மதரிடமிருந்து வந்த மெசேஜ் பார்த்தவள்., உடனடியாக. மதர்க்கு அழைத்தாள்.
மதரோ அவளிடம் “உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு தனா., அதுக்கு தான் கூப்பிட சொன்னேன்”, என்று சொன்னவர், பெருமூச்சு விட்டார்.
“சொல்லுங்க மதர், நான் நியூ இயர் அன்னைக்கு பேசினதனால,நாலு நாள் கழிச்சு பேசலாம்னு நினைச்சேனே தவிர மத்தபடி ஒன்னும் இல்ல மதர்”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல தனா, நான் சொன்னதை யோசிச்சியா”, என்று கேட்டார்.
“ஆமா மதர் அவங்களும் என்கிட்ட கேட்டாங்க., நான் எல்லாரோட சம்மதமும் இருந்தா மேரேஜ்க்கு ஓகேன்னு சொல்லி இருக்கேன்”, என்று சொன்னாள்.
மதரோ மகிழ்வோடு தன்னுடைய மகிழ்ச்சியை அவளிடமும் தெரிவித்து விட்டு., அவளை நிமலனிடம் போனை கொடுக்கச் சொல்லி அவனிடமும் இரண்டு வார்த்தை பேசி விட்டு இருவருக்கும் பொதுவாக ஒரு சின்ன பிரேயர் செய்து, அவர்களிடம் “கடவுள் உங்களோடு துணை இருப்பார்”, என்று சொல்லி ஆசீர்வாதம் செய்த பின்பு அழைப்பை துண்டித்தார்.
அழைப்பை வைத்த பிறகு பெருமூச்சு விடுவதை பார்த்தவன்., “ஏன் இவ்வளவு பயம்”, என்று கேட்டான்.
“என்னமோ ஒரு படபடப்பு இருந்துட்டே இருக்கு., கண்டிப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல மாம்ஸ் ட்ட இருந்து போன் வரும்ல”, என்றாள்.
“போன் வரும்” என்றான்.
“அதுக்கு முன்னாடி சமையல் முடிச்சிடுவோம்” என்று சொல்லி டின்னரை செய்து முடித்து விட்டு வந்தாள்.
“மாம்ஸ் ட்ட இருந்து போன் வந்துச்சுன்னா, நீங்க உங்க ரூமுக்கு போயிறணும் , இல்ல நான் என்னோட ரூம்க்கு போய் பேசுறேன்., கண்டிப்பா உங்கள பக்கத்துல வச்சுட்டு எல்லாம் பேசமாட்டேன்”, என்று சொன்னாள்.
“சரி மேடம் நீங்க சொன்னா ஓகே தான், இப்ப டின்னரை முடிப்போம்”, என்று சொல்லி அவளை இரவு உணவை உண்ண வைத்திருந்தான்.
உணவு முடித்த பிறகும் இவள் சற்று பதட்டமாகவே உணர்ந்தாள்,
“ஏன் இவ்வளவு டென்ஷன்”, என்று நிமலன் கேட்டான்.
“உங்களுக்கு தெரியாது., எனக்கு தெரிஞ்சு, என்னுடைய 17-வது வயசுக்கு அப்புறம் நான் எந்த விஷயத்தையும் மாம்ஸ் ரெண்டு பேரையும் மறைச்சது கிடையாது., எதுவா இருந்தாலும் சொல்லிடுவேன்., எனக்கு புரியுது, நான் சில விஷயங்கள் இப்போ கொஞ்ச நாளா சொல்லலை ன்னு., ஐ மீன் யு எஸ் வந்ததிலிருந்து., நீங்க இங்க தான் இருக்கீங்க என்ற வரைக்கும் கூட நான் சொல்லல”., என்று சொன்னாள்.
