‘நாம இவன நம்புறோமா’, என்று யோசித்தவள் அவனிலிருந்து விலகி, எழப்போகும் போது, அத்தனை தூக்கத்திலும் அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன்., “கண்மணி கொஞ்ச நேரம் தூங்கு., இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சி என்ன பண்ண போற”, என்று கேட்டான்.
இவளுக்கு எழுந்த உடனேயே படபடப்பாகவே இருந்தது. பின்பு அவன் கைகளில் இருந்து நகன்றவள், “இல்ல எழுந்துக்கணும்” என்று சொன்னாள்.
அவனும் “ஓகே என்னை இப்ப எழுப்பிராத, ஒரு ஒன் ஹவர் போகட்டும்”,என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்து தூங்க தொடங்கினான்.
எழுந்தவள் அவனையே சற்று நேரம் பார்த்து இருந்து விட்டு, தன் மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கினாள்.
தனக்கென தன் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றவள், குளித்து கிளம்பியே வெளியே வர அவர்கள் தங்கி இருந்த குடில் போன்ற அமைப்பு காலை நேரத்தில் வெளியே அத்தனை ரம்யமாக இருந்தது.
குடில் கதவை சாத்திவிட்டு வெளியே இருந்த இடத்தில் அமர்ந்து அங்கிருந்த குளிரை உள்வாங்கி ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு முதன் முதலாக நிமலனை பற்றிய எண்ணங்கள் ஓடத் தொடங்கியது.
‘எனக்கும் புடிச்சிருக்கா’ என்று தன்னைத்தானே அலசிக்கொண்டாள்.
“இல்ல பேசணும், நிறைய பேசணும், அவங்க அதை தானே விரும்புகிறார்கள்., இன்றைக்கு மொத்தமாக பேசி முடிச்சிடனும்”, என்று சொல்லிக் கொண்டாள்.
‘ஐயோ நேத்திக்கு ரெண்டு மாம்ஸ்க்கும் வெளியே வந்து இருக்கேன், நான் வந்துட்டு போன் பண்றேன்னு சொன்னதோட சரி பேசலையே’, என்ற எண்ணம் மட்டும் இருந்தது.
‘இப்போ பேசுவோமா’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்த குடில்களுக்கு எல்லாம் பொதுவான கிச்சனிலிருந்து “உணவு ஏதும் வேண்டுமா”, என்று கேட்டு வந்தனர்.
இவளோ, “கேட்டு சொல்கிறேன்”, என்று சொல்லிவிட்டு உள்ளே வந்தவள்., பார்க்கும் போது நிமலன் நல்ல தூக்கத்திலிருந்தான்.
‘என்ன பிடிக்கும், என்ன டிஷ் இருக்கு ன்னு கேட்டுட்டு சொல்லலாம்’ என்று வந்து உணவை மட்டும் ஆர்டர் கொடுத்தவள், தனக்கு மட்டும் ஒரு காபி சொல்லி விட்டு வெளியே அமர்ந்தாள்.
பின்பு காபி வந்தவுடன் குடித்து விட்டு, நிமலனை எழுப்பி விட.,
அவனும் அவள் முகத்தையே பார்த்து இருந்து விட்டு, ஒற்றை கண்ணை மட்டும் சிமிட்டி “ஹேப்பி மார்னிங் கண்மணி”, என்றான்.
இவளோ அவனை பார்த்துக் கொண்டே அமைதியாக நின்றாள்.
“என்ன” என்றான்.
“ஒன்றும் இல்லை கிளம்புங்க”, என்று சொன்னாள்.
“என்ன மேடம் அதிகாரமா சொல்றீங்க”, என்றான்.
“நான் பேசணும் பேசணும் ன்னு நீங்க சொன்னீங்க இல்ல, இன்னைக்கு நான் பேசுறேன் நீங்க கேளுங்க”, என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்து சென்றாள்.
“அட பேச போறாளா, பேசிடுவோம்”, என்று சந்தோஷமாகவே கிளம்பச் சென்றான்.
அவன் கிளம்பி வரவும், உணவு வந்து சேர, அதன் பிறகு அவன் தான், “எங்க போலாம், இன்னைக்கு ஒரு நாள் தான் உனக்கான நாள்., எல்லாத்தையும் சொல்லி முடித்துவிடு., நாளைல இருந்து நீ இந்த நிமலனோட கண்மணி, அவ்வளவு தான் அப்பாட்ட நாளைக்கு நான் மேரேஜ்க்கு பேச சொல்லிவிடுவேன்”, என்று சொன்னான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், “பொறுங்க அவசரப்படாதீங்க”, என்று சொல்லிவிட்டு அவனுக்காக ஒரு டீயும் சொல்லி அனுப்பினாள்.
