அந்த பொண்ணுக்கு ஐஞ்சி வயசு இருக்கும் போது அவங்க அம்மா இறந்துட்டாங்க., அவங்க அப்பா அம்மாவை ஓவரா லவ் பண்ணி இருக்காரு போல, அவங்க அம்மா இறந்து நாலு வருஷம் கூட ஆகல., அவங்க இல்லாத அந்த துக்கத்திலேயே அவரும் போய் சேர்ந்துட்டாரு., அப்புறம் இந்த பிள்ளையோட நிலைமை தான் பாவம்,
தனியாக நின்னுருச்சு.,
அவங்க வேலையில் பிள்ளைக்காக அவங்க சேர்த்து வச்சது அவங்க இருந்த வீடு, ஒரு இடம், கொஞ்சம் பணம் இது மட்டும் தான் மிச்சம்., அதை இந்த பொண்ணு பேர்ல வச்சிருந்தாங்க.
அவர் கொஞ்சம் நல்ல ப்ஸினஸ் செய்திட்டு இருந்தாரு, அவங்க அம்மாவுமே டாக்டரா இருந்தவங்க., சோ ரெண்டு பேரும் இந்த பொண்ணுக்கு ஏதோ கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தாங்க, அவங்க பேரன்ட் இருந்திருந்தா, இவங்களும் ஓரளவுக்கு வசதியான பேமிலியா தான் இருந்திருப்பாங்க,
ஆனா அவருக்கு ஆடிட்டிங் பார்த்த ஆடிட்டர், லாயர், அவங்க அப்பாவோட பிஏ, இவங்க எல்லாம் சேர்ந்து அவங்க பிசினஸ, ஆஃபோசீட் பார்ட்டி ட்ட பேரம் பேசி தான் அதை வச்சு இந்த பொண்ணுக்கு செட்டில்மெண்ட் அமௌன்ட் அ வக்கீல், ஆடிட்டர், பிஏ , சேர்ந்து ரெடி பண்ணாங்க,
இந்த பொண்ணு தனியா நிற்கும் பரிதாபத்தில் மூன்று பேரும் நேர்மையா செய்து கொடுத்துருக்காங்க,
அப்புறம் அவங்க இரண்டு குடும்பத்துக்கும் பொண்ணு தனியா இருக்கா ன்னு இன்பார்ம் பண்ணதுல, அவங்க இந்த பொண்ண வளர்க்க முடியாது ன்னு சொல்லிட்டாங்க.,
ஆனா ஏதோ ஒரு பரிதாபத்தில் அந்த பொண்ணோட தாய் மாமா இந்த பொண்ண படிக்க வச்சாரு., படிக்க வச்சதெல்லாம் கொடைக்கானல் அமெரிக்கன் ஸ்கூல்ல., சோ நல்ல ஸ்டடீஸ் கொடுத்திருக்காங்க., அந்த பொண்ணுக்கு தேவையான எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் நிறைய கத்து கொடுத்து இருக்காங்க., எல்லாம் செஞ்சாங்க., ஏன் இந்த பொண்ணு வேலைக்கு வந்த புதுசுல திவ்யா சொல்லவே செய்து இருக்கா., ரெக்கமண்டேஷன்ல தான் வேலைக்கு வந்துச்சு இந்த பொண்ணு ன்னு.,
ஆனா வொர்க் விஷயத்தில் ஹார்டு ஒர்க்கு அப்படின்னு சொல்லி சொன்னா, 2 இயர்ஸ்க்கு மேல ஆகனும், நல்லா டெவலப் ஆனதுக்கப்புறம் தான் ஆன்சைட் அனுப்புவாங்க., இந்த பொண்ணு 2 இயர்ஸ்லயே ஜெர்மன் போயிட்டு வந்துச்சு.,
