15

      மனம் விட்டு அழுதாலும் வாயைத் திறந்து பேசவில்லை, அழுது முடித்த பிறகு சிறு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து கிடந்தவள் எழுந்து கொள்ளவுமில்லை. அவன் தலையை தடவுவதை நிறுத்தவும் இல்லை . அவள் அழுது தீர்த்து விட்டாள் என்பதை உணர்ந்த பின்பு மெதுவாக தோளோடு சேர்த்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவன் போதும் கண்மணி என்றான்.

      அவன் அணைப்பு இருகவும், அவனிடமிருந்து வேகமாக விலகி எழுந்து அமர்ந்து கொண்டாள். அவர்கள் குடில் இருந்த பகுதிக்கு என தனியே உள்ள புல்வெளி, அதனால் அங்கு யாரும் வரவில்லை சற்று நேரத்தில் இருட்டத் தொடங்கவும் “போலாம்”, என்று அவளை கைப் பிடித்து எழுப்பி இருவரும் நடக்க தொடங்கும் போதே., அவர்களை தேடி வந்தவர் “உணவு தயார்”, என்று சொன்னார்.

     அவளைப் பார்த்தவன்., “போ முதல்ல பிரஷ் ஆயிட்டு வா., அப்புறமா சாப்பிட போகலாம்”, என்று சொன்னான்.

அவளை அழைத்துக் கொண்டு உணவு எடுத்துக் கொள்ள சென்றனர்.

   அவள் சாப்பிட தொடங்கவும் தன் கையில் இருக்கும் உணவை முதலில் அவளுக்கு ஊட்டி விட, வாங்க தயங்கியவள் பின்பு வாங்கிக் கொண்டாள்.,

      எதுவுமே சொல்லாமல் அமைதியாக சாப்பிட, அவள் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு, “இவளை எப்படி பேச வைப்பது”, என்று மட்டுமே தோன்றியது.

    யோசனையோடு குனிந்து உணவு உண்டவன் ‘அழுது முடிச்சிட்டா, இனி பேச வைக்கணும்., இதுதான் இப்போதிக்கான டார்கெட்., அப்பதான் வீட்ல கல்யாணம் பேசினால் கூட சரியா இருக்கும், இவ இப்படி இருந்தானா எதுவுமே சொல்லாம இருந்துருவா., நோ அப்படி மட்டும் இருக்க விடக்கூடாது’, என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன்,

     உணவு உண்டு முடிக்கவும்,  அவளை அழைத்துக் கொண்டு குடிலுக்கு சென்றவன், ஹாலில் சென்று அமர்ந்தனர்.

        அங்குள்ள டிவியை போட்டுவிட்டு ஒரு படத்தை போட, இவள் அவனை திரும்பி முறைத்து பார்த்தாள்.

   ஏனென்றால் அவன் போட்டது மலையாள படம்., அவனும் “இந்த படம் நல்லா இருக்கும் பாரு”, என்று சொல்லி அவள் கையை தன்னோடு சேர்த்து வைத்துக்கொண்டான்.

           கொஞ்ச நேரத்தில் அவளுக்கும் படத்தின் கதை புரிய படத்தில் மூழ்கினாள்.  அவளுக்கு மலையாளம் புரியும் என்பது அவனுக்கும் தெரியும்., வினித்துக்கு நன்றாகவே தெரியும்., ஆனால் பதில் மட்டும் பேச மாட்டாள்.

இதை வினித் தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். “புரியுதுல்ல, அப்ப பேச ட்ரை பண்ணா என்ன”, என்று கேட்பான்.

      இவளோ “ஏன் பேசணும், அதெல்லாம் பேசமாட்டேன்”, என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பாள்.

    இவனும் இப்போது அதை தான் நினைத்துக் கொண்டான், ‘சோ மேடம்க்கு மலையாளம் புரியுது., ஆனா பதில் மட்டும் பேச மாட்டாள்’ என்று நினைத்துக் கொண்டான்.

       அவளை கைகோர்த்து பிடித்தவன் தன் அருகில் இழுத்துக் கொண்டு “நாளைக்கு எங்க சுற்றி பார்க்க போகலாம்”, என்று கேட்டான்.

அவனை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் அமைதியாகி விட்டாள்.,

      “நீ இப்படியே அமைதியாக இருந்தால் செட் ஆகாது”, என்று சொன்னவன் படத்தை பாஸ் ல் போட்டுவிட “என்ன” என்றாள்.