அவன் அவளை கண்ணிமைக்காமல் பார்க்க., “நிஜமாகவே சொல்லல, முதல்ல உங்களை பார்த்த உடனே கொஞ்சம் டென்ஷனா இருந்துச்சு., மாம்ஸ் ட்ட சொல்லிருவோமா அப்படின்னு தான் யோசிச்சேன்., அப்புறம் ஒவ்வொரு விஷயமும் சின்ன புள்ள மாதிரி சொல்லவா., அதெல்லாம் பாத்துக்கலாம் அப்படின்னு நினைச்சேன்., அப்புறம் ஒர்க் வரைக்கும் தானே., வொர்க் முடிஞ்ச உடனே அவங்க அவங்களோட ஊருக்கு போவாங்க, நம்ம சென்னை போகப் போறோம் அப்படி தான் நினைச்சேன்., ஏன் ஜெர்மன் போகும் போது கூட அங்க என்ன நடந்தாலும் அப்படியே சொல்லிடுவேன்., ஆனா இப்போ எதுவுமே சொல்லல., கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.,
எப்படி சொல்ல போறேன்னு தெரியல, இதுக்குள்ள தெரிஞ்சிருக்கும் இல்ல”, என்று கேட்டாள்.
அவனும் போனை எடுத்துக்காட்டி, “அப்பா அவங்களோட நைட் டைம் அதாவது நம்ம ஒர்க்ல இருக்க டைமே எனக்கு மெசேஜ் பண்ணி இருக்காங்க., ரெண்டு வீட்லயும் பெரியவங்க கிட்ட ஆரம்பிச்சு வச்சிருக்கேன் அப்படின்னு., எப்படியும் மார்னிங் அவங்களுக்குள்ள டிஸ்கஷன் நடக்கும் இப்ப தானே அவங்களுக்கு 9மணி ஆகிறது கூப்பிடுவாங்க., எப்படியும் உனக்கு பதினோரு மணிக்குள் ஃபோன் வரும்., அப்படி இல்லன்னா நம்மளோட அதிகாலைல அதாவது அவங்களுடைய ஈவினிங் டைம்ல போன் வரும்”, என்று சொன்னான்.
“அப்ப நான் இன்னைக்கு தூங்கின மாதிரி தான்”, என்று சொல்லி ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் தான், “ஏன் போன் வழியா உன் மாமன் ரெண்டு பேரும் எட்டிப் பார்க்க போறாங்களா”, என்று சொல்லி அவளை இழுத்து தன் கையணைவுக்குள் வைத்துக் கொண்டவன்.,
அவள் தோளில் பின் இருந்து தலையை வைத்து, அவள் காதுக்குள் பேச தொடங்கி இருந்தான்.
“ஒண்ணுமே இல்ல, நான் வேணாம், உன்னால என்னை விட்டுட்டு இருக்க முடியும் அப்படின்னா, உங்க மாமனுங்க அகைன்ஸ்ட்டா பேசினா கூட ஏத்துக்கோ., உன்னால என்ன விட்டுட்டு இருக்க முடியாதுன்னு தோணுச்சுன்னா., புரியுதா தோணுச்சுன்னா., நீ பதில் பேசு என்ன”, என்று சொன்னான்.
இவளோ “சும்மா இருங்க மாமா ரெண்டு பேரும் அப்படி எல்லாம் அகைன்ஸ்ட்டா பேசுறவங்க கிடையாது., ஆனா என்ன குறுக்கு விசாரணை பண்ணுவாங்க, ஏன் சொல்லல, அவர் தான் ப்ராஜெக்ட் வந்து இருக்காருங்கறதை ஏன் தெரியப்படுத்தலை? ன்னு “, கேட்பாங்க”, என்றவள், ஆமா ஒரே வீட்ல இருக்கோம் ன்னு தெரியுமா”, என்று கேட்டாள்.
“அதெல்லாம் சொல்லலை, ப்ராஜெக்ட் ல ஒன்னா தான் இருக்கோம் ன்னு தெரியும் அவ்வளவுதான்”, என்று சொன்னான்.
“அப்போ ஓகே”, என்று சொல்லிவிட்டு இவள் அமைதியாக.,
அவனோ, “என்ன பண்ற நீ, நான் உன்னை ஹக் பண்ணா டூ மினிட்ஸ் கூட கிடையாது., ஏன் ஒன் மினிட் கூட கிடையாது., மெதுவா கை எடுத்து விடுற, சமையல் பண்ணிட்டு இருக்கும் போதோ, நீ மும்மரமா வேலை பாத்துட்டு இருக்கும் போதோ உன்னை ஹக் பண்ணா தான் என் கையை எடுத்து விடுவதற்கு உனக்கு டைம் ஆகுது., இல்லன்னா என் கைல கிள்ளி வைக்கிற., என்னை பிடித்து தள்ளி விடுற.,
சரி நான் இதுவரைக்கும் உனக்கு நெத்தில கிஸ் பண்ணி இருக்கேன்., கண்ணுல கிஸ் பண்ணி இருக்கேன்., உன் கழுத்துல உள்ள கிஸ் பண்ணி இருக்கேன்”, என்றான்.
