“உன்னை அந்த பையன் பொறுப்பெடுத்துக்கிட்டதுக்கு கொஞ்ச நாள் கழிச்சு என்கிட்ட அந்த பையனோட அப்பா சொன்னாரு., எங்களுக்கு தெரியாம கல்யாணம் அப்படின்னு நீங்களோ, இல்ல அவங்க அப்பா பேமிலியோ., அவங்க அம்மா பேமிலியோ., ரெடி பண்ணி விடக்கூடாது, என்று அவர் கேட்கும் போது அது எப்படி நான் சொல்ல முடியும் அப்படின்னு சொன்னதுக்கு, அவர் சொன்னாரு, என் பையன் அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறான்., நான் கூட கேட்டேன்., அவன் சொல்றான் அப்படி எல்லாம் எதுவும் இல்லப்பா., ஆனா ஒருவேளை அந்த பொண்ண நாம கேட்கும் போது அவங்க கொடுத்திருந்தாங்கன்னா., நம்ம வீட்ல ஒரு பிள்ளையா வளர்த்து இருந்திருப்போமே தவிர., எனக்கு இந்த மாதிரி எண்ணம் வந்திருக்காது., இப்போ எத்தனை பேர் அவ பக்கத்துல இருந்தாலும் தனியா இருக்கிற மாதிரி பீல் பண்றா., அது என்னால புரிஞ்சுக்க முடியுது அப்படின்னு சொன்னானாம்., அதை சொன்னதுல இருந்து அவங்க அப்பாக்கு எப்படி இவன் இதெல்லாம் கவனிக்கிறான் ன்னு பார்க்கும் போது தான்., அவனோட எம்பிஏ படிப்பு முடிஞ்ச உடனே பிசினஸ் முழுக்க கையில் எடுத்துக்கிட்டான் அப்படின்னு சொன்னாரு., பிசினஸ் கைக்கு போனதுக்கு அப்புறம் உன்னை கண்காணிக்கிறதுக்குனே தனியா ஒரு ஆள் போட்டு இருக்கான்., நீ என்ன பண்ற எப்படி இருக்க அப்படிங்கறது வரை, கிட்டத்தட்ட உன்னோட ஒவ்வொரு நாள் காரியமும் அவனுக்கு தெரியாமல் எந்த காரியமும் நடக்கல., நீ என்ன கலர் டிரஸ் போடறங்குற வரைக்கும்., ஸ்கூல் லைஃப்ல இருந்த வரைக்கும் எப்படி போட்டோ போச்சுன்னு எனக்கு இப்ப வரைக்கும் தெரியல., ஸ்கூலுக்குள்ள அவ்வளவு சீக்கிரம் யாரும் வர முடியாது., ஆனால் எப்படி ஸ்கூல் கேம்பஸ் ல இருந்து உன்ன போட்டோ எடுத்து அனுப்புனாங்கன்னு எனக்கு இப்ப வரைக்கும் புரியல.,
உன்னுடைய யூனிபார்ம் போட்டோல இருந்து நீ வெளிய போன ஒவ்வொரு போட்டோவும் ஐ மீன் வினித் முகேஷ் உன்னை வெளியே கூட்டிட்டு போனது., உனக்காக அவங்க ஸ்பென்ட் பண்ணது இது எல்லாமே அவனுக்கு தெரிஞ்சிருக்கு, எப்படி சொல்றது இந்த நிமிஷம் வரைக்கும் நீ என்ன பண்றேன்னு அவங்களுக்கு தெரியும்”., என்றார்.
“யார சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மதர்”, என்று கேட்டாள்.
“இந்த நிமிஷம் கூட உனக்கு தெரியும்”, என்று சொன்னார்.
அவள் யோசனையாக “நீங்க மிஸ்டர் நிமலனை சொல்றீங்களா”, என்று கேட்டாள்.
“அவரே தான்”, என்று சொன்னார்.
“மதர்”, என்றாள்.
“என்னிடம் சொல்லிட்டு தான் வந்தாரு., நீ என்கிட்ட வந்து சொல்லிட்டு போன ரெண்டு நாள்ல மிஸ்டர் நிமலன் ட்ட இருந்து போன்., நான் தான் அவ கூட போறேன் பயப்படாதீங்க., பத்திரமா கூட்டிட்டு வந்துருவேன், அப்படின்னு சொன்னாப்ல, என்னால ஒன்னும் சொல்ல முடியல., அது மட்டும் இல்லாம நீ அந்த பசங்க கூட இருக்கும் போதே உன்னை கண்காணிச்சுட்டே சுத்தினாலும்., அவங்க பிராப்பர்ட்டி எழுதி கேட்டதை நீ தப்பா நினைக்க மாட்ட ன்னு நினைக்கிறேன்., ஏன்னா உங்க அம்மா அப்பா பேருல இருந்த பிராப்பர்டிய அவங்கவங்க பேமிலி வாங்கும் போது., இது இன்னொருத்தன் ஃபேமிலிக்கு உண்டானது, நீ தப்பாகவும் நினைச்சு இருக்க மாட்ட ன்னு எனக்கு தெரியும்., ஆனா உன்கிட்ட சொல்லணும் அதனால சொன்னேன்., இப்ப அந்த பையனுக்கு வயசு 31 முடிய போகுது., அவங்க அப்பா இரண்டு நாளைக்கு முன்னாடி என்கிட்ட பேசினாரு., அதனால தான் நான் உனக்கு மெசேஜ் பண்ணி இருந்தேன்., உன்கிட்ட பேசணும் அப்படின்னு., ஒன்னே ஒன்னு தான் தனா, அந்த பையன் உன்ன தவிர இன்னொரு பொண்ணு என் லைஃப்ல கிடையவே கிடையாது ன்கிற முடிவோட இருக்கான்., இப்ப நீ தான் சொல்லணும்”, என்று சொன்னார்.
