லேசாக அவன் கன்னத்தை கிள்ளிவிட்டவள்., “கனவில்லை நிஜம்தான்”, என்று சொன்னாள்.
தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்., “தேங்க்யூ கண்மணி”, என்றான்.
அவன் மார்பிலேயே சாய்ந்து அப்படியே நின்றவளிடம், “எனக்கும் இப்படியே இருக்கணும் தான் ஆசை., ஆனால் பாரேன் வெளிய உன் மாமனுங்க ரெண்டு பேரும் காவல் காத்துகிட்டு இருக்காங்க., நான் இப்ப போகலைனா கதவ தட்டிடுவாங்க”, என்று சொன்னான்.
வேகமாக அவனை விட்டு நகர்ந்தவள், அவன் கையை தட்டி விட்டு “போங்க” என்றாள்.
பின்பு அவன் சிரித்தபடி அவள் கையை பிடித்தவன், “காலையில பார்ப்போம்”, என்று சொல்லி மீண்டும் அவள் உச்சியில் முத்தம் பதித்து விட்டே வெளியே சென்றான்.
சிரித்த முகமாகவே வெளியே வந்தவன், “நீங்க ரெண்டு பேரும் இன்னும் வெளியே தான் இருக்கீங்களா, போய் தூங்க வேண்டியது தானே”, என்று சொல்லிட்டு “காலையில பார்க்கலாம்”, என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
வினித் தான் முகேஷிடம் “நிமலன் அண்ணாக்கு சிரிக்க தெரியும் ன்றதே, எனக்கு இந்த மேரேஜ் பேசினதுக்கு அப்புறம் அவரை பார்க்கும் போது தான் தெரியும், அதுக்கு முன்னாடி எல்லாம் அவர் எப்பவும் பார்த்தா முறைக்கிற மாதிரியே ஒரு ஃபீல் ஆகும்., ஆனா மதர் சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியுது., இந்த மனுஷன் நம்மளை எவ்வளவு நோட் பண்ணிட்டு இருந்து இருக்காரு அப்படி ன்னு, ஆனா நாம ரெண்டு பேரும் கூட விளையாண்டது, தொட்டு புடிச்சு ஓடினது, ஊட்டி விட்டது வரைக்கும் சொல்லிக் காமிச்சிருக்காரு பாரேன்”, என்று சொன்னான்.
இருவரும் சிரித்துக் கொண்டே., “ஒரு சின்ன பொறாமை தான் வேற என்ன”, என்று முகேஷ் சொல்லி விட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.
இவளோடு தங்கி இருந்த திவ்யாவும், வினித்தின் மனைவியும் தான் இவளை சீக்கிரம் தூங்குமாறு சொல்லிவிட்டு அவர்களும் படுத்து தூங்கினர்.
காலையில் எழுந்ததிலிருந்து நேரம் செல்வதே தெரியாமல் சென்று கொண்டிருந்தது, பார்லர் பெண்களின் வருகைக்கு பிறகு இவளது நேரம் இவள் கையிலே இல்லை.
அழகாக அலங்காரம் செய்துவிட்டு அவளை பார்க்கும் போது நிச்சயமாக அடையாளம் தெரியாத அளவிற்கு எல்லாம் இல்லை., ஆனால் அழகாக இருந்தது.
பின்பு சந்தன நிற புடவையில் தேவதையாக மாறி இருக்க., அதற்கு ஏற்றார் போல் கரும் பச்சை நிறத்தில் வேலைபாடுகளுடன் கூடிய ப்ளவுஸ் இருந்தது,
கேரளா டைப்பில் இருந்தாலும், கொஞ்சம் வித்தியாசம் தெரியும் அளவிற்கு அலங்காரம் செய்தனர்.
முழுமையான கேரள பெண் என்று சொல்லவும் முடியாமல்., மற்ற ஊர் எதையும் சொல்ல முடியாத அளவுக்கு அழகாக இருந்தது.
