அதே நேரம் போன் வர அங்குள்ள நண்பர்களோடு அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க., அவன் அருகில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவள்., இவன் போனில் பேச தொடங்கவும் அப்படியே சாய்ந்து சோபாவில் தூங்க தொடங்கி விட்டாள்.
உடைமாற்றி விட்டு வந்திருந்தவள் தான்., அவன் பேச இழுத்து அமர வைத்திருந்தான். அவள் தூங்குவதை பார்த்தவன் நண்பர்களிடம் மறுநாள் பேசுவதாக சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு வந்தான்.
முதல் நாள் போலவே ஹாலில் பெட்டை விரித்து அவளை அப்படியே தூக்கி கீழே போடும் போது, அவள் லேசாக தூக்கம் கலைந்து விழித்து பார்க்க.,
“தூங்கலாம்” என்று சொன்னான்.
இவளோ “ரூமுக்கு” என்று சொல்லி எழுந்து கொள்ளப்போக.,
அவளை அப்படியே தன்னோடு சேர்த்து பிடித்தவன்., “நேத்து நைட்டு என் கைக்குள் தானே தூங்கின, இன்னைக்கும் இருக்கலாம் தப்பில்லை” என்று சொன்னான்.
“இல்ல எனக்கு ஃப்ரீயா தூங்கணும்”, என்று சொல்லி தூக்கத்தில் உளறினாள்.
அவனும் “தூக்கம் வரலன்னா நீ எந்திரிச்சு போய்க்கலாம்., இப்ப அப்படியே படுத்திரு பார்ப்போம்”, என்று சொல்லி தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்துக் கொண்டான்.
அவள் “வேண்டாம்” என்று எழப்போகவும்., “தூக்கம் வரலைன்னா எழுந்திருச்சு போலாம்னு சொல்லிட்டேன். முதல்ல தூங்க ட்ரை பண்ணு., தூக்கம் வரலைன்னா சொல்லு”, என்று சொல்லும் போதே,
“சரி” என்று குளறலாக சொன்னவள், சற்று நேரத்திலேயே உறங்கி இருந்தாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்து இருந்தவன், தனக்குள் சிரித்தபடி “எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த ஸ்டேஜிக்கு கொண்டு வந்து இருக்கேன்., ஹாயா எழுந்திருச்சு மேடம் போய் ரூம்ல படுப்பிங்களா”, என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளோ தூக்கத்தில் ம் ம் ம் என்று சத்தம் மட்டும் கொடுத்தாள்,
அவனோ, “ஒன்னும் இல்ல தூங்கு”, என்று மீண்டும் அவள் தலையை கோதி கொடுத்தபடி அப்படியே அவனும் தூங்கி இருந்தான்.
காலை நன்கு விடிந்த பிறகு எழும் போது இன்னும் அவன் கையணைப்பில் இருப்பதை பார்த்தவள், ‘தூக்கம் வரலனா எந்திரிச்சு போனு சொன்னாங்க தானே, ஆனால் பாரு எப்படி தூங்கி இருக்கேன்’, என்று நேரத்தை பார்க்க. அதுவோ மணி எட்டு ஆக இன்னும் சில நிமிடங்களே இருப்பதை காட்டியது.
அவனைப் பார்க்க அவனும் அப்போது தான் கண்விழித்தவன் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவள் எழுந்த அசைவில் தான் கண்ணே விழித்திருந்தாள்.,
சிரித்தபடி பார்த்தவன், “ஹேப்பி நியூ இயர் கண்மணி”, என்றான்.
“ஹேப்பி நியூ இயர்” என்றாள்.
“மாம்ஸ் சொல்ல மாட்டியா”, என்று கேட்டான்.
அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே எழுந்தவள், “வேற வேலை இல்ல உங்களுக்கு”, என்று சொல்லிவிட்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.
“டீ சொல்ல போறேன்” என்றான்.
“எனக்கும் சேர்த்து காபி சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு அறைக் கதவை சாத்தியவள், குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டே வெளியே வந்தாள்.
அப்போது தான் காஃபியும் வந்தது.
“என்ன அதுக்குள்ள குளிச்சிட்ட”, என்றான்.
