அதற்கு ஏற்றார் போல டீமில் இருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க., கிட்டத்தட்ட இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற நிலையில்., மே மாதம் இந்தியா செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்க., இங்கு வேலையை மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.

   ஒவ்வொரு முறையும் வெளியே சென்று திரும்பும் போதெல்லாம் சற்று மெலிந்தால் போல தான் திரும்புவாள் தர்ஷனா.,

   ஆனால் இந்த முறை வெயிட் ஏறிருச்சோ என்று பலமுறை கேட்கும் அளவிற்கு இருந்தாள்.

  எப்போதும் போல உணவு எடுத்துக் கொண்டாலும்., ஒருவனின் அன்பும் அக்கறையும்., அவள் மேல் கொண்ட அவனது நேசமும் அவளின் மகிழ்வை அப்படி காட்டி இருந்ததோ என்று கூட தோன்றியது.,

ஓரளவு அனைவர் வீட்டிலுமே சம்மதம் கிடைத்திருந்தாலும், இவனும் திருமணத்திற்கு பிறகு கொச்சினில் அவன் வீட்டில் இருப்பதாக தான் முடிவு செய்து இருந்தான்.

    பாட்டியும் தாத்தாவும் தான், “இல்லடா நீ இங்க வா”, என்று சொல்லிக் கொண்டு இருந்தனர்.

    இவனோ அவர்களிடம் “வர்றது பிரச்சனை இல்ல,  இவளை பார்க்கும் போது கண்டிப்பா, அவங்க அப்பாவை பத்தின யோசனை வரும், எதாவது ஒரு வார்த்தை தப்பா போய்ட கூடாது”, என்று சொன்னான்.

      “அதெல்லாம் இல்ல, எல்லாரும் சம்மதிச்சு தானே கல்யாணம் பண்ணுது”, என்று சொன்னார்கள்.

   “வருவேன் வராமல் இல்ல, வருவேன் ஆனா கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாமே”, என்று சொன்னான்.

அவர்களும் அவன் இஷ்டத்திற்கு விட்டனர்.

   வேலை முடிந்து இங்கிருந்து இந்தியா கிளம்பிய பின்னர்., பிளைட்டில் இப்போது அவள் அருகில் அமர்ந்திருந்தவன்.,

    அவள் கையை தன்னோடு கோர்த்துக்கொண்டு “மேடம் டைரக்டா என்கூட கொச்சின் வரீங்களா”, என்று கேட்டான்.

    “இல்லை இல்லை, நான் சென்னையில் தான், நீங்க வேணும்னா சென்னைக்கு வீட்டுக்கு வந்துட்டு கொச்சின் போலாமே”, என்று சொன்னாள்.

     “ஆசை தான், ஆனால் அப்பா ஸ்டிக்ட் ஆர்டர்., நேரா கொச்சின் தான் வரணும்னு., ஆனா பாரேன் அங்க ஒரே இடத்தில் இருந்தத சொல்லலை, இல்லன்னா எங்க அப்பா அப்பவே கிளம்பி வா ன்னு சொல்லி இருப்பாரு”,  என்று சொன்னான்.

   “உங்களை பத்தி தெரிஞ்சு இருக்கு”, என்று சொன்னாள்.

   “ஏய் நான் என்ன அவ்வளவு மோசமான பையனா, இல்லவே இல்ல தானே, சின்ன ஹக், சின்ன கிஸ் அவ்வளவுதான், வேற ஏதாவது நடந்துச்சா”, என்று கேட்டான்.

    இவளும் அவனைப் பார்த்து முறைத்தபடி, “ஓஹோ அப்படி வேற எண்ணம் இருந்துச்சா? கைய ஒடிச்சு விட்டு இருப்பேன்”, என்று சொன்னாள்.

    “ஏது உங்க மாமன்ங்க சேர்த்து விட்ட கராத்தே க்ளாஸ் ல வாங்கின 3 பெல்ட் வைச்சிருக்குற தைரியத்துல சொல்லுறீயா”, என்றான்.

  முகத்தை சுருக்கி,”ம்ஹூம் நீங்க கிண்டல் பண்ணுறீங்க”, என்றாள்.

