“அப்புறம் நீங்க சொன்ன மாதிரி 11த் ஜாயின் பண்ணதுக்கு அப்புறமா.,  என்ன படிக்க போறேன்னு கேட்கும் போதெல்லாம் யோசிச்சிட்டே இருப்பேன்., அப்பறம் என்ன செய்வது நாமே தான் யோசிக்கனுமா, அப்படிங்கற மைண்ட் செட் தான் இருந்துச்சு., அப்பவே பிள்ளைகள் எல்லாம் பேசிப்பாங்க.,  வீட்ல டிஸ்கஸ் பண்ணது., என்ன படிச்சா என்ன ஜாப் கிடைக்கும் அப்படி ன்னு, அங்க உள்ள கம்ப்யூட்டர மாதரோட பெர்மிஷனோட யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.,

     அப்போ தேடுவேன், எது ஈசியா ஜாப் கிடைக்கக் கூடியது,  எப்படி படிச்சா கிடைக்கும், என்ன எக்ஸாம் எழுதணும், இதெல்லாம் தேடி தேடி கண்டுபிடிக்க ஆரம்பிச்சேன், அதுக்கப்புறம் எனக்குள்ள யாரும் இல்லாட்டி என்ன., நமக்கு நாம்தான் அப்படிங்கற மைன்ட் வந்துச்சு., 12த் வரைக்கும் அப்படித்தான்.,

12  முடிக்கும் போது அவங்க ரெண்டு பேரும் வரும் போது ஏன் இவ்ளோ நாள் இவங்கல்லாம் வரலைன்னு தான் ஃபர்ஸ்ட் தோணிச்சு.,

    அப்புறம் சரி இருக்கிறத சந்தோஷமா ஏத்துக்கணும் அப்படிங்கறதும் தோணுச்சு.,  முதல்ல ங்க போட்டு பேசிட்டு இருந்தேன்.,  அப்புறம் அண்ணன் தான் ஃபர்ஸ்ட் கூப்பிட்டேன்.,  ஆனா அவங்க ரெண்டு பேரும் அண்ணன் கூப்பிடாத வீட்டுக்கு தெரிஞ்சா திட்டு விழும் அப்படின்னு சொன்ன உடனே கூப்பிடுறது நிப்பாட்டினேன்.,

    அப்புறம் அவங்களோட கிளாஸ்மேட் ஒரு அக்கா தான் சொல்லிக் கொடுத்தாங்க., அவங்க ஊர் பக்கத்துல அத்த பசங்க, மாமா பசங்க ல  மாமான்னு கூப்பிடுவோம் அப்படின்னு., அதுக்கப்புறம் தான் அவங்க ரெண்டு பேரும் மாம்ஸ் ஆனாங்க.,

    உண்மையிலேயே அவங்க கூட இருக்கும் போது நான் ஹேப்பியா தான் ஃபீல் பண்ணேன்., சில சமயங்களில் பீல் பண்ணி இருக்கேன்., ஆனா என்னன்னா ஹாஸ்டல்ல இருந்த லைஃபை விட இது பெட்டர் தானே அப்படின்னு நினைச்சுக்குவேன்.,

       ஒவ்வொன்றையும் யோசிச்சோம்னா., நான்  9 இயர்ஸ் வரைக்கும் எங்க அம்மா கூட இருந்த ஞாபகங்கள விட, எங்க அப்பா கூட இருந்த ஞாபகங்கள் எனக்கு நிறைய இருக்கு., அஞ்சு வயசு வரைக்கும் அம்மா  கூட இருந்திருக்கேன்.,  அம்மா கை பிடிச்சு ஸ்கூல் போன ஞாபகம் எல்லாம் இருக்கு., ஆனா அம்மாவோட முகம் அந்த அளவு தெளிவா எனக்கு ஞாபகம் இல்ல.,