அவளோ “மதர் எனக்கு யோசிக்கணும், எங்க அப்பா பேமிலி, அம்மா பேமிலியே கொஞ்சம் பெரிய லெவல் ன்னு தெரியும்., ஆனா இவங்க அதைவிட பெரிய லெவல்., அவங்க பேமிலில உள்ளவங்க எல்லாம் ஏத்துக்க மாட்டாங்க மதர்”, என்று சொன்னாள்.
“நான் ஒன்னும் ஏத்துக்கிட்டாங்கன்னு சொல்லலையே தனா”, என்ற மதர், “அவங்க தாத்தா சம்மதிச்சு இருக்காரு., அதுவும் எப்ப னா அந்த பையன் கல்யாணத்தை பத்தி பேசும் போது., இங்க உள்ள சொத்து அங்க இருக்கு, என்று சொன்னாராம், உங்க சொத்தை உங்களுக்கு வாங்கி கொடுத்திடுவேன்., ஆனா அவளை நான் கல்யாணம் பண்றத நீங்க எதுவும் சொல்லக்கூடாது., அவ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு., என்னோட வாழ்க்கை., நான் தான் முடிவு பண்ணனும், என்று சற்று எதிர்த்து பேசி தான் தாத்தாவிடம் சம்மதம் வாங்கியதாக அவங்க அப்பா சொன்னாங்க., அவங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே சரின்னு சொல்லிட்டாங்க., பாட்டி அரை மனசா இருக்காங்க., ஏன்னா அந்த பாட்டியோட ரிலேஷன்ஷிப் உனக்கு தெரிந்திருக்கும், என்று நினைக்கிறேன்.
“எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்குறீங்களா மதர்., இதை பத்தி இப்போ அவங்க கிட்ட நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் ப்ளீஸ்., எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க., நானும் என்னால அவங்க கூட ஒத்துப் போக முடியுமான்னு முதல்ல பார்க்கிறேன்., வாழ்க்கை நீங்க சொல்ற மாதிரி ஜஸ்ட் லைக் தட்னு கிடையாது இல்ல மதர்., கொஞ்சம் பயமா இருக்கு, அதே நேரத்துல எனக்காக ஒருத்தர், என்னை மட்டுமே யோசிக்கிற ஒருத்தர் அப்படிங்கும் போது, ஒரு பக்கம் சின்னதா நான் யாருமே இல்லாம இல்ல, அப்படிங்கற ஒரு எண்ணமும் இருக்கு, ஆனா ஒரு பயமும் இருக்கு., இப்போ ரீசண்டா நான் அவங்களை டெய்லி பார்த்துட்டு வேற இருக்கிறேன்., அவங்கள பத்தி முழுசா தெரியாட்டிலும் அபிஷியலா தெரியும்., கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான ஆளு., வொர்க் அவங்களோடது கரெக்டா இருக்கணும் இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிற ஆளு”, என்று சொல்லும் போது தான் மதர் மற்றொரு விஷயத்தையும் சொன்னார்.
“இன்னொரு விஷயமும் சொல்லனும் தனா, உனக்கு வேலை கிடைச்சது கூட நிமலன் சொல்லி தான்., ஏன்னா அது அவர் ஃப்ரெண்டோட கம்பெனி., பிரண்டு கிட்ட சொல்லி உன்ன எடுக்க சொன்னது அவர்தான்., ட்ரைனிங் மாதிரி ஃபர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ணிட்டு எப்படி இருக்க ன்னு பார்க்க சொன்னாங்க, நீ சிக்ஸ் மன்த்ஸ் கொஞ்சம் டல்லா இருந்ததாகவும்., அதுக்கப்புறம் ஒர்க்கை பிக்கப் பண்ணிட்ட அப்படின்னு நிமலன் என்கிட்டே சொல்லி இருக்காரு., உன்னோட ஒவ்வொரு நாள் நடவடிக்கையும்., நீ என்கிட்ட சொல்லுவ, அவரும் போன் பண்ணி என்கிட்ட கேட்பாப்ல., உன்னோட போட்டோஸ் டெய்லி அவருக்கு போய்விடும்.,
நீ காலேஜ் போறதுல இருந்து திருப்பி வீட்டுக்குள்ள வந்து ரூமுக்குள்ள போற வரைக்கும்., உனக்கு பாடிகாட் உண்டு., நீ நெனச்சிட்டு இருந்த முகேஷ் வினித் மட்டும் தான் உன் கூட துணைக்கு இருக்காங்கன்னு இல்ல., அவரு அனுப்புன ஒரு ஆளும் உன் கூடவே தான் இருந்தாங்க.,
சுத்தி சுத்தி வந்து உன்ன பாதுகாத்தாங்க., எதிர் பக்கத்திலேயே ஒரு வீடு எடுத்து தங்குனாங்க., உன்னை கண்காணிக்கிறது மட்டும்தான் அவங்களுடைய வேலையா இருந்துச்சு., உனக்கு தெரியாமலேயே நீ போக வர்றதை ஃபுல்லா நோட் பண்ணிட்டு தான் இருந்தாங்க”, என்று சொன்னார்.
