Advertisement

              என் காதல் தோழா 13
 
இன்று விளம்பரம் சூட்டிங் நடக்கிறது அதற்க்காக கம்பெனிக்கு செல்ல விரைவாக புறப்பட்டுகொண்டிருந்தான் ரகு. ஃபைலை தேடி எடுத்து வைத்தவன். லாப்டாப் பேக்கை எடுத்து வைத்துவிட்டு கையில் வாட்சை கட்ட ட்ரெஸிங் டேபிளில் தன் கை கடிகாரத்தை தேடினான். ஆனால் அவனின் வாட்ச் அங்கு இல்லை. ஒவ்வொரு இழுப்பறையிலும் அவன் தேடி பார்க்க அவனின் வாட்ச் மட்டும் கிடைக்கவே இல்லை. அப்பொழுது தான் ஹேத்து அவனுக்கு காஃபியை எடுத்துகொண்டு வந்தாள்.
“காஃபி.. ரகு..” அவனுக்கு அழைப்பு விடுத்துவிட்டு அவளின் காஃபியை எடுத்துகொண்டு பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள். அவன் தேடுவதை கண்டாலும், அவனாக சொல்லும் வரையில் நாம் செல்ல கூடாது என அவள் மனதில் நினைக்க. ஒரு கட்டத்தில் அவனே ஹேத்துவை அழைக்க ஆரம்பித்தான்.
“என் வாட்ச் பார்த்தியா ஹேத்து..”
“இல்லையே ஏன்.. எப்பவும் ட்ரெஸிங் டேபிளில் தானே வைத்திருப்பீர்கள் ரகு. அங்கு இல்லையா உங்கள் வாட்ச்?” 
“இங்க இல்லை அதான் உன்னிடம் கேட்டேன் ஹேத்து. எனக்கு தேடி எடுத்துகொடுக்க முடியுமா?” அவளிடம் கோரிக்கை வைக்க.
போனால் போகிறது அவனாக வந்து தானே உதவி கேட்கிறான் என்று பெரிய மனதாக அவளும் அவனின் வாட்சை தேட ஆரம்பித்தும் அவளுக்கும் ரகுவின் கை கடிகாரம் கிடைக்கவில்லை.
“சரி அந்த வாட்ச் இல்லையென்றால் நீங்கள் சேகரித்த கலென்ஷனில் ஒரு வாட்சை எடுத்து கட்டலாமே.”
“விளையாடதே ஹேத்து அந்த வாட்ச் எனக்கு லக்கி சாம்ப். இன்னைக்கு விளம்பர சூட் இருக்கு, அதுக்காக அதை தான் கட்டிட்டு போகனும் தேடிட்டு இருக்கேன்.” ரகு ஒவ்வொரு பக்கமாக தேடிகொண்டே ஹேத்துவிற்க்கு பதில் சொன்னான்.
ஹேத்துவோ அவனின் கார் ஷோரூம் சூட் என்றதும் அவனுக்காக தேடினாள். கடைசியாக வாட்ச் ஹேத்துவின் கண்ணுக்கு சிக்கியது. ட்ரெஸிங் டேபிளின் அடியில் கிடந்தது அதை அவன் கவனிக்கவில்லை.
“இதோ இருக்கு ரகு..” என்று தன் கையில் ரகுவின் வாட்சை அவனிடம் காட்டியபடி ரகுவை அழைத்தாள். வாட்ச் கிடைத்த சந்தோஷத்தில் ஹேத்துவிடம் இருந்து வாட்சை வாங்கிகொண்டு மகிழ்ச்சியில் அவளை கட்டியணைத்து, “தாங்க் யூ சோ மச் ஹேத்து.” அவன் எளிதாக சொல்லிவிட்டான், ஆனால் அவளுக்கு தான் அவனின் திடீர் அணைப்பில் அதிர்ந்து போனாள்.