அலங்காரங்கள் முடியவும் வினித்தும் வினீத்தின் பாட்டியும் வந்தனர் அவளுக்கென வாங்கிய நகைகள் எடுத்துக் கொண்டு
முகேஷ் அப்பா பாட்டி, அதாவது தர்ஷனாவின் அம்மா பாட்டியும் வந்து அவளுக்கான நகைகளை போட்டு விடும் படி கொடுத்தார்.
அதே நேரம் ஆடிட்டர் வக்கீல் மனைவிகளும் வந்திருந்தனர்.
அவளுக்கான நகைகளை அவளுடைய அப்பா அம்மா விட்டு போனது என்று சொல்லி லாக்கரிலிருந்து எடுத்து வந்ததை திவ்யா கையில் இருந்ததை கொடுத்திருந்தனர்.
“ஒரே நேரத்துல எல்லாம் போட முடியாது” என்று சொல்லி வினித்தின் மனைவி தான், இப்போதைக்கு தேவையானதை போடலாம், நீங்கள் திருப்பிக் கொண்டு போவதாக இருந்தால், அவர் அவர் கையிலே இருக்கட்டும்”, என்று சொன்னாள்.
“இல்ல இதெல்லாம் அவளுக்காக கொண்டு வந்தது தான்”, என்று வினீத்தின் பாட்டி சொன்னார்.
அதே வார்த்தையை தர்ஷனாவின் அம்ம ம்மாவும் சொல்ல, இவள் தான்,
“இல்லை எனக்கு எதுவும் வேண்டாம்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,
“சரி நாங்க கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்குறோம், அப்புறம் உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டனர்.
அப்போதைக்கு எந்தெந்த நகை போட்டால் நன்றாக இருக்குமோ, அதை எல்லாம் எடுத்து போட்டுவிட்டு கொண்டிருந்தனர்.
ஏற்கனவே முதல் நாளே இவளோடு பேசி இருந்து விட்டு தான் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைக்கு வக்கீல் குடும்பமும், ஆடிட்டர் குடும்பமும் சென்றிருக்க இன்று அவர்களும் வந்து அவளது அலங்காரத்தை பார்த்துவிட்டு.,
“மதர் பார்த்தா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க இல்ல தனா”, என்று ஆடிட்டரின் மனைவி கேட்டார்.
இவளும் சிரித்துக்கொண்டே “மதர் நாளைக்கு ஈவினிங் ஃப்ளைட்ல கிளம்பி வருவாங்க, நாளைக்கு மறுநாள் ரிசப்ஷனுக்கு இங்கே இருக்கிற மாதிரி வரேன்னு சொல்லி இருக்காங்க”, என்றாள்.
“உனக்கு சாரி ரொம்ப அழகா இருக்கு”, என்று அனைவரும் சொல்ல, சிரித்துக் கொண்டவளுக்கு யு எஸ் ல் இருக்கும் போது அவனுடைய நண்பனின் திருமணத்திற்கு செல்வதற்காக இவளுக்கு சேலை எடுத்து வந்திருந்தவன்.,
அதை அவள் கைகளில் கொடுக்க., இவளோ “என்ன இது”, என்றாள்.
“பார்த்தா தெரியல புடவை, அதுக்கு தான் உனக்கு ரெடிமேட் பிளவுஸ் வாங்குறதுக்காக கடைக்கு போயிருந்தேன்., அதுக்கு தான் அளவு சொல்ல சொல்லி சொன்னேன்., நீயும் சொன்ன வாங்கிட்டு வந்தேன்”, என்று சொன்னான்.
அவனை முறைத்து பார்த்தாள், “எதுக்கு இது என்னால் இந்த குளிருக்கு சாரி எல்லாம் கட்ட முடியாது”, என்று சொன்னாள்.
“நீ கட்டுற” என்று சொல்லி கட்ட வைத்தவன் அழைத்து சென்று நண்பர்களிடம் தன்னுடைய வருங்காலம் என்று அறிமுகப்படுத்தியதோடு., இவளிடம் அவன் செய்த சில்மிசங்களை நினைத்துக் கொண்டாள்,
வீட்டிற்கு வந்த பிறகும் இவள் புடவை மாற்ற போகும் போது, “ப்ளீஸ் ப்ளீஸ் மாத்தாத புடவைல தான் அழகா இருக்க”, என்று சொல்லி அவளை புடவையிலேயே மாலை வரை இருக்க வைத்தவன், அவ்வப்போது அவளை கட்டி பிடிப்பதும் தன்னோடு சேர்த்து வைத்துக் கொள்வதும் மாக இருந்தான்.
