அப்போது வினித் தான் “குட்டி நீ வளந்துட்டேன்னு இதை தான் சொன்னேன், இப்போ எதையும் சொல்லணும்னு தோணல இல்ல உனக்கு”, என்று கேட்டான்.

    “நீ தானே மாம்ஸ் சொன்ன., அண்ணா நல்ல டைப்பு., அண்ணா அப்படி., அண்ணா இப்படின்னு,  சொன்ன இல்ல., அவங்கள நீ டேஞ்சர் பெர்சன் அப்படி சொல்லி இருந்தா,  நான் கண்டிப்பா உன்கிட்ட சொல்லி இருந்திருப்பேன்ல”,  என்று சொன்னாள்.

    “அப்படி இல்ல பாப்பா”, என்று முகேஷ் ஆரம்பிக்க.,

    ” சரி மாம்ஸ், சொல்லு என்ன”, என்று கேட்டாள்.

   “சிலர் கிட்ட நீ அலர்ட் ஆவ இல்லையா., இவங்ககிட்ட நீ ரெஜிஸ்டேஷனுக்கு அப்புறம் அலட்டா ஒதுங்கின தானே”, அப்பவே வினித் சொன்னான்.

    “சரி தானே பாப்பா”, என்றான்.

“ஆமா”, என்று சொன்னாள்.

     “அந்த ஹாண்ட் ரைட்டிங்”, என்று இருவரும் ஒன்று போல கேட்டனர்.

   “அவங்களோடது தான் போல, இங்கதான் ப்ராஜெக்ட் வொர்க்ல இருக்கும் போது ஹேண்ட் ரைட்டிங் பாத்துட்டு தானே இருக்கேன்”, என்று சொன்னாள்.

    இருவரும் “நாங்க இன்னுமும் கேட்போம், இப்ப நீ அதுக்கு மறைக்காம பதில் சொல்லணும்”, என்றனர்.

   “அப்ப இவ்வளவு நேரம் மறச்சு பதில் சொல்றானா”, என்றாள்.

     “இல்ல, நீ ப்ராஜெக்ட் பத்தி கேட்டோம், அதுக்கு தகுந்த பதில் சொன்ன ஓகே., ஆனா இப்ப கேக்குறதுக்கு நீ கரெக்டா சொல்லு”, என்று சொன்னார்கள்.

    “நியூ இயர்” என்று சொல்ல.,

     “அவங்க கூடத்தான், பேசணும் ன்னு சொன்னாங்க., போயிருந்தேன்”, என்று சொன்னாள்.

    இருவரும் அமைதி காக்க , சற்று நேரத்தில் “உன்கிட்ட இன்னொன்னு கேட்கணும்”, என்றனர்.

     “என்ன மாம்ஸ் கேளு, நீ கேட்காமல் யார் கேட்பா”, என்று இவள் சொன்னாலும்., மனதிற்குள் அழுத்தமான படபடப்பு ‘இருவரும் தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ’ என்ற பயமும் ஒரு புறம் இருந்தது.

    இருந்தாலும் மனதை தேற்றிக் கொண்டவள், குரலில் தனது தடுமாற்றத்தை காட்டவில்லை.

    “குட்டி கேட்டா தப்பா நினைக்க மாட்டியே”, என்று வினித் சொன்னான்.

    “மாம்ஸ் நீயேன் இப்படி எல்லாம் யோசிக்கிற.,  நான் எதுக்கு உன்னை தப்பா நினைக்க போறேன்., கேளு”, என்றாள்

    முகேஷ் “பாப்பா இது உன் லைஃப் விஷயம், அதனால தான் நாங்க உன்கிட்ட கேட்கிறோம்”, என்று சொன்னான்.

   ” கேளு மாம்ஸ், இப்ப நான் யாரையும் தப்பா நினைக்க மாட்டேன் கேளு”, என்று சொன்னாள்.

   “நிமலன் அண்ணா வீட்ல உன்ன பொண்ணு கேக்குறாங்க”, என்று இருவரும் ஒன்று போல சொன்னார்கள்.

     இவள் அமைதி காக்கவும்.,
“என்ன குட்டி”, என்று அவனும்.,

“பாப்பா என்னடா ஆச்சு, சொல்லு”, என்று இவனும்  கேட்டனர்.

     “நியூ இயர் அன்னைக்கு ப்ரொபோஸ் பண்ணாங்க”, என்றாள்.