அதுக்கப்புறம் இந்தா இப்போ மறுபடியும் யூ எஸ் போகுது., ஒர்க்கை அப்படி கத்துகிச்சு, ஏன்னா அந்த பொண்ணுக்கு தெரியும், தனக்கு யாரும் கிடையாது, தான் பார்க்கிற வேலையும் தன்னோட வீடும் மட்டும் தான் அந்த பொண்ணுக்கு, அப்படிங்கறது அதுக்கு தெரியும்., எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் ஒரு துளி கூட முகத்துல காட்டாது., அடுத்தவங்கள பாத்து சின்னதா கூட பொறாமை படாது.,
அந்த முகத்துல, அந்த கண்ணுல ஒரு சின்ன ஏக்கம் கூட வெளியே காட்டாது., மத்தவங்க சந்தோஷமா இருக்கிற பார்த்தா சந்தோஷ படுமே ஒழிய., ஒரு நாளும் அந்த பொண்ணு முகத்துல அந்த பொறாமையை பார்த்ததே கிடையாது., அதனால தான் இவளோட ஃப்ரெண்ட்ஷிப் அந்த பொண்ணு கூட ரொம்ப திக்கா ஆயிருச்சு.,
இப்ப கூட கேட்க தான் செய்றா., கல்யாணம் பண்ணிக்கோ உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும் அப்படின்னு சொல்லுறா, சிரிச்சே மலுப்புமே தவிர, தன்னைப் பத்தி ஒரு நாளும் யோசிச்சதில்லை., பார்க்கலாம் அப்படின்னு மட்டும் தான் சொல்லுமாம், திவ்யாக்கு அதுல வருத்தம் தான் மா., அந்த பொண்ணுக்கு பார்த்து செய்வதற்கு யாரும் இல்லை, எல்லாரும் இருக்க தான் செய்யுறாங்க, அவளோட கதை எல்லாம் பெரிய கதை ம்மா, சொன்னேனா சொல்லிக்கிட்டே இருக்கலாம்.,
அந்த அளவுக்கு பெரிய கதை, இன்னும் ஒரு நாள் டைம் கிடைச்சா, திவ்யா கிட்ட கேளுங்க, அவளே சொல்லுவா”, என்று சொன்னான்.
அவர் அம்மாவின் முகம் அப்படியே மாறியது., “யாரும் இல்லாமல் எப்படி டா வளர்ந்து இருக்கும்., பொண்ணு குணம் எல்லாம் எப்படியோ, கேரக்டர் எதும் எப்படியோ, தாய் தகப்பனும் இல்லாம வளர்ந்த பிள்ளைன்னு சொல்லுத, ஹாஸ்டல்ல வளர்ந்திருக்கு., யாரும் இருந்து பார்க்கலை ங்க., அப்புறம் அந்த புள்ள கேரக்டர் எல்லாம் எப்படி தான் இருக்கும்., நல்ல புள்ள தானா இல்ல, வேற மாதிரியா”, என்று கேட்டார்.
“அம்மா திவ்யா காதுல கேட்டுச்சுன்னா, இதுவரைக்கும் மாமியார் மருமகள் சண்டை தான் வரல., அதுவும் வந்துராம, அவளை பத்தி இந்த மாதிரி வார்த்தை சொன்னீங்கன்னு தெரிஞ்சாலே தை தைன்னு வந்துருவா திவ்யா., தங்கமான பொண்ணு, ஒரு வார்த்தை குறை சொல்ல முடியாது.,
அவளை பாதுகாத்துக் கொள்வது எப்படி ன்னு அவளுக்கு தெரியும்., அடுத்தவங்க கிட்ட தேவையில்லாம பேசக்கூட மாட்டா., எப்படிம்மா இப்படி கேட்குறீங்க, அம்மா அப்பா இல்லாம வளர்ந்தா உடனே தப்பா வளர்ந்த பிள்ளைன்னு சொல்லிருவீங்களா.,
அந்த பிள்ளை அமெரிக்கன் ஸ்கூல்ல படிச்சபுள்ள., அங்க உள்ள மதர் தான் இந்த பொண்ணுக்கு நிறைய விஷயங்கள் சொல்லி வளர்த்துருக்காங்க, அப்படின்னு சொல்லி இவ எதுக்கெடுத்தாலும் சொல்லுவா,
