Advertisement

              என் காதல் தோழா 14
ரெஸ்ட்ராண்டின் ஒரு மூளையில் உள்ள டேபிளில் எதிர் எதிராக அமர்ந்திருந்தனர் அஞ்சலியும், ரகுவும். அந்த ரெஸ்ட்ராண்டிற்க்கு வந்தி அரைமணி நேரம் ஆகிறது இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டிருப்பதே பெரிய விஷயமாக கருதினர். அஞ்சலி ரகுவிடம் கேட்ப்பதற்க்கு ஆயிரம் கேள்விகளை மனதில் வைத்திருந்தாலும், அவனை பார்த்த பின் வார்த்தைகூட நாவில் எழுவில்லை. ரகுவோ என்ன பேசுவது என தெரியாமலும், எதிர் இருந்து ஆரம்பிக்க என புரியாமலும் அமர்ந்திருந்தான்.
“என்னை மறந்துட்டு எப்படி ரகு கல்யாணம் செய்துக்க மனசு வந்தது உனக்கு.” அஞ்சலியே ஆரம்பித்தாள்.
“அதான் நீயே சொல்லிட்டயே அஞ்சலி.. உன் மறந்துட்டு தான் என் அம்மா, அப்பா பார்த்த பொண்ணை கல்யாணம் செய்துகிட்டேன்.” அவளின் கேள்வியிலேயே அவன் பதில் சொல்லிவிட, புதிய ரகுவை அவள் பார்த்தாள்.
“அப்போ நம்ம காதல்..” 
“முடிந்த ஒன்றை திரும்பி பார்க்கும் பழக்கம் எனக்கில்லை அஞ்சலி.”
“ரகு பழிவாங்குற நேரம் இல்லை.. ஐம் ரியலி லவ் போர் யூ ரகு.” அவள் காதலால் பேச,
“பட் ஐம் நாட் லவ் நவ்..” அவளின் கண்களை பார்த்து தீர்க்கமாக சொல்ல, அஞ்சலிக்கு காதலின் வலியை கொடுக்க ஆரம்பித்தான் ரகு.
“ரகு.. உன்னை அதிகமாக காதலிக்கிறேன்.. அது உனக்குமே தெரியும். வீட்டுல பார்த்த பொண்ணை கல்யாணம் செய்து அவகூட வாழுற வாழ்க்கையில நீ என்னை தான் அதிகம் தேடுவ. வேண்டாம் ரகு அந்த பொண்ணு உனக்கு வேண்டாம், இப்படியே என்கூட வந்திரு நாம எங்காவது போய் வாழலாம் நம்ம காதலோட.” அஞ்சலி ரகுவை இழந்துவிடுமோ என பயத்தில் இன்னொருவளின் கணவனை காதல் சொல்லி அழைக்க.
“அசிங்கம் அஞ்சலி.. இன்னொரு பொண்ணோட கணவன் நான். என்னை போய் அவளைவிட்டு வரசொல்லி, உன்கூட வாழலாம் சொல்லுற. இது அசிங்க அஞ்சலி, காதலிச்சே உன்னை அதிகமா காதலிச்சேன். ஆனா எப்போ இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டிட்டேனோ அப்போவே நான் அவளோட கணவனா வாழ ஆரம்பிச்சுட்டேன்.” அவன் உளறமாற சொல்ல, அதை கேட்ட அஞ்சலி தான் துடித்தாள்.
”நோ… நோ.. ரகு நீ என் ரகு.. எனக்கு மட்டும் தான் சொந்தம். இன்னொரு பொண்ணுக்கு உன்னை எப்பவும் விட்டு தரமாட்டேன்.” அவள் கத்த, அங்கிருந்தவர்கள் அவ்விருவரையும் வேடிக்கை பார்த்தனர்.
“அஞ்சலி சீன் க்ரியேட் பண்ணாம உட்காரு.. நீ என்னை வந்து பார்த்ததும் உன் பின்னாடியே வந்துருவேன் நீ நினைச்சேனா சாரி அதுக்கு நான் பொறுப்பில்லை. உன்னை ஒரு காலத்துல காதலிச்சவன் தான் நான். எப்போ இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில நான் நுழைச்சுட்டேனோ அப்போவே உன்னை வெளியேத்திட்டேன். இனி என்னை தேடி நீ வராத அஞ்சலி.” அவன் சுலபமாக சொல்லிவிட்டு சென்றாலும், முன்னாள் காதலியிடம் இப்படி பேசிருக்க வேண்டாம் என மனம் துடித்தது. ஆனால் அப்படி பேசினால் தான் அவள் என்னை மறந்து போவாள். அவள் மனதில் நான் காதலில் ஏமாற்றியவன் என நினைத்துகொண்டாலும், அவள் வாழ்வில் இனியாவது நல்லது நடக்கட்டும். என கடையோரம் கண்ணீரை தட்டிவிட்டு சென்றான் ரகு.
