இவள் கேட்டதற்கு பதிலும் சொல்லவில்லை, ‘ஐயோ  மதர் கிட்ட பேசணும்., மதர் என்ன சொல்றாங்கன்னு தெரியல, இவங்களுக்கு சாதகமாக பேசுவாங்க., ஆமா இவங்க எதுக்கு இப்ப எல்லாத்தையும் வாங்கிட்டு கிளம்புறாங்க’, என்று யோசித்தவள், வேறு எதுவும் நினைக்க தோன்றாமல் போனை பார்த்தபடி நின்றாள்.

     அவள் தனியே இருந்தாலும், மனதிற்குள் சில விஷயங்கள் குழப்பிக் கொண்டாலும், அவன் வருகையை அவள் மனது எதிர்பார்க்கத்தான் செய்தது.

      பத்து நாள் ஊருக்கு போய் விட்டு வருகிறேன், என்றவன்.,  போக வர அங்கு இருக்க என்று, ஐந்து ஆறு நாட்கள் மட்டுமே செலவழித்து விட்டு வந்து சேர்ந்திருந்தான்.

      இவள் காலை எழும்பும் போது அவன் ஹாலில் அமர்ந்திருக்க.,  அவனை பார்த்தவள் கனவு என்று யோசித்து கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     “கனவெல்லாம் இல்ல மேடம், இங்க வாங்க”, என்றான்.

     அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே வந்தவள், “எப்போ வந்தீங்க” என்றாள்.

    “ஹாஃப்னார் முன்னாடி வந்தேன், காபி கலந்து குடிச்சாச்சு, உனக்கு போட்டு தரவா”, என்று கேட்டான்.

      “நான் கலந்துக்குவேன்”, என்று சொல்லிவிட்டு சென்றாள்.

    பின்னாடியே வந்தவன், “ஒரு டீ போடேன்”, என்றான்.

      “இப்ப தான் காபி குடிச்சேன்னு சொன்னீங்க”, என்று கேட்டாள்.

      “டீ போடுவதற்கு சோம்பேறி, வந்த உடனே குளிருக்கு இதமா சூடா வேணும்னு, உன்னோட காபி பொடி கலந்து காபி குடிச்சேன்., ஆனா இப்போ ஒரு டீ வேணும் ன்னு தோணுது, நீ எப்பவும் போடுவ இல்ல இஞ்சி எல்லாம் போட்டு., அந்த மாதிரி ஒன்னு போட்டு தாயேன்”, என்று சொன்னான்.

    அவனிடம் வாய் வார்த்தையாக, “முடியாது” என்று சொன்னாலும்.,

     கை வேலையை செய்து கொண்டு தான் இருந்தது.

     அதை பார்த்துக் கொண்டே நகர்ந்தவன், “அப்படியே எடுத்துட்டு ஹாலுக்கு வந்துரு, நான் ரெப்பிரஷ் ஆயிட்டு வந்துடறேன்”, என்று சொல்லி விட்டு போனான்.

   எதுவுமே நடக்காதது போல சென்றவன், அவள் டீயை கொண்டு ஹாலுக்கு செல்லும் போது அவனும் வந்து ஹாலில் அமர்ந்தான்.

        அவளிடம் “நியூ இயர்க்கு டூ டேஸ் வெளியே போறோம், கிளம்பு”,என்றான்.

     அவளோ அதிர்ச்சியாக அவனைப் பார்த்தபடி நின்றாள். “என்ன பார்வை”, என்றாள்.

      இவளோ “விளையாடிட்டு இருக்கீங்களா”, என்றாள்.

      “விளையாடுவோம், வெளிய போய் விளையாடிட்டு வருவோம்”, என்று  சொன்னான்.

     “கிண்டல் பண்ணாதீங்க”, என்றாள்.

     “இதுல கிண்டல் பண்றதுக்கு என்ன இருக்கு, கிளம்பு”, என்றான்.

      அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தபடி இருந்தாள்.

அவனோ, “இப்ப நீயே பேக் பண்றியா, இல்ல நான் வந்து உனக்காக டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கட்டுமா”, என்று கேட்டான்.

    அவனை அதிர்வாக பார்க்க.,  “கல்யாணம் ஆயிருச்சுன்னு வை, நானே எடுத்து வச்சிடுவேன், இப்ப கல்யாணம் ஆகல இல்ல., அதனால தான் நான் எடுத்து வைக்கல”, என்று சொன்னான்.

