“அதெல்லாம் கிடையாது, நீ வர்ற அவ்வளவு தான்”,, என்று சொன்னான்.,

    எதுவும் சொல்லாமல் அவனோடு காரில் வந்தவள்., யோசனையோடு இருந்தாள்.

      வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள்., சற்று நேரத்தில் அப்படியே உறங்கி விட அவர்கள் இருக்கும் இடம் வரும் வரை., அவன் அவளை எழுப்பவில்லை.,

       வந்த பிறகு எழுப்பியவன்,  “ரிஃப்ரெஷ் செய்து கொண்டு வா”,என்றான்.

    அவன் அதற்குள் ஸ்னாக்ஸ், டீ, என சொல்லி இருந்தான்.

     அதுவும் அறைக்கே வந்து சேர, அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த குடிலுக்கு வெளியே இருந்த சிறிய பெஞ்சில் வந்து இருவரும் அமர்ந்தனர்.

    வெளியே பார்த்த படி டீ குடிக்க தொடங்கினர். அவன் பேசலாம் என்று திரும்பும் போது., இவளோ ஏதோ யோசனையில் தூரத் தெரிந்த ஆற்றின் ஓட்டத்தையும்., அங்கு  பெரியவர் சிறியவர் என பேதமின்றி விளையாடிக் கொண்டிருந்தவர்களை பார்த்து கொண்டே அமைதியாக இருந்தாள்.

      அவளது அமைதியை கெடுக்க வேண்டாம் என அவனும் அமைதியாகி விட்டான்.

       பின்பு சற்று நேரம், அப்படியே செல்லவும்., “ஓகே நம்ம கிளம்பலாமா”, என்று கேட்டான்.

     “அதுக்குள்ளயா”, என்று கேட்டாள்.

      “மேடம் நம்ம இங்கேயே ஒரு அரை மணி நேரத்துக்கு மேல உட்கார்ந்து இருக்கோம். டீ குடித்து முடித்து அந்த கப்பு கூட டிரையாகி போயிருக்கும் ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னான்.

அவனைப் பார்த்து  விட்டு எந்திரிக்கவும்.,  அவன் அனைத்தையும் எடுத்து அங்கிருந்த அதற்கான இடத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்தவன்.,

     “ஒரு நிமிஷம் இரு”, என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவன்., அவளிடம் ஒரு புதிய சுடிதார் கையில் எடுத்து கொடுக்க.,

      அவளோ அவனையே கேள்வியாகப் பார்க்க.,

     “மேடம் சுடிதார் தான் வாங்கிட்டு வந்து இருக்கேன்., வேற எதுவும் வித்தியாசமான மாடல் டிரஸ் கொண்டு வந்து கைல கொடுக்கல., சோ போட்டுக்கலாம்., நம்ம இப்போ அப்படியே நியூ இயர் செலிப்ரேஷன்க்கு போயிருவோம்., சோ போட்டுட்டு நல்ல கிளம்பி வாங்க பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு கிளம்ப சென்றான்.

    அவனைப் பார்த்து முறைத்தவள், அப்படியே நின்றாள். “ஏன் என்னாச்சு”, என்றான்.

    “இல்ல இந்த குளிருக்கு, இந்த டிரஸ் போட்டுட்டு நான் எப்படி வர”, என்று கேட்டாள்.

      “குளிருக்கு போடுற டிரஸ், எல்லாம் போட்டுக்க போறோம்., அதுக்கப்புறம் போடப்போற, அப்புறம் என்ன”, என்று சொன்னான்.

  “என்னமோ பண்ணுங்க”, என்று சொல்லிவிட்டு முணுமுணுத்துக் கொண்டே அறைக்குள் சென்றவள்.

     குளிர் கேற்றார் போல், உடையெல்லாம் மாற்றி விட்டு வந்து கண்ணாடியில் பார்க்க., அந்த உடை அவளுக்கு அத்தனை பொருத்தமாக தெரிந்தது.

      ‘எப்படி தான் செலக்ட் பண்றாங்களோ தெரியல’, என்று நினைத்துக் கொண்டே கிளம்ப தயாரானாள்.

    அது போலவே கிளம்பி விட்டு தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்தவள்.,

     இன்று அதிகப்படியான அலங்காரத்தில் இருப்பது போல மனதில் பிரமை வந்தது.,

      ‘இல்லை எப்பவும் போல தான் இருக்கோம்’ என்று நினைத்துக் கொண்டாலும் ‘இல்லையே கொஞ்சம் அதிகப்படியா தெரியுது., முகத்தை கழுவிட்டு மறுபடியும் நார்மலுக்கு வந்துருவோமா’, என்று யோசித்தவள்,  ‘இல்ல போலாம்., இன்னைக்கு ஒரு நாளைக்கு போனா என்ன’, என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்தாள்.

    அவள் வெளியே வரும் போது அவன் கிளம்பி தயாராக சோபாவில் அமர்ந்திருந்தான்.

