அதன்பிறகு அவளுக்கு தேவையான உடை மற்றவற்றை வாங்குவதில் இருவரும் மும்மரமாக இருந்தனர்.
அதே அப்பார்ட்மெண்ட் ல் வீட்டிற்கு பக்கத்திலேயே சிங்கிள் பெட்ரூமில் வீட்டை பார்த்து அருகிலேயே வைத்துக் கொண்டனர்.
“போன் இருக்குல்ல, தைரியமா இரு, நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல தான இருக்கோம்., உன்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டோம்., போன் பண்ணு எதுனாலும் ஓடி வந்துருவோம்”, என்று சொன்னார்கள்.
அதன் பிறகு அவளே தேற்றிக்கொண்டாள். ‘அருகில் தானே இருக்கிறார்கள், யாருமே இல்லாமல் இருந்ததற்கு இப்போது இரண்டு பேரும் தன் அருகில் இருக்கிறார்கள்’ என்ற எண்ணமே அவளுக்கு ஒரு பலத்தை கொடுத்தது போல இருந்தது.
அவர்கள் சொன்னது போலவே அவர்கள் வீட்டில் சமைக்கும் ஆளிடம் சொல்லி இவளுக்கும் சேர்த்தே சமைத்து இவள் வீட்டிற்கு கொடுத்து விடப்பட்டது.
வினித் முகேஷ் உடன் படிக்கும் பெண்களின் உதவியோடு., பெண்களுக்கு தேவையானவற்றை வாங்க இவளை ஷாப்பிங் கூட்டி சென்றனர்.
முதலில் ஷாப்பிங் செய்யும் போது வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். வினித்தும் முகேஷும் தான் ஒரு வழி ஆகினர்.
சிறுபிள்ளைக்கு செய்வது போல ஒவ்வொன்றிலும் செய்ய., பின்பு அவளோடு ஷாப்பிங் செல்வது ஆண்களுக்கும் சந்தோஷமாக தான் இருக்கும் என்ற அளவிற்கு கொண்டு வந்து விட்டிருந்தாள்.
‘தன்னை முதல் முதலாக இத்தனை சந்தோஷமாக உணர்ந்த தருணம், முகேஷ் வினித்தோடு இருக்கும் போது மட்டும் தான். ஒரு பாதுகாப்பு உணர்வு., சந்தோஷம் எல்லாம் சேர்ந்து அவளுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருப்பது போல உணர்ந்தாள்
அதுபோலவே தங்கள் கல்லூரியில் படிக்கும் பெண்களின் உதவியோடு அவளை பார்லர் அழைத்துச் செல்வது., அவளுக்கு தேவையானவற்றை வாங்குவது என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது.
அதுபோலவே பார்லர் சென்று வந்துவிட்ட பிறகு இருவரும் அவளை வாயை பிளந்து பார்க்க., இவளோ “ஏன் மாம்ஸ்” என்றாள்,
வினித் முகேஷ் இவர்களோடு படிக்கும் பெண்கள் தான் இவளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தனர்.,
“அத்தை பையனோ, மாமா பையனோ, எங்கள் பக்கம் எல்லாம் மாமா என்று அழைப்பது வழக்கம்” என்று சொன்னார்கள்.
இவளோ “மாமான்னு கூப்பிடனுமா, ஐயே அது எப்படி கூப்பிடுறது, நான் வேணா அண்ணான்னு கூப்பிடட்டுமா”, என்று கேட்டாள்.
அவர்கள் இருவரும் “தாயே அப்படி மட்டும் கூப்பிடாத, வீட்டில் திட்டு வாங்கி முடியாது, சோ அண்ணன் கூப்பிடாத”, என்று இருவரும் ஒன்றுபோல சொன்னார்கள்.
அவனோடு படிக்கும் பெண்கள் தான்., “டேய் என்ன” என்று இருவரையும் கேட்டனர்.
ஆனால் இருவரும்”வாயை மூடிக்கிட்டு இரு” என்று சொல்லி அந்த பெண்களை அடக்கினர்.