“நீங்க மத்தியானம் இங்க இருந்து கிளம்பிடலாம் ன்னு சொல்லி இருக்கீங்க., சோ நீங்களும் சீக்கிரம் கிளம்புங்க., காலையில பிரேக்ஃபாஸ்ட் முடிச்ச உடனே கிளம்புவோம்., போற வழியில லஞ்ச் எங்கையாவது பாத்துக்கலாம்”, என்று சொன்னாள்.
“போலாமே”, என்று சொல்லி விட்டு டீ குடித்து அவளோடு அங்கே அமர்ந்து தன் பார்த்தவைகள், தான் படிக்கும் போது இருந்தவைகள் என பேசிக்கொண்டே நேரத்தை போக்கினான்,
அப்போதே பேசி பேசியே மணி பதினொன்றை கடக்க வைத்திருந்தான்., குளிக்காமலே காலை உணவை முடிக்க.,
இவள் தான், “குளிக்காமலே சாப்பிடுறீங்க”, என்றாள்.
“அதான் பிரஷ் பண்ணிட்டேனே”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
“நியூ இயர் அதுவும் குளிக்காமல் சாப்பிட்டு இருக்கீங்க”, என்று சொன்னாள்.,
“அதெல்லாம் பாத்துக்கலாம்” என்று சொன்னவன், அவளிடம் மீண்டும் கதைகள் பேசிக் கொண்டே நேரத்தை போக்கிவிட்டு அங்கிருந்து மதியம் 12 மணிக்கு மேல் தான் கிளம்பினான்.
சொன்னது போலவே போகும் வழியில் லஞ்சை முடித்துக் கொண்டு அவர்கள் இருப்பிடம் வந்து சேரும் போது மாலை 6 மணியை நெருங்கி இருந்தது.
பின்பு அங்கு “அருகில் இருந்த கோயிலுக்கு அவள் செல்ல வேண்டும்” என்று சொன்னாள்.
கடவுள் நம்பிக்கை வந்த தருணத்தை நினைத்தவள், வடபழனி முருகன் படத்தை எடுத்து பார்த்தாள், ‘அவங்க சொல்லுற மாதிரி நடக்குறது எல்லாம் நன்மைக்கே ன்னு நினைத்து கொள்கிறேன்’. என்று யோசித்துக் கொண்டிருந்தவளை கூட்டிக் கொண்டு சென்றான்.
கடவுளே வணங்கி விட்டு, சற்று நேரம் அமர்ந்து விட்டு வந்தவர்கள் , அங்கிருந்து மெதுவாக இருவரும் எப்போதும் போல நடந்து தங்கள் அறைக்கு வந்திருந்தனர்.
வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே நண்பனின் காரை அவனிடம் கொடுத்து விட்டிருந்தான்.
நடந்தே பேசிக்கொண்டு வந்து சேரும் போது அவளிடம் சொல்லி இருந்தான்., “எனக்கு இப்படியே ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா கூட சந்தோஷம் தான், நீ எல்லார்ட்டையும் சம்மதம் வாங்கிட்டா கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இருக்க, நான் அப்பா ட்ட காலையில பேசும் போதே சொல்லிட்டேன்., எல்லார் சம்மதத்தோடையும் கல்யாணம் நடக்கணும்., நம்ம வீட்ல நீங்க பேசுங்க.,
அவங்க வீட்ல நீங்க கேளுங்க, முறைப்படி கேட்டுட்டு உங்க எல்லாரோட சம்மதமும் இருந்தால் தான் அவ கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டான்னு சொல்லிருக்கேன், மீதியை பார்த்துக்கலாம் ன்னு சொன்னேன், அப்பாவும்,
சரிப்பா ரெண்டு அல்லது மூணு நாள்ல நான் தகவல் சொல்றேன், என்று சொல்லி இருக்கிறார்”, என்றான்.
தங்களிடத்திற்கு வந்த பிறகு அவனிடம் “போட்டோவை எல்லாம் காட்டுங்க”, என்று சொன்னாள்.
இவன் அவளுடைய பள்ளிக்காலத்தில் இருந்து ஒவ்வொரு போட்டோவையும் காட்டிக் கொண்டு வரும் போது, அவளுடைய 12 ஆம் வகுப்பில் ஃபேர்வெல் செலிபிரேஷனில் உள்ள போட்டோ இருந்தது.
அனைவரும் ஒவ்வொரு விதமாக உடை உடுத்தி இருக்க, இவளுடைய உடையும் அழகாக தான் இருந்தது.
