இரண்டு குடும்பங்களும் சேர்ந்து நின்றபடி “வா போகலாம்”, என்று அழைக்கவும் ஒரு நிமிடம் பயந்து போனாள்.
வினித்தையும், முகேஷையும் பார்க்க அவர்கள் இருவரும் சிரித்தபடி, ” எந்த வீட்டுக்கு போக, சண்டை வரும் ன்னு பயந்துட்டீயா, பயப்படாம வா கொச்சினுக்கு தான்”, என்று இருவரும் சிரிக்க பெருமூச்சு இழுத்து விட்டவள்,
அன்று அவர்களோடு கிளம்பினாள்,
கொச்சினில் பெரிய ஹோட்டலில் இவர்களுக்கான அறைகள் புக் செய்யப்பட்டிருந்தது,
இவள் அங்கு வந்து இறங்கவும் ஏற்கனவே திவ்யா அங்கே வந்து சேர்ந்திருந்தாள், இவர்கள் வந்த பிறகு இவளோடு வினித் முகேஷின் மனைவிகளும் திவ்யாவும் சேர்ந்து இருந்தனர்.
இவள் தான் வினித் முகேஷிடம் “அவங்க அவங்க ஊர்ல இருந்து அப்படியே நேரா இங்கு வந்து இருக்கலாம் இல்ல., எதுக்கு எல்லோரையும் சென்னைக்கும் இங்கேயுமா, அலைய வைக்கிறீங்க”., என்று கேட்டாள்.
வினித் தான், “உனக்காக எதுவும் செஞ்சது இல்ல, ஒரு தடவ வந்து உன்னை சென்னையில் இருந்து கூட்டிட்டு கொச்சின் வரட்டுமே., முதல்ல சென்னைல இருந்து உன்னை நேரா வீட்டுக்கு தான் கூட்டிட்டு போகனும்., வீட்ல இருந்து தான் கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்னு நினைச்சிருந்தாங்க”, என்று சொன்னான்.,
முகேஷ் “அதுல தான் ரெண்டு வீட்டுக்கும் போட்டி ஆயிடுச்சு சரியா., அங்க என்னன்னா எங்க வீட்ல இருந்து வரட்டும் அப்படின்னு சொல்றாங்க., பெங்களூர் போயிட்டு உன்னை திருப்பி கொச்சின் கூட்டிட்டு வரணும்னா டிலே ஆகும் ன்னு , எந்த ஃபேமிலிக்கும் வருத்தம் வேண்டாம். அப்படின்னு சொல்லிட்டு அண்ணா தான் ஹோட்டலில் ரூம் போட்டது., இப்போ இங்க இருந்து தான் காலைல குருவாயூர் போக போறோம்”, என்று சொன்னான்.
இவளும் தலை அசைத்துக் கொண்டாள்.
‘இவர்களெல்லாம் சேர்ந்து வந்து நிற்பது நிமலனால் மட்டுமே சாத்தியம் ஆயிற்று’ என்று நினைத்துக் கொண்டவள் அவனுக்கு போன் எடுத்து மெசேஜ் செய்தாள்.
“எங்க இருக்கீங்க”, என்று கேட்டாள்.
“ஆஹா என் வொய்ஃப் க்கு என்னை தேடுதா”, என்று பதில் வந்தது.
“உங்களுக்கு தான் தேடல, எனக்கு தேடலைன்னு உங்களுக்கு தெரியுமா”, என்று கேட்டாள்.
அவனும் “எனக்கு தேடலைன்னு உனக்கு தெரியுமா”, என்று சொல்லி மெசேஜ் செய்து கொண்டிருக்கும் போதே.,
எல்லோரும் “போதும் போன்ல பேசுறதை விட, நாளைக்கு நேர்ல பேசலாம்”, என்று கிண்டல் செய்தனர்.
இவள் அதையும் சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
மறுநாள் திருமணம் முடிந்த பிறகு, மதர் இங்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஏனென்றால் திருமணம் முடிந்த இரண்டு நாள் கழித்து தான் இங்கு ரிசப்ஷன், அதுவரைக்கும் வீட்டில் உள்ளவர்கள் தங்குவதற்காக தான் இந்த ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்தது.
