்க., ஆனா இப்ப தோணுது நடக்கிறது எல்லாம் நல்லதுக்கு தான் ன்னு, ஃபர்ஸ்ட் நான் வந்து இருந்தா, ஒரு வேளை அண்ணா ன்னு சொல்லி இருப்பா”, என்று சொல்ல அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
அதன் பிறகு நிமலின் வீட்டிற்கு செல்வதற்காக அனைவரும் கிளம்பினர்.
கோவிலில் இருந்து, மீண்டும் அதே தொலைவு பயணத்தோடு கொச்சின் வந்து அங்கிருந்து அவர்களின் ஊருக்கு சென்றனர்.
நிமலன் வீட்டில் முறைப்படி அவளை வீட்டின் மருமகளாக அழைத்துக் கொண்டனர்.
வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முன், அவள் இறங்கிய உடனே அவள் கையில் வினித்தின் பாட்டி தான் விளக்கை கொடுத்து., அதில் தீபம் ஏற்றி வைத்து, “இப்போ இந்த விளக்கை கையில் எடுத்துட்டு வீட்டுக்குள்ள போ”, என்று சொன்னார்.
நிமலனும் அவளோட சேர்ந்து நடந்தான்.
அவர்கள் முறைப்படி அவர்கள் வீட்டின் மருமகளானாள்.
ஆனாலும் அன்று மாலை வரை, அங்கிருந்து விட்டு கொச்சினில் இருக்கும் நிமலனின் வீட்டிற்கு செல்வதாக சொன்னான்.
முதலில் யோசித்த பெரியவர்கள், பின்பு புரிந்து கொண்டு “இரண்டு நாளைக்கு இங்கே இருக்கலாமே” என்று கேட்டு பார்த்தனர்.
“இரண்டு நாள் கழித்து, ரிசப்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் இங்க வர்றேன்”, என்றான்.
“அப்போ எங்க வீட்டுக்கு”, என்று வினித் முகேஷ் இருவரும் சேர்ந்து கேட்டனர்.
“வர்றோம், ஆனால் இப்ப இல்ல, அவ ஃப்ரீயா இருக்கணும், அவளுக்காக தான் நான் அங்க கூட்டிட்டு போறேன்., எல்லாரும் சுத்தி சுத்தி இருந்தீங்கன்னா., அப்ப என் பக்கத்துல கூட வர மாட்டா டா”, என்று சொன்னான்.
“அண்ணா தனியா தள்ளிட்டு போக இது ஒரு சாக்கு”,என்று சொன்னான்.
“டேய் வெக்கங் கெட்டவங்களா, நீங்களும் விசாரிக்கிறீங்க பாரு”, என்று சொன்னான்.
“சரி சரி போங்க போங்க”, என்று கிண்டல் செய்ததோடு அவர்களை கொண்டு நிமலனின் தனி வீட்டில் விட்டு வந்தனர்.
அங்கு ஏற்கனவே வீட்டிற்கு தேவையான பொருட்களோடு வீடு தயாராக தான் இருந்தது., பெரியவர்கள் புரிந்து கொண்டு அவரவர் தங்கும் இடத்திற்கு சென்றனர்.
முகேஷ் குடும்பத்தை, வினித்தின் குடும்பம் கட்டாயப்படுத்தி அவர்கள் இல்லத்திற்கு அழைத்து சென்றது.
திவ்யாவின் குடும்பத்தை வினித் பார்த்துக் கொள்வதாக சொல்லி இருந்தான்.
ஆனால் வந்த நண்பர்கள் கூட்டத்தோடு திவ்யா ஹோட்டலில் தங்கிக் கொள்வதாக சொல்லியிருந்தாள்.
அவர்களுக்கு என ரூம் போடப்பட்ட அந்த ஹோட்டலில் இன்றும் ஆள்கள் இருக்கத்தான் செய்தனர்.
அவர்களுக்கான வீட்டிற்கு வந்த பிறகும், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தவள், உடை மாற்றி வந்த பின்பு, இருவரும் சேர்ந்து இரவு உணவை முடித்துக் கொண்டனர்.
அவனோ “மேடம் கொஞ்சம் கூட பயமே இல்லையா உனக்கு”, என்று கேட்டான்.
“எதுக்கு பயம்”, என்றாள்.