    இவன்தான் “ஆமா நீ திவ்யா கிட்ட கேட்ட இல்ல., எந்த மாதிரி கூப்பிடுறது ன்னு, ஆனா ஏன் என்னை அப்படி கூப்பிடவே இல்லை”, என்று சொன்னாள்.

     “கூப்பிடனும் ன்னு நினைச்சேன், கல்யாணத்துக்கு அப்புறமா கூப்பிடுக்கலாம்”, என்று சொன்னாள்.

      அவனும் சிரித்துக் கொண்டே, திருமண ஏற்பாடுகளை பற்றி பேசிக்கொண்டு வந்தான். இவளும் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

   ” என்ன”, என்று கேட்டான்.

     “சும்மா”, என்று மட்டுமே சொன்னாள்,

      ஏற்கனவே மதரும் இவளது திருமணத்தை எதிர்பார்த்து இருந்ததால்.,  “அவரும் திருமணத்திற்கு முடிந்தால் வருவேன்”, என்று சொல்லி இருந்தார்.

   இவன் தான், “அவங்க ஏஜ்டு வேற இல்ல, வராங்களானு பாப்போம், பிளைட்ல டிக்கெட் போடலாம்னு சொல்லுவோம்., வந்தாங்கன்னா கூட்டிட்டு வர்றதுக்கு கூட நான் ஆள் அனுப்புறேன்.,  அப்படி இல்ல அப்படின்னா நம்ம அங்க போய் அவங்க கிட்ட பிளசிங் வாங்கிக்கலாம்”, என்று சொன்னான்.

    “ப்ளீஸ், எப்படியாவது ரெடி பண்ணுங்க., ஏன்னா என்னை நல்ல பார்த்துக்கிட்டவங்க”, என்று சொன்னாள்.,

      “கண்டிப்பா முயற்சி பண்றேன், அவங்க வரேன்னு சொன்னா”, என்று சொன்னான்.

    அது போலவே இவர்கள் இருவரும் அவரவர் இடம் சென்று சேர்ந்தனர்.

      அவன் இதனை நாள் கம்பெனியை பார்க்காததற்கெல்லாம் சேர்த்து வைத்து அவனுக்கு வேலை இழுத்துக் கொண்டது.

      இவளும் இங்கு கம்பெனியில் ஜாயின் பண்ணும் போது.,  கம்பெனி சிஇஓ தான்., “ஓகே மேடம் எப்ப ரிலீவ் ஆகுறீங்க”, என்று கேட்டான்.

    இவளோ, “இல்லையே நான் ரிலீவ் ஆகுறேன்னு சொல்லலையே, ஏன்”, என்று கேட்டாள்.

       “நீங்க என் பிரண்டோட வொய்ஃபா மாற போறீங்க., அவனே கம்பெனி வைத்து இருக்கும் போது, நீங்க எப்படி என் கம்பெனில”, என்று கேட்டான்.

     “நான் உங்க கம்பெனியில் ஒர்க் பண்றது ல உங்களுக்கு ஏதும் வருத்தம் இருக்கா”, என்று கேட்டாள்.

    “அய்யய்யோ அப்படியெல்லாம் இல்ல, நீங்க வேலை பார்த்தா எனக்கு சந்தோஷம் தான், ஆனால் அதுக்கு நிமலன் சம்மதிக்கணுமே”, என்று சொன்னான்.

      “நீங்க அவங்க கிட்ட வேணும்னாலும் கேட்டு பாருங்க, அவங்க  ஓகேன்னு தான் சொல்லுவாங்க”, என்று சொன்னாள்.

     “இல்ல கொச்சின் ல செட்டில் அப்படிங்கற மாதிரி பேச்சு இருக்கு தானே”,என்று கேட்டான்.

      “அது அவங்க பேசுறேன்னு சொன்னாங்களே., நான் சொல்ல முடியாது இல்லையா”, என்று சொன்னாள்.

    “ஓகே நான் கேட்டுக்கிறேன்”, என்று மட்டுமே சொல்லி பேச்சை முடித்தான்.