காலை திருமணத்திற்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதால் அனைவரையும் சீக்கிரமாக தூங்க செல்லுமாறு பெரியவர்கள் சொல்லிவிட்டு சென்றனர்.
இவர்களும் கொஞ்ச நேரம் பேசி இருந்து விட்டே தூங்க செல்ல முடிவு செய்தனர்.
சென்னையில் இருந்து கிளம்பு முன்னே, இவளுக்கு மெஹந்தி எல்லாம் வைத்து தயார் செய்த நிலையில் இங்கு வந்த பிறகு வேறு எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை.
பார்லர் ஆட்கள் முதல் நாளே வந்து இவளை பார்த்துவிட்டு மேக்கப்பிற்கு டெஸ்ட் செய்யலாம் என்று சொல்லும் போது இவள் அதிகமாக வேண்டாம், லேசாக போட்டால் போதும் என்று சொல்லிவிட்டாள்.
அது அப்படியே அவனுக்கு தெரிவிக்கப்பட்டது.
“ஒரு நாள் மட்டும் போட்டுக்கிட்டா தப்பு இல்ல” என்று சொன்னான்.
“நான் தான் ன்னு அடையாளமே தெரியாத அளவுக்கு பண்ற மாதிரிலாம் பண்ண கூடாது”, என்று சொன்னாள்.
அவனும் “அப்படிலாம் பண்ண மாட்டாங்க., நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன், என் கண்மணி என் கண்மணி மாதிரியே தெரியணும் அவ்வளவு தான்., வேற யார் மாதிரியோ தெரிஞ்சா, நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது”, என்று கேட்டான்.,
இவளும் “சரி” என்று சொல்லி இருந்தாள்.
அவர்கள் புடவை எடுக்கும் போதே திருமணத்திற்கு எடுத்த புடவை அவர்களுடைய வழக்கப்படி வெண்பட்டாகவே இருந்தது,
கொச்சினில் நடக்கும் ரிசப்ஷன் க்கு சிவப்பு நிறப்பட்டு எடுக்கப்பட்டிருந்தது.,
இங்கு உள்ள திருமணங்களில் பெண்பட்டு கட்டுவது தான் முறை என்பதால் அதற்கு தகுந்தார் போல எடுத்திருந்தார்கள்.
அதற்கான பிளவுஸ் எல்லாம் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்திலேயே கொண்டு வந்து கொடுத்த அழகு நிலைய பெண்கள் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் போட்டு பார்க்க சொன்னார்கள்.
பின்பு எங்கெங்கு சரி செய்ய வேண்டும் என்பதை கேட்டுக் கொண்டார்கள்.
அது போலவே ரிசப்ஷன் சேலைக்கான பிளவுஸையும் சரி பார்த்து தர சொன்னார்கள்.
இவளுடைய விஷயத்தில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான் நிமலன்.
தூங்கலாம் என்று எல்லோரும் அவரவர் அறைக்கு செல்ல போகும் போது தான், நிமலன் வந்து இறங்கினான்.
“என்ன அண்ணா பிஸியா” என்று இருவரும் கேட்டனர்.
“ரொம்ப பிஸி” என்று சொன்னவன், தர்ஷனாவை பார்த்தபடியே இவர்களிடம் பதில் சொல்லி விட்டு .,
“ஒரு பியூ செகண்ட் பேசிட்டு வந்துருவேன்”, என்று சொல்ல,
“ஹலோ ஹலோ, நாளைக்கு காலையில கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் உங்க கூடவே தான் இருப்பா, இப்ப எல்லாம் பேசக்கூடாது”, என்று இருவரும் தடுத்தனர்.
“அதெல்லாம் முடியாது, எங்க அவள என்கிட்ட பேச மாட்டேன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்”, என்று அத்தனை உறுதியாக கேட்டபடி அவளை பார்த்து சிரித்தான்.