அதன் பிறகு தான், இவள் முகேஷ், வினித் இருவரையும் மாம்ஸ் சென்று அழைப்பது வழக்கமாக வைத்திருந்தாள்.
ஏர்போர்ட்டில் இருந்தவளுக்கு பள்ளி நினைவுகளை விட்டு கல்லூரியின் முதல் நாள் பற்றி யோசிக்க தொடங்கும் போதே., அவளுக்கு அழைப்பு வர சிரித்துக் கொண்டே அழைப்பை ஏற்றவள்.
“சொல்லுங்க மாம்ஸ்”, என்றாள்.
ஏனென்றால் வினித் முகேஷ் இருவரும் கான்பிரன்ஸ் காலில் அவளோடு இணைந்து இருந்தனர்.
“ஏன் மாம்ஸ், ரெண்டு பேரும் தனித்தனியா போனே பண்ண மாட்டியா., எப்பவும் ஒரே போன் தானா”, என்று கேட்டாள்.
“பாப்பா, உன்கிட்ட இப்படி பேசினா தான் பாப்பா எங்களுக்கு பேசின மாதிரி இருக்கு”, என்று சொன்னான்.
“நல்ல பழக்கம் கத்து வச்சிருக்கீங்க மாம்ஸ், ரெண்டு பேரும்”, என்றாள்.
வினித்தோ, “குட்டி சாப்பிட்டியா”, என்று கேட்டான்.
“ஓ சாப்பிட்டேனே” என்றாள்.
“சமத்துகுட்டியா கிளம்பி போ” என்று சொன்னான்.
“ஓகே மாம்ஸ்”, என்றவள்.
“நீ சமத்துகுட்டியா இரு மாம்ஸ்”, என்று சொன்னாள்.
“நான் இருக்கிறது இருக்கட்டும், பத்திரமா போயிடுவே இல்ல குட்டி, கேர்ஃபுல்லா பாத்துக்கணும், குளிர் ஜாஸ்தி இருந்துச்சுன்னா, டிரஸ் அதுக்கு தகுந்தப்புல வியர் பண்ணனும், வாங்கியிருக்க எல்லாம் எடுத்துக்கிட்டியா”, என்று கேட்டான்.
“மாம்ஸ் நான் என்ன சின்ன புள்ளையா, எல்லாம் எடுத்துகிட்டேன் மாம்ஸ்., நீ வேற நான் குட்டி பிள்ளை மாதிரியே ட்ரீட் பண்ணாத மாம்ஸ்”, என்று சொன்னாள்.
அவனோ “நானும் அப்படித்தான் நினைக்கனும் ன்னு நினைக்கிறேன்., ஆனா நீ பெரிய பிள்ளை மாதிரி பிஹேவ் பண்ண மாட்டேங்குற”, என்று சொன்னவன்.
“சரி திவ்யாவோட பையனுக்கு எப்படி இருக்கு”, என்று கேட்டான்.
“நல்லா இருக்கானாம், இன்னும் ஒரு நாள் ஆகுமாம் டிஸ்சார்ஜ் பண்ண”, என்று சொன்னவள், “ஆமா உனக்கு எப்படி மாம்ஸ் தெரியும்”, என்று கேட்டாள்.
அந்த பக்கம் இருந்து முகேஷ், “பாப்பா இது என்ன கேள்வி?, உன்னை அனுப்ப திவ்யா வருவாங்கற தைரியத்துல தான், நாங்க ஊர்ல இருந்து கிளம்பாம இருந்துட்டோம்., அவ வரல அப்படின்னு சொல்லி எங்களுக்கு ஃபர்ஸ்ட் டே சொல்லியிருந்தா,வந்துருபோம், இல்ல”, என்று சொன்னான்.
