‘மேக்ஸிமம் 1 வீக் ஒர்க்கை பாப்போம், நமக்கு இருக்கும் வேலையை பார்ப்போம்’, என்று நினைத்துக் கொண்டே கதவை பூட்டி விட்டு வந்து சோபாவில் சரிந்தவள்., மதர் பேசியவற்றை யோசிக்க தொடங்கினாள்.
“தனா” என்று அழைக்கவும்.,
“சொல்லுங்க மதர்”, என்றாள்.
“நான் சொல்வதை இடையில் குறுக்க பேசாம கேளு., இது உன் ரத்த சொந்தத்தை பத்தி இல்ல., அவங்களுக்கெல்லாம் முன்னாடி, உன்ன பாக்க தேடி வந்தாங்க ஒருத்தங்க., அவங்கள பத்தி தான் நான் இப்போ உன்கிட்ட சொல்ல போறேன்., அவங்க எப்போ உன்னை பார்க்க வந்தாங்களோ., அந்த நிமிஷத்திலிருந்து இப்ப இந்த நிமிஷம் வரைக்கும்., நீ அவங்களோட கண் பார்வைல தான் இருக்க”, என்று சொன்னார்.
சற்று அதிர்வாக, “மதர்” என்றாள்.
“குறுக்க பேசாம கேளு தனா” என்று சொல்லி விட்டார்.
மதர் பின்பு சொல்ல தொடங்கினார்., “உன்னோட ஒன்பதாவது வயசுல உன்னை இங்க கொண்டு வந்து விட்டாங்க., அது உனக்கு தெரியும், அதிலிருந்து சரியா நாலாவது வருஷம் அதாவது உன்னோட 13வது வயசுல, நீ எய்த் படிக்கும் போது உன்னை தேடி வந்தாங்க., அப்போ நாங்க எந்த டீடைல்ஸும் தெரியாம உன்ன பாக்க கூட அவங்கள அலோ பண்ணல., சரியா அப்புறம் அடுத்த வருஷமும் வந்தாங்க., அதாவது உன்னோட 14 வது வயசுலயும் வந்தாங்க., வந்தவங்க அந்த சமயம் பிடிவாதமா இருந்து உன்னை தூரத்தில் இருந்து பார்த்துட்டு தான் போனாங்க.,
நீயும் கூட நம்ம சிஸ்டர் தெரியாம உன்கிட்ட சொல்லி., நீ கூட அங்க வந்து யாருன்னு கேட்க வந்த., நான் உன்ன இல்லன்னு சொல்லி அனுப்பிட்டேன்., அவங்கள பத்தி தான் இப்ப நான் உன்கிட்ட சொல்ல போறேன்., ஆக்சுவலா நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லணும்னு நினைச்சேன்., ஒரு வேளை அப்பா வழி சொந்தம், அம்மாவழி சொந்தம் ன்னு சொல்லி, முகேஷும், வினித்தும் உன்னோட படிப்புல ஹெல்ப் பண்ணாம இருந்திருந்தா., எப்படியோ போ அப்படிங்கற மாதிரி அப்பவும் தள்ளியே நின்னு இருந்தா., நான் கண்டிப்பா இவங்க கிட்ட தான் உன்னோட ஸ்டடிஸ் எல்லாத்தையும் ஹேன்ட் ஒவர் பண்ணி இருப்பேன்,
உங்க மாமா வீட்லேயும், உங்க அப்பா தாத்தா வீட்டிலேயேயும் இருந்து ஆள் வரப் போய் தான், நான் இவங்கள பத்தி உன்கிட்ட பேசவே இல்ல., இவங்க உன் அப்பாவோட பிரண்டு பேமிலி., உனக்கு ஒரு வகையில ஒண்ணுவிட்ட சொந்தம் ன்னு சொன்னாங்க., அவங்க கிட்டயே உங்க சொந்தத்தோட டீடெயில்ஸ் கேட்டுக்கோ”, என்று சொன்னார்.
இவளுக்கு சற்று படபடப்பாக இருந்தது., தன் இதயம் துடிப்பது தனக்கே கேட்கும் போல உணர்ந்தாள்.