    அவளை பார்த்து விசில் அடித்தபடி., “மேடம் செமையா கிளம்பி இருக்கீங்களே”, என்றான்.

   அவளோ அவனை முறைத்து பார்த்து., “அப்ப நான் நினைச்சது தான் சரி, கொஞ்சம் அதிகப்படி தான், போய் முகத்தை கழுவிட்டு”, என்று சொல்லிக் கொண்டே திரும்ப,

   அவள் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து நிறுத்தியவன்., “உடனே போயிடுவியா, வா வா”, என்று சொல்லி இழுத்துக் கொண்டு கிளம்பினான்.

    வெளியே இருட்ட தொடங்கி இருந்தது.  “இந்த இருட்டுக்குள்ள எங்க போக போறோம்”, என்று கேட்டாள்.

   “நியூ இயர் செலிப்ரேஷன்க்கு, அங்க தான் போறோம்., அங்கேயே டின்னர் முடிக்கிறோம்., நியூ இயர் செலிப்ரேஷன் முடிக்கிறோம்., கிளம்பி வர்றோம்”, என்று சொன்னாள்.

  “சரி” என்று தலை அசைத்துக் கொண்டாள்.

  அங்கு சென்று சேர்ந்த பிறகு அமைதியாக சுற்றி நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், அருகில் அமர்ந்தவனோ அவள் கையை கோர்த்துக் கொண்டு.,

    “அடுத்த நியூ இயர்க்குள் நம்ம மேரேஜ் பண்ணி இருக்கணும்”, என்று சொன்னான்.

   அவனை திரும்பி பார்த்தவள், வித்தியாசமாக அவனை பார்க்க.,  “என்ன இப்படி ஒரு பார்வை”, என்றான்.

    “எல்லாத்தையும் பேசினேன், இத சொல்லல”, என்று சொன்னவள் பேச ஆரம்பிக்கும் போது, அவன் அவளோடு இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டு “இப்ப சொல்லு”, என்றான்.

    இவளோ “ஏன் இவ்வளவு பக்கத்துல”, என்று கேட்டாள்.

    “பொதுவா நம்ம தனியா இருந்தோம்னா, நம்ம எவ்வளவு சத்தமா பேசினாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல., இங்க எல்லாம் நமக்குள்ள விஷயங்களை, நம்ம மட்டும் தான் பேசிக்கணும்., அடுத்தவங்களுக்கு கேட்கக்கூடாது”, என்றான்.

   அவள் காதருகே சொன்னான். எதுவும் சொல்லாமல் நிதானமாக அவனிடம் மிக மெல்லிய குரலில் சொல்ல தொடங்கினாள்.

    “எங்க அம்மாவும், அப்பாவும், லவ் மேரேஜ் ஆகும் போது எத்தனை பேர் அதை அக்சப்ட் பண்ணாங்கன்னு தெரியல., யாருமே அக்சப்ட் பண்ணல, எனக்கு தெரிஞ்சு எத்தனை பேர் சாபம் விட்டாங்கன்னு தெரியல., கண்டிப்பா அது நிறைய இருந்திருக்கும்.,

     திட்டு, சாபம் இது எல்லாமே அடுத்தவங்கள அதிகமா பாதிக்க கூடியது., அந்த மாதிரி ஒரு மேரேஜ் பண்ணிக்க போய் தான் அவங்க லைஃப் இப்படி முழுசா வாழ முடியாமல் போயிருச்சு அப்படின்னு தோணும்., எனக்கு இப்ப எல்லாம் அடிக்கடி தோன தொடங்குச்சு, இது எப்போ அதிகமா ஃபீல் ஆச்சு அப்படின்னு சொல்லியாச்சுன்னா.,  இந்த பிராப்பர்ட்டி எல்லாம் அவங்க அவங்க பேருக்கு நான் மாத்தி கொடுக்கும் போது என் மனசுல தோணுனது இது தான்.,

       அதுக்கு அப்புறமா., கடவுள் ட்ட ப்ளீஸ் நிம்மதி கொடு அப்படின்னு மட்டும் தான் கேட்டேன்.,  அது மட்டும் இல்லாம.,  சாமி மேல அப்படி ஒன்னும் பெரிய நம்பிக்கை எல்லாம் கிடையாது அப்படின்னு தான் உன்கிட்ட சொல்லி இருக்கேன்.,

    எப்ப நான் முதல் முதல்ல சாமி கும்பிட தொடங்கினேன் அப்படின்னா., கொச்சின்ல உங்களுக்கான ரெஜிஸ்ட்ரேஷனுக்கு வரும் போது தான்., அப்ப என்ன தோணுச்சு அப்படின்னா.,

   இத்தனை பேர் ப்ரோபெர்ட்டி இவங்க பேர்ல  இருக்கும் போது.,  அத்தனை பேர் மனசு என்ன நெனச்சி நொந்து இருக்கும்., சொத்தை ஏமாத்திட்டு போயிட்டான்,  எங்களுக்குள்ளத எடுத்துட்டு போயிட்டான், அப்படிங்கிறதோட நிறைய வார்த்தைகள் சபித்திருக்கலாம்.,  மனசு வருந்தி இருக்கலாம்., இந்த மாதிரி எத்தனையோ இருக்கலாம் ன்னு சொல்லலாம்.,