“ஏன் மாம்ஸ் சென்ட் ஆஃப் பண்ணுறது முக்கியமா மாம்ஸ், இரண்டு பேரும் டாக்டர்ங்றதையே அப்பப்போ மறந்துருங்க சரியா., ஏன் ஹாஸ்பிடல் அவ்வளவு ஒர்க்க வச்சுட்டு இரண்டு பேரும் இங்கே கிளம்பி வருவியா., நீ உன் ஹாஸ்பிட்டல்ல பாரு., நீ உன் ஹாஸ்பிட்டல்ல பாரு., ரெண்டு பேரும் வேலையில கான்சன்ட்ரேட் பண்ணுங்க., நான் யூஎஸ் ல இருந்து வரும் போது என்ன வேணும்னு சொல்லுங்க., நான் வாங்கிட்டு வரேன்”, என்று சொன்னாள்.
“ஐயோ என் பாப்பா வளந்துட்டா போலேயே”, என்று முகேஷ் கேட்டான்.
வினித்தோ “குட்டி நீ வளர்ந்துட்டியாடா” என்று கேட்டான்.
“மாம்ஸ்” என்றாள்.
“அது தானே, நீ வளர்ந்துட மாட்ட”, என்றான்.
“மாம்ஸ் நான் உன்னை விட கொஞ்சம் தான் ஹைட் கம்மி”, என்று அவனிடம் வாய் வளர்த்துக் கொண்டிருந்தாள்.
அவனும் “ஹயிட்ட சொல்லல குட்டி, மூளைய சொல்றேன்., தலைல மூளை மூளை ஒன்னு இருக்கும் பாத்தியா அத சொல்றேன்”, என்று சொன்னான்.
இவளோ “அதெல்லாம் இருக்கு இருக்கு., நிறையவே இருக்கு” என்று சொன்னவள்.
“ஆமா நீ என்ன மாம்ஸ் பழைய படி கேரளா போன பிறகு தமிழ் கம்மியாகி., மலையாள சாயல் தூக்கலா தெரியுது”, என்று கேட்டாள்.,
“நீயும் கத்துக்கோ குட்டி”, என்றான்.
“அதெல்லாம் கத்துக்க முடியாது., எனக்கு தமிழ் போதும்”, என்று சொன்னாள்.
இருவரும் போனில் அவளிடம் கொஞ்ச நேரம் வம்பு வளர்த்து விட்டு இருவரும் மாற்றி மாற்றி அவளை பத்திரமாக போய்விட்டு வரவேண்டும் என்பதை மட்டுமே அறிவுறுத்தினர்.
இவளோ “நான் பார்த்துக்கிறேன்., நான் பாத்துக்குறேன்”., என்று சொல்லி சிரித்த வண்ணமாக பேசிக் கொண்டிருந்தாள்.
பின்பு இருவரிடமும் விடை பெற்று போனை வைத்த பிறகு சிரித்தபடி அவர்களை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் தர்ஷனா.
ஆனால் அங்கு கான்பிரன்ஸ் காலை கட் செய்யாத முகேஷும் வினித்தும் அமைதியாக இருக்க., இருவரும் ஒரே நேரத்தில் பெருமூச்சு விடவும்.
“என்னாச்சு” என்றனர்.
“எனக்கு என்னவோ இப்பதான் அவளை போயி கொடைக்கானல் ஸ்கூல் ஹாஸ்டல்ல பார்த்துட்டு வந்து நம்ம ரெண்டு பேரும் உட்க்காந்து அழுத மாதிரி தோணுது., எப்படி இவள இப்படி விட்டுட்டோம்னு எத்தனை நாள் சொல்லி சொல்லி அழுது இருப்போம்.,
திரும்ப அவ நம்ம பொறுப்புக்கு வந்து காலேஜ் லைஃப்ல நம்ம கைல இருந்து அவ படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான்., உண்மையிலேயே அந்த கில்டி கான்ஷியஸ் கொஞ்சம் குறைஞ்சிருச்சு., ஆனா இப்பவும் தோணுதுடா சீக்கிரம் அவளுக்கு ஒரு கல்யாணத்துக்கு பார்க்கணும்.,
அவளுக்குன்னு ஒரு ஃபேமிலி ரெடி ஆகணும்”, என்று சொன்னான்.
