சென்னை ஏர்போர்ட் அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாகவே இருந்தது.
பகல் போல அத்தனை சுறுசுறுப்பு, ஒவ்வொரு இடத்திலும் பரபரப்பு, எத்தனை முறை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தாலும் அந்த சுறுசுறுப்பை பார்க்கும் போதெல்லாம் அவள் மனதில் தோன்றுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.,
‘இத்தனை பேர் எங்கு சென்று கொண்டிருக்கிறார்கள், எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று தான் தோன்றியது.
அவர்களை அனுப்ப என்று வந்த கூட்டம் ஒரு புறம் நுழைவுப்பகுதியில் நிற்க., அவர்களை எல்லாம் பார்த்தபடி தனியாக தனது ட்ராலியை தள்ளிக் கொண்டு அங்கிருந்து மெதுவாக ஒவ்வொன்றையும் பார்த்தபடி நடந்தாள்.
எப்போதும் தனிமையின் துணையோடு இருப்பவளுக்கு, இப்படி ஒரு உறவுக் கூட்டத்தோடு இருப்பவர்களை காணும் போது ஆச்சரியம் தான் ஏற்படும், எப்போதாவது சில நேரங்களில் ஏக்கமும் வருவதுண்டு,
அது போன்ற ஒரு நாளாக இந்த நாள் அமைந்து விட, ஏக்கத்துடன் பார்வையிட்டவளுக்கு, பெருமூச்சு மட்டுமே வந்தது,
எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது இல்லை, இருப்பதை கொண்டு சந்தோஷ பட்டுக்கொள்ள வேண்டும், எங்கேயோ எப்போதோ படித்த நினைவு,
தனக்கான பிளைட் வரும் நேரத்தை கணக்கிட்டு வந்திருந்ததாள், செக்கிங் முடித்து லக்கேஜை போட்டு விட்டு, ஹாண்ட் லக்கேஜை மட்டும் எடுத்துக் கொண்டு தனக்கென இடம் பார்த்து வந்து அமர்ந்தாள்.
அவள் தர்ஷனா, தோழிகளுக்கும் தர்ஷனா தான்.,
வீட்டினருக்கு ?? அப்படி என்று யாரும் அவளுக்கு கிடையாது., அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கை, தனியாக தான் சென்று கொண்டிருக்கிறது.
யாருமில்லா தனிமையே அவளுக்கு., ஒருபுறம் சில நேரங்களில் அந்த தனிமை ரசனைக்குறியதாக இருந்தாலும்., சில நேரங்களில் அவள் மனதை அழுத்தும் பெரும் பாரமாக அவளுக்கு இருந்தது.
அப்பா கேரளாவை சேர்ந்தவர். அம்மா கர்நாடகாவை சேர்ந்தவர்., இவள் பிறந்து ஐந்து வயதாக இருக்கும் போது அம்மா திடீரென நோய்வாய்ப்பட்டவர் அப்படியே இறைவனடி சேர்ந்து விட்டார்.
அதன் பிறகு இவளுடைய ஒன்பது வயதில் மனைவியின் பிரிவு தாங்க முடியாமல் இவளுடைய அப்பாவும் ஹார்ட் அட்டாக்கில் சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.
ஓரளவு அவள் தந்தை , தாய் இவளுக்காக சேமித்து வைத்திருந்த தொகையை இவளுடைய பெயரில் பேங்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
அவள் தாய் தந்தையர் இருந்த வீடு வாடகைக்கு விடப்பட்டு அதிலிருந்து வரும் வாடகையும் இவளது பெயரிலேயே போடப்பட்டது.
அதை தவிர இவள் தந்தை வாங்கி வைத்திருந்த இடம் இது மட்டுமே இவளுக்கான சொத்து., என்று அவளது வக்கீல் அவளுக்காக பாதுகாத்து வந்தனர். அவளுடைய அப்பாவின் அலுவலக உதவியாளர் மற்றும் வக்கீல் ஆடிட்டர் மூவரும்.
ஏர்போர்ட்டில் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, சற்று நேரம் தன் மனம் என்ன யோசிக்கிறது என்று புரிந்தாலும், சிரித்துக்கொண்டே அமைதியாகிவிட்டாள்.