இதையெல்லாம் ரகுவின் அறையை நோட்டமிட்டபடி அங்குமிங்கும் அழைந்த ஷனாவின் கண்ணுக்கு பட்டது. ஏன்னென்றால் இது அனைத்து அவளின் திருவிளையாடல் தானே. ரகுவை பற்றி அவளுக்கு தெரியாததா.. சிறு வயதில் இருந்து ரகுவின் நடவடிக்கையை அறிந்தவள் ஷனா மட்டுமே. அவனின் ஒரு பொருள் காணாமல் போய் திரும்ப கிடைத்தால் அவனின் செய்கை கட்டியணைப்பது தான். அதனால் தான் ஷனா ஹேத்து சமையல் அறைக்கும், ரகு குளியல் அறைக்கும் செல்வதை கவனித்து வாட்சை ஒளித்து வைத்துவிட்டு வந்தாள்.
முதல் திட்டமே அமோகமாக வெற்றியடைந்ததை ஷனாவிற்க்கு சந்தோஷமே. ஆனால் ஹேத்துவுக்கு தான் அவனின் திடீர் அணைப்பு அதிர்சியாக இருந்தது. அவன் கம்பெனிக்கு கிளம்பும் வரையில் அவனை முறைத்தபடியே இருந்தாள் ஹேத்து. ரகுவோ முதல் விளம்பர சூட் நன்றாக அமைய வேண்டும் என நினைத்துகொண்டு இருந்தவன், ஹேத்துவின் முறைப்பை கவனிக்கவில்லை.
“நல்ல யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தீங்களா மிஸஸ். விஜய்.” தன் முன் அமர்ந்திருந்த சரண்யாவை தன் கேள்விகளால் துளைத்தெடுத்துகொண்டிருந்தார் மகப்பேறு மருத்துவர். கருவை கலைக்க வேண்டும் என வந்திருந்த விஜயும், சரண்யாவையும் மாறி மாறி பார்த்துகொண்டே சரண்யாவின் முன் இந்த கேள்வியை கேட்டார். தாய்மை அடையாமல் தவித்த பெண்களை எத்தனை பேர் பார்த்திருப்பார், ஆனால் குழந்தை கிடைத்தும் இந்த பெண் ஏன் கருவை கலைக்க வேண்டும் என வந்திருக்கிறாள் என குழப்பமாக் பார்த்தவர் கண்கள், அருகில் சரண்யாவின் கணவனான விஜயின் மீது சந்தேக பார்வையாய் விழுந்தது.
“நல்லா யோசித்து தான் டாக்டர் இந்த முடிவை எடுத்திருகோம். இப்போதைக்கு எங்களுக்கு குழந்தை வேண்டாம்.” கண்ணீரை மருத்துவர் முன் காட்டாமல் அடக்கியபடி பேசிய சரண்யாவை பார்த்தவர் இதற்க்கு மேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என அவளை செக் செய்ய அழைத்து சென்றார்.
அரைமணி நேரம் கடந்து அவளை அழைத்து வந்தவர். இருவரிடமும், “குழந்தையை இப்போ கலைக்க முடியாது அப்படியே கலைத்தால் சரண்யாவோட உடம்பு பாதிக்கப்டும். அவங்களால நார்மலா வேலை செய்ய முடியாம போகும். முக்கியமா அவங்களோட கர்ப்பபை பாதிப்பாகும். அதனால் இந்த மெடிஷன் ஒரு வாரத்துக்கு எழுதி தரேன். இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடுங்க. அடுத்து குழந்தையை அபார்ட் பண்ணறதை பற்றி பார்க்கலாம். அவங்க ஹெல்த் நல்லா இருந்தா தான் குழந்தையை கலைக்க முடியும் உங்களுக்கு புரியும் நினைக்குறேன் விஜய்.” மருத்துவர் விஜயிடம் அவனுக்கு புரிவது போல் சொல்ல.
