“ஹலோ நிறுத்துங்க, இல்லாட்டி நான் குதிச்சிடுவேன்”, என்று சொன்னாள்.

      “மேடம் முடியாது”, என்று சொன்னவன். அவள் அவனை திரும்பி பார்த்து முறைத்தபடி அமர்ந்திருக்க.,

      “முறைச்சாலும் இதுதாண்டி கண்மணியே., நீ தான கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்குற., நீ மட்டும் உம் சொன்னா, இம்மீடியட்டா கல்யாணம் வச்சுருவோம், நீ ம்ஹூம் ன்னு சொல்றதுனால தான்., நான்  சொல்றேன் ஹனிமூன் கொண்டாடி., பிள்ளை எல்லாம் பெத்துட்டு அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்,  நீ கல்யாணம் வேண்டாம்னாலும் இப்படியே இருக்கலாம்., எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல., ஆனா இம்மீடியட்டா பேபி பெத்துக்கிறோம்”, என்று சொன்னான்.

       இவளோ தலையில் அடித்துக் கொண்டு., “நீங்க ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து சரியில்லை”, என்று சொன்னாள்.

      அவனும் சிரித்தபடி, “ஆமா சரியில்ல இங்க பாரேன்., என் பிரண்டு அவனுக்கு லேட் மேரேஜ் தான், அடுத்து நம்ம தான், ஆக்சுவலா நெக்ஸ்ட் வீக் அவனுக்கு மேரேஜ் சரியா., நம்ம ரெண்டு பேரும் போறோம், உன்னை நான் அப்ப என் பிரண்ட்ஸ் க்கு இன்ட்ரடியூஸ் பண்ண போறேன்., அதுக்கு தான்”, என்றான்.

    “நான் வாறேன்னு சொல்லவே இல்லையே”, என்றாள்.

      “நீ வர மாட்டேன்னு சொல்ல முடியாதே”, என்று சொன்னான்.

     “எல்லாம் உங்க இஷ்டம் தானா”, என்றாள்.

     “கண்டிப்பா என் இஷ்டம் தான்”,என்று சொன்னவன் அவளை பார்த்தபடி இருக்க.,

    “ரோட்டை பார்த்து கார் ஓட்டுங்க”, என்று சொல்லிவிட்டு திரும்பி அமர்ந்து கொண்டாள்.

    அதன் பிறகு அவன் மெதுவாக ஒவ்வொன்றாக சொல்ல தொடங்கினான்.

      ஏற்கனவே மதர் மூலம் கேட்டிருந்தும், இவன் வாய்மொழி மூலம் மீண்டும் கேட்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

    “வினித்தும் முகேஷும் அந்த டைம்ல வரல அப்படின்னு சொல்லி இருந்தாலோ, உன்னை   படிப்பை  சொல்லி மதர்ட்ட பொறுப்பு ஒப்படைச்சிருந்தாலோ,  மதர்ட்ட நான் ஏற்கனவே கேட்டு இருந்தேன்., அதுக்கப்புறம் நீங்க என் பொறுப்பில் விடனும் அப்படின்னு., அவங்களும் யோசிக்கிறேன்னு  சொல்லி இருந்தாங்க.,  இவங்க ரெண்டு பேரும் வரலைன்னா உன்னோட 12த்  முடிந்த சமயம் உன்ன நான் ஏன் கைக்கு மாத்தி இருப்பேன்.,   உனக்காக நீ சென்னையிலிருந்து காலேஜ் படிக்கணும் அப்படிங்கறதுக்காக நான் வாங்கின வீடு தான்., உன்ன கடத்திக் கொண்டு போய் வச்சிருந்தேன் இல்ல., அந்த வீடு”, என்று சொன்னான்.

அவனை பார்த்து முறைக்க.,  “என்ன முறைக்கிற, உனக்காக என்னென்ன வேலை எல்லாம் நான் பார்க்க வேண்டியதா இருந்திருக்கு பாரு”, என்று சொன்னான்.

   “அதுக்கு ஏன் என்னை கடத்திட்டு போனீங்க., நீங்க சொத்த கேட்டு இருந்தாலே., நான்  கையெழுத்து போட்டு கொடுத்திருப்பேனே., எனக்கு  எங்க அப்பாவோட சம்பாத்தியம் இல்லாத எதுவும் எனக்குத் தேவையில்லை அப்படிங்கறது தானே சொல்லி இருந்தேன்., ஏற்கனவே உங்களுக்கும் இது தெரிஞ்சிருக்கும் தானே., என்று சொன்னாள்.