      “இல்ல ஹாலிலேயே படுக்கலாமா”, என்று கேட்டான்.

      “ஏன்” என்றவள், “ரூம்ஸ் இருக்கு தானே”, என்றாள்.

      “நம்ம தங்கி இருக்கும் வீடு மாதிரி தான்., தனித்தனி ரூம் எல்லாம் இருக்கு., ஆனா ஏன் ஹால்ல படுத்தா என்ன”, என்று கேட்டான்.

     “நீங்க எங்க வேணா படுங்க., அதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க”, என்று சொன்னாள்.

     “என் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் இல்ல “, என்று சொல்லும் போது, அவளும் பதிலுக்கு அவனிடம் ஆர்கியூ செய்து கொண்டிருக்கும் போதே.,

    அவளை இழுத்து தன்னோடு சேர்த்து பிடித்தவன்., அவளை அணைத்தவாறு, அவள் கழுத்திற்குள் முகம் புதைத்தான்.

    அவளால் பதில் பேச முடியாமல் கைகள் நடுங்குவது போல தோன்றியது. சற்று பயம் பதட்டத்தோடு இதயத்துடிப்பு உயர்வது போலவே தோன்றியது., அவளால் வாய் திறந்து எதுவும் பேச முடியவில்லை., ஆனாலும் அவனை தன்னில் இருந்து பிரித்து தள்ள முயன்ற போது.,  அவனும் கழுத்திற்குள் முகம் புதைத்து வைத்திருந்தவன்.,

     அப்படியே லேசாக திரும்பி, “கண்மணி ப்ளீஸ்”, என்று சொல்லும் போது இவளுக்கு மேலும் ஒரு படபடப்பு தான் வந்தது.

     “ப்ளீஸ் கொஞ்ச நேரம் அப்படியே இரு”, என்று சொன்னவன்.,

       “வீட்ல எங்க அப்பா கிட்ட சொல்லிட்டு தான் வந்து இருக்கேன்., இப்போ வினித் வீட்லையும், முகேஷ் வீட்லையும், அப்பா பேசிருவாங்க, நம்ம ப்ராஜெக்ட் முடிச்சு போகும் போது மேரேஜ்க்கு ரெடியாகிற மாதிரி பார்க்க சொல்லி இருக்கேன்.,

     உனக்கு நான்தான் அந்த கண்மணி லெட்டர் போடுற மாம்ஸ், அப்படிங்கிறது உன்னால புரிஞ்சுக்க முடிஞ்சாலும், உன்னால ஏத்துக்க முடியல., நான் வெயிட் பண்றேன் ஏத்துக்கோ.,  நம்ம யு எஸ் ல இருக்குற இந்த டைம் தான் நமக்கான டைம்., கொஞ்சம் கொஞ்சமா என்னை பழகிக்கோ”, என்று சொல்லும் போதே இவள் கைகள் சில்லிட்டு போனது போல உணர்ந்தாள்.

     மனதிற்குள் ஒரு பயம் இருந்தாலும்., அவளால் அவனிடம் அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

    பின்பு மெதுவாக அவனை தள்ள முயல., “ஏன்”, என்று அவன் கேட்டவன்,  அவளின் பதட்டம் உணர்ந்தான்.

    “கண்மணி நம்பு, எனக்கு என்னோட கௌரவம் எந்த அளவு முக்கியமோ., அதை விட எனக்கு உன்னோட கௌரவம் முக்கியம்.,

    நான்  இன்னும் அதிகமா கேர் பண்ணுவேன்., ஏன் உன் மாமன்ங்க  வந்து கூட்டிட்டு போக கேட்கும் போது அவங்கள பத்தி ஃபுல் டீடெயில் கேட்டு விசாரிச்சு தான் உன்னை அனுப்பினேன்., சும்மா எல்லாம் அனுப்பல., அதுக்கப்புறம் உன்னை ஃபாலோ பண்றதுக்கு ஆள் வச்சிருந்தேன்., உனக்கு சுத்தி சுத்தி பாதுகாப்புக்கு ரெடி பண்ணி வச்சிருந்தேன்., இப்படி ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து தான் செஞ்சேன்., ஏன்னா வெளி உலகமே தெரியாம வளர்ந்த நீ யாரையும் நம்பி விடக்கூடாது என்கிற பயம் தான்., வேற ஒன்னும் இல்ல”, என்று சொன்னவன் பின்பு மெதுவாக ஒவ்வொன்றாக பேச தொடங்கினான்.