“ஓகே டாக்டர் அவளோட ஹெல்த் முதல சரியாகட்டும் அப்புறம் பார்த்துகலாம்.” மருத்துவரிடம் இருந்து விடைபெற்றுகொண்டு இருவரும் வெளியேறினர். விஜய் மருந்து வாங்க செல்ல, சரண்யாவோ காரில் அமர்ந்து இலக்கில்லாமல் வானத்தை வெறித்தவள் நேற்று நடந்ததை நினைவு கூர்ந்தால்.
“எனக்கு நீ மட்டும் தான் வேணும் சரண்யா.. நமக்கு நடுவில குழந்தை வந்தா என்னை மறந்துட்டு குழந்தைய கவனிக்க ஆரம்பிச்சிடுவ. உன் மடியில என்னை தவிர யாருக்கும் இடம் இல்லை, அது நம்ம குழந்தையா இருந்தாலும். அம்மா, அப்பா இல்லாம வளர்ந்த எனக்கு இப்போ ரொம்ப நெருக்கமா இருக்குறது நீ ஒருத்தி தான். இப்போவும் குழந்தை வந்துட்டா அதுக்காகவே நீ நேரம் ஒதுக்குவ, அப்போ நான் எங்க போவேன்.”
“நம்ம குழந்தைங்க.. உங்க உயிராலையும் என் உயிராலையும் சேர்ந்து உருவான குழந்தைங்க. அதை போய் கலை..” அவளால் சாதாரணமாக கூட குழந்தையின் கலைப்பை சொல்ல முடியவில்லை. இதில் எங்கு குழந்தையை கலைக்க சம்மதம் சொல்ல போகிறாள்.
“ஆனா இப்போதைக்கு குழந்தை வேண்டாம் கொஞ்சம் நாள், வருஷம் போகட்டும். அடுத்து குழந்தை பெத்துகெல்லாம். நமக்கு வயசும், வாழ்க்கையும் நீண்டு இருக்கு சரண்யா.”
“ஆனால் எதிர்பார்க்குறப்போ குழந்தை கிடைக்காதுங்க. எதிர்பார்க்கமால் கிடைக்கிறது தாங்க குழந்தை, வரம்ங்க. அதை உங்களால புரிந்துகொள்ள முடியவில்லையா”.
“அப்போ நீயும் என்னை மறந்திருவ.. குழந்தை உன் வயிற்றில் தான் வளருது. இன்னும் நம்ம கையில கிடைக்கலை.. உன் பிடியில நீ நிக்குற என் மனசை கூட உன்னால புரிந்துகொள்ள முடியலை. அப்போ உனக்கு குழந்தை தான் முக்கியம், நான் இல்லைல. சரி குழந்தை பெத்துகலாம், ஆனா நான் உன்னைவிட்டு விலகிடுவேன்.” அவன் சொல்ல
“என்னங்க… இது நம்ம குழந்தைங்க.. இதுக்காக எத்தனை பேர் தவம் இருக்குறாங்கனு தெரியுமா? உங்களை விட்டு நான் விலகி இருக்க முடியாதுங்க. நீங்களும் என்னைவிட்டு விலகி இருக்க முடியாதுங்க.”  அவனின் காதலே அவள் தானே.
“இப்போவும் எனக்காக குழந்தையை கலைக்க சம்மதம் சொல்ல முடியலைல.” அவன் கோவமாக் சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல, சரண்யாவோ அழுது கரைந்தாள்.
விடிய விடியா அழுது கரைந்தவளை அவன் தான் தாங்கிகொண்டு அவர்களின் அறைக்கு சென்று, அவளை படுக்க வைத்தான். விடியலில் அவனின் முன் வந்தமர்ந்தவள், “எந்த ஹாஸ்பிட்டல் போகலாம்னு சொல்லுங்க நான் ரெடியா இருக்கேன். எனக்கு குழந்தையைவிட நீங்க தான் முக்கியம்.” என சொல்லிவிட்டு அவள் செல்லிவிட்டு சென்றாள்.