       “ஆமா தெரியும், ஆனா எதுக்கு கடத்திட்டு போனேன் தெரியுமா, என் பக்கத்தில் நீ இருக்கணும்., கொஞ்ச நேரமாவது உன்னை என் பக்கத்துல வச்சு பாக்கணும்னு தோணுச்சு., அதுக்காக தூக்கினேன்”, என்று சொன்னான்.

அவனைப் பார்த்து முறைக்க “இப்படி எல்லாம் முறைத்துட்டே இருக்காத., என்கிட்ட நிறைய போட்டோஸ் இருக்கு, காட்டுறேன்”,என்று சொன்னான்.

         மதர் சொல்லி தெரிந்தாலும், “போட்டோ என்ன போட்டோஸ்”, என்றாள்.

       “அதுவா அது, உன் ஸ்கூல் லைஃப்ல இருந்து., ஏன் நான் இல்லாதபோ இந்த ஒரு வாரம் என்ன பண்ணுற வரைக்கும் உள்ள போட்டோஸ்”, என்று சொன்னான்.

    அவனை கண் இமைக்காமல் பார்க்க.,  அவனும் “சும்மா சும்மா முறைக்காத கண்மணி., நமக்கு இன்னும் காலம் இருக்கு., காலம் ஃபுல்லா நீ முறைச்சுக்கோ., என்னை பார்த்துக்கோ சரியா.,  ஆனா இப்போ நான் பேசுவதை கேளு”, என்று சொல்லிவிட்டு மீண்டும் அனைத்தையும் சொல்ல தொடங்கியவன் சற்று நேரத்தில் அவள் கையை தன்னோடு சேர்த்து கோர்த்துக் கொள்ள இவளால் அவனிடமிருந்து கையை உருவிக்கொள்ள முடியவில்லை.

எதுவும் சொல்லாமல் கையை அவன் கைகளில் கொடுத்து விட்டு அமைதியாக இருந்தாள்.

    அவள் கையை எடுத்து, தன் நெஞ்சோடு அணைத்து சேர்த்துக் கொண்டவன்.,

    “நீ சொல்லி அழவேண்டும்  நினைத்தாயோ, இல்லையோ, எனக்கு உன்ன பார்க்கும் போதெல்லாம் அவ்வளவு கஷ்டமா இருக்கும்., இவ ஏன் பேச மாட்டேங்குறா ன்னு தோணும்.,  நீ ஃப்ரீ யா பேசினா நல்லா இருக்கும்., எல்லாத்தையும் மனசு விட்டு பேசேன்”, என்று சொன்னான்.

     “மனசு விட்டு பேசுவதற்கு என்கிட்ட எந்த விஷயமும் இல்லையே”, என்று சொன்னாள்.

     “அப்படியா, இல்லையா, சரி அங்க போய் பேசலாம்”, என்று சொல்லிவிட்டு அதன் பிறகு அவர்கள் பயணம் அமைதியாகவே கழிந்தது.

    அவர்கள் சென்ற இடம் அத்தனை அழகாக ஒரு ஆற்றங்கரை ஓரம் அமைந்த சுற்றுலா பகுதியாக இருந்தது.

   அங்கு சென்று சேர்ந்த பிறகு அங்கு உணவுக்கு சொல்லிவிட்டு அவளோடு சேர்ந்து அமர்ந்தவன்.,  மீண்டும் அவள் கைகளை எடுத்து தன் கைகளோடு கோர்த்துக்கொண்டான்.

       ‘எந்த நேரத்தில்  பீல் பண்ண நினைச்ச, உனக்கு அழனும்னு தோணுச்சு’, என்று அவள் எந்த நேரங்களில் எல்லாம் அழவேண்டும் என்று நினைத்திருந்தாலோ., அதையெல்லாம் துல்லியமாக சொன்னான்.

     ஒரு நிமிடம் திகைத்தவள், ‘இவன் எச்சனா மனதிற்குள் புகுந்து என்ன நினைக்கிறோம் என்பதை கூட சொல்பவனா’, என்று தான் தோன்றியது.

    சரியாக அவள் ‘என்றெல்லாம், தனியே அழுதாலோ, யாராவது தன்னை தோளில் சாய்த்து கொள்ள மாட்டார்களா’ என்று ஏங்கினாளோ, அந்த நாளை எல்லாம் சரியாக சொன்னான்.