   இருவரிடமும் “குட்டி, பாப்பா”, என்ற சத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை,

     இவளோ “நான் தான் எல்லாரோட சம்மதமும் வேணும்., அம்மா பேமிலி, அப்பா பேமிலி, அதை தவிர அவங்க பேமிலில எல்லாரிடமும்.,

    இந்த மூணு பேமிலியும் முழுசா., முழு மனசோட சம்மதிச்சா நான் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்”, என்றாள்.

   “குட்டி, உனக்கு புடிச்சிருக்கா”, என்று வினீத் கேட்டான்.

   “புடிச்சிருக்கா, புடிக்கலையா என்கிறதை விட அவருக்காக நான் சம்மதிக்கிறேன் மாம்ஸ்”, என்றாள்.

    “பாப்பா இது கல்யாணம் டா அப்படி இன்னொருத்தங்களுக்காக லைஃப் எல்லாம் சக்கிரிபைஸ் பண்ண முடியாது”, என்று சொன்னான்.

    “மாம்ஸ் நீங்க ரெண்டு பேரும் எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா”, என்று கேட்டாள்.

  “சொல்லுடா குட்டி”, என்றான் வினித்,

     “இப்போ உங்களுக்கு அங்க பகல் டைம் தானே, போய் போன்ல  மதர் கிட்ட இவர பத்தி கேள்வி கேளுங்க., மதர் உங்களுக்கு எல்லா தகவலும் சொல்லுவாங்க”, என்று சொன்னாள்.

     “மதர்க்கு எப்படி இவங்களை தெரியும்”, என்று முகேஷ் கேட்டான்.

   வினித்தும் “ஆமா எப்படி தெரியும்” என்று கேட்டான்.

   “நீ போய் கேளு”, என்று இருவரையும் சொன்னவள்,

    “ஏன் மாம்ஸ், உங்க ரெண்டு பேருக்கும் அவர பிடிக்கலையா”, என்றாள்.

     “உனக்கு பிடிச்சதுக்கு அப்புறம், எங்களுக்கு புடிச்சிருக்கா பிடிக்கலையா ன்னு சொல்றத விட., உனக்கு சந்தோஷம் னா, எங்களுக்கும் ஹேப்பி”, என்று சொன்னார்கள்.

      “இப்படி பொத்தாம் பொதுவா சொல்லக்கூடாது மாம்ஸ்., எனக்கு எல்லா ஃபேமிலியோட முழு மனசான சம்மதம் வேணும்., அது மட்டும் தான்.,  நீயா இருந்தாலும் சரி, வீட்டில் உள்ள யாரா இருந்தாலும் சரி”, என்று சொன்னாள்.

   “அப்போ, உனக்கு ஓகேவா” என்று இருவரும் கேட்டனர்.

     “நீங்க எல்லாரும் சம்மதிச்சா, எனக்கு ஓகே”, என்றாள்.

      “அப்படி இல்லன்னா இப்போதைக்கு கல்யாணம் பற்றி பேச்சு கிடையாது”, என்றாள்.

     இருவரும் யோசனையோடு அமைதி காக்க,  இவள் தான் “ஏன் என்னாச்சு”, என்று கேள்விகளை எழுப்பினாள்.

       வினித் தான், “இப்ப நாங்க என்ன பண்ணனும் குட்டி”, என்றான்.

     “முதல்ல ரெண்டு பேரும் மதர்ட்ட பேசுங்க, பேசிட்டு விடிஞ்சதுக்கப்புறம் காலைல எனக்கு கூப்பிடுங்க”, என்று சொன்னாள்.

      சற்று நேரம் அமைதி காத்தவர்கள்., “சரி குட்டி, வீட்ல இப்ப தான் சொன்னாங்க., எல்லாம் பேசி முடிவு பண்றோம், எல்லாரும் என்ன முடிவு சொல்றாங்கன்னு பொறுத்து நாங்க சொல்றோம்., மதர் கிட்ட பேசிட்டு, நீ சொன்ன மாதிரி எங்களுடைய ஈவினிங் டைம், அதாவது உன்னோட காலையில கூப்பிட்டு பேசறோம்”, என்று சொன்னான்.

   “ஹேவ் ஏ குட் டே மாம்ஸ்”, என்று பேச்சை முடித்தாள்.

  அவர்களும் “குட் நைட் குட்டி., குட் நைட் பாப்பா”, என்றும் முடித்தனர்.