வழிநெடுக்கிலும் இன்னும் கொஞ்சம் நேரம் தான் அதன் பின் வலியில் நான் துடிக்க, என் குழந்தையும் துடிதுடித்து இறந்து போகும். இதற்க்கு தான் எனக்கு குழந்தை கொடுத்தியா கடவுளே. என அவள் வேண்டாத தெய்வம் இல்லை, மருத்துவமனை நெருங்க நெருங்க அவள் தன் வயிற்றில் குழந்தையை ஒவ்வொரு முறையும் தடவி கொடுக்க, இறுக்கி பிடித்துக்கொள்ள என அவள் குழந்தையை காப்பாற்றுவது போல் செய்துகொண்டிருந்தாள். மருத்துவர் சொன்ன பின்பே தான் குழந்தை என்னைவிட்டு இன்று போகவில்லை என நிம்மதிகொண்டாள்.
காரில் அமைதியாக வந்தவளை பார்த்தவன், ரோட்டின் ஓரம் நிறுத்திவிட்டு, அவளிடம் திரும்பினான், “சரண்யா, ஏன் அமைதியாக இருக்க.. இப்போதைக்கு குழந்தை பெத்துக்க வேண்டாம் தான் சொன்னேன். வாழ்க்கை முழுசும் குழந்தையே வேண்டாம்னு நான் சொல்லலை. நீ இப்படியிருந்தா எனக்கு தான் கவலையா இருக்கு.” சரண்யா அமைதியாக இருப்பதை பார்த்து அவன் பேச.
சரண்யாவோ அவனின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமல் ரோட்டை கவனித்தவளின் விழியில் ஒரு காட்சி விழுந்தது. “பிச்சை எடுப்பவள் தன் குழந்தையை வெயில் படாமல் இருக்க, துணியை போர்த்திகொண்டே பிச்சை எடுப்பதை பார்த்தவள் விழியில் கண்ணீர் பொங்கியது.” அந்த பிச்சை எடுக்கும் தாயைவிட நான் கேவலமாகி போனேன்னே. 
“சரண்யா அழுகாதம்மா..” விஜய் ஆதரவாக அணைத்துகொள்ள, அவளோ அவனின் நெஞ்சில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுது கரைந்தாள்.
”சூட் ரொம்ப சூப்பரா இருக்குல ரகு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” க்ருஷ்ணவ் சொல்ல
”ஆமா, க்ருஷ்.. எனக்குமே ரொம்ப பிடிச்சிருந்தது. நான் கூட சொதப்பிடுவோமோ பயந்துட்டேன்.”
“நோ நோ.. ரகு என் லக்கி சாம்ப் இருக்குற வரைக்கும் எந்த வேலையும் சொதப்பாது.”
“உங்களூக்கு லக்கி சாம்ப் இருக்கா க்ருஷ்..”
“அப்போ உங்களுக்குமா? சூப்பர்… என் லக்கி சாம்ப் இந்த மோதிரம்.”
”என்னோடது வாட்ச்.. ரொம்ப ஸ்பெஷல் நாள்க்கு மட்டும் தான் இந்த வாட்ச் கட்டுவேன். இன்னை தொலைந்து போக இருந்தது நல்ல வேளை என் மனைவி தான் தேடிகொடுத்தாள்.” ரகு சொல்ல,
”அப்போ உங்க மனைவியோட முகம் தான் உங்க லக்கி சாம்ப். அவங்களால கிடைச்ச இந்த வாட்சும், அவங்களும் தான் உங்களுக்கு இனி லக்கி சாம்ப்.” என போகிற போக்கில் க்ருஷ் சொல்லிவிட்டு செல்ல, அப்பொழுது தான் ஹேத்துவின் முகம் நினைவு வந்தது.