     “முதல் முதல்ல நான் பார்ப்பதுக்கு முன்னாடி, நீ எப்ப அப்படி பீல் பண்ண எனக்கு தெரியாது., நான் உன்ன பார்த்ததுக்கு அப்புறம் நீ முதல் முதலில் ஃபீல் பண்ணுனது, நீ பெரிய பொண்ணான அன்னைக்கு தனியா அழுத, ஆனால் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை நல்லா தொடச்சிட்டு கண்ணுக்கு காஜல் எல்லாம் போட்டு இருந்த.,

     ரெண்டாவது உன்னோட 10th ரிசல்ட் வந்த அன்னைக்கி, அப்புறம் லெவன்த் ல என்ன படிக்கப் போற அப்படின்னு உங்க ஸ்கூல்ல உன்ன கேள்வி கேட்ட அன்னைக்கு அதுக்கப்புறம் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி ல.,  நீ நிறைய கத்துக்க ஆரம்பிக்கும் போது கண்டினியூஸா ஒர்க்., ஹோம் ஒர்க், படிப்பு., அப்படின்னு சொல்லி உனக்கு டைம் பத்தாம போகும் போது ஒரு நாள் ரொம்ப பீல் பண்ணின,

     அப்ப நான் மதர் ட்ட ஏப்ரல் மே  இங்க தானே இருக்கிறா, அப்படின்னு சொல்லி அந்த டைமுக்கு உனக்கு கரிக்குலர்ஸ் ஆக்ட்டிவிட்டி எல்லாம் மாத்த சொல்லி ஏற்பாடு பண்ணினேன்,

     ஏப்ரல் மே தனியா வந்து சொல்லிக் கொடுக்கணும்னா, அதுக்கு தனி பீஸ் பே பண்ணனும் சொல்லும் போது மதர் என்கிட்ட சொன்னாங்க., நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னேன்.,  உனக்கு மட்டும் தனியா கிளாஸ் நடந்துச்சு கரெக்டா., அந்த சமயமும் உனக்கு ஏதோ ஒரு பீல், கொஞ்சம் வித்தியாசமா அது துக்கமா சந்தோஷமா ன்னு தெரியல.,

       ஆனா நீ பீல் பண்ணின, மதர் பிரேயர் பண்ணிட்டு சர்ச்சில் இருந்து அவங்க ரூமுக்கு போனதுக்கு அப்புறமா கூட நீ சர்ச்சிலேயே உட்கார்ந்து இருந்த,

     பட் நீ கிறிஸ்டின் பொண்ணு இல்ல.,  மதம் உனக்கு ஒரு தடை கிடையாது., அப்புறம் உனக்கு சாமி மேல நம்பிக்கை இல்லை, அப்புறம் நீ கண்ணு கலங்குனது, 12  த் முடிச்ச அதுக்கப்புறம், வினித் முகேஷ் வந்தப்ப.,

     அதுக்கப்புறம் வினித் முகேஷ் எப்பவும் உன் கூட இருந்தாலும்., அப்பப்ப உனக்குள்ள ஒரு லோன்லினஸ் வர தான் செஞ்சது.,  அந்த சமயம் எல்லாம் உனக்கு முகம் டல் ஆயிடுச்சு., கொஞ்சம் பீல் பண்ணின,

    சோ இந்த மாதிரி நிறைய சரிதானா., நான் சொன்னதெல்லாம் கேட்டு  இப்ப அழனும் தோணுதா”, என்று கேட்டான்.

அவனையே அதிர்வோடு பார்த்திருந்தவள் கையை தன்னோடு கோர்த்துக் கொண்டவன்., அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டான்.

    “இப்போ உனக்கு தோள் கொடுக்க., நான் இருக்கேன்., உனக்கு சாஞ்சி அழனும்னா அழுது முடித்துவிடு” என்று சொல்லும் போது.,

அவள் அறியாமல் கண் கலங்கியது., தன் முழங்காலில் முகம் புதைத்து கொண்டவள்.,

முதல் முதலாக வெளியிடத்தில் மற்றவர் முன்னிலையில் கண்ணீர் விட்டாள்.

   இதுவரை அவள் அழுது யாரும் பார்த்ததே கிடையாது., என்பது போல தான் விபரம் தெரிந்த பிறகு கண்ணீரை மறைக்க கற்றுக் கொண்டவளுக்கு .,முகேஷ் வினித்திடம் ஒரு முறை கண் கலங்கினாலும்.,  அதன் பிறகு தன் கலக்கத்தை காட்டியது கிடையாது.

     அவளை தன் மீது இழுத்து சாய்த்து கொண்டவன்., அப்படியே அந்த புல் தரையில் சரிந்து தன் மேல் சரித்து கொண்டான்.

அவள் சற்று நேரம் அப்படியே இருந்தாள்,  “மொத்தமாக இங்கே சாய்ந்து இப்பவே அழுது முடிச்சிடு., இல்லாட்டி உன்னை தூக்கி இந்த ஆத்துக்குள்ள போட்டுருவேன்”, என்று சொன்னான்.

    அவனை முறைக்க கூட தலை நிமிர அவளால் முடியவில்லை., அவன் கை அவள் தலையை தடவ தொடங்கவுமே கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிய தொடங்கி இருந்தது.

மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.