அன்று அவளிடம் கேட்டான்., “மேரேஜ்க்கு அப்புறம் முடிந்த வரைக்கும் புடவை கட்டுவியா”, என்று.,
இவள் அதிர்ச்சியோடு அவனை பார்க்க, “நீ புடவையில் ரொம்ப அழகா இருக்க”, என்றும் சொல்லியிருந்தான்.
அதை இப்போது நினைத்துக் கொண்டவளுக்கு முகத்தில் வெட்கத்தின் சாயல் வந்து அப்பிக் கொண்டது.
பழைய நினைவிலிருந்து மீண்டு வந்தவளை அனைவரும், “கல்யாண பொண்ணுக்கு வெட்க சாயல் வந்து விட்டது” என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தனர்.
அதன் பிறகு அனைவரும் கிளம்பி கோயிலுக்கு சென்றனர்.
அவர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து கோவிலுக்கு செல்லவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது.
மீண்டும் அங்கு சென்ற பிறகும் வெளியே வைத்து லேசாக ஏதேனும் மேக்கப் கலைந்திருக்கிறதா என்பதை பார்த்தப் பின்பு இறங்கி பெரியோர்களுடன் நடக்க தொடங்கும் போது தான் பார்த்தாள்.
ஆண்கள் அனைவரும் வெளியில் இருந்து சர்ட்டை கழட்டிக் கொண்டிருந்தனர்.
அவளோ வினித்தின் மனைவியை பார்க்க., அவன் மனைவியோ, “இங்க எல்லாம் சட்டை போடக்கூடாது”,என்றாள்.
“அப்ப கல்யாணம்” என்று கேட்டாள்.
“சட்டை எல்லாம் போட மாட்டாங்க, மேல ஒரு மூண்டூன்னு சொல்ற, பெரிய துண்டு வச்சி மூடிருப்பாங்க., அப்படி தான் உள்ள வருவாங்க”,என்றாள்.
“அச்சச்சோ” என்று சொன்னாள்.
“ஆமா அப்படித்தான், அது மாதிரி லேடிஸ் எல்லாம் புடவை தான் கட்டிட்டு வரணும், மத்த டிரஸ் அலவ்ட் கிடையாது”, என்று சொன்னாள்.
அதன் பின்பு தான் சுத்திப் பார்த்தாள்.
அனைத்து பெண்களுமே புடவையில் இருந்தனர்.
அதுபோல மற்ற மதத்தினர் உள்ளே செல்ல முடியாது என்பதும், அதன் பிறகு தான் தெரிந்தது.
வந்திருந்த அனைவரும் உள்ளே செல்ல, அவர்களுக்கான முறை வரும் வரை காத்திருந்தனர்.
சற்று தள்ளி நின்ற நிமலனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை., முகேஷ் தான் வினித் டம், “இங்க பாரேன், அவ திரும்பி கூட பார்க்கமா அங்கேயே நிக்குறா”, என்று சொன்னான்.
அருகில் இருந்த நிமிலனோ, “நீங்க கூட அவ கூட சேர்ந்து சுத்தி இருக்கீங்க, உங்க கூடவே தான் இருந்திருக்கா டா, நான் பாரு இப்படி நிக்க போய் தான் திரும்ப மாட்டிக்கா, இப்ப நீங்க ரெண்டு பேரும் போய் பேசுங்க பேசுவா”, என்று சொன்னான்.
“இப்படி எல்லாம் முன்னாடி போனது இல்ல, இப்ப போனா, போங்கடா, ன்னு சொல்லி திட்டுவா”, என்று சொன்னான்.
“திட்டுவாளா, நம்புற மாதிரி இல்லையே, அவ என்ன ன்னா, எது கேட்டாலும் மாம்ஸ் ட்ட கேட்கனும் ன்னு சொல்லுவா”, என்றான்.