” ஏய் நீ எதுக்கு இப்படி பதற, அது எல்லாம் சொல்லலாம்”, என்று சொன்னான்.
“நீங்க அசால்ட் ஆ சொல்லுவீங்க., நான் எப்படி சொல்லுவேன்”, என்றுகேட்டாள்.
“நான் சொல்லிக்கிறேன் மா, நீ எதுக்கு டென்ஷனாகுற”, என்றான்.
“உங்களுக்கு தெரியாது, நான் மாம்ஸு கிட்ட எப்படி சொல்ல”, என்றான்.
“உன் மாம்ஸ், ஏற்கனவே அண்ணன் பார்த்துட்டியா, அண்ணன் பார்த்துட்டியா, ன்னு தானே கேட்டுட்டு இருந்தான்., அதுனால ஈசியா சொல்லலாம்., ஆமா நீ எப்ப என்ன மாம்ஸ்னு கூப்பிட போற”, என்று கேட்டான்.
“அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட மாதிரி எல்லாம் உங்களை கூப்பிட முடியாது”, என்று சொன்னாள்.
“அப்ப எப்படி கூப்பிடுவ”, என்றான்.
“எப்படி கூப்பிடுறது”,என்று வாய் விட்டு யோசித்துக் கொண்டே, இந்தியாவில் இப்போது இரவு நேரம் என நேரத்தை பார்த்தவள்., ‘தூங்கி இருக்க மாட்டாங்க’ என்று சொல்லிக் கொண்டே திவ்யாவிற்கு கால் செய்தாள்.
அந்த பக்கம் திவ்யா எடுத்தவுடன், “என்னடி இந்த நேரத்துக்கு கூப்பிட்டிருக்க., எப்பவும் எங்களோட காலை டைம்க்கு தானே கூப்பிடுவ”, என்று கேட்டாள்.
” பாஃர் ஏ சேன்ஜ் எங்களோட காலை டைம்ல கூப்பிட்டேன்”,என்றாள்.
“இன்னும் எழுந்துக்கலையா”, என்று திவ்யா கேட்டாள்.
“இப்ப தான் எந்திரிச்சு சமைச்சிட்டு இருக்கேன்., திடீர்னு ஒரு டவுட் வந்துச்சு”,என்றாள்.
“என்ன சமையலில் ஏதும் சந்தேகமா”, என்றாள்.
“இல்ல இல்ல, சமையல்ல சந்தேகம் இல்ல, இந்த மாம்ஸ் ரெண்டு பேரையும் அவங்க பிரண்ட்ஸ் சொன்னாங்க ன்னு மாம்ஸ்னே கூப்பிட ஆரம்பிச்சேன்., ஆனா அத்தை பசங்க., மாமா பசங்கள வேற எப்படி எல்லாம் கூப்பிடுவாங்க”, என்று கேட்டாள்.
அருகில் இருந்து அவளுக்கு காய் வெட்டி கொடுத்துக் கொண்டிருந்தவனோ., அவளை திரும்பிப் பார்த்து சிரிக்க.,
இவளோ ‘ப்ளீஸ்’ என்று சொல்லி செய்கையில் அவனிடம் கண்ணை காட்டி வாயை குவித்து சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவனும் “நடத்து நடத்து” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
திவ்யாவோ “என்னடி திடீர்னு”, என்று கேட்டாள்.
“இல்ல கேட்டேன், சொல்லேன்”, என்று கேட்டாள்.
“ஏன்னா இங்க ஒருத்தங்க கேட்டாங்க, நான் கேட்டு சொல்றேன்னு சொன்னேன்., எனக்கு தெரியாதத நான் எங்க போய் சொல்றது., நீ சொல்லு”, என்றாள்.
“இல்ல இல்ல, போதும் போதும் இதுவே நிறையதான்”, என்று சொன்னாள்.
“ஏன் மலையாளத்துல யாரையும் பார்த்து இருக்கியா., ஏட்டா கூப்பிட போறியா?”,என்றாள்.
“அப்படியெல்லாம் கூப்பிட மாட்டேன்”, என்று சொன்னவள். நான் தமிழ்ல தான் கூப்பிடுவேன்”, என்றாள்.