திவ்யாட்ட சொல்லுமாம் அந்த பொண்ணு, மதர் சொல்லி கொடுத்திருக்காங்க ன்னு., சொல்லுமாம் சோ எதையுமே யாருமே சொல்லிக் கொடுக்காமல் வளர்க்கலை,
கடவுள் கதவு அடைச்சா, ஜன்னலை திறப்பான்னு சொல்வாங்க இல்ல அந்த மாதிரி தான் இந்த பிள்ளைக்கு., அம்மா அப்பா இல்லாம போனாலும், இவள சுத்தி எல்லாருமே இவ மேல அக்கறை உள்ளவங்களா கடவுள் கொடுத்திருக்கிறார்.,
அந்த அக்கறையின் பலனா இந்த பொண்ணு நல்லா இருக்குது., அவ மனசுலயும் யார் மேலயும் பொறாமையோ, வஞ்சமோ, கெட்ட எண்ணமோ இல்ல., அதனால தான் அந்த பொண்ணு நல்லா இருக்குது விடுங்கம்மா., இவ்வளவு சின்ன வயசுல யூ எஸ் போறதுலாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா., எங்கள மாதிரி இந்த ஃபீட்ல இருக்கவங்களுக்கு தான் தெரியும்., வேலைக்கு சேர்ந்து நாலு வருஷம் கூட ஆகல ஆனா அதுக்குள்ள ரெண்டு தடவ ஆன்சைட் போயாச்சு.,
கேட்டால் சொல்லுமாம், எனக்குன்னு யாரு இருக்கா, இங்க உட்கார்ந்து நான் என்ன செய்யப் போறேன்., அதுக்கு வெளிய போயிட்டு வர்றேன், நீங்க ஃபேமிலியில் உள்ளவங்க, போறதா இருந்தா ஹஸ்பண்ட் அ பிரியனும், குழந்தைகளை பிரியணும், அம்மா அப்பாவை பிரியனும்., நிறைய உங்களுக்குன்னு கமிட்மெண்ட்ஸ் இருக்கு., எனக்கு தான் எந்த கமிட்மென்ட்ஸ்ம் கிடையாதே, போயிட்டு வர்றேன் அப்படின்னு சொல்லி சிரிச்சிட்டே போகுமாம்.,
அந்த பொண்ணுக்கு ஏக்கம் இல்லாமலா இருக்கும்., நமக்காக யாரும் இல்லைங்குற எண்ணம் இல்லாமலா இருக்கும்?, எல்லாம் இருக்கும் மா, ஆனா அந்த பொண்ணு ஒரு நாள் கூட வெளியே காட்டிக் கொண்டே கிடையாது., இப்படி யோசிங்க ம்மா”, என்று சொன்னான்.
“சரி தாண்டா புரியுது, இருந்தாலும் கேட்டேன், என்ன நம்ம திவ்யா இவ்ளோ க்ளோசா இருக்கா அப்படிங்கும் போது கொஞ்சம் யோசனையா இருக்குல்ல., அதுக்கு தான் கேட்டேன்”, என்று சொல்லி தன் பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டார்.
அங்கு தோழிகளோ அரட்டையில் இருந்தனர்.
தோழிகள் பேசி முடித்ததுமே., இவளோ “ஓகேடி நீ போய் பிள்ளையை பாரு”, என்று சொன்னாள்.
திவ்யாவோ, “நீ பத்திரமா போயிட்டு வா, உனக்கு முக்கியமான போன் கால் வருதான்னு பாரு, வரலைன்னா தயவு செய்து கிளம்பறதுக்கு முன்னாடி நீயாவது கூப்பிட்டு பேசிடு., டிஸ்டர்ப் ஆக இருக்கும்னு சொல்லிட்டு நீ பேசாம இருக்காத., அப்புறம் அதுக்கு வேற சண்டை வரும்”, என்று சொன்னாள்.