அமைதியாக அடுத்து அவர் சொல்ல போகும் விஷயத்தை காது கொடுத்துக் கொண்டிருந்தவளிடம் அவர் சொன்னார்., அவங்க உன்னை அவங்களோட கூட்டிட்டு போறதுக்கு கேட்கும் போது., நீ எயித் படிச்சிட்டு இருந்த., ஆனா உங்க மாமாவும்., உங்க தாத்தாவும் இப்படி உங்க பையனோட பிரண்டு வந்து பிள்ளையை கேட்கிறார்., அவங்க வளர்த்துகிறோம் ன்னு கேட்கிறாங்க ன்னு சொல்லும் போது., இவங்க அலோ பண்ணல., உங்க மாமா கூட யோசிக்கலாம் ன்னு சொன்னாரு, ஆனா உங்க அப்பா தாத்தா க்கு அப்படி என்ன பயங்கர கோவமோ என்னவோ தெரியல., அதெல்லாம் கூடாது அப்படின்னு சொல்லிட்டாங்க.,
அப்போ உங்க அப்பாவோட பிரண்டு சொன்னது., ‘நான் இப்ப கூட்டிட்டு போய் வளர்த்தால் அவங்க கௌரவ குறைச்சலா இருக்கும்னு யோசிக்கிறாங்க., அவங்கள யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறாங்க., அதுதான் அனுப்ப மாட்டேங்கிறாங்க’., அப்படின்னு சொன்னாங்க.,
உண்மை என்னன்னா, உங்க அப்பா கொஞ்ச நாள்ல போயிருவேன்னு அவரே பீல் பண்ணி, ஒரு நேரத்துல லெட்டர் எழுதி இருக்காரு அவருடைய பிரண்டுக்கு., தன்னோட வழியிலிருந்தோ, தன் மனைவியின் வழியில் இருந்தோ, தன் குழந்தைக்கு உதவி கிடைக்காதுன்னு தெரிஞ்சு இருக்கு., கண்டிப்பா தன்னோட லாயரும் ஆடிட்டரும் அவளுக்கு தேவையான ஹெல்ப் பண்ணுவாங்க., ஆனாலும் என் பொண்ணு எப்படி இருப்பான்னு தெரியாது., சோ நீ கொஞ்சம் பாத்துக்கோ., இத வந்து நான் உன்கிட்ட கேட்க கூட எனக்கு தகுதி கிடையாது., ஆனால் நீ எனக்காக செய்வேன்னு நான் நம்புறேன்., அந்த நம்பிக்கையில் தான் உனக்கு இந்த லெட்டர் போடுறேன் அப்படின்னு சொல்லி அவங்களுக்குள்ள பிரண்ட்ஷிப் பத்தி எல்லாம் எழுதி இருக்காரு., எழுதிட்டு உன்னை வளர்க்கற பொறுப்பை ஆக்சுவலா உங்க அப்பா லெட்டர் மூலமா கொடுத்தது அவரோட ஃப்ரெண்டுக்கு தான்.,
ஆனா இந்த லெட்டர் போட்டு, இந்த லெட்டர் அவர் கைக்கு கிடைச்சது தான் , ஆக்சுவலா லேட்டா கிடைச்சிருக்கு., அவங்க வீட்டுக்கு லெட்டர் போன சமயம் இவர் பிசினஸ் விஷயமா ஊருக்கு போயிருந்திருக்காரு., உங்க அப்பாவோட பிரண்டோட அப்பா அதாவது அங்கு உள்ள தாத்தா., அந்த லெட்டர் எடுத்து வச்சுக்கிட்டாரு., அவங்க ஆக்சுவலா ஒரு வகைல உங்க அப்பா வகையில சொந்தம்., அவருக்கு கோவம் எடுத்து வச்சுட்டாரு., இந்த லெட்டர் அவர் கைக்கு கிடைக்கும் போது நீ இங்கு வந்து ரெண்டு வருஷம் முடிஞ்சிருச்சு., அதற்குப் பிறகு தான் அவருக்கு தெரிஞ்சிருக்கு அதன் பிறகு அவர் சென்னை போயி தேடி எடுத்து., லாயரைப் பார்த்து, ஆடிட்டரை பாத்துன்னு சொல்லி எல்லா வேலையும் முடிச்சு., நீ இங்க இருக்குறத தெரிஞ்சுக்க அவருக்கு வருஷம் ஓடிருச்சு.,