“கண்டிப்பா பார்ப்போம், ஆனா அவளுக்கு பிடிச்ச மாதிரி பார்க்கனும், நானும் யோசிச்சுட்டு தான் இருப்பேன்”, என்றவன்.
“நம்ம இனிமேல் பார்க்க ஆரம்பிக்கலாம், இனிமேல் உன் ஃபேமிலியோ, என் பேமிலியோ அவளுக்காக யாரும் எதுவும் செய்யணும் நம்ம எதிர்பார்க்கணும் ன்னு அவசியம் இல்ல., நம்ம செய்வோம் அவளுக்கு”, என்று சொன்னான்.
“கண்டிப்பா செய்வோம்டா, இப்போ பத்திரமா போயிடுவா இல்ல”, என்று இருவரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டனர்.
“என்ன கொஞ்சம் கஷ்டப்படுவா, ஜெர்மன் போய்ட்டு ஃபர்ஸ்ட் ஒன் வீக் போன் பண்ணி டெய்லி புலம்புவாள் இல்ல அந்த மாதிரி போன் பண்ணி பொலம்புவா., இல்லாட்டி ஜெட்லாக் ல கஷ்டப்படுவா, அப்புறம் தானா செட் ஆயிடுவா., என்ன ஜெர்மன் ட்ரிப் 3 மந்த்ஸ் தான்., இது எத்தனை மாசம் இழுத்து அடிக்க போகுதுன்னு தெரியல., ப்ராஜெக்ட் முடியிறத பொறுத்து தான் ரிட்டன் அப்படின்னு சொல்லி இருக்கா பார்ப்போம்”, என்று முகேஷும் வினித்தும் பேசிக்கொண்டனர்.
பின்பு சற்று நேரம் அவர்கள் பேசி இருந்து விட்டு அதன் பிறகு அழைப்பை துண்டித்தனர்.
இங்கு அவர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தர்ஷனா, இருவரையும் நினைத்து சிரித்துக் கொண்டவள்.
தன் அலைபேசியை ஆன் செய்து, அதிலிருந்த கேலரியில் மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘உண்மையிலே இவங்க ரெண்டு பேரும் காலேஜ் காக என்னை அங்கிருந்து கூட்டிட்டு வந்து சென்னையில் சேர்த்து படிக்க வைக்க போய் தான்., என்னோட லைஃப் இன்னைக்கு உயிர்ப்போட போய்கிட்டு இருக்கு., ஒருவேளை மதர் சொன்ன மாதிரி யாருமே வராமல் இருந்து., நான் ஏதோ ஒரு ஹாஸ்டல்ல தங்கி ஏதோ ஒன்னு படிச்சிருந்தா., நார்மலா ஏனோ தானோ ன்னு லைப் லீட் பண்ணி இருப்பேன்., போராடி வாழனும் என்ற எண்ணம் இருந்திருக்கும்., ஆனால் இந்த அளவுக்கு சந்தோஷமா இருந்திருப்பேனா ன்னு தெரியாது., இப்பவும் சின்ன சின்ன ஏக்கம், வலி எல்லாமே எனக்குள்ள இருக்கு.,
ஆனா என்னோட வலி, என்னுடைய ஏக்கம் எல்லாத்தையுமே நிமிஷத்துல மறக்க வைக்கிற சக்தி மாம்ஸ் ரெண்டு பேருக்கு தான் இருக்கு’, என்று சிரித்தவள்.,
‘ஜெர்மன் செல்லும் போது அவளை இருவரும் கிண்டலும் கேலிமாக ஏர்போர்ட்டில் விட்டு, இவளை ஓட ஓட உள்ளே அனுப்பியதை’ நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
தன் கல்லூரி வாழ்க்கையில் முதல் நாள் இருவரையும் அவள் படுத்தி எடுத்தது., இன்றும் அவளுக்கு பசுமையாக நினைவிருந்தது.,
அன்புக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள் ஆனால் மனதில் பட்டதையெல்லாம் பேசாதீர்கள். பிரிவுகளை தவிர்த்து கொள்ளலாம்.