“வந்தா பாத்துக்கலாம் விடு”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ஏண்டி இப்படி இருக்கிற, நடந்த விஷயங்களை எல்லாம் நினைச்சு இன்னும் குழம்பிக்கிட்டு இருக்கியா, எதை பத்தியும் யோசிக்காத., ப்ரீயா விடு, மைண்ட் ரிலாக்ஸா வை”, என்று சொன்னாள்.
“ஹலோ நான் ரொம்ப ரிலாக்ஸா இருக்கேன், ஜாலி மூடுல இருக்கேன், என்னென்ன சுத்தி பாக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்., இந்தியா ல உள்ள சம்பளம் அப்படி பேங்க்ல சேரும், அங்க உள்ள சம்பளத்தை வைத்து ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வர்றேன், முடிஞ்சா யூ எஸ் ல எது எது முக்கியமான இடமோ அத்தனையும் சுத்தி பாத்துட்டு வர்றேன்., உனக்கு என்ன என்ன வேணும் சொல்லு., உன் குட்டி பையனுக்கு என்னென்ன வேணும் சொல்லு., வாங்கிட்டு வாரேன்”, என்று சொன்னாள்.
“நீ முதல்ல ஒழுங்கா சாப்பிடு, அதுக்கு அப்புறமா ஊர் சுத்துவதை பற்றி யோசிக்கலாம்”, என்று சொன்னாள்.
“அங்கேயே கம்பெனில அதாவது நம்ம ஊர்ல குவாட்டர்ஸ் கொடுக்குற மாதிரி, அங்க அப்பார்ட்மெண்ட்ஸ்ல ஒரு வீடு கொடுத்துடுவாங்களாம், ஃபர்னிஸ்ட் ஹவுஸ் தான், வசல்ஸ் எல்லாம் இருக்குமாம்., நமக்கு தேவையான மசாலா ஐட்டம் , வெஜிடபிள் மட்டும் நம்ம வாங்கிட்டு., நம்மளே சமைச்சு சாப்பிட்டுக்கலாம்., சோ கவலையே படாத நான் சாப்பிடுறதெல்லாம் ஒழுங்கா சாப்பிடுவேன்., என்ன போன ஒரு வாரத்துக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்., ஜெர்மன் போனப்ப கஷ்டப்பட்டேன்ல., செட் ஆகுற வரைக்கும் சமைக்கிறதுக்கு டைம் இல்லாம., ஃபர்ஸ்ட் ஒன் வீக் எல்லாத்தையும் அரேஞ்ச் பண்றதுக்கு டைம் இல்லாம., வெளிய வாங்கி சாப்பிட்டு சுத்திக்கிட்டு இருந்தேன்னா., அந்த மாதிரி வேணா இருக்கலாம்., ஜெட் லாக் இருக்கும் நான் சமாளிச்சிடுவேன்., ஓகேவா, நீ பையன பாத்துக்கோ., நான் போய் சேர்ந்த உடனே முடிஞ்சா போன் பண்றேன்., இல்லாட்டி மெசேஜ் பண்றேன்., அப்புறம் அங்க உள்ள கார்டு எல்லாம் போட்டுட்டு உனக்கு கால் பண்றேன் சரியா., நீ பிள்ளை பார்த்துக்கோ வீட்ல பிரதர் கிட்ட கேட்டேன்னு சொல்லு., சமத்துப்பில்லையா போய் பிள்ளையை பாரு., உன் மாமியார் கிட்ட கெட்ட பேரு வாங்கிறாத”, என்று சொன்னவள், பய் சொல்லி இருவரும் போனை வைத்தனர்.
இவளுக்கு இன்னும் சற்று நேரத்தில் பிளைட் கிளம்பக்கூடிய நேரம் என்பதால் அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.
மனமோ தோழியிடம் பேசியதிலிருந்து பழைய நினைவுகளை அசை போட துவங்கியிருந்தது.
“யாரும் உடன் வரப்போவதில்லை என்ற போதிலும் எல்லோர் பின்னாலும் செல்லத் துடிக்கிறது பேரானந்தம் தேடும் பிள்ளை மனம்”