இன்று காலையில் அவள் எழுப்பிவிட்டு தான் அவன் எழுந்ததே. அவள் முகத்தில் தான் அவன் விழித்ததே.. அவள் தேடி கண்டுபிடித்த வாட்சும் கூட. ஆனால் ஏன் என்னை பார்த்து முறைத்துகொண்டே இருந்தாள் என இப்போது தான் யோசித்தான். 
“ரகு இன்னைக்கு நாம தேடினா கிடைக்குமா அட்ரெஸ்.” மூன்று நாட்களாக இருவரும் ஒவ்வொரு திசையில் க்ருஷின் காதலியை தேட ஆனால் கிடைக்கவில்லை. ஒருவரிடம் ரகு தான் அட்ரெஸ் கேட்டு இருந்தான். அதனால் க்ருஷூ அதைப்பற்றி ரகுவிடம் கேட்க.
“கண்டிப்பா கிடைக்கும் க்ருஷ்..” 
“ரகு அடுத்து எப்போ விளம்பரத்தையும், கார் ஷோரூமை ஓபன் பண்ணலாம்.”
‘’க்ருஷ்..  வர்ர வெள்ளிகிழமை நாம் ஒபனிங் டே வச்சிரலாம். அப்படியே அன்னைக்கே விளம்பரத்தை வெளியிடலாம். அன்னைக்கு இரவு விருந்துக்கு முக்கியமான பிஸ்னெஸ் பார்ட்னர்ஸ், ஃபேமிலிஸ் இன்வைட் பண்ணி நாம விருந்துகொடுக்கலாம்.”
”ஓகே இதையெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க. அதுவரைக்கு என் காதலிய நான் தேடி கண்டிப்பிடிச்சி இந்த விருந்துக்கு அழைச்சிட்டும் வந்திரேன். உங்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லையே ரகு.”
“ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்லை க்ருஷ்.. நீங்க தேடுங்க மற்ற வேலையெல்லாம் நான் பார்த்துகிறேன்.” ரகு அனைத்து வேலைகளையும் அவன் வசம் வைத்துகொள்ள. க்ருஷ் மீண்டும் அந்த கோவிலுக்கு சென்றான் ஹேத்துவை பார்ப்பதற்க்கு.
அஞ்சலியோ ரகுவின் கார் ஷோரூமை கண்டறிந்து அவனை தேடி அவனின் கம்பெனிக்கே வந்துவிட்டாள்.
ஷனா சொல்லியதை கேட்ட கிஷோர், “உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா.. வாட்ச ஒளிச்சு வைத்து விளையாடுற நேரமா அது. ஒரு சமயம் ரகுக்கு கோவம் வந்து ஹேத்துவ திட்டிருந்தா என்ன செய்திருப்ப. ஒழுங்க நான் சொன்ன மாதிரி நீ செய்திருக்காலமே.”
“அப்படி எல்லாம் ஒன்னு நடக்கலை.. எல்லாமே சுபம் தான். ரகுவ பற்றி உனக்கு தான் தெரியலை.” என அவனிடம் சிறு வயது முதல் ரகுவின் செயலை கூறியதை கேட்ட பின் தான் அவசரபட்டு திட்டிவிட்டோமோ என அவனுக்கு தோன்றியது.
“சரி.. சரி.. அடுத்த என்ன செய்யலாம்.” அவனே வழிய வந்து அவளிடம் கேட்க.
“இனி சொல்லுறது இல்லை நானே செயல்ல இறங்குறேன்.” வீரமாக பேசிவிட்டு என்ன செய்யலாம் அவளே யோசிக்க ஆரம்பித்தாள்.
அஞ்சலியை நேரில் காண்கையில் ரகுவின் மனம் எதை நினைக்கும். ஹேத்துவிற்க்கு செய்யும் துரோகமா? இல்லை பழைய காதலை நினைவு கூறுமா?
அஞ்சலி ரகுவை பிரிந்து செல்வாளா? இல்லை ஹேத்துவிடம் இருந்து ரகுவை பிரித்து செல்வாளா அவளுடன்?
 
                                            தொடரும்……………………….

Advertisement