“ஓஹோ தமிழா”, என்று திவ்யா அங்கிருந்து கிண்டல் அடிக்க.,
“இல்லையே, ச்சே ச்சே”, என்று சொன்னவள்., “அதெல்லாம் ஒன்னும் இல்ல, அப்படி னா உனக்கு சொல்லாமலா, சரி தம்பி எப்படி இருக்கான்”,., என்று சொல்லி அவள் வீட்டு விவரங்களை கேட்டு விசாரித்த பின்பு போனை வைத்தாள்.
சிரித்தபடியே அவனை திரும்பி பார்க்க., அவனும் காய்கறியை வெட்டி முடித்துவிட்டு இவள் பேசுவதை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்தவள்., “இது என்ன பார்வை”, என்றாள்.
அவனும், “என்னை கூப்பிடறதுக்கு தான விசாரிச்சிட்டு இருந்த”, என்று கேட்டான்.
“ஆமா இது பெரிய உலக ரகசியம் பாத்தீங்களா, நான் அவங்கள கூப்பிடற மாதிரி உங்களை கூப்பிட மாட்டேன்னு சொன்னேன் தானே, அப்பவே நான் உங்களுக்காக தான் விசாரிக்கிறேன் தெரிஞ்சுருக்கும்”, என்றாள்.
அவனும் அவளை பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தவன்., “புதுசு புதுசா யோசிக்கிற கண்மணி நீ”, என்று சொல்லிவிட்டு.,
“நீயும் எனக்கு இன்னும் புதுசா தெரியுற”, என்று சொன்னவன்., எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு, தட்ஸ் யுவர் சாய்ஸ், நீ பேர் சொல்லி கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான், ஆனால் பஸ்ட் ல இருந்தே இந்த கண்மணி லெட்டர்ல, யுவர் மாம்ஸ்னு போட்டுட்டேனா., அது மட்டும் தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு”, என்று சொன்னான்.
“ரொம்ப வருந்த வேண்டாம்”, என்று சொல்லி விட்டு சமையலை கவனிக்க தொடங்கினாள்.
இவனுக்கு அழைப்பு வந்தவுடன் போனை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றவன்., பேசிவிட்டு உள்ளே வரும் போது இவள் மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்தாள்.
அவன் கேட்ட கேரளா அவியலையும், புளிச்செறியையும் சமைத்து முடித்து ருசி பார்த்து விட்டு எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.
அதன் வாசனையை முகர்ந்து இழுத்தபடி வந்தவன், அவளை பின் இருந்து வேகமாக அணைத்து கொண்டு, அவள் கன்னத்திலும் கழுத்திலும் எப்போதும் போல முத்தம் வைக்க கூசி சிலிர்த்தவள்.,
“இப்படி பண்ணாதீங்கன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்”, என்றாள்.
“மேடம் நான் உனக்கு பஸ்ட் லிருந்து இதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்., நீயும் சொல்லிக்கிட்டு தான் இருக்க., ஆனா நான் கேட்கிற மாதிரி இல்ல., கேட்கவும் மாட்டேன்”, என்று சொல்லிவிட்டு.,
“கண்மணி செம்மையா சமைச்சிருக்க, வாசம் தூக்கலா இருக்கு, நான் காலையிலேயே கொஞ்சம் ரைஸ் எடுத்துக்கிறேன்”, என்று சொன்னான்.
“அப்ப நீங்க கேட்ட புட்டு”, என்றாள்.
” வையி, அதை நான் உனக்கு ஒன்னு செஞ்சு தரேன்., அதுபடி சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கும்”, என்று சொன்னவன்.,
அது போல அவளுக்கு இனிப்பு ஒரு விதமாகவும்., காரம் ஒரு விதமாகவும் புட்டை பிசைந்து உருட்டி கொடுத்தான்.
அவளோ ரசித்து சாப்பிட்டாள். அது போல அவனும் அன்றைய கேரளா உணவை ரசித்து சாப்பிட்டவன்.,
“அப்பா பேசுனாங்க”, என்று சொன்னான்.
“என்ன”, என்றாள்.
“இன்னைக்கு உங்க மாமா வீட்டுக்கும், உங்க தாத்தா வீட்லக்கும் போன்ல சொல்ல போறாங்க., அவங்க சரின்னு சொன்னா அப்பா நேர்ல போய் பேசுறேன்னு சொல்லி இருக்காங்க”, என்று சொன்னான்.
