Advertisement

                 காதல் தோழா 12
தாய்மையின் சோர்வால் சரண்யா ஓய்விலேயே இருந்தாள். அதனால் விஜயை அவள் கவனிக்க முடியவில்லை. அவனும் அவளின் சோர்வால் முடிந்த அளவு அவனே அனைத்து வேலையையும் முடித்தாலும், இறுதியில் அவளுக்கு சேர்த்து உணவை ஊட்டிவிட்டே அவன் செல்வான். அப்படியிருக்க விஜயின் இந்த மாற்றத்தை அவள் அறியவில்லை.
கம்பெனியில் நடந்தையே எண்ணியிருந்தவன் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் குழம்பி விட்டது. சிறு வயது முதல் அவனும் தாயின் மடிக்கும், தந்தையின் அரவணைப்புக்கு ஏங்கியவன் தானே. கிடைத்தது அவனின் அத்தையின் மடியும், மாமாவின் அரவணைப்பும் கிடைத்தது. ஆனால் அது வளரும் போது மாறிவிட்டது, அதன் பின் சரண்யா உடனான அரவணைப்பும், இரவில் மடி தாங்கும் விதமும் அவன் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துவிட்டது. ஆனால் குழந்தை வந்தால் அவளிடம் எனக்கான பாசம் போய்விடுமா? இல்லை என் மீதான காதல் போய்விடுமா? அவர்கள் சொன்னது போல் குழந்தைக்கு தானே முதல் இடம் கொடுப்பாள். அப்போ நான் அவளின் கண்ணுக்கு தெரியமாட்டேனா? அவன் பலவாறு யோசிக்க.
“என்னங்க எப்போ ஆஃபிஸ்ல இருந்து வந்தீங்க. வந்த உடனே என்ன யோசனை.. என்னை எழுப்பிருக்கலாமே.” அவனின் அருகில் அமர்ந்து அவனின் தோளில் சாய்ந்தபடி பேசியவளை பார்த்தான்.
ஆஃபிஸ் விட்டு வந்ததும், அவளின் தோளில் அவன் தான் சாய்ந்துகொண்டு குறுகுறுப்பு செய்வான். அவளை சில நேரம் சீண்டிவிட்டு, கொஞ்சம் கொஞ்சிவிட்டு பின் தான் அவளை எழ செய்வான். ஆனால் இன்று அவள் தோள் சாய்ந்தவுடன் அவனின் குழப்பம் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பம் ஆனது. 
“இன்னைக்கு உங்க பொண்ணு என்னை நல்லாவே சாப்பிடவிடலை. சாப்பிட்டது எல்லாம் வாமிட் பண்ண வச்சுட்டா. அவளுக்கு ஜூஸ் பிடிக்காது போல அதான் நீங்க போட்டு கொடுத்துட்டு போன சாத்துகுடி ஜூஸ் எல்லாம் வாமிட் பண்ணிட்டேன். இனிமே நீங்க நெட்ல வேற ஜூஸ் ட்ரை பண்ணுங்க.” என காலையில் நடந்ததை அவள் கேலியுடன் சொல்ல, அவனின் மனம் சரண்யாவை தன்னைவிட யாரும் நேசிக்க கூடாது என்றும், அவளும் என்னை தவிர யாரையும் நேசிக்க கூடாது என்ற மனநிலைக்கே வந்துவிட்டான்.
பின் ஆஃபிஸில் சிலர் பேசிக்கொண்டதையும் அவன் கேட்க நேர்ந்தது. “குழந்தைங்களை பெத்துகிறது தப்பு இல்லைடா.. குழந்தைங்க இருந்தா மனைவிகூட ரொமான்ஸ் கூட பண்ண முடியாம போயிரும். என் குழந்தைய வச்சிட்டு நான் பட்டபாடு இருக்கே கொஞ்சம் நஞ்சம் இல்லை. குழந்தை எப்போ தூங்கும், எப்போ முழிக்கனும் பயந்துக்கிட்டெ என் மனைவியை கொஞ்ச வேண்டியாத இருக்கு. அதுக்கு தான் என் அம்மா, அப்பாகிட்ட இரண்டு வாரத்துக்கு என் குழந்தையை விட்டு வந்திருக்கேன், இப்போ தான் நானும், என் மனைவியும் ”பார்த்து பேசிக்க” முடியுது அவன் வேறொரு அர்த்ததில் சொல்லிகொண்டிருந்தான்.