கோவிலில் இரண்டு மணி நேரம் காத்திருந்தவனுக்கு எரிச்சலும், சலிப்பும் தான் வந்தது. ஹேத்துவை தேடி அவளை முதல் முதலில் பார்த்த கோவிலுக்கு வந்திருந்த க்ருஷ் அவளை காணமல் தவித்து போனான். இப்பொழுது வருவாள், அப்பொழுது வருவாள் என அவன் காத்திருக்க, ஹேத்துவின் வருகை அந்த கோவிலில் இல்லை என அவனுக்கு தெரியவில்லை. வெகு நேரம் சென்ற பின்பே அந்த கோவிலைவிட்டு சென்றான் க்ருஷ்.
”ஹேத்து ரகு உன்னை நல்லபடியா பார்த்துகிறனா ம்மா.” அவர் வேறுவிதமாக கேட்க, ஹேத்து புரியாமல், 
“என்னை நல்லாவே பார்த்துகிறார் அத்தை..” அவள் சிரித்துகொண்டே சொன்னாள், குறிப்பாக வெட்க்கம் இல்லை அவளது முகத்தில் அதை கவனித்துவிட்டார்.
“ஹேத்து உங்களுக்குள்ள வேற எந்த பிரச்சனையும் இல்லையே.” மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்க.
“என்ன பிரச்சனை இருக்க போகுது த்தை..” அவளும் வெகுளியாகவே பதில் கூறினாள். ஹேத்துவை விசாரணை நடத்தும் போதே உள் நுழைந்த ரகு, அன்னையின் பேச்சை எதர்ச்சையாக கேட்க, 
“ஹேத்து எனக்கு காஃபி..” அவன், அன்னையின் சந்தேகத்திர்க்கு முற்று புள்ளி வைக்க அதுவே, தொடர் புள்ளியாக போகிறது என தெரியாமல் இருந்தான் ரகு.
மகனின் குரலில் அவர் மகிழ்ச்சியடைந்தாலும், மருத்துவர் சொல்லியது அவர் நினைவில் வந்து போனது. “போம்மா.. அவனுக்கு காஃபி எடுத்து போ, அப்படியே அவனுக்கு தேவையானதை நீ கவனிச்சிட்டு வாம்மா.” அவர் ஹேத்துவை அனுப்பி வைக்க, அவளும் கையில் காஃபி ட்ரேயை எடுத்துகொண்டு சென்றாள்.
“என்ன கௌசி குழந்தங்க நல்லபடியா அவங்க வாழ்க்கையை வாழுறாங்கள.. வேற எந்த பிரச்சனையும் இல்லையே அவங்களுக்குள்ள.” அவர் கேட்க
”இல்லையே.. ஏன் என்னாச்சு..”
“உன் மருமகளும், மகனும் இன்னும் வாழ்க்கையே தொடங்கலை.” அவர் கௌசிக்கு திகைப்பை வைக்க.
“என்ன சொல்லுற.. புரியலை..” 
“காய்ச்சலோடு வந்த ஹேத்துவோட உடம்ப செக் செய்தப்போ எனக்கு இந்த உண்மை தெரியவந்தது. பிடிச்சி தான இரண்டு பேரும் கல்யாணம் செய்துகிட்டாங்க.”
“ஆமா..”
“அப்புறம் ஏன் அவங்க இன்னும் வாழ்க்கையை ஆரம்பிக்காம இருக்காங்க. குழந்தை பிறப்பை தள்ளி போட்டாலும், அவங்களுக்குள்ள இருக்குற தாம்பத்தியத்தை சேர்த்தே தள்ளிப்போடுவாங்களா?”
”அப்போ.. அப்போ.. அவங்க.” கௌசி அதிர்வாக கேட்க.
“இருவருமே இன்னும் தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்கலை கௌசி. என்ன ஏது இரண்டு பேருக்குள்ள நடக்கதுனு பாரு. இல்லையா, நாசூக்கா உன் மருமகள்கிட்ட கேளு. மனசுவிட்டு பேச சொல்லு அவங்களை. இப்படியே இருந்தா இரண்டு பேரும் பிரிந்துவிடுவாங்க கௌசி.”