      போட்டோ பார்க்கும் போது  ஞாபகம் வரும் ஆனா அதுக்கு அப்புறம் யோசித்ததில்லை., ஆனா அம்மா போனதுக்கப்புறம், நான் அப்பா கூடவே தான் இருப்பேன்., அப்பாக்கு நான் ரொம்ப செல்லம், நான் கேட்டு அப்பா எதையும் இல்லைன்னு சொன்னதே கிடையாது., நான் ரொம்ப கேட்கவும் மாட்டேன்., ஆனால் அப்பா எங்க போனாலும் எனக்காக ஏதாவது ஒன்னு அப்படிங்கற மாதிரி வாங்கிட்டு தான் வருவாங்க., ஏன் அம்மா போன உடனே அப்பா போனாங்க,  என்னை பற்றி யோசிக்கல இல்ல., எனக்காக கொஞ்ச நாள் இருந்து இருக்கலாம் இல்ல அப்படின்னு தோணும்.,

அவங்களோட லவ் அப்படி ன்னு ஒரு ஸ்டேஜ் வந்ததுக்கப்புறம் தான் புரிஞ்சிச்சு., ஃபர்ஸ்ட் எல்லாம் ரொம்ப பீல் பண்ணது உண்டு ,  லவ் இதெல்லாம் எப்ப புரிய ஆரம்பிச்சுருச்சுன்னா.,

காலேஜ் வந்ததுக்கு,  அப்புறம் காலேஜ்ல நிறைய பார்த்திருக்கேன்.,  நிறைய கதை ஃபிரண்ட்ஸ் சொல்லி இருக்காங்க., சிரிப்பு வரும், யோசனையும் வரும்,

       இங்க வந்ததுக்கு அப்புறம் மன்த்லி டைம்ல பெயின் ஃபீல் பண்ணனா., அப்பவும் பெயிண்ட் கில்லர் தான், பட் ப்ராப்பர் டேப்லெட் இருக்கும்.,

       இங்க காலேஜ்ல ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் அவங்க வீட்டைப்பற்றி  பேசும் போது,  நான் எத்தனையோ நாள் யோசித்து இருக்கேன்.,  ஓகே அம்மா இருந்திருந்தால்.,  மே பி அப்பா இருந்திருந்தா.,  நமக்கும் இந்த கேர் கிடைச்சிருக்கும் அப்படின்னு தோணும்.,

அதே மாதிரி ஃபுட் நான் பொதுவா எதையும் கழிக்க மாட்டேன்., காலேஜ்ல பிள்ளைங்க கொண்டு வரும் சாப்பாடு அதெல்லாம் அவங்க சொல்லுவாங்க, இன்னைக்கு எனக்கு புடிச்சது செஞ்சாங்க, அப்படி எல்லாம் சொல்லும் போது யோசிச்சுட்டே இருப்பேன்., நமக்கு என்ன புட் பிடிக்கும் ன்னு,

    பட் அந்த விஷயத்துல மாம்ஸ் ரெண்டு பேருமே பார்த்து பார்த்து செஞ்சு கொடுப்பாங்க., அவங்க மெயிட் கிட்ட சொல்றதே., அப்படித்தான் சொல்லுவாங்க.,

       அவளுக்கு செஞ்சு கொடுக்குற புட் ப்ராப்பரா இருக்கணும் அப்படின்னு.,

     அதே மாதிரி ஸ்கூல் லைஃப்ல பேரன்ட்ஸ் மீட்டிங் அதெல்லாம் நடக்கும் போது எனக்காக யாரும் வந்து உட்கார்ந்தது கிடையாது.,  மதர்க்கு தெரியும், ஸ்கூல்ல உள்ளவங்களுக்கு தெரியும், அதனால நான் எப்பவும் அந்த இடத்துல  இருந்ததே கிடையாது.,

    ஆனா காலேஜ்ல  ஒவ்வொரு செமஸ்டர் முடிஞ்ச உடனே வர சொல்லும் போதெல்லாம் மாம்ஸ் ரெண்டு பேரும் வந்து நிப்பாங்க.,  ஹச்ஓடி  ட்ட ஃபர்ஸ்ட் டே பேசி இருப்பாங்களாட்டு இருக்கு.,