அதிர்வோடு அவனைப் பார்த்தவள், “போச்சா நான் அவங்களோட ஈவினிங் மாம்ஸ் ரெண்டு பேர் ட்டையும் பேசும் போது கூட எதுவுமே சொல்லல”, என்று சொன்னாள்.
“நீதான் எதுவுமே சொல்லலையே., அப்புறம் என்ன பாத்துக்கலாம் விடு”, என்று சொன்னான்.
காரில் கிளம்பிய சில நிமிடங்களில் அவனுடைய இந்த கேள்விக்கு., “போகுது இன்னும் கொஞ்சம் ஸ்பீடா பண்ணுனோம் னா, மேக்சிமம் ஏப்ரல் என்ட் ல முடிச்சிடலாம்., ஸ்லோ வாச்சினா., மே ஜூன் வரைக்கும் இழுக்கும்., கொஞ்சம் ஹரியப் பண்ணினா, ஏப்ரல் என்ன, ஏப்ரலுக்கு முன்னாடி கூட முடிக்கலாம்”, என்று சொன்னாள்.
“ஓகே கொஞ்சம் ஸ்பீட் பண்ணுவோம்., இன்னைக்கு பேசுவோம்”, என்று சொல்லிக்கொண்டு வந்தான்.
இவளோ “என்ன திடீர்னு” என்று கேட்டாள்.
அவனும் காரில் இருந்து இறங்கிய பிறகு, “எத்தனை நாளைக்கு ம்ஹூம் வருஷத்துக்கு தான் லவ் பண்றேன்னு சொல்லிட்டு சுத்த, நீ சீக்கிரம் தர்ஷனா நிமலனா மாறிரு., அதுக்கு தான்”, என்று சொன்னான்.
அவனை திரும்பி பார்த்தவள் சிரித்துக் கொண்டே அலுவலகத்திற்குள் அவளுடைய இடத்தில் சென்று அமர்ந்தாள்.
அதன் பிறகு அவர்களது வேலை அவர்களை இழுத்துக் கொள்ள., இடையில் ஒரு முறை டீக்காக எழுந்தவன், அவளுக்கும் சேர்த்து காஃபி கலக்க.,
அங்குள்ள ஒரு அலுவலக ஊழியர் தான்., “நிமலன் நீங்க பாஸ்ன்னு கொஞ்சம் கூட பந்தா காட்டிக்கவே மாட்டேங்கிறீங்க., உங்க ப்ரண்ட் ஆபீஸ்ல இருந்து வந்தாலும்., அவங்க உங்க ஸ்டாப் தான., நீங்க காபி எல்லாம் கலந்து கொடுக்குறீங்களே”, என்று கேட்டான்.
அவனும் சிரித்தபடி தெரிந்தால் தெரியட்டும் என்று நினைத்து விட்டு.,
” நான் ஆபீஸ்க்கு பாஸ்ங்க., ஆனா மேடம் எனக்கு பாஸ்”, என்று சொன்னான்.
“புரியலையே”, என்று கேட்டான்.
“உங்களுக்கு உங்க வீட்ல பாஸ் யாரு”, என்று கேட்டான்.
“வீட்ல என்னோட ஒய்ஃப்”, என்று சொன்னவன்., ஒரு நிமிடம் அதிர்வோடு நிமலனைப் பார்க்க., “இவங்க மிஸ்சஸ் நிமலனா”, என்று கேட்டான்.
“சீக்கிரத்தில ஆக போறாங்க., அதனால தான் தைரியமா என் கூட அனுப்பி வச்சிருக்காங்க., வேற ஒன்னும் இல்ல”, என்று சொன்னான்.
” கல்யாணத்துக்கு முன்னாடி ஜாலி ட்ரிப்பா”, என்று கேட்டான்.
“நோ நோ நோ, எங்க இந்தியா இன்னும் அந்த லெவலுக்கு முன்னேறல., எங்களுக்குள்ள ஒரு புரிதல் வரணும்ங்குறதுக்காக என் கூட வந்து இருக்கா., அவ்வளவு தான் மத்தபடி இது எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதற்கான நேரம் அவ்வளவு தான்., அதோட எங்களோட அபிஷியல் ஒர்க்கையும் சேர்த்து பார்க்கிறோம்.,
அபிஷியல் வொர்க்குகாக தான் நாங்க மெயினா வந்தோம்., ஜஸ்ட் எங்களோட முக்கியமான புரிதலையும் இதோட சேர்த்து பார்த்துக்கிறோம் , ஆக்சுவலா அப்படி தான் சொல்லணும்”, என்று சிரித்தபடி சொன்னவன் அங்கிருந்து நகன்றான்.