      சற்று நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கு.,

    ஒரே ஒரு நிமிடம் அவர்கள் இருவரிடமும் சொல்லும் போது ‘எனக்கு புடிச்சிருக்கோ, பிடிக்கலையோ, அவருக்காக நான் சம்மதிக்கிறேன்’, என்று சொன்ன, அந்த வார்த்தை யோசனையாக இருந்தது.

     ‘அப்போ நிஜமா, அவருக்காக தான் சம்மதிக்கிறோமா’, என்று தோன்றும் போதே அவனின் எதிர்பார்ப்பு கலந்த முகமும்., தன்னை பேச வைக்கவும், தன்னிடம் பழகவும் அவன் எடுத்த முயற்சிகளும் நினைவு வர.,

     அவன் ஹாலில் இருக்கிறானா, தூங்க போய் விட்டானா, என்று பார்ப்பதற்காக கதவை திறந்து எட்டிப் பார்த்தாள்.

    அவன் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தவள், அறையிலிருந்து வெளியே வந்த படி போனை சைலன்டில் போட்டவள்., அவன் அருகே வந்து அமர்ந்தாள்.

        அவளை திரும்பி பார்த்தவன்., அவள் முகத்தை பார்த்தபடி “என்ன ஆச்சு”, என்றான்.

“ஒன்னு இல்ல”, என்று கண்ணைச் சிமிட்டி சொல்ல.,

  அவனோ, “ஏன் ரெண்டு பேரும் ஏதும் சொன்னாங்களா”, என்று கேட்டான்.

     “இல்ல வீட்ல எல்லாம் பேசிட்டு சொல்றேன் ன்னு சொன்னாங்க”, என்றாள்.

    “நீ என்ன சொன்ன”, என்று கேட்டான்.

    “என்ன சொல்லுவேன், கல்யாணத்துக்கு ஓகேன்னு சொன்னேன்., எல்லாரும் சம்மதிச்சா”, என்று அடுத்து சொன்னாள்.

    “அதுதானே பார்த்தேன், எங்க கல்யாணத்துக்கு தான் ஓகே சொல்லிட்டியோ ன்னு நினைச்சேன்”, என்றான்.

      சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அவன் கை முட்டி பகுதிக்குள் கையை கோர்த்து அப்படியே அவன் கை புஜத்தில் தலையை சாய்த்துக் கொள்ள., அவளை திரும்பி பார்த்தவன்., அவள் உச்சந்தலையில் கன்னம் பதித்து அவள் தலையிலே தன் தலை சாய்த்து கொண்டான்.,

    அவன் மனதிலோ, ‘முதல் முதலாக அவளாக வந்து தன் கையோடு கைகோர்த்து இருக்கிறாள்’, என்று மட்டுமே தோன்றியது. ‘நிச்சயமாக ஏதோ இருவரும் சம்மதிக்கும் விதமாக தான் பேசி வந்திருக்கிறாள்’, என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

   நியூ இயர் செலிப்ரேஷன் முடிந்து வந்த பிறகு இந்த ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை ஹாலில் விரித்து படுத்திருந்தனர்.

    அவள் தன் அருகில் இருந்தால் போதும் என்பதே அவனுடைய எண்ணமாக இருந்தது., இவளும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்துக் கொண்டிருந்தாள்., இன்று அதுவே தொடர்ந்தது.

  அவர்கள் பேசிய பிறகு தினமும் பேசினாலும், இருவரும் ஒரே வீட்டில் இருப்பது மட்டும் இன்னும் சொல்லவில்லை., மற்ற அனைத்தும் அனைவருக்கும் தெரியும்., அதன் பிறகு இவர்களுடைய ப்ராஜெக்ட்டும் வேகமாக சென்றது.

இருவரின் கவனமும் வேலையில் இருந்தாலும்,

   அவ்வப்போது அவன் அவளை கொஞ்சுவது மட்டும் தவறவில்லை., சரியாக ஏப்ரல் மாதம் முடியும் தருவாயில் அவர்களுடைய ப்ராஜெக்ட்டும் முடியும் நிலைக்கு வந்திருந்தது.

   நியூ இயர் கழிந்த பிறகு இவளை எப்போது உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தானோ, அதே நேரம் அவளிடமும் சரி என்ற தலையசைப்பு கிடைத்ததோ., அப்போதிலிருந்தே வேலையை வேகமாக விரட்டி தான் செய்து கொண்டிருந்தான் நிமலன்.