“நான் இதை பீல் பண்ணி இருக்கேன் மதர், ஆனால் மாம்ஸ் ரெண்டு பேரும் உனக்கு ஏதோ வியாதி, எப்ப பாரு இப்படியே சொல்ற ன்னு சொல்லுவாங்க., ஆனா எனக்கு யாரோ ஃபாலோ பண்ற பீல் இருக்கும்., நான் அப்பப்ப சொல்லுவேன் யாரோ போட்டோ எடுக்குறாங்கன்னு எல்லாம் சொல்லுவேன்., மாம்ஸ் ரெண்டு பேரும் நம்பவே மாட்டாங்க”, என்று சொன்னாள்.
“அப்புறம் நீ இன்னொரு விஷயத்தையும் கண்டுபிடித்து இருப்ப அப்படின்னு நிமலன் சொன்னாரு, என்னதுன்னு புரியுதா” என்று கேட்டார்.
“எது மதர் அவங்க ஹேண்ட் ரைட்டிங் வச்சு எனக்கு கார்டு அனுப்புறது அவங்க தான்னு கண்டுபிடிச்சதையா”, என்று கேட்டாள்.
“பரவால்ல அதான் அவரும் சொன்னாப்ல, என் ஹேண்ட் ரைட்டிங்க பார்த்த உடனே அவளுக்கு கொஞ்சம் ஷாக் ஆச்சு., நானுமே ஐயோ அவ பக்கத்துல இருக்கறது தெரியாம கையெழுத்து போட்டுட்டேன்னு தான் யோசிச்சேன்., ஆனாலும் எப்படினாலும் ஒரு நாள் தெரிய தானே போகுதுன்னு யோசிச்சேன்., இப்ப தயக்கமா இருக்கு மதர் அப்படின்னு சொல்லி சொன்னாரு., ஏன்னா ஏழு வயசு வித்தியாசம் அப்படிங்கறது நீ பெருசா எடுப்பியோ அப்படின்னு நினைக்கிறாரு., ஒரு வேளை உனக்கு இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்லனா அவரு உன்ன கம்பெல் பண்ண போறது இல்ல.,
ஆனால் அவர் லைஃப்ல இன்னொரு பொண்ணு கிடையாதுங்கறது மட்டும் தெளிவா இருக்காரு., ஒரு வேளை நீ வேற யாரையும் விரும்பி கல்யாணம் பண்ணா கூட., அப்பவும் நீ எப்படி இருக்கிற ன்னு எனக்கு போன் பண்ணி கேட்பாரு ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னார்.
“மதர் ப்ளீஸ், எனக்கு கொஞ்சம் டைம் வேணும், நான் யோசிக்கணும்”, என்று மட்டும் சொன்னவள்., பின்பு அவரிடம் அவருடைய ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு போனை வைத்தவளுக்கு அன்று இரவு தூக்கம் தூரப் போயிருந்தது.
மதர் சொல்லும் போது, ‘அவன் தன்னை பார்க்க வந்தது 20 வயதில்., முதல் முதலாக தூரத்தில் இருந்து பார்த்தது 21 வயதில்., கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தன்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.
தான் எப்படி இருக்கிறோம்., என்ன செய்கிறேன் என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்கிறான்., ஏன் எதற்காக இந்த கண்காணிப்பு’, என்று யோசித்தாலும்,
‘அதுதான் கடத்திட்டு போன அன்னைக்கி சாப்பாடு ஊட்டினது, சொல்லிக் காட்டினது எல்லாமே’, என்று யோசித்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.
மறுநாள் காலை எழுந்து சமைக்கும் போதெல்லாம் மதர் அவளிடம் சொல்லிய நிமலன் பற்றிய விஷயங்கள் மட்டும் தான்.,
‘ஏன் ஏன் இப்போது வரை ஒரு விஷயம் கூட முகேஷிடமும் வினித்திடமோ இதைப் பற்றி பகிரவில்லை., ஏன் பகிர தோன்றவில்லை’, என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
‘முதல்ல பேசணும் அதுக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும்’, என்ற யோசனையோடு வீட்டிலிருந்து பொழுதுகளை நெட்டி தள்ளி விட்டு தனக்கு பிடித்த புத்தகத்தை எடுத்து வாசித்தப்படியே உறங்கிப் போனாள்.
தெய்வம் விட்டது நல்லவழி என்று எப்போதும் நினையுங்கள்.. ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.