”இப்போ குழந்தையே பெத்துக்க வேண்டாம்னு நீ சொல்லிறியா?” கேட்டுகொண்டிருந்தவன் அவனிடமே கேட்க.
“பெத்துக்கலாம், ஆனா உன் மனைவிய உன் பிள்ளைக்கே நீ விட்டு கொடுத்திரனும். அதாவது உன் மனைவியை மறந்திரனும் எந்த சந்தோஷமும் இருக்காது.” அவன் சொல்லிகொண்டே சென்றான்.
”என்னங்க.. ஏன் வந்ததில இருந்து ஒரு மாதிரியே இருக்கீங்க. ஆஃபிஸ்ல எதாவது டென்ஷனா.. இல்லை வேறெதும் பிரச்சனையா.” அவள் கேட்க, அவளின் கேள்விக்கு அவன் சொல்லிய பதில் தான் அவளை அதிர்ச்சியாக்கியது. தன் கணவனா அப்படி சொன்னது.. அவனையே அதிர்ச்சியாக பார்த்துகொண்டிருந்தவளை விட்டு விலகி எழுந்தான்.
”முதல அந்த கூலிங் க்ளாஸ் கழட்டு.. பார்க்க பார்க்க பழசு தான் நியாபகம் வருது.” ஷனாவின் முன் கூலிங் க்ளாஸூடன் அமர்ந்திருந்த கிஷோரை கழட்ட சொல்லிக்கொண்டிருந்தாள்.
“சரி நான் சொன்ன மாதிரியே தான் நடந்திருக்கு. என்ன இடையில இன்னொருத்தன் புலம்பினதையும் நீ கேட்டுருக்க அவ்வளவு தான். அவனை அப்புறம் பார்த்துகலாம். இப்போ உன் மாமா பையன் வாழ்க்கையும், என் மாமா பொண்ணு வாழ்க்கையும் தான் முக்கியம். என்ன செய்யலாம் யோசித்தாயா?” 
“என்ன யோசிக்குறது அவங்களுக்குள்ளேயே வாழ்க்கைய வாழாம இருக்காங்க. இதுல நாமா எப்படி நுழைய முடியும்.”
“அதுவும் சரி தான்.. ஆனா நாமா நுழைய வேண்டாம். அவங்களையே தொடங்க வைக்கலாம் அதை நீ தான் முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்.” அவன், ஷனாவை வைத்து தொடங்க திட்டம் போட்டிருந்தான்.
“நீ விவரம் தான் என்னையே மாட்டிவிடலாம்னு பார்க்குற. ஏன் நீ செய்ய வேண்டியது தான.”
“சரி இரண்டு பேரும் ஒன்னாவே தொடங்கலாம் ஆனா நாமா தான் ப்ளான் பண்ணுனோம்னு யாருக்கும் தெரிய கூடாது.” 
“ம்ம் சரி என்ன ப்ளான் சொல்லு.” அவள் கேட்க, கிஷோர் திட்டத்தை விளக்கினான்.
“உனக்குள்ள இவ்வளவு மூளை இருக்கா.. புத்திசாலி தான். அப்படியே ஆடர் செய்த கோல் காஃபிக்கு பில் செட்டில் பண்ணிட்டு கிளம்பு.” அவனுக்கு முன் அவள் புறப்பட்டுவிட்டாள்.
“புத்திசாலி தான் நீயும்..” அவனுள் சிரித்துகொண்டே இருவருக்கும் ஆடர் செய்த காஃபிக்கு அவனே பில் செட்டில் செய்துவிட்டு சென்றான்.
உடல் முழுவதும் சோர்வினால் எழு முடியாமல் படுத்திருந்தவள். நேரம் என்னவென்று பார்க்க தனது போனை தேடி பார்த்தவள் விழி விரிந்து நின்றது ஏன்னென்றல் நேரம் மாலை ஆறு என காட்டியது. பட்டென்று எழுந்தவள் ஊசிப்போட்ட கை சின்ன வலியை கொடுக்க அதை தாங்கிகொண்டே எழுந்து முகத்தை கழுவி, கூந்தலையும், உடையையும் சரி செய்துகொண்டு கீழ் இறங்கி சென்றாள்.
“என்னம்மா இப்போ உடம்பு எப்படி இருக்கு.” ரகுவின் தந்தை கேட்க.
“பரவாயில்லை மாமா.. சோர்வு தான் கொஞ்சம் அதிகமா இருக்கு.” அவர் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு சமையல் அறைக்கு செல்ல இருந்தவளை தடுத்தார்.