      தனது காதல் பூத்த தருணத்தை பேசத் தொடங்கினான்., அவனிலிருந்து தள்ளி வந்தவள்., “அத இப்படி தள்ளி உட்கார்ந்து சொல்லலாமே”, என்று சொன்னாள்.

     “அப்படி எல்லாம் சொல்ல முடியாது., வா”, என்று இழுத்து தன் கைகளுக்குள் அணைத்த படி அங்கு விரித்து இருந்த கார்பெட்டிலேயே குஷனை எடுத்து போட்டு தலை சாய்த்தவன் அவளை தன் மார்பில் தலை சாய வைத்துக் கொண்டே., தன் காதல் வளர்ந்த கதையை சொல்லத் தொடங்கினான்.

      “ஒருவேளை உன்னை வீட்ல கூட்டிட்டு போய் வளர்த்திருந்தோம் னா எனக்கு இந்த பீல் வந்திருக்குமா ன்னு தெரியாது.,  சொல்வாங்க இல்ல நடக்கிறது எல்லாம் நல்லதுக்குன்னு., நான் அடிக்கடி அதை தான் யோசிப்பேன்., உன்னோட ஒன்னா வளர்த்திருந்தா எனக்கு உன் மேல இந்த லவ் வந்திருக்குமான்னு தெரியல., ஆனா உன்ன தள்ளி இருந்து பார்க்க பார்க்க எனக்கு உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்கிற ஃபீல் வந்துச்சு.,

      உனக்கு ஞாபகம் இருக்கா.,  ஹார்ஸ் ரைடிங் உங்க ஸ்கூல்ல கோச்சிங் கொடுத்தாங்க.,

    ஜஸ்ட் ஒன் மந்த் கோச்சிங்,  ஹார்ஸ் ரைடிங்கும் ஆர்சரி இரண்டும்,  அப்போ ஒரு ஜென் கோச்சர் தான் வந்தாரு., நீ தயங்கி போய் நின்ன அப்படின்னு சொல்லி உன்ன கண்காணிக்கிற ஆள் எனக்கு சொல்லுச்சு., உனக்காக நான் தனி கோச் ரெடி பண்ணி அனுப்பினேன்.,

    உனக்கு ஞாபகம் இருக்கா உனக்கு ஆர்ச்சரி சொல்லிக் கொடுக்க ஒரு மேம் வருவாங்க., ஹார்ஸ் ரைடிங் சொல்லிக் கொடுக்க ஒரு மேம் வருவாங்க., அவங்க ரெண்டு பேரும் நான் அனுப்பி வச்சவங்க தான்., இது மதர்க்கு மட்டும் தெரியும்”, என்று சொன்னான்.

      அவன் அணைப்பில் இருந்தவள், அவனை தள்ளிக் கொண்டு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

     அவளைப் பார்த்தவன்.,  “உன்னோட சின்ன முக மாற்றம் கூட, என்னால புரிஞ்சுக்க முடியும்., உனக்கு என்ன புடிக்கும் ன்னு., என்னை உறவா ஏத்துக்க உனக்கு உனக்கு கஷ்டமா இருக்கு.,  முதல்ல என்னை பிரண்டா ஏற்றுக்கோ, அப்புறமா உறவா ஏத்துக்கலாம்”, என்று சொன்னான்.

       “பிரண்ட்ஸ் தான் இப்படி பிடிப்பாங்களா”, என்று கேட்டாள்.

    அவனும் “உனக்கு தாமா ப்ரண்ட்,  நீ பிடிக்கவே இல்லையே., நான் உன்னை ப்ரண்ட் ன்னு சொல்லவே இல்லையே”, என்று சொல்லி மேலும் தன்னோடு இறுக்கிக் கொள்ள., அவள் தான் முகத்தை அவன் மேலே புதைக்க வேண்டியதாக இருந்தது.

        பின்பு அவன் பேசிக் கொண்டிருக்க.,  அவளோ கதையெல்லாம் ம் ம் ம் என்று கேட்டுக் கொண்டிருந்தவள்., அவன் கையிலேயே தலை சாய்த்து தூங்கி இருந்தாள்.,

   அதை பார்த்தவன், அவளை சற்று தள்ளி  படுக்க வைத்து விட்டு ஹாலிலேயே விரித்து தன்னோடு சேர்த்து பிடித்தபடி அங்கேயே தூங்கினான்.

     அதிகாலையில் கண்விழித்தவளுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது, அவன் கையணைப்பில் இப்படியா தூங்கினேன், என்று நினைத்தாள்.