“ம்ம்.. இனி நான் பார்த்துகிறேன்..” மருத்துவர் சொன்னதை நினைத்துகொண்டிருந்தார் கௌசல்யா.
காஃபி ட்ரேயை டீபாயில் வைத்துவிட்டு வெளியே செல்ல இருந்தவளை அவனின் குரல் தடுத்து நிறுத்தியது. “எங்க போற.. மறுபடியும் என் அம்மா கேள்வியில மாட்டிக்க போறியா.” 
‘என்ன சொல்லுறீங்க..’
“நானும், நீயும் “சந்தோஷமா” வாழுறீங்களானு என் அம்மா உன்கிட்ட இவ்வளவு நேரம் விசாரணை நடத்திட்டு இருந்தாங்க. அது தெரியாம நீயும் உளரிட்டு இருக்க.”
“அப்போ இவ்வளவு நேரம்..” அவள் பாதியில் நிறுத்த.. அவனோ, “ஆம்” என தலையசைத்தான்.
”ஹேத்து நீ வேற பையனை காதலிச்ச.. நான் வேற பொண்ணை காதலிச்சேன். ஆனா, நாம இரண்டு பேர் மனசுல இப்போ அந்த காதலிச்சவங்களை மறந்துட்டு தான் இந்த வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிருக்கோம்.”
“நான் தாலிகட்டும் போதும்  உன் மனசுல உன் காதலனை நினைச்சுட்டு தான் அதை ஏத்துகிட்டயா?” அவன் கேள்வியாக கேட்க.
‘இல்லை ரகு..’
“நீங்க உங்க காதலிய நினைச்சுட்டு தான் என் கழுத்துல தாலி கட்டுனீங்களா?”
‘இல்லைவே இல்லை ஹேத்து..’
“முதல் காதலை யாராலையும் மறக்க முடியாது. அது மாதிரி தான் நீயும், நானும்.. ஆனா அதை மறந்துட்டு தான் உன்கூட நான் வாழ ஆரம்பிக்கனும்.. நீயும்..” அவன் பாதியில் நிறுத்த.
“ட்ரை பண்ணுறேன் ரகு..”
“எதுக்கு என்னை காலையில முறைச்சுட்டே இருந்த.”
“ம்ம் திடீருனு கட்டி பிடிச்சா கோவம் வராதா?”
“என் பொருள் தொலைஞ்சி போய் கிடைச்ச சந்தோஷத்துல அப்படி நடந்துகிட்டேன். பட் சாரி.. ஹேத்து”
“ம்ம்..”
“இன்னொரு விசயமும் இருக்கு இன்னைக்கு விளம்பர சூட் நல்லபடியா நடந்து முடிந்தது. அதுவுமில்லாம உன் முகத்தை பார்த்துட்டு போன பின்னாடி தான் விளம்பரமும் சூட் பண்ணி முடிச்சோம். இனி ஒபனிங் டேல ஷோரூமையும், விளம்பரத்தையும் ஒன்னா வெளியிடுவோம். இதுக்கு காரணமே நீதான்  தாங்க்ஸ் ஹேத்து.”
“அப்படியெல்லாம் இல்லை.. உங்களோட உழைப்பு தான் இதுகெல்லாம் காரணம். நான் இல்லை.. என்கிட்ட போய் நான் தான் காரணம் சொல்லுறீங்க.”
”சொன்ன நம்பமாட்டேங்குற நீ..” அவன் சொல்வதை சிரித்துகொண்டே கேட்டுவிட்டு சென்றாள். அவளின் சிரிப்பை பார்த்தவன் மனம் இன்று அஞ்சலியை சந்தித்த நினைவுகளை நோக்கி செல்ல இருந்த ரகு தலையை உலுக்கிகொண்டு வேறு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
அஞ்சலியை சந்தித்த விபரத்தை மட்டும் அவன் சொல்லாமல் தவிர்த்தான். இப்போது சொல்லி எதற்க்கு நல்ல சூழ்நிலையை கெடுத்துகொள்ள வேண்டும் என விட்டுவிட்டான். ஏதோ அம்மாவின் கேள்வியில் இருந்து ஹேத்துவை காப்பாற்றிவிட்டாதாயிற்று.. இனி அவள் அம்மாவின் வார்த்தையில் கவனம் வைத்து தான் ஹேத்து பேசுவாள்.