“கௌசி ஹேத்து எழுந்துட்டா.. சூடா இஞ்சி டீ கொண்டு வா.” அவர் சொல்ல, 
“இருக்கட்டும் மாமா நானே போய் எடுத்துகிறேன் அத்தைக்கு ஏன் வீண் சிரமம்.”  அவள் மீண்டும் எழ கௌசி டீயை எடுத்துகொண்டு வெளியே வந்தார்.
“உடம்புக்கு இப்போ பரவாயில்லையாம்மா.. உட்காரும்மா.” அவளை அமர வைத்து கையில் டீயை கொடுத்தார்.
”உன் பிள்ளைக்கு கொஞ்சமாச்சு அறிவிருக்கா.. பொண்டாட்டிய கவனிக்காம கம்பெனி தான் முக்கியம் போயிட்டான். இப்படி இருக்குறதுக்கா அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தோம்.” மனைவியை கடிந்தார்.
“காலையில ஹேத்து காய்ச்சல்னு அவன் தான் என்னையும், ஹேத்துவையும் அழைச்சிட்டு மருத்துவமனைக்கு போனான். அப்படியே எங்களை வீட்டுல விட்டுட்டு கம்பெனில முக்கியமான வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன் ம்மானு சொல்லிட்டு தான் போனான். அதுக்குள்ள என் பிள்ளை மேல தான் தப்புனு சண்டை போடுறீங்க.” மகனுக்கு பரிந்துகொண்டு வந்தார்.
“பிள்ளைய சொன்னா, என்கூடவே சண்டை போடுறா பாரும்மா மருமகளே. மாமாவுக்கு நீயாவது சப்போர்ட் பண்ணும்மா.” ஹேத்துவை துணைக்கழைக்க.
“நான் எப்போவும் இரண்டு பேருக்கும் நடுவில தான் மாமா. என்னை ஆளா விட்டுறுங்க.. காய்ச்சல் வந்த பிள்ளைகிட்ட சப்போர்ட் பண்ணும்மானு கேட்காதீங்க மாமா.” பாவம் போல் முகத்தை வைத்துகொண்டு சொன்னார்.
“நான் இருக்கேன் மாமா.. உங்களுக்கு இந்த அத்தையை டிவோர்ஸ் பண்ணிட்டு உங்களுக்கு நான் பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைக்குறேன் மாமா.” அந்த இடத்திர்க்கு வந்தாள் ஷனா.
“போம்மா.. போ உன் மாமானுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வை. ஆனா என் பிள்ளைக்கு மட்டும் நீ இப்படி பேசுனது தெரிந்தா உன்னை ஒன்னும் பண்ணமாட்டான். உங்க மாமாவ தான் இந்த வீட்டவிட்டு வெளியேற்றிருவான்.” கௌசியும் பதிலுக்கு பதில் பேச
அந்த இடமே கொஞ்சம் கலகலப்பாய் மாறியது. இந்த மகிழ்ச்சிக்காக தானே வீட்டுக்கு ஒரு பெண் பிள்ளை தேவை என்பது. இருந்த மன அழுத்தம் கூட பிள்ளைகளால் சரியாகிவிடும் என்பார்கள் அது போல் தானே இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் கௌசல்யாவின் மனமோ ஹேத்துவின் வாழ்க்கையும், மகனின் வாழ்க்கையும், நினைத்து தான் பயம் கொண்டிருந்தது. வாழ்க்கையை இன்னும் ஆராம்பிக்காமல் அவர்கள் ஏன் தள்ளி இருக்க வேண்டும் என அவர் யோசித்தார்.
கௌசல்யா ஒரு பக்கம் யோசிக்க, ஷனாவும் ஹேத்துவின் முகம் பார்த்து  சம வயது பெண்ணவளாக யோசித்தாள். என்ன காரணமாக இருக்கும், காதல் தோல்வி என்றால் அவள் இந்த நேரம் சிரித்துகொண்டு இருக்கமாட்டாளே. அதை கண்டறிய நாளை முதல் கிஷோர் சொன்ன திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
“நாம பார்த்த மாடல்ல எந்த மாடல் நல்லா இருக்காங்கனு முடிவு செய்தீங்களா ரகு. உங்களோட ஒப்னியன் என்னனு சொல்லுங்க அப்படியே என் கருத்தையும் நான் சொல்லுறேன்.” கார் விளம்பரத்திற்க்கு அழகிய பெண் மாடல்களை இன்று தேர்வு செய்துகொண்டிருந்தனர்.