   அதன் பிறகு நிமலனிடம் பேசும் போது, அவனோ “ஒர்க் ஃப்ரம் ஹோம் குடு, 15 டேஸ் ஒன்ஸ்,  கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறேன்.,  ஏதோ பார்த்து சம்பளத்தை எல்லாம் போட்டு கொடுடா”, என்று சொன்னான்.

    “அடப்பாவி கம்பெனி ஓனர் மாதிரியா பேசுற”, என்று கேட்டான்.

     “அது என் கம்பெனி தான், ஆனால் உன் கம்பெனில நீ தான சம்பளம் கொடுக்கிற ஆளு” என்று சொல்லி இருவரும் பேசி சிரித்துக்கொண்டிருக்க.,

   “ஏன்டா” என்று அவன் நண்பன் கேட்கும் போதே.,

     நிமலன் தான், “இல்ல கொஞ்ச நாளைக்கு ஃப்ரீயா அவ இஷ்டப்படி ஒர்க் பண்ணட்டும், எப்ப அவளா எங்க கம்பெனிக்கு வாரேன்  எனக்கு இங்க உள்ள ஜாப் ஓகே ன்னு சொல்றாளோ., அன்னைக்கு அவளுக்கான இடம் அவளுக்கு இங்க உண்டு.,  ஆனால் அவளா சொல்லாம நான் கட்டாயப்படுத்த மாட்டேன்., அப்படி நானா சொன்னா,  அது அவளை கம்பல் பண்ற மாதிரி இருக்கும்., நான் எந்த விஷயத்திலும் அவ்ளோ கட்டாயப்படுத்த தயாரா இல்லை”, என்று சொன்னான்.

அதன் பிறகு திருமண வேலைகள் வேகமாக நடக்க.,

முகேஷ்ம்,  வினித்தும்  இங்கு வந்திருந்தனர்.

     முகேஷ் மனைவிக்கு அப்போது தான் வளைகாப்பு செய்திருந்ததால் அவள் சென்னையில் இருக்க., அவளை சென்று இவள் தான் பார்த்து வந்தாள்.

     “மேரேஜ்க்கு வந்துருவீங்களா”, என்று கேட்டாள்.

    “கண்டிப்பா வந்துருவேன்,  கோயிலுக்கு அந்த டைம்ல வர முடியாது., ரிசப்ஷன் வச்சிருக்காங்க இல்ல கொச்சின்ல., அங்க வந்துருவேன்”, என்று சொன்னாள்.

    “சரி” என தலையாட்டிக் கொண்டவள் அவளிடம் ஒரு சிறு அணைப்புடன் விடைப் பெற்றாள்.

      வினித்தும் முகேஷ்ம் சேர்ந்து இவளை கலாய்த்து விட்டு., “கடைசில ஜெர்மன் போகும் போது அண்ணன் பார்த்துட்டு வா ன்னு சொன்னதுக்கு.,  யு எஸ் ல இருந்து அண்ணனை கூட்டிட்டு வந்திருக்க” என்று சொன்னார்கள்.

     நான் ஒன்னும் பார்க்கலை, உங்க அண்ணன் தான் இங்கே இருந்து என் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்திருக்காரு.,  அது தெரியாதா”,  என்றாள்.

     “அது தெரியும் விசாரிச்சோம், அதுவும் நீ நைன்த் படிக்கும் போதுல இருந்து சுத்தி இருக்கிறார் என்றால் பாரேன்”, என்று சொல்லி இருவரும் அவளை கலாய்த்து கொண்டிருந்தனர்.

     அவளும் “எத்தனை வருஷம் வெயிட் பண்ணி இருக்காருன்னு பாரு, நீங்களும் தான் லவ் பண்ணுனீங்க, அவசரமா கல்யாணம் பண்ணுனீங்க” என்று சொல்லி அவர்களை வேண்டுமென்றே இவளும் கலாய்த்து கொண்டிருந்தாள்.

     அங்கு சந்தோஷமாகவே பொழுதுகள் கடந்தது.,

    இன்னும் மூன்று வாரங்களில் திருமணம் என்னும் போது தான், நிமலன் குடும்பத்தினர் மொத்தமாக வ இவளை பார்ப்பதற்காக சென்னை வீட்டிற்கு வந்து இறங்கினர்.