    மாம்ஸ் பார்த்த உடனே பொண்ணுங்க தான் சொல்லுவாங்க.,  எப்பவும் மாம்ஸ் கூடவே சுத்துற ன்னு, அவங்க தான் எதுனாலும் வந்து கேட்பாங்க., சில நேரம் சிரிப்பு வரும், எனக்கு நானே  சொல்லிப்பேன், இதுதான் என்னோட மம்மி மாம்ஸ்., இது என்னோட டாடி மாம்ஸ் ன்னு.,  அவங்கள ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்றது அப்படித்தான் கிண்டலுக்கு சொல்லுவேன்.,

     அதுக்கப்புறம் ஓகே தான்.,   நான்  அதுக்கப்புறம் பீல் பண்ணேன் அப்படிங்கற மாதிரி எல்லாம் கிடையாது.,

    மாம்ஸ் இங்க கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம் தனியா இருந்துப்பியான்னு பல தடவை ரெண்டு பேரும் கேட்டாங்க.,  அதெல்லாம் இருந்துப்பேன் அப்படின்னு சொல்லிட்டேன்.,

     ஏன்னா எனக்கு பாய்ஸ் கூட  அதிக பழக்கம் கிடையாது,  உண்மைய சொல்லனும்னா அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஓகேன்னு தோணுச்சு.,

   ஆனாலும் மதர் எப்பவுமே சொல்லிட்டே இருப்பாங்க.,  பர்ஸ்ட் லிருந்தே சொல்லிக் கொடுத்து வளர்த்த தாலோ என்னவோ, நான் எப்பவுமே ரொம்ப அலார்டா தான் இருப்பேன்., ஆனா மாம்ஸ் ரெண்டு பேரும் ரொம்ப கேர் எடுத்து பாத்துக்குறவங்க தான்.,

ஆனால் ஊருக்கு அவங்க போகும் போதும் சில நேரங்கள் ஏக்கங்கள் வரும் இல்லை ன்னு சொல்லலை. ஆனால் அதை ஏத்துக்க பழகிட்டேன்,

  நான் வேற எதுவும் உங்கிட்ட இதை விட  சொல்லணும்னு யோசிக்கிறீங்களா., எனக்கு தெரிஞ்சு நான் ஹாஸ்டல்ல இருந்த வரைக்கும் ரொம்ப பீல் பண்ணி இருக்கேன்., அழுது இருக்கேன் எல்லாமே உண்டு இல்லைன்னு சொல்லல., இங்க வந்ததுக்கு அப்புறம் எப்போதாவது லோன்லினஸ் இருக்கும்., மாம்ஸ் அவங்க பிரண்ட்ஸோட  என்ஜாய் பண்ணுவாங்க., நான் போய் அதுக்கு தடையா இருக்க கூடாதுங்கறது எனக்குள்ள முதலில் இருந்தே  ஒரு எண்ணம்.,

     ஏன்னா என்னை பார்த்துக்கொள்கிறார்கள் என்பதற்காக., எப்பவும் நீங்க ரெண்டு பேரும் என்ன மட்டும் பார்க்கனும் ன்னு நான் சொல்றது தப்பு இல்லையா.,

   அவர்களுக்கான ஸ்பேஸ் ஒன்னு இருக்குல்ல., சோ நான் தான்  தள்ளி நின்னேன், அவங்க ஆக்சுவலா என்னை எல்லா இடத்துக்கும்  கூட்டிட்டு போவாங்க., கூடவே கூட்டிட்டு தான் சுத்துவாங்க., அவங்க பிரண்ட்ஸ் கூட கிண்டல் பண்ணுவாங்க.,

    ஏன்டா கங்காரு குட்டியாடா அவ., அப்படின்னு கேப்பாங்க நீங்க ரெண்டு பேரும் எப்பவும் கங்காரு பேக் மாதிரி நடுவுல விட்டு பிடிச்சுட்டே வர்றீங்க., அப்படின்னு கூட சொல்லுவாங்க, அவங்க ரெண்டு பேரும் தான் எனக்கு நிறைய சொல்லி கொடுத்தாங்க., நிறைய கேர் கொடுத்தாங்க., எல்லாமே அப்படித்தான்.,