அதை பார்த்துக் கொண்டிருந்தவன், “இந்த கலர் உனக்கு நல்லாயிருக்கு”, என்றான்.
“இந்த ட்ரெஸ்ஸும் பார்சல் தான் வந்துச்சு, ஆனா மதர் வந்து என்கிட்ட சொல்லவே இல்ல., இது மாமா கிட்ட இருந்து வந்துச்சா, தாத்தா வீட்ல இருந்து வந்துச்சா ன்னு எனக்கு தெரியல”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
அவனோ, “என்கிட்ட இருந்து வந்துச்சு”, என்று சொன்னான்.
அவனை திரும்பி பார்க்க., தெரியும் உனக்கு நிறைய டிரஸ் இருக்குன்னு., ஆனா அன்னைக்கு பேசும் போது மதர் சொல்லிட்டு இருந்தாங்க இன்னும் ஒரு வாரத்துல ஃபேர்வெல் வச்சுருவோம்., அதுக்கப்புறம் எக்ஸாம் சமயம் தான் எல்லாரும் நேரா பாப்பாங்க., ஸ்டடி லீவ்க்கு ஊருக்கு போறாங்க., சில பிள்ளைகள் இங்கே இருக்காங்க., அப்படி ன்னு சொல்லும் போது தான் கேட்டேன்,ஃபேர்வெலு எப்படி செலிபிரேட் பண்ணுவீங்க அப்படின்னு., மதர் டீடைல்ஸ் எல்லாம் சொன்னாங்களா., சரி அப்போ ஒரு புது டிரஸ் வாங்கி அனுப்பலாமே ன்னு நான்தான் வாங்கி அனுப்பிட்டு மதர்ட்ட சொன்னேன்., நான் அனுப்புறேன்னு சொல்ல வேண்டாம்., வீட்டிலிருந்து வந்துச்சுன்னு மட்டும் சொல்லிருங்க., அப்படின்னு சொல்லி இருந்தேன் அதனால தான் அவங்க அப்படி சொல்லி இருப்பாங்க”, என்று சொன்னான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், “ஓஹோ” என்றாள்.
பின்பு ஒவ்வொரு போட்டோவாக பார்த்து வர., கல்லூரி காலத்தில் உள்ள ஒவ்வொரு போட்டோவையும் பார்க்கும் போது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது., தினம் எடுத்திருந்த அத்தனை போட்டோக்களும் அவனுடைய கம்ப்யூட்டரில் கண்மணி என்ற பெயரில் சேர்த்து வைத்திருந்தான்.
அவளுக்கு தான் ஆச்சரியமும் அதிசயமாக இருந்தது., பின்பு ஐயோ கடவுளே என்று மட்டுமே தோன்றியது.
இவனுடைய இத்தனை அன்பிற்கும், இத்தனை காதலுக்கும், தான் என்ன செய்ய முடியும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்., அதை முகத்திலோ, கண்ணிலோ, கூட காட்டிக் கொள்ளவில்லை.
அதே நேரம் சரியாக இவள் கடத்தப்படுவதற்கு முன்பு ஜெர்மனியில் எடுத்த போட்டோவை பார்த்து விட்டு அவனை திரும்பி பார்க்க.,
“நானும் ஜெர்மன்ல தான் இருந்தேன்”, என்று சொன்னான்.
அதுபோலவே இவள் ஜெர்மனியில் ஒரு இடத்திற்கு அங்குள்ள வேலை பார்ப்பவர்களோடு சுற்றி பார்க்க சென்றிருந்த போது., இவளிலிருந்து சற்று தள்ளி அவன் நின்று இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன், அவனை நிமிர்ந்து பார்க்க.,
“உன் கூடவே தான் இருந்தேன்., ஆனா தள்ளி நின்னு பார்த்தேன், அவ்வளவு தான்”, என்று சொன்னான்.
இவளுக்கு மேலும் ஒரு படபடப்பை கொடுத்தது.
அதுபோல இவளை கடத்தி சென்ற அன்று இவள் தூக்க கலக்கத்தில் தூங்கி விட., அவள் அருகே தள்ளி நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தவன்.
நல்ல தூக்கத்தில் இருக்கிறாள், என்று தெரிந்து கொண்டு அவளது அருகில் சென்று படுத்தவன்., அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்து கொண்டான்.