ஏனெனில் தெரியும், அவனுடைய அதிர்வு அவனுடைய முகத்தில் தெரிந்த மாற்றமும், நிச்சயமாக இன்னும் கொஞ்ச நேரத்தில் டீமில் உள்ள அனைவருக்கும் பரவிவிடும் என்று தெரிந்தவுடன் சிரித்தபடியே வந்து அவள் அருகில் அமர்ந்து காபியை கொடுத்தவன்.
“ஆபீஸ்க்கு தெரியப்படுத்திட்டேன்”, என்று சொன்னான்.
“எந்த ஆபீஸ்க்கு”, என்றாள்.
“இங்க தான் நம்ம டீம் மெம்பர்ஸ்க்கு”, என்று சொல்லி தான் தெரியப்படுத்திய விதத்தை சொல்லவும்.
“ஏன்” என்றாள்.
“தெரியட்டும், இப்ப என்ன எப்படியும் இன்னைக்கு நைட், அதாவது நம்மளோட நைட் நேரத்துக்கு உனக்கு கண்டிப்பா உங்க மாம்ஸ் ரெண்டு பேரும் போன் பண்ணுவானுங்க., முதல்ல விசாரணை ஆரம்பிப்பாங்க., ஏன்னா இன்னைக்கு டே டைம் , அதாவது அவங்களோட நைட்டுக்கு அப்பா எப்படியும் தாத்தா கிட்டயும், உங்க மாமா கிட்டயும் இன்பார்ம் பண்ணியிருப்பாரு., அவங்க உடனே இதை டிஸ்கஸ் பண்ண மாட்டாங்க., அப்படியே டிஸ்கஸ் பண்ணாலும்.,
அவங்களோட மிட் நைட் நம்மளுடைய ஒர்க்கிங் டைம் அப்படின்னு கூப்பிட மாட்டாங்க., தெரிந்தாலும் மேக்ஸிமம் எனக்கு தெரிஞ்சு வினித்கிட்டே முகேஷ் ட்ட காலையில தான் சொல்லுவாங்க., காலைல ரெண்டு பேரும் உனக்கு போன் பண்ணி விசாரிப்பானுங்க, நீ பதில் சொல்ல தயாராகனும் இல்ல”, என்று கேட்டான்.
“நீங்க வேற என்னை டென்ஷனாக்காதிங்க போங்க., நான் என் வேலையை பார்க்கிறேன்”, என்று சொன்னாள்.
“இந்த காபியை குடிச்சிட்டு வேலையை பாரு”, என்று அவளை கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தான்.
இவளுக்கு சூரியன் மறையும் நேரம், இந்தியாவில் சூரியன் உதிக்கும் நேரம்,
‘இவள் எப்படி சமாளிக்க போகிறாள்’, என்று அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்க.,
அவளோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவனும் “மேடம் நீ தான் வீட்டில் உள்ள எல்லாரோட பெர்மிஷனோட கல்யாணம் நடக்கணும்னு சொன்ன., சோ பெர்மிஷன் கேக்கணும் இல்ல., அப்போ தானே ப்ராஜெக்ட் முடிச்சுட்டு போகும் போது கல்யாணத்துக்கும் ரெடி பண்ண முடியும்”, என்று சொன்னான்.
“எப்படி சமாளிக்கிறது ன்னு தெரியவில்லை, ஏதாவது ஐடியா சொல்லி குடுங்க”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் உங்க மாமனுங்க கேட்கும் போது நீயே பதில் சொல்லுவ., அதுக்குத்தானே நானும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”, என்று சொன்னான்.
இவர்கள் போனை எதிர்பார்த்து இருந்த இடத்திலிருந்து வருவதற்கு பதிலாக, மற்றொரு இடத்தில் இருந்து இவளுக்கு தன்னை அழைக்கும் படி மெசேஜ் வந்திருந்தது.
பேசுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள், ஏனெனில் உங்கள் வார்த்தைகளும் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் மற்றொருவரின் மனதில் வெற்றிக்கான அல்லது தோல்விக்கான விதையை விதைக்கும். –நெப்போலியன் ஹில்