“ஷ்ஷ்ஷ் போதும் போதும், நீங்க எதுக்கு கிஸ் பண்றீங்க, நானா உங்களை பண்ண சொன்னேன்”., என்றாள்.
“நான் இத்தனை கிஸ் பண்ணி இருக்கேன்., நீ என்னைக்காவது ஒன்னே ஒன்னு குடுத்து இருக்கியா”, என்று கேட்டான்.
இவளோ “அதெல்லாம் கொடுக்க முடியாது”, என்றாள்.
அவனும் சிரித்தபடியே, அவள் விலக்கி விட்ட கையே மீண்டும் அவளோடு சேர்த்து இறுக்கி., தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன், “அப்படிங்களா மேடம், வெயிட் பண்ணுங்க, நான் வாங்கிக்கிறேன்” என்று சொல்லி சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கும் போதே போன் வருவதை பார்த்தவுடன்.,
அவனை பார்த்தவள்., “கூப்பிட்டாங்க, நான் ரூம்குள்ள போறேன்”, என்று சொன்னாள்.
“இங்கே உட்கார்ந்து பேசு”, என்றான்.
“மாட்டவே மாட்டேன், நான் ஏதாவது உளறிவிடுவேன்., நான் உள்ள போறேன்., நீங்க தூங்குங்க, இல்லாட்டி இப்படியே உட்க்கார்ந்திருங்க”, என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை சாத்தியவள் போனை எடுத்தாள்.,
“ஹாய் மாம்ஸ் என்ன எப்படி இருக்கீங்க”, என்று எப்போதும் போல விசாரித்தவள்,
“சொல்லு மாம்ஸ், இன்னிக்கு நாள் எப்படி போச்சு”, என்று கேட்டாள்.
அந்தப்பக்கமோ இருவரும் அமைதியாக இருந்தார்கள்.,
சற்று நேரத்தில் வினித் தான், “குட்டி நீ வளர்ந்துட்ட குட்டி”, என்றான்.
“போ மாம்ஸ், உனக்கு எப்பவும் இதே வேலை தான், நான் வளந்துட்டேன்னு சொல்லுவ, அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு வளரலைன்னு சொல்லுவ., அதுதானே”, என்று சொன்னாள்.
“பாப்பா” என்றான் முகேஷ்.,
“சொல்லு மாம்ஸ், வீட்ல எப்படி இருக்காங்க, செக்கப் போனியா, சாதாரணமாக பேசுவது போல பேசினாலும் மனதிற்குள் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.,
‘எப்போது இதைப்பற்றி பேச தொடங்குவார்களோ’ என்று நினைத்தாள்.,
சற்று நேரத்தில் அவள் எதிர்பார்த்தது போல, “குட்டி, பாப்பா”, என்று இருவரும் சொல்லி விட்டு,
“நாங்க கேட்பதற்கு மட்டும் இப்ப பதில் சொல்லு”, என்றனர்.
“கேளு மாம்ஸ் என்ன விஷயம்”, என்றாள்.
அவனும், “குட்டி நிமலன் அண்ணா உன் கூட தான் ப்ராஜெக்ட்ல இருக்காங்களா”, என்று கேட்டான்.
“ஆமா அவங்களோட கம்பெனிக்கான ப்ராஜெக்ட் தான்”, என்று சொன்னாள்.
“உனக்கு இது எப்ப தெரியும்”, என்றான் முகேஷ்,
“நான் வந்து ஒரு ஒன் வீக் அப்புறம் தான், அவங்க வந்தாங்க, அவங்க வந்ததுக்கு அப்புறம் தான் நான் எங்க ஆபீஸ் ஹெக்ட்க்கு போன் பண்ணி கேட்டேன்., அப்பதான் சொன்னாங்க அவங்களோட ப்ராஜெக்ட் ன்னு, அப்பவே தெரியுமே ஏன்?”, என்றாள்.