அதுக்கப்புறம் இங்க வரும் போது நான் சம்மதிக்கல., திருப்பி அடுத்த வருஷமும் வந்து நிக்கும் போது எனக்கு என்ன சொல்ல ன்னு தெரியல., அப்போ உங்க தாத்தா வீட்லயும் சம்மதிக்கல., உங்க மாமா கூட யோசிச்சாரு. ஆனா வெளியே தெரிஞ்சா அவங்க கூட கௌரவ பிரச்சனை ன்னு யோசிச்சு விட்டுட்டாங்க., அதுக்கப்புறம் நீ அவங்க கண்காணிப்பில் தான் இருந்த., ஒவ்வொரு விஷயமும் போன் பண்ணி என்கிட்ட கேட்டுட்டே இருப்பாங்க.,
தினமும் போன் வரும், எனக்கு ஒரு ஸ்டேஜ்ல எரிச்சலா கூட இருந்துச்சு., ஆனா உன் மேல அக்கறை எடுத்து கேக்குறாங்க., ஒரு பிள்ளைக்கு துணைக்கு ஒரு குடும்பம் கிடைக்குது, அப்படிங்கும் போது என்னால அது தடையாகக்கூடாது அப்படிங்கறனால நானும் அவங்க கிட்ட தினம் பேச தொடங்கினேன்.,
அதுக்கப்புறம் அவங்களோட பையன் முழு பொறுப்பையும் எடுத்துக்கிட்டான்., உன்ன விட அந்த பையன் ஏழு வயசு மூத்தவனா இருப்பான்னு நினைக்கிறேன்., அவன் கையில பொறுப்பு ஃபுல்லா போகும் போது, நீ 12 முடிச்ச, அப்ப உன்னோட 17ஆவது வயசுல அவனுக்கு மேக்ஸிமம் 24 தானே., அவன் தான் உன்ன கூப்பிட ரெண்டு பேர் வந்திருக்காங்கன்னு சொன்ன உடனே., நான் விசாரிச்சுட்டு சொல்றேன்னு சொன்னான்.
அதே மாதிரி விசாரிச்சான், அதுக்கப்புறம் உன்னை ஸ்டடிஸ்க்காக அவங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரிஞ்ச உடனே அவன் எல்லா ஏற்படும் பண்ணிட்டு தான் ஓகே சொன்னான்.
அதுக்கு அப்புறம் தான் உன்னை அனுப்பி வெச்சேன் சரியா, ஏன் மதர் என்கிட்ட இதை நீங்க சொல்லலைன்னு கேட்கக்கூடாது., ஒரு ரெண்டு வயசு பையன்களை மட்டும் நம்பி நான் உன்னை அனுப்ப முடியாது சரிதானே”, என்று சொன்னார்.
இங்கு அவள் தலையை ஆட்டிக் கொண்டாள். பதில் எதுவும் சொல்லவில்லை.,
மீண்டும் மதர் சொல்ல தொடங்கினார். “எனக்கு அடிக்கடி தோணும், உன்ன அவங்க கைல கொடுத்து இருக்கணுமோ அப்படின்னு., கொடுத்திருந்தா நீ உங்க அப்பா வழி சொந்தத்தோட அங்கு உள்ள பொண்ணு மாதிரி வளர்ந்து இருப்ப, இங்க வச்சிருந்து உன்னை தமிழ் பொண்ணு மாதிரி தான் நான் வளர்த்து இருக்கேன்., இதெல்லாம் ஒரு தடவை உங்க மாமா தாத்தா என்கிட்ட வந்துட்டு, ஏன் லாங்குவேஜ் கூட கத்துக்க கூடாதா அப்படின்னு கேட்கும் போது எனக்கு அவங்க மேல கோபம் தான் வந்துச்சு., நீங்க யாராவது கூட்டிட்டு போய் வளர்த்திருந்து அவ லாங்குவேஜ் கற்றுக்கொள்ளவில்லை னா, அது தப்பு, அவ இங்கேயே வளர்ந்து இங்கேயே தான் இருந்தா., அதனால அவளுக்கு இந்த லாங்குவேஜ் தான் புடிச்சிருக்கு., இப்ப என்ன பண்ணனும்ங்கறீங்க, என்று கோபமாக கேட்டேன்”, என்று சொன்னவர்.,
மீண்டும் அப்பாவின் நண்பர் வீட்டு கதையை சொல்ல தொடங்கினார்.,