   ஆனா எனக்கு தெரிஞ்சு அவங்களோட சந்தோஷம்  அவங்க கொஞ்ச நாள் வாழ்ந்தாலும்., நல்லபடியா வாழ்ந்துட்டு போய்ட்டாங்க.,

      பட் அந்த சாபத்தால் கஷ்டப்பட்டது, பாவம் அனுபவிச்சது நான் தான்., சோ”, என்று அவனை திரும்பி பார்த்தாள்.

    “என்ன”, என்றான்.

    “கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்”, என்று சொன்னாள்.

      “அப்போ நான் சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி ஹனிமூன்., பேபி எல்லாம் பெத்துட்டு உனக்கு ஓகே னா, கல்யாணம் பண்ணிக்கலாமா”, என்று கேட்டான்.

“வேண்டாம் விளையாடாதீங்க, என்ன டென்ஷன் பண்ணாதீங்க”, என்றாள்.

     “பின்ன என்னம்மா, யாரோ சொன்னாங்க, யாரோ திட்டினாங்கன்னு, நீயா நினைச்சுக்கிட்டா எப்படி?, இப்படி எடுத்துக்கோ, நானும் சொல்றேன்,

      எங்க தாத்தா கிட்ட உங்க பிராப்பர்ட்டிய நான் எழுதி வாங்கி கொடுக்கிறேன்., அவ ட்ட இருந்து எழுதி வாங்கி தந்திடுவேன், பட் நான் அவளை தான் கல்யாணம் பண்ணுவேன், அதை யாரும் தடுக்க கூடாது, இல்ல நான் கல்யாணம் பண்ண கூடாதுன்னு நினைச்சீங்கன்னா., அந்த பிராப்பர்ட்டி உங்களுக்கு கிடையாது., நான் போய் கேட்கவும் மாட்டேன்., ஒரு சொத்துக்காக நான் போய் நிற்க மாட்டேன் , அப்படின்னு தான் சொல்லி இருந்தேன்.,  ஆக்சுவலா உன்ன எங்க அப்பா எடுத்து வளர்க்கணும் னு, சொல்லும் போது எங்க தாத்தா அதை ஏத்துக்கிறதுக்கு மனசு வரல.,

எங்க தாத்தா கூட நான் ஒரு வகையில கன்வின்ஸ் பண்ணிடுவேன், ஆனா எங்க பாட்டியை என்னால கன்வின்ஸ் பண்ண முடியாம இருந்துச்சு, இப்ப வரைக்கும் நான் ஊருக்கு போனா காலையில போயிட்டு ஈவினிங் வந்துருவேன்., இல்ல எதுவும் ஃபங்ஷன் னா, போயிட்டு பங்ஷன் அட்டென்ட் பண்ணிட்டு ரிட்டர்ன் வந்துருவேன்., என்னால அங்க ஃபுல்லா ஸ்டே பண்ண முடியாது., ரீசன் ன்னு  பார்த்தா, எனக்கு சில கோபங்கள்.,  அது ஃபேமிலி குள்ள உள்ள சண்டை ன்னு கூட வையேன்.,

   அதனால நான் இப்போ என்னோட கம்பெனி பக்கத்துல இருக்குற., ஒரு தனி வீட்டுல தான் இருக்கிறேன்., இப்ப கூட நான் போயிட்டு வந்தது அப்பாக்காக., அப்பா வந்து ரொம்ப பீல் பண்ணுவாரு., சோ அப்பாக்காக போயிட்டு வந்தேன்.,

    அப்பா அம்மாக்கு என்னோட விருப்பம் தெரியும்., அவங்க இதுவரைக்கும் எதிர்மறையா எதுவும் சொல்லல.,  தாத்தா கூட ஓகேங்குற மாதிரி மைண்ட் செட்டுக்கு வந்துட்டாரு., ஆனா இப்ப வரைக்கும் எங்க பாட்டிக்கு கொஞ்சம் கோபம்., ஏன்னா இப்ப மறுபடியும் உன்னை அங்கிருந்து எடுத்தோம்னா அதுல ஏதும் பிரச்சனையாச்சி னா, மறுபடியும் அண்ணன் வீட்டு உறவு கிடைக்காமல் போய்விடும் அப்படிங்கற பயம் ஒன்னு இப்ப வரைக்கும் இருக்கு , உன்னை உங்க அப்பா ஃபேமிலில ஏத்துக்கல., ஏத்துக்காத ஒரு பொண்ணு நம்ம கல்யாணம் பண்ணி வச்சா., தன்னோட அண்ணன் ஃபேமிலி உறவு டச் இல்லாமலே போய்விடும் அப்படிங்கற பயம்”,  என்று சொன்னான்.