வந்தவர்களை வினித்தும் முகேஷ்ம், நல்லபடியாக உபசரித்து இருந்தனர்.

அவள் தான் தயங்கி நின்று பேசினாள்.

    அருகில் வந்து அமர்ந்து கொண்ட நிமலன்., நீங்க மலையாளத்துல சொல்லுங்க, நீ தமிழ்ல சொல்லு, நான் சொல்றேன் என்று சொன்னான்.

   வினித் தான் அருகில் இருந்து கொண்டு.,  “அவளுக்கு மலையாளம் நல்லவே புரியும் ண்ணா, ஆனா  பேச மாட்டா., என்று சொன்னான்.

   “அதுதான் எனக்கு தெரியுமே, இப்ப அவங்களுக்கு தமிழை ட்ரான்ஸ்லேட் பண்ணனும் இல்ல”, என்று சொன்னான்.

        நிமலன்  அப்பா தான்,  “எங்களுக்கும் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் புரியும்”, என்று சொல்லி உடைந்த தமிழில் பேசவும் சிரித்துக்கொண்டனர்.

    அப்போது  நிமலனின் அப்பா, தர்ஷனாவின் அப்பா அவருக்கு எழுதிய கடிதத்தை எடுத்து அவளிடம் காட்டினார்.

   அவள் கையில் வாங்கும் போது, அவள் கைகள் நடுங்குவதை உணர்ந்த நிமலன், அவள் கையில் இருந்து கடிதத்தை வாங்கிக் கொண்டு.,

      “எதற்கு  இதெல்லாம்” என்று கேட்டான்.

    “அவளுக்கும் தெரியனும் தானே”, என்று சொன்னார்.

     அந்த கடிதத்தை வினித்திடம் கொடுத்தான் நிமலன்., அவன் வாசித்து பார்த்து விட்டு, “உங்க அப்பா உன்னை பத்திரமா பாத்துக்க சொல்லி பெரியப்பா ட்ட சொல்லி இருக்காரு.,

   பத்திரமா பாத்துக்கணும்., என் பொண்ண உன்ன நம்பி விட்டுட்டு போறேன், நீ பார்த்துப்ப  நம்பிக்கையில தான், நான் போறேன் கைவிட்டுறாதே, அப்படின்னு எழுதி இருக்காரு”, என்று சொல்லவும் அவளுக்கு கண்ணீல் கண்ணீரோடு குனிந்து இருக்க.,

    அருகில் அமர்ந்திருந்த நிமலனும், அவள் தோளில் கையை போட்டு தன்னோடு சேர்த்து பிடித்தவன்.,

“கண்மணி ஜெஸ்ட் ரிலாக்ஸ், இதெல்லாம் உன்கிட்ட காட்ட வேண்டாம் நினைத்தேன்,  அப்பா தான்  எடுத்துட்டு வந்துட்டாரு.,  சரி விடு பார்த்தாச்சுல விட்டுரு., அப்பா ப்ளீஸ் அதை நீங்களே வச்சுக்கோங்க., அவ என்னைக்கு இதெல்லாம் ஏத்துக்கிற மனப்பக்குவத்துக்கு வர்றாளோ,  அன்னைக்கு அவ கையில் கொடுத்தா போதும்”, என்று சொன்னான்.

அதை வாங்கி முன்பிருந்தது போலவே பத்திரப்படுத்தினார்.

  அதன் பிறகு திருமணத்திற்கான உடைகள் எடுப்பதிலும், மற்ற பொருட்கள் வாங்குவதிலும் நேரம் செல்ல, அவர்களோடு நல்ல மனநிலையில் பழகி இருந்தாள்.

    இன்னும் சில நாட்களில் திருமணம் என்னும் போது,  இவளை அழைத்துச் செல்ல வினித் வீட்டினரும், முகேஷ் வீட்டினரும் ஓரே நேரம் வந்து நின்றனர்.

ஒரு புத்திசாலியால் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியும், பிடிவாத குணம் உள்ளவனால் ஒருபோதும் முடியாது. –இம்மானுவேல் கான்ட்