அவனும் “பரவால்ல மேடம் இன்னிக்கு எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு தெரியுதே ன்னு ரொம்ப ஹேப்பி” என்றான்.
இவளோ எதுவும் சொல்லாமல் காலை உணவை முடித்தாள்.
அவன் மீண்டும், “எங்கே போகலாம்”, என்று கேட்டான்.
“எங்க வேண்டுமானாலும்”, என்றாள்.
பின்பு இருவரும் காரில் கிளம்பி வெளியே செல்ல., அங்குள்ள முக்கிய இடங்களை பார்த்தபடி வரும் போது தர்ஷனா தன் மனதில் பேச வேண்டும் என்று நினைத்திருந்தவற்றை பேசத் தொடங்கினாள்.
“பேச போறேன்னு சொன்ன, வாயை திறக்கல”, என்று கேட்டான்.
“பேசலாம்”, என்றவள் சற்று நேரம் காரின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடியே வந்தவள்., அவனை மெதுவாக திரும்பி பார்த்தாள்.,
“நிறைய இருக்கு, நீங்க சொல்றீங்க வலி, ஏக்கம், ஆசை., மனச விட்டு பேச நினைச்சது., மனசு விட்டு அழ நினைச்சது., அப்படின்னு நிறைய இருக்கு, அதெல்லாம் எப்படி சொல்றது, எப்படி ஆரம்பிக்கிறது, என்று தான் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு.,
என்னை ஹாஸ்டல்ல கொண்டு வந்து விடும் போது அப்ப எனக்கு எதுவுமே தோணல., அப்பா எங்கே போய்ட்டாங்க, ஏன் இன்னும் வரல அப்படி தான் நினைச்சேன்., அப்புறம் அப்பா எப்பவாவது வந்துருவாங்கல்ல அப்படின்னு தோணுச்சு., நான் ஹாஸ்டல் வந்த புதுசுல பிரேயர் பண்ணா கடவுள்ட்ட கேக்குறது கிடைக்கும் அப்படின்னு மதர், சிஸ்டர் எல்லாம் சொல்லும் போது நானும் வேற எதுவும் கேட்டது கிடையாது., அப்பா மட்டும் வேணும் அப்படின்னு தான் கேட்பேன்”, என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே குரல் கரகரப்பாக மாற., இவனும் காரை மெதுவாக ஓட்டினான் என்றாலும்., அருகில் இருந்த ஒரு ரெஸ்டாரன்ட் முன்னாடி நிறுத்தினான்.
பின்பு அங்கு பார்க்கிங் செய்ய பெர்மிஷன் உண்டா என்று கேட்டு விட்டு பார்க் செய்து விட்டு காரில் அமர்ந்தே, “இப்ப சொல்லு”, என்றான்.
“ஆனால் கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், எனக்கு பெருசா கடவுள் ன்னு எந்த நம்பிக்கையும் இருந்தது கிடையாது., எல்லாரும் பிரேயர் பண்ணா கூட நான் கையை கூப்பி சும்மாதான் நிப்பேன்., பிரே பண்றியா ன்னு கேட்பாங்க., ஆமாம் ன்னு சொல்வேனே தவிர , அந்த சமயத்துல நான் எதுவுமே கேட்டது கிடையாது.,
எனக்கு என்ன தோணும் அப்படின்னா., கிடைக்காத விஷயத்துக்காக எதுக்கு போய் கேக்கணும் அப்படின்னு தோணும்., அதுக்கப்புறம் நான் கேட்கிறத விட்டுட்டேன்.,
அப்புறம் நீங்க சொன்ன மாதிரி., நீங்களும் உங்க அப்பாவும் பார்க்க வந்திருக்கும் போது., ஐ மீன் செகண்ட் டைம் பார்க்க வந்திருக்கும் போது., ஃபர்ஸ்ட் டைம் நீங்க வந்தது எனக்கு தெரியாது., செகண்ட் டைம் நீங்க என் பெயரை சொல்லி கேட்டு இருக்கீங்க., சோ ஒரு சிஸ்டர் வந்து என்கிட்ட சொல்லிட்டாங்க.,