“சீக்கிரம் பேசிட்டு வாங்க, நாங்க வெளியே தான் வெயிட் பண்ணுவோம், சீக்கிரம் வாங்க”, என்று மற்றவர்கள் சொல்ல.,
“நான் இப்ப வந்துடுவேன்” என சொல்லி சென்றவன்.,
அத்தனை டயர்டாக இருந்த போதிலும், அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்., “கண்மணி”, என்றான்.
சற்று நேரம் அவனோடு சேர்ந்து நின்றவள்,”என்ன” என்றாள்.
“நிஜமா இது உண்மை தானே, கனவு இல்ல தானே, எனக்கு அப்பப்ப பயமாவும் இருக்குது”, என்று சொன்னான்.
“நிஜமா கனவில்லை”, என்று சொன்னாள்.
“உண்மையாவா, இது கனவா கனவில்லையா ன்னு, நான் ஒரு முறை செக் பண்ணிக்கட்டுமா”, என்று கேட்டான்.
“நோ நோ, நோ வே”, என்று சொன்னவள் அவன் கையில் மெதுவாக கிள்ளிவிட்டாள்.
“எதுக்கு கிள்ளி விட்ட”, என்று கேட்டான்.
“நீங்க தான கனவா கனவில்லையான்னு கேட்டீங்க, இப்ப கனவில்லை ன்னு தெரியுதா”, என்று சொன்னவள், “போங்க போய் ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்லி விட்டு “வீட்டுக்கு போகனுமா”, என்றாள்.
“இல்ல இங்கதான் , வீட்ல இருந்து தான் எல்லாரும் இப்ப கிளம்பி இருக்காங்க, இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்க., காலைல எல்லாருமே இங்க இருந்து தான் கிளம்புறோம்., பாட்டி தாத்தா., அம்மா அப்பா மட்டும் தான் வீட்டில் இருந்து நேரா கோயிலுக்கு வருவாங்க., மற்றவர்கள் எல்லாரும் இங்க இருந்து தான்., அத்த பேமிலி வந்தாச்சு., மற்றவங்க வந்துகிட்டு இருக்காங்க., சோ நோ ப்ராப்ளம், அம்மா அப்பா கூட வர்றதா தான் இருந்துச்சு., அப்புறம் பாட்டி தாத்தாவை தனியா விட்டுட்டு வரக்கூடாது இல்ல., அதனால தான்”, என்று சொன்னான்.
அவன் முகத்தைப் பார்த்து இருந்தவளிடம், இவன் மெதுவாக அவள் நெற்றியில் முட்டி, “ஏன் கண்மணி நீ ஏதாவது சொல்ல நினைக்கிறியா”, என்று கேட்டான்.
இவளோ “ம்ம் ம்ம்” என்று சொல்லி, அவன் முகத்தையே பார்த்திருந்தவள், “நாளைக்கு சொல்றேன்”, என்றாள்.
“என்ன சொல்ல போற” என்று கேட்டான்.
“ஒன்னும் இல்ல”, என்று சொன்னாள்.
பின்பு நிதானமாக அவன் அவள் நெற்றியில் இருந்து தன் தலையை எடுத்தவன்., அழுத்தமாக நெற்றியில் முத்தமிட்டு விட்டு விலகப் போக., அவன் கையைப் பிடித்தவள் அவனையே பார்த்து இருந்தாள்.
“என்ன கண்மணி”, என்று கேட்டான்.
அவனையே பார்த்திருந்தவள், அவன் கழுத்தோடு கைகளை கோர்த்து அழுத்தமாக பிடித்துக் கொண்டு.,
தன்னை நோக்கி இழுத்தவள் அவன் கண்ணை பார்த்த படியே “ஐ லவ் யூ அத்து”, என்று சொன்னவள் கன்னத்தில் அழுத்தமாக தன் முதல் முத்தத்தை பதித்தாள்.
அவனும் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்., “இப்போ நிஜமாவே சொன்னீயா “, என்று கேட்டான்.