‘உறவுகள் சூழ வாழ ஒரு கொடுப்பினை வேண்டும்’., என்று மட்டும் நினைத்துக் கொண்டவளுக்கு ஒவ்வொன்றாக நினைவு வர தொடங்கியது.
அவள் நினைவுகளை கலைக்கும் விதமாக அவள் தோழியின் அழைப்பு வர போனை எடுத்தாள்.
“ஹாய்” என்று இவள் சொன்னவுடன்,
மறுபுறமோ “ஹே சாரி டி, நெஜமாவே சாரி, நான் வந்திரலாம்னு தான் நினைச்சேன்., இப்ப பார்த்து குட்டிக்கு இப்படி முடியாம ஆகும்னு நினைக்கவே இல்ல”, என்று சொன்னாள்.
இவளோ அவளை சத்தம் போட்டாள், “ஏய் என்ன பேசுற நீனு, முதல்ல குழந்தையை பாரு, அவனோட ஹெல்த் பாரு, அவனுக்கு என்ன வேணும் என்பதை பாரு”.,என்றவள்,
“ஒன்னும் பிரச்சனை இல்ல, ஏர்போர்ட் வந்தாலும் நீ எப்படியும் வாசல் வரைக்கும் தான் டிராப் பண்ண முடியும் அப்படித்தானே, உள்ளே வர முடியாது தானே., பிளைட் கிளம்பற வரைக்கும் நின்னு நீ டாட்டா காட்டவா போற., அதனால அதை யோசிக்காம குழந்தையை பாரு”., என்றாள்.
“வாசல் வரைனாலும், நான் கொண்டு வந்து விட்டா நிம்மதியா இருக்கும் தானே”, என்றாள்
“இப்பவும் நல்ல படியா வந்துட்டேன் நீ நிம்மதியா இரு, அதுதான் நீ வரலனாலும், அதுக்கு பதிலா டாக்ஸி டிரைவர் கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு இல்ல”, என்று சொன்னாள்.
“அடியே நானும் டாக்ஸி டிரைவரும் ஒன்னாடி”, என்று கேட்டாள்.
“சேச்சே அப்படி எல்லாம் சொல்வேனா, நீ இருந்தா கலகல ன்னு நம்ம பேசிட்டே வந்திருப்போம்., என்ன டாக்ஸி டிரைவர் கிட்ட உன்ன விட கம்மியா தான் பேச முடிஞ்சிச்சு., அந்த மனுஷன் கிட்ட போய் பர்சனல் பேச முடியாது இல்ல., தெரியாத்தனமா அந்த மனுசன்ட்ட உலக நடப்பு பேசுறேன்னு ஆரம்பிச்சது தான்., வந்து இறங்குற வரைக்கும் பேசலாமேனு தான் ஆரம்பித்தது, அந்த அண்ணா என்னன்னா அரசியல சென்ட்ரல் கவர்மெண்ட்ல இருந்து, ஸ்டேட் கவர்மெண்ட் வச்சி வெரைட்டியா கிழி கிழின்னு கிழிக்கிறார் மனுஷன்.,
எனக்கு என்ன பதில் சொல்லணும் தெரியல., மண்டையை பிச்சுகிட்டு உக்காந்துட்டு இருந்தேன்”., என்று சொன்னாள்.
“நீ வாய வச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டியா டி., டிரைவர் கிட்ட போயா கதை பேசுவ”, என்று கேட்டாள்.
“பேசாமல் போர் அடிக்குது இல்ல., பேசணும் இல்ல”, என்று சொன்னாள்.
“ஆமா நீ பேசு பேசு, நீ இப்படி பேசி பேசியே வேணா பாரு, யார்கிட்டயாவது இந்த பேச்சாலேயே மாட்டப் போற”, என்று சொன்னாள்.
“அப்படி எல்லாம் மாட்ட மாட்டேன்”, என்று சொன்னாள்.
“ஆமா, உனக்கு முக்கியமான போன் வருமே வந்துச்சா”, என்றாள்.