    அவனை முறைத்து பார்த்தவள், “கிண்டல் பண்ணாமல் போய் வேலையை பாருங்க”, என்றாள்.

      அவனோ, “சீரியஸா பேசுறேன், உன் கூட எனக்கு தனியா பேசணும், தனியா போனா தான் என்கூட நீ பேசுவ,  உன் வாயிலிருந்து எப்படி எல்லாம் விஷயத்தை வாங்க ட்ரை பண்ணுறேன், ஆனால் நீ உன் வாயிலிருந்து ஒத்த வார்த்தை சொல்லல., இப்ப நம்ம பேசியே ஆகணும்”, என்றான்.

     இவனோ அமைதியாக அவனையே பார்த்திருக்க,  அவனும், “கோவமா, போக வேண்டாமா”, என்றான்.

     ‘வேண்டாம்’,என்னும் விதமாக தலையசைத்தாள்.

       அவனும் “அப்ப கண்டிப்பா போகணும் நீ கிளம்பு”, என்று சொன்னவன்.

    அவளை கட்டாயப்படுத்தி அவளோடு கிளம்பி சென்றான்.

        அங்குள்ள நண்பன் ஒருவனிடம் காரை  வாங்கிக்கொண்டு

கொஞ்ச தூரம் சென்று, ஆள் இல்லா சாலையை அடைந்த பிறகு., அவளிடம் பேச தொடங்கினாள்.

    காரில் டேஷ் போர்ட் ல் இருந்து ஒரு கவரை எடுத்து அவள் கையில் கொடுத்தவன், “பிரித்து பார்”, என்றான்.

        அவனை திரும்பிப் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் கவரை பிரித்தாள்.

    எப்போதும் அவளுக்கு வரும் அதே கஸ்டமைஸ் கிரீட்டிங் கார்டு., நியூ இயர் விஷஸ்  போட்டு இருந்தது,

   அவனை திரும்பி பார்க்க, அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.,

     சிரித்தபடி  ம்ம் என்று தலையசைத்து அவளை ஓபன் செய்ய சொன்னான்.

    எதுவும் சொல்லாமல் கார்டை ஓபன் செய்தாள்.

        இன்னும் நியூ இயர்க்கு ஒரு நாள் மட்டுமே இருக்கும் நேரத்தில் தான் அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருந்தான்.,

     கார்டை பிரிக்கவும் அதில் எப்போதும் போல,  ‘டியர் கண்மணி’ என்று தொடங்கி இருந்தது.

       ஆனால் உள்ளே இருந்த வாசகங்கள் தான் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தது.

    தன் காத்திருப்பையும் தான் அவள் மேல் கொண்ட நேசத்தை மட்டுமே கூறும் வரிகளாக அவை இருந்தது.

      ‘உன்னை முதல் முதல்ல  தூரத்திலிருந்து தான் பார்த்தேன்., எனக்கு நீ எப்படி தெரிஞ்ச ன்னு கூட ஞாபகம் இல்ல., ஆனா என்னோட லைஃப்ல கடைசி நிமிஷம் வரைக்கும் உன்னை விடக்கூடாது ன்னு மட்டும் தான் அன்னைக்கு தோணிச்சு.,  அப்படி எனக்கு தோணும் போது என்னோட வயசு 21.,  அதுல இருந்து நான் உன் கூடவே தான் டிராவல் பண்ணிட்டு இருக்கேன்., உன்னோட ஒவ்வொரு நிமிஷத்தையும் கவனித்துக் கொண்டே., இந்த ப்ராஜெக்ட்ல நீயே பெட்டரா பண்ணிருவ எனக்கு தெரியும், ஆனாலும் இப்ப உன் கூட இருக்கணும் என்பதற்காக தான் என்னோட ஒர்க் எல்லாம் அங்க விட்டுட்டு வந்தேன்.,

    ஆக்சுவலா  உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது அப்படிங்கிற சூழ்நிலை ல தான் வந்து நிக்கிறேன்., எப்ப சம்மதிக்க போற நீ., சம்மதம் இல்லைனாலும் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்., அது வேற விஷயம்., ஆனா உன் சம்மதத்தோட எனக்கு கல்யாணம் நடக்கணும் அவ்வளவுதான்’, என்று  எழுதியிருந்தது.,