வாழ்வே சூனியமானது போல சரண்யா இருக்க, விஜய் அவளின் கவலையை போக்குவதற்காக அவளிடம் அதிகம் பேச்சு கொடுத்தான். சமையல் வேலையில் அவள் பழசை மறந்தாலும், விஜயின் முகத்தை காணும் போதெல்லாம் குழந்தையின் நிலைதான் அவளுக்கு நியாபகம் வருகிறது. மருத்துவர் கொடுத்த மருத்துகளின் எண்ணிக்கையில் அவள் மனம் கனத்தது ஒவ்வொரு நாளும் குழந்தையைவிட்டு பிரிவதை எண்ணி அவள் அழுது கரைந்தாள் விஜய்க்கு தெரியாமல். 
”சரண்யா.. சரண்யா..” விஜய் அழைத்துகொண்டு வீட்டினுள் நுழைந்து அவளை தேட சரண்யாவை காணவில்லை.
”அவன் தான் உன்னை மறந்துட்டு புது மனைவியோட வாழந்துட்டு இருக்கானு சொல்லிட்டானே அப்புறம் ஏன் அவனை பத்தியே யோசிச்சுட்டு இருக்க அஞ்சலி.” தான்யா கேட்க
“அவனை நான் உன் காதலிச்சிருக்கேன்.. அப்புறம் எப்படி நான் மறக்க முடியும்.”
“தப்பு அஞ்சலி ரகு தெளிவா இருக்கான் அவனோட வாழ்க்கை அவனோட மனைவியோட தானு. நீ தான் அவனை தேடி போயி அவமானப்பட்டு வந்திருக்க.”
“எவ்வளவு அவமானப்பட்டாலும் அவன் என் ரகு தான்யா. என்னை காதல் தான்யா அவனை மறந்துட்டு நான் எப்படி வாழ்வேன்.”
“உனக்கு இன்னும் புரியவே இல்லை அஞ்சலி அவன் நிதானமா யோசிச்சு முடிவ எடுத்திருக்கான். கண்டிப்பா அவனோட மனைவிகூட வாழ்ந்துட்டு தான் இருப்பான் அஞ்சலி.” தோழி புரிந்து கொள்ள மாட்டாளா என தான்யா பேச.
ரகுவின் மீதுள்ள காதலில் அஞ்சலி பைத்தியம் போல் பேச. தான்யாவுக்கு இன்னும் என்ன நடக்க போகிறதோ என பயம் கொண்டாள். அஞ்சலியின் இச்செயலால் ரகுவின் பாதிப்பாகுமோ என தான்யா நினைக்க ஆரம்பித்தாள்.
அடுத்த இரு நாட்களில் ரகுவின் ஒவ்வொரு பொருளும் காணாமல் போக ஹேத்து தான் அவன் பொருளைதேடி கண்டுபிடித்து கொடுக்க. அவளுக்கு ரகுவின் திடீர் அணைப்பு அன்று இருந்து பழகி போனது. அஞ்சலியை நினைத்து ஹேத்துவிடம் கணவன் மனைவியாக டீல் போட்டவன் மனம் ஹேத்துவின் மீது கொஞ்சம் கொஞ்சம் சாய துவங்கியது. ஆனால் ஹேத்துவின் மனமோ என்று க்ருஷ் தன்னை தேடி வருவானோ? தன்னை பார்த்து என்ன கேள்வி கேட்ப்பானோ என பயம் கொண்டாள். அதனாலே ரகுவின் மீது அவளுக்கு எந்த சலனமும் ஏற்படவில்லை. ஆனால் ரகுவிர்க்கு துரோகம் துளியளவும் செய்ய கூடாது என அதில் உறுதியாக இருந்தாள் ஹேத்து.
”என்ன ம்மா.. மாப்பிள்ளையோட வராம நீ மட்டும் வந்திருக்க. உனக்கும், மாப்பிள்ளைக்கு எதாவது சண்டையா ம்மா சரண்யா.” பெரியப்பாவும், பெரியம்மா அவளை கவலையான முகத்துடன் காலையில் வீட்டின் வாசலில் அமர்ந்தவளை பார்த்து பதறி போய் உள்ளே அழைத்து வந்து கேட்க.
அவள் அமைதியாக இருந்தாள்.. அவர்களிடம் என்ன சொல்லுவாள். கணவன் குழந்தையை கலைக்க சொல்லியதை சொல்வாளா? இல்லை குழந்தையா? அவனா? என கேட்டதை சொல்வாளா.. இதையெல்லாம் சொன்னாள் கணவனை பிரிந்து வாழ சொல்லுவார்களா. என அவள் பயந்துகொண்டு வாயை திறக்காமல் இருந்தாள்.
                                                 தொடரும்……………

Advertisement