அவளும் தூக்க கலக்கத்தில் தலையணையில் தலை வைப்பது போல வைத்து சேர்த்து பிடித்திருக்க., தலையணையை பிடித்தது போன்ற ஞாபகத்தில் தூக்க கலக்கத்தில் பிடித்திருக்க., மயக்க மருந்தின் வீரியமோ என்னவோ அவளுக்கு அன்று நடந்தது எதுவும் சரியான நினைவு இல்லை., அதை செல்பியாக எடுத்து வைத்திருந்தான்.
அதைப் பார்த்தவளோ, “என்ன பண்ணி வச்சிருக்கீங்க, கடத்திட்டு போயிட்டு இது தான் பண்ணுவீங்களா”, என்று கேட்டாள்.
“மேடம் என்ன சொன்னீங்க, நான் உன்னை ஸ்வாகா பண்ணிட்டா, என்ன பண்ணுவேன்னு கேட்டதுக்கு, என்ன சொன்ன., அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும்., அந்த மூஞ்சி உங்களுக்கு இல்ல., நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க., அப்படித்தானே சொன்ன., அடுக்கிக்கிட்டே போன.,
ஆனா அந்த மயக்கத்திலே செம தூக்கம் தெரியுமா., என்னைய தலையணை ன்னு நினைச்சு, இன்னும் வேற சேர்த்து புடிச்சு படுத்திருந்த., மிட்நைட் அப்புறம் தான் நீ கொஞ்சம் புரள ஆரம்பிச்ச., பக்கத்தில் யார் இருக்கான்னு தடவி பார்க்க ஆரம்பிச்ச.,
அதுக்கப்புறம் தான் நான் எந்திரிச்சு நகண்டு போய் படுத்தேன் .,அதுவரைக்கும் உன் பக்கத்துல தான் இருந்தேன்”, என்று சொன்னான்.
இவளோ “கேடி கடத்தல்காரன்”, என்றாள்.
“உனக்கு மட்டும்”, என்றான்.
அதன் பிறகு அவர்களுக்கான நாட்கள் காதலிப்பவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு மகிழ்வோடு செல்வது போல இருந்தது.
இவள் தான் அவ்வப்போது அவனிடம் புலம்பி கொண்டிருப்பாள்., “மாம்ஸ் ரெண்டு பேரிடமும் ஒரு வார்த்தை கூட சொல்லல., கொஞ்சம் பயமா இருக்கு., இப்போ உங்க வீட்டிலிருந்து யாராவது கேட்டாங்கன்னா., கண்டிப்பா மாம்ஸ்க்கு டவுட் வரும். என்ன சொல்ல”, என்றாள்.
” கேட்கும் போது பாத்துக்கலாம், பேசாம இரு”, என்று சொல்லி அவள் பேச்சை நிறுத்தி இருந்தான்.
ஏனென்றால் இன்னும் அவர்கள் வீட்டில் கேட்கவில்லை என்பது அவனுக்கு தெரியும்., அன்றும் அதுபோல அவள் சொல்லிக் கொண்டிருக்க., “கேட்டா பாத்துக்கலாம் விடு, ஏன் இப்பவே யோசிக்கிற”, என்று சொன்னான்.
“இல்லை எனக்கே கில்ட்டியா இருக்கு. தெரியுமா, நான் இப்படி எல்லாம் மாம்ஸ் ரெண்டு பேர் ட்ட எதையும் சொல்லாம இருந்ததே கிடையாது., ஆனா இப்ப பாருங்க, எனக்கு எல்லா கள்ளத்தனமும் வந்துருச்சு., உங்க கூட ஒண்ணா இந்த வீட்ல இருக்கிறதை கூட., நான் இப்ப வரைக்கும் சொல்லல., ஸ்டார்டிங்ல இருந்தே அதை சொல்லி இருக்கணும். அப்படின்னு அடிக்கடி தோணும் அப்புறம்.,
இப்போ நீங்க என்னென்னல்லாம் பண்றீங்க., ஹக் பண்றீங்க, . கிஸ் பண்றீங்க, அப்பப்போ நான் தான் ஊட்டி விடுவேன்னு அடம் வேற பிடிக்கிறீங்க., இதெல்லாம் நான் எப்படி மாம்ஸ் ட்ட சொல்லுவேன்”, என்று சொன்னாள்.