“முக்கியமான போன் வரும், அது கரெக்டா நான் பிளைட்டுக்கு போறதுக்கு முன்னாடி வரும்., எதிர்பார்த்துட்டு தான் இருக்கேன்., வரும்”, என்றாள்.
“நீ கூப்பிடலையா”, என்று கேட்டாள்.
“நான் எதுக்கு கூப்பிடுறேன், நான் கூப்பிட்டேன்னா எதுக்கு டிஸ்டர்ப் பண்ற அப்படின்னு பதில் வரும்., அதைவிட அவங்களாவே கூப்பிடட்டும், நான் பேசுறேன்”, என்று சொல்லி தோழிகள் இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
ஹாஸ்பிடலில் மகனுக்காக தங்கி இருந்த, தர்ஷனாவின் தோழி திவ்யா தான் பேசியது, அவள் போனை எடுத்துக் கொண்டு காரிடர்க்கு சென்று பேசத் துவங்கியிருந்த போதே,
மருத்துவமனையில் குழந்தைக்கு துணையாக இருந்த திவ்யாவின் கணவரிடம் திவ்யாவின் மாமியார்.,
“என்னடா இது ப்ரண்ட் கிட்ட பேச போறேன்னு சொல்லிட்டு, உன்ன பிள்ளைய பாத்துக்கோ அப்படின்னு சொல்லிட்டு அவ பேசாம போன தூக்கிட்டு வெளியே போயிட்டா”, என்று கேட்டார்.
“அம்மா அவ யார்கிட்டயுமா பேசுறா, அவ ப்ரண்ட் தர்ஷனா கிட்ட தானே பேசுறா., சொல்லிட்டு தானே போனா, தர்ஷனா கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு வரேன்னு சொன்னா தானே”, என்றான்.
“பிள்ளை இப்படி இருக்கும் போது இப்ப அந்த பொண்ணு ட்ட பேசுறது ரொம்ப முக்கியமா”, என்றார்.
“அந்த பொண்ணு இன்னைக்கு யூ எஸ் போகுதுமா, அவங்க வொர்க் விஷயமா போகுது, இப்போ தம்பி நல்லா இருந்திருந்தால், இன்னைக்கு அனுப்ப போயிருப்பா, ஆனால் அனுப்ப போகல., அந்த பொண்ணுக்கு யாரும் கிடையாது மா.,
தனியா இருக்குது., சோ இவ இந்த மாதிரி ஏதாவது கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தா., அந்த பொண்ணு கிளம்பும் போது கொஞ்சம் சந்தோஷமா கிளம்புவாங்க, அதுக்காக பேசுறா., இது என்னம்மா நீங்க இப்படி எல்லாம் கேக்குறீங்க”, என்று சொன்னான்.
அதற்கு திவ்யாவின் மாமியாரோ, “என்னடா பேசுற, அதுக்காக பிள்ளை உடம்பு சரி இல்லாம இருக்கும் போதுமா, போய் பேசனும்”, என்றார்.
“அப்படி சொல்லாதீங்கம்மா, அந்த பொண்ண பத்தி தெரிஞ்சா நீங்களே இப்படி சொல்ல மாட்டீங்க”, என்று சொன்னவன் தர்ஷனாவை பற்றி அவன் அம்மாவிடம் சொல்லி தொடங்கினான்.
வசதியான குடும்பம்னா, சாமானிய மக்கள் அந்த குடும்பத்து பக்கத்துல கூட போக முடியாது., அந்த லெவலுக்கு வசதியான குடும்பம்.,
ஆனா அவங்க அம்மா அப்பா இரண்டு பேரும் மொத்த குடும்பத்தையும் எதிர்த்து கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க., ரெண்டு குடும்பத்துலயும் போய் தொலைங்கன்னு சொல்லி விட்டுட்டாங்க.,
நல்லவேளை கூப்பிட்டு வச்சி.,நம்ம ஊர்ல நடக்கிற மாதிரி அந்த சாகடிக்கிறது அந்த மாதிரிலாம் இல்லாம எப்படியோ போங்க அப்படின்னு சொல்லி விட்டுட்டாங்க., ஆனா என்ன சாபம் விட்டாங்களோ.,