      அப்புறம் நான் ஒர்க் போனதுக்கப்புறம் ஒரு சிக்ஸ் மன்த்ஸ்க்கு அப்புறம் எனக்குன்னு வீடு பார்த்து எல்லாம் செட்டில் பண்ணும் போது கூட மெய்டு வச்சாங்க., அப்பவும் கேட்டாங்க குக் வைக்கட்டுமான்னு கேட்டாங்க., நான் தான் வேண்டாம்னுட்டேன்.,

     ஏன்னா நான் வேலைக்கு ஜாயின் பண்ண புதுசுல., மாம்ஸ் ரெண்டு பேருக்கும் சமைக்கிற சாப்பாடு தான் எனக்கும் வரும்., அப்போ ஆபிஸ் ல ப்ரண்ட்லியா முதல் முதல்ல என்கிட்ட பேச ஆரம்பிச்சது திவ்யா தான்.,

    அந்த கம்பெனியும் உங்க வேலை தானே”, என்று இடையில் நிறுத்தி கேட்டாள்.

   அவன் சிரித்துக் கொண்டே, “நீ சொல்லு அப்புறம் பேசலாம்”, என்று சொன்னான்.

   “அங்க முதன் முதலில் காலேஜ் ஸ்டுடென்ட் ஆ இருந்து, டைரக்டா போன ஒரே ஆளு நான் தான் அப்படின்னு சொன்னாங்க திவ்யா.,   என்கிட்ட நல்லா பேசுவாங்க, அப்போ அவங்க சொல்லுவாங்க, சமைக்க கத்துக்கோ எப்பவுமே குக் பண்ணி கொடுக்கிறது எவ்வளவு தான் நல்ல ஃபுட்டா இருந்தாலும் உன்னோட டேஸ்ட் ஒன்னு இருக்கும் இல்ல., ட்ரை பண்ணி பாரு அப்படின்னாங்க.,

      ஏன்னா என்ன பத்தி அவங்களுக்கு மட்டும் தான் முழுசா தெரியும்., அது தான் நானும் தனியா போனதுக்கப்புறம் சமையல் எல்லாம் ட்ரை பண்ணி கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.,

      இப்பவும் உண்மைய சொன்னா, எனக்கு பிடிச்ச புட் எதுன்னு எனக்கே தெரியாது., எதையுமே கழிக்க மாட்டேன் அவ்வளவுதான்”, என்று சொல்லிவிட்டு நிறுத்தியவள் அமைதியாக அவனைப் பார்த்து இருந்தாள்.

     அவனும் “உன்கிட்ட ஒன்னு கேட்பேன் , சும்மா தான் அதை மறைக்காமல் சொல்லணும்” என்றான்.

     “கேளுங்க”, என்றாள்.

      காலேஜ்ல உன் கூட இருந்த பிரெண்ட்ஸ் பத்தி தான்., உன் பிரெண்ட்ஸ் கேங் ல ஒரு பையன் அபிஷேக்.,  அவன் உன்கிட்ட கொஞ்சம் க்ளோசா தானே பழகுனான்”, என்றான்.

    “நீங்க ஏதோ தப்பான மீனிங்ல கேக்கறீங்களோ ன்னு தோணுது., ரொம்ப குளோஸ் ன்னு இல்ல.,  ஃப்ரெண்ட் ஜஸ்ட் பிரண்ட்.,  ஏன்னா மாம்ஸ் ரெண்டு பேரும் என் கூட வர்றதனால எல்லாருமே தள்ளி தான் நிப்பாங்க, நானும் மாம்ஸ் ட்ட எல்லாம் சொல்லிடுவேன் அதுனால தான்”, என்று சொன்னாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன், “உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லட்டுமா”, என்றான்.

இவளோ அவனை கூர்ந்து பார்த்தபடி., “நீங்க ஏதும் என்கிட்ட மறைக்கிறீங்களா”, என்று கேட்டாள்.

    “இவ்வளவு நேரம் நீ சொல்லிட்ட, இனிமேல் நான் சொல்றேன்”, என்று தொடங்கினான்.

    பேசுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள், ஏனெனில் உங்கள் வார்த்தைகளும் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் மற்றொருவரின் மனதில் வெற்றிக்கான அல்லது தோல்விக்கான விதையை விதைக்கும். –நெப்போலியன் ஹில்