தர்ஷனா உன்ன பாக்க யாரோ வந்து இருக்காங்க., ரெண்டு பேர் வந்ததா சொன்னாங்க., நான் உண்மையிலேயே ஹேப்பியா தான் ஓடி வந்தேன்., ஏன்னா நான் அங்க வந்து சேர்ந்த அத்தனை வருஷத்துல என்னை பார்க்க யாரும் வந்தது கிடையாது.,
ஆனா மதர் வந்து இல்லம்மா, இது வேற ஒருத்தங்களை பார்க்க., அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாங்க., நான் திரும்ப போய் சிஸ்டர் கிட்ட கேட்டேன், சிஸ்டர் அப்படித்தான் சொன்ன மாதிரி இருந்துச்சுமா., நான் தான் தப்பா சொல்லிட்டேனா அப்படின்னு சொன்னாங்க., அவங்க மதர் இல்லன்னு சொன்ன உடனே யோசித்து இருப்பாங்க., சொல்லக்கூடாதுன்னு, அதனால அவங்க மாத்தி இருப்பாங்க.,
பட் அப்ப எனக்கு தெரியல, ஓகே நம்மள பாக்க யார் வரப்போறா, அப்படின்னு யோசிச்சிட்டு அங்க இருந்த பிள்ளைகளோட விளையாடி இருந்துட்டு அப்படி போயிட்டேன்.,
நான் மதர் கூடவே தான் இருப்பேன்., நமக்கு யாரும் இல்ல அப்படிங்கிறது மட்டும் தோணுச்சு.,
அப்பல்லாம் ரொம்ப அத வெளியே சொல்ல தெரியாது., ஆனா மனசு என்னவோ பண்ணும்., நான் நல்லா தான் சாப்பிடுவேன், ஆனாலும் நான் ரொம்ப தின்னாவே இருந்தேன்., அப்ப மதர் சொல்லுவாங்க, நல்லா சாப்பிடணும் தனா, உன் ஹெல்த் உனக்கு முக்கியம், அப்படி எல்லாம் சொல்லுவாங்க, நான் நல்லா தானே சாப்பிடுறேன் அப்படின்னு நினைப்பேன்.,
அதுக்கப்புறம் நீங்க சொன்ன மாதிரி பெரிய பொண்ணா ஆன அன்னைக்கு, ரொம்ப பீல் பண்ணி அழுது இருக்கேன்.,
ஏன்னு தெரியல எனக்கு ஏற்பட்ட மாற்றங்கள், அதையும் யார்கிட்ட சொல்றது ன்னு தெரியல, யாரையாவது பிடிச்சுக்க மாட்டோமா., அப்படின்னு தோணும்., ஆனா எனக்கு அப்போ புடிச்சிக்க கூட யாரும் கிடையாது.,
மதர் வருவாங்க, அப்பப்ப பார்ப்பாங்க, ஆனா நான் மதர் கிட்ட க்ளோஸ்னாலும் மதரை ஹக் பண்ணதெல்லாம் கிடையாது., சோ தள்ளி தான் நின்னேன்.
உண்மைய சொன்னா, யாரையும் அதிகமா டச் பண்ணி பேசுனது கிடையாது., அதனால அப்படியே இருந்துருவேன்., பெயின் அதிகமாகும் போது சிஸ்டரோ இல்ல மதரோ, எனக்கு கொடுக்கிறது., ஒரு ஸ்பூன் வெந்தயமும் கொஞ்சம் ஹாட் வாட்டரும், ரொம்ப பெயின் இருந்துச்சுன்னா ஒரு பெயின் கில்லர் கொடுப்பாங்க., அவ்வளவு தான்.,
நீங்க சொன்ன மாதிரி 10த் ல மார்க் வந்து இருக்கும் போது., நல்ல மார்க் தான், நான் எதிர்பார்த்த மாதிரி கிடைச்சுச்சு., அப்பவும் யார்கிட்டயும் என்னோட சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்க முடியல, எல்லாரும் மார்க் வந்த உடனே அவ்வளவு ஹேப்பி., திரும்ப இந்த ஸ்கூலுக்கு வந்தவங்களும் இருக்காங்க., அந்த ஸ்கூல் விட்டு வெளியே போனவங்களும் இருக்காங்க., அவங்களோட சந்தோஷம் அவங்க ஷேர் பண்ணிக்கிற விதம் இதெல்லாம் பார்க்கும் போது பாத்துட்டே இருப்பேன்., நமக்கு சொல்றதுக்கு யாரும் இல்ல இல்ல அப்படின்னு தோணும்”, என்று சொல்லிவிட்டு அவள் அமைதிக் காக்க.,
அந்த நேர வலியை அவள் மீண்டும் நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன்., அவள் கையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.