அவனோ “மேடம் எங்கூட தனியா இருக்கீங்க”, என்றான்.
“போங்க அத்து, இதுக்கு முன்னாடி நான் யு எஸ் ல உங்க கூட இல்லையா என்ன”,என்றாள்.
“இப்படி மொட்டையா சொல்லாத, தப்பா நினைப்பாங்க”, என்று சொன்னான்.
“வீட்ல உள்ள மத்தவங்களுக்கு தான் தெரியாது, யு எஸ் ல ரெண்டு பேரும் ஒரே வீட்ல தான் இருந்தோம்னு., நமக்கு தெரியும் தானே, அப்பப்போ ஹக் பண்ணிக்கிறது., நீங்க கிஸ் பண்றது., அப்புறம் ஹால்ல சினிமா பாத்துட்டு அங்கேயே ஒன்னா படுத்துகிறது, இதெல்லாம் இருக்கத்தானே செஞ்சிச்சு., என்னமோ இன்னைக்கு தான் நான் உங்க கூட புதுசா தனியா வந்து உட்கார்ந்திருக்கிற மாதிரி பேசுறீங்க”, என்று சொன்னாள்.
“அம்மாடியோ இதை வெளியே சொல்லிடாத”, என்றான்.
“வெளியே சொல்ல பயப்படுற அளவுக்கு ஒன்னும் தப்பு நடக்கல இல்ல”, என்று கேட்டாள்.
“அது தான் இன்றைக்கு நடக்க போகுது”, என்று சொன்னான்.
“பொய் சொல்லாதீங்க”, என்றாள்.
“நான் ஏன் பொய் சொல்ல போறேன்”, என்றான்.
“பின்ன நான் தான் நீங்க கடத்திட்டு போகும் போதே சொல்லிட்டேன்ல., நீங்க எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க ன்னு, அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும்., அந்த மூஞ்சி உங்ககிட்ட இல்ல”, என்று சொன்னாள்.
பின்பு இருவரும் கிண்டலும் கேலியோடு பேசிக் கொண்டிருக்க., அவள் இவனை கலாய்க்கிறாள் என்று தெரிந்த பிறகு அந்த நேரம் அவர்களுக்கான பிரத்தியோக நேரமாக மாறிப்போனது.
“ஆஹா அப்படியா”, என்றவன். “ஆமா யுஎஸ் ல ஒன்னா தானே இருந்தோம்., ஆனால் ஹாலில் தானே இருந்தோம்”, என்று கேட்டான்.
“ஆமா ஹால் ல தான் இருந்தோம், இப்பவும் ஹால்ல தான் இருக்கோம்”, என்று சொன்னாள்.
” ஆனால் மேடம், இப்போ நமக்கான ரூமுக்கு போக போறோம்”, என்று சொன்னான்.
இவளோ “ரூம் வேண்டாம்”, என்று சொன்னாள்.
“கண்டிப்பா ரூம் தான், அது இனி என்னோட ரூம் இல்ல., நம்மோட ரூம் சரியா”, என்று சொன்னவன்., அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு தன்னறையை அவளுக்கும் சரி பாதியாக கொடுப்பதாக சொல்லி அவளை அள்ளி சென்றான்.
அதன் பிறகு எல்லாம், அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டவளாக., அவன் கையணைப்பிற்குள் அடங்கிப் போனவளாக மாறிப் போயிருந்தாள்.
வாழ்க்கையில் எந்த இடத்தில் நமக்கான மலர் கொத்து வைக்கப்பட்டிருக்கும் என்று தெரியாது., போகும் பாதை எத்தனை கரடு முரடாக இருந்தாலும்., நமக்கான பாதை மாறாமல் செல்லும் போது.,
நிச்சயமாக அங்கு ஒரு மலர் கொத்து காத்துக் கொண்டு தான் இருக்கும். அவளது வாழ்க்கையில் மலர்க்கொத்தாக கைகளில் வந்து சேர்ந்தவன் நிமலனாக இருந்தாலும்.,
அவள் வாழ்க்கையை பூஞ்சோலையாக மாற்ற அவனால் முடியும்., முடித்து காட்டுவான் என்று நம்பிக்கை தான் அவளை சார்ந்தவர்களுக்கு இருந்தது.
எல்லாப் பிரச்சனைகளும் மனதின் மாயைகளே. –எக்கார்ட் டோல்