“எனக்கு செக்ண்ட் ஆப்ஷன் பிடிச்சிருக்கு கிருஷ்.. அவங்க நம்ம கார் ஷோ ரூம் விளம்பரத்துக்கு நல்லா இருப்பாங்க.” ரகு தன் கருத்தை சொல்ல
“எனக்கும் தான்.. அந்த செக்ண்ட் ஆப்ஷன் பிடிச்சிருக்கு. இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்குறோம். நம்ம கருத்துக்களும் ஒத்து போகுதுல ரகு.” 
“ஆமா… அப்படியே கார் விளம்பரத்தை எப்போ தொடங்கலாம் சொல்லிடுங்க. அவங்க விளம்பரம் செய்து தந்த உடனே நம்ம கார் ஷோ ரூம் ஓபனிங்க்ல விளம்பரம் செய்ய சரியா இருக்கும்.”
“அதை நாளைக்கு பார்த்துகலாம் ரகு எனக்கு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா.” 
“சொல்லுங்க என்ன ஹெல்ப்.”
“இங்க ஒரு பொண்ணை கண்டுபிடிக்கனும்.. அவளை பற்றி எனக்கு அவ்வளவா தெரியாது. ஆனா நாங்க பழகியது” என அவன் தொடங்கி ரகுவிற்க்கு புரியும்படி அவனின் கதையை சுருங்க சொல்லி முடித்தான்.
”இந்த சென்னை சிட்டில எப்படி ஒரு பொண்ணை தேடுறது க்ருஷ். சரி நானும் தேடுறேன்.. நீங்களும் தேடுங்க இரண்டு பேரா பிரிந்து தேடுனா அவங்க கிடைப்பாங்க.” ரகு ஐடியா கொடுக்க.
“ஓகே.. அந்த பொண்ணை பற்றிய தகவல் நாளைக்கு சொல்லுறேன் ரகு.” என இருவரும் கம்பெனியைவிட்டு கிளம்பினர்.
தன் கணவனா அப்படி செய்ய சொன்னது.. அவனின் காதலால் உருவாகிய கருவை எப்படி கலைக்க சொல்லுவான். விஜய் மாறியதற்க்கான காரணம் தான் என்ன? அவன் விட்டு சென்ற இடத்திலே அமர்ந்திருந்தாள் சரண்யா.
“நமக்கு இந்த குழந்தை வேண்டாம் சரண்யா.” அவள் சந்தோஷமாக குழந்தையை பற்றி அவனிடம் சொல்லிகொண்டிருக்க. அவனோ அவளுக்கு அதிர்ச்சியை வைத்தான்.
“என்ன.. என்ன.. சொன்னீங்க.” அவள் திக்க
“உன் வயிற்றில் வளரும் குழந்தை நமக்கு வேண்டாம். நாளைக்கே மருத்துவர் பார்த்து கலைச்சிரலாம்.” அவர்களின் உயிரால் வளர்ந்த குழந்தையை ஏதோ ஓவியத்தை அழிப்பது போல அவன் சுலபமாக சொல்லிவிட்டான். ஆனால் அதை தாங்கி வளர்ப்பவள் பெண்ணவள் தானே அதை ஏன் விஜய் மறந்து போனான்.
தாய், தந்தையை இழந்து பெரியாம்மா, பெரியப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தாலும் பெற்ற தாய், தந்தைக்கு ஈடாகுமா? ஆனால் அவனும், அவளும் வரைந்த சித்திரத்தை இப்படி அவனே அழிக்க நினைப்பது நியாயமா? ஏன் இந்த மாற்றம் அவனுள். 
குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் தாய்மார்களுக்கு மத்தியில் நாற்ப்பது நாள் கருவை அவன் எப்படி கலைக்க சொல்லலாம். இது தான் அவனின் காதலா? இது தான் அவனின் பாசமா? இதில் இருந்து நான் எப்படி என் குழந்தையை காப்பது என அவள் நினைக்க. 
மீண்டும் அவளின் அருகில் அமர்ந்து அவள் மடியில் படுத்துகொண்டு அவன் மனதில் நினைத்ததை அவளிடமே கூறினான். அதை கேட்டு அவள் மீண்டும் அதிர்ச்சியானாள்.
                                               தொடரும்……………

Advertisement