    கீழே தனியாக, ‘ஹேப்பி நியூ இயர்., இந்த நியூ இயர்ல எனக்கு உன்கிட்ட எந்த அளவு உரிமை இருக்குன்னு எனக்கு தெரியல., ஆனா அடுத்த நியூ இயர்ல கண்டிப்பா முழு உரிமை உள்ளவனா பக்கத்துல இருப்பேன்னு நம்புறேன்., ஹாப்பி நியூ இயர்’, என்று முடித்திருக்க., வித் லவ் யுவர் மாம்ஸ் என்று எப்போதும் போல முடித்து இருந்தது.

        அப்படியே கார்டை மூடி வைத்தவள், கொஞ்ச நேரம் கார்டின் வேலைப்பாடுகளை எப்போதும் போல பார்த்திருந்தாள்.

    பின்பு அதே கவரில் வைத்து அருகில் வைத்தவள், நிதானமாக அவனை திரும்பி பார்த்தாள்,

      புருவத்தை மட்டும் தூக்கி என்ன என்பது போல பார்த்தான்.

     “எதுக்கு  இந்த வேலை எல்லாம்” என்று கேட்டாள்.

   “அதான் எழுதி இருக்கேனே, இன்னுமா புரியல” என்றவன்.,  “சரி நான் தான் கண்மணி கார்டு போடுறேன் என்பதை பத்திரம் ரிஜிஸ்டர் ஆகுற அன்னைக்கே கண்டுபிடிச்சிட்ட அப்படித்தானே”, என்று கேட்டான்.

       அவள் அமைதி காக்க, “எனக்கு தெரியும், ஏன்னா நீ வினித்த கூப்ட்டு என் ஹேண்ட் ரைட்டிங் காமிச்ச., சோ நீங்க மூணு பேரும் ஹாண்ட் ரைட்டிங் வச்சி தேடி இருக்கீங்க., நான் தான்ங்கறது ஓரளவு கெஸ்ல கண்டுபிடிச்சி காமிச்சிருக்க., உன் மாமனுக்கும் தெரியும்., அது எனக்கு தெரியும்., சரி அவங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாங்க”, என்று கேட்டான்.

     “ஒன்னும் சொல்லல”, என்றாள்.

   “சரி இப்ப சொல்லு”, என்று சொன்னான்.

    “என்ன சொல்லணும்”, என்றாள்.

   “என்ன சொல்லணும்னு கேட்டா, என்னடா அர்த்தம் இவ்ளோ நேரம் நான் உனக்கு என்ன எல்லாம் சொல்லிட்டு இருந்தேன்., கிளம்புவதற்கு முன்னாடி எவ்வளவோ பேசி இருக்கேன்., கார்டை கையில் கொடுத்து இருக்கேன்., சொல்ல எதுவுமே இல்லன்னா என்ன அர்த்தம்”, என்றான்.

    அவனையே பார்த்தவள்., “இது சரி வராது., உங்க வீட்ல கண்டிப்பா உங்க பேமிலி வசதிக்கேற்ற போல பொண்ணு பாக்கணும்னு நினைச்சிருப்பாங்க.,  நான் சாதாரணமா அப்பர்  மிடில் கூட கிடையாது.,  மிடில் மிடில்ல விட குறைவு தான்., என்னெல்லாம் உங்க கணக்கில் சேர்க்காதீங்க”, என்று சொன்னாள்.

      “ஹலோ, யார் சொன்னா”, என்று சொன்னவன்.

     “உன்கிட்ட நிறைய பேச வேண்டியது இருக்கு., நீ இப்படி ஏதாவது பேசிட்டு இருந்த ன்னு வை, சரிவராது., கல்யாணத்துக்கு சம்மதிப்பியா மாட்டியா”, என்றான்.

     ‘இல்லை’ என்னும் விதமாக தலையாட்டினாள்.

     “ஓகே ரைட், இப்போ இந்த டிரிப் அ மாத்திருவோமா”, என்று சொன்னான்.

           “என்ன”,என்றாள்.

      “ஆமா கல்யாணத்துக்கு முன்னாடி ஹனிமூன் கொண்டாடுவோம்., தப்பு இல்ல”, என்று சொன்னான்.