Advertisement

             என் காதல் தோழா 11
சரன்யா விஜயின் வாழ்க்கை தெளிந்த நீர் போல் சென்றுகொண்டிருந்தது. இருவரும் இணை பிரியா தம்பதியர்களாகவே வாழ ஆரம்பித்தனர். அவனின் ஒவ்வொரு தேவையையும் அவள் பூர்த்தி செய்ய, அவனுக்கு இன்னொரு தாயகவும் சரண்யா மாறிப்போனாள். அவன் ஆஃபீஸ்க்கு கிளம்புவதற்க்குள் அவளிடம் செய்யும் சேட்டைகள் அனைத்தும் செய்துவிட்டு தான் அவன் புறப்படுவான். அவளும் அவனின் சின்ன தேவைகளை புன்னகையுடன் சகித்துகொண்டாலும் மனதில் அவளூள் மகிழ்ச்சியே தான்.
சமையல் அறையில் கிடைக்கும் திடீர் முத்தம், அணைப்பு, சீண்டல் என வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வண்ணமையமாக இருந்தது சரண்யாவுக்கு. இரவின் மடியில் காதலர்களாக வாழ்ந்தாலும், அவளின் மடியில் தான் அவனின் இரவு தூக்கம் தொடரும். தலைகோதி அவனை உறங்க வைத்துவிட்டு அவனுடனே அவளும் உறங்கி போவாள். 
சின்ன சின்ன சந்தோஷங்களை குடும்பத்துடன் அனுபவித்தாலும்,  கணவன் மனைவி என்னும் மகிழ்ச்சி பெரிதல்லவா. அந்த மகிழ்ச்சியே அவர்களுக்கு நிறைந்து இருந்தது. இந்த சமயத்தில் தான் சரண்யா கரு உண்டாகியிருந்தாள். அதைகூட அவள் அறியாமல் கணவனை தினமும் கவனித்த அவள், அவளின் உடல் நிலையை கருத்தில் கொள்ளவில்லை. அன்று தான் இருவருக்கும் தெரிந்தது, அதில் சந்தோஷப்பட வேண்டியவனோ மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் இருந்தான்.
சமையல் அறையில் வேலை செய்துகொண்டிருந்த சரண்யாவுக்கோ தலை சுற்றிகொண்டு வந்தது. ஒரு கட்டத்தில் அவளால் முடியாமல் மயங்கி கீழே விழுந்தாள். எதற்க்கோ அவளை தேடி வந்தவன் அவள் கீழே படுத்திருப்பதை பார்த்து வேகமாக அவளை தூக்கி மடியில் கிடாத்தினான்.
“சரண்யா… சரண்யா.. எழுந்திரிம்மா”. அவளை எழுப்ப அவளோ மயங்கிய நிலையில் இருந்தாள்.
பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றவன். அவளை அட்மிட் செய்துவிட்டு காத்திருந்தான் வெளியே. அவளை முழுதாக பரிசோதித்த மருத்துவர் அவள் கரு உண்டாகிருப்பதை அறிந்து, அவளுக்கு ஊசி போட்டுவிட்டு வந்தார்.
சிறிது நேரத்துக்கு பின் அவள் மயக்கத்தில் இருந்து விழித்தவள், தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர சிறிது நேரம் ஆனது. பக்கத்தில் இருந்த செவிலி தான் அவளை அழைத்துகொண்டு மருத்துவர் அறைக்கு வந்தாள்.
“மிசஸ். சரண்யா நீங்க அம்மா ஆக போறீங்க. மிஸ்டர் விஜய் நீங்க அப்பா ஆகா போறீங்க,  உங்க மனைவி கரு உண்டாகியிருக்கிறாள்.” மகிழ்ச்சியான விஷயத்தை சொல்ல இருவரும் சந்தோஷம் கொண்டனர்.
சரண்யாவும், விஜயும் மகிழ்ச்சியாக பார்த்துகொள்ள. அவனோ, சரண்யாவின் கையை அவன் கைக்குள்ளயே வைத்துகொண்டான். எப்பேர்ப்பட்ட சந்தோஷம் இதற்க்காக தானே பலரும் காத்திருக்கின்றனர். அந்த சந்தோஷம் தனக்கு கிடைத்தை எண்ணி அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். 
“அவங்களை பத்திரமா பார்த்துக்கோங்க.. முழு நேரம் அவங்களுக்கு ஓய்வு ரொம்ப முக்கியம். அதனால் ரொம்ப வேலை எதுவும் அதிகமா செய்ய கூடாது. அவங்க ஹெல்த் நல்லா இருந்தா தான் குழந்தையும் ஆரோக்கியமா இருக்கும். அப்புறம் மன்த்லி செக்கப் வந்திருங்க.. ஸ்கேன் அடுத்த மாசத்துல எடுத்துக்கலாம்.” என அவளுக்கு அறிவுரை வழங்கினார் மருத்துவர்.
“கொஞ்சம் நாளைக்கு இருவரும் தள்ளி இருந்தா குழந்தைக்கு நல்லது. நான் சொல்லுறது புரியும்னு நினைக்குறேன். அப்புறம் இந்த மருந்த தொடர்ந்து சாப்பிட்டு வாங்க, வாந்தி மயக்கம் இருக்க தான் செய்யும் அதெல்லாம் பார்த்து எதுவும் சாப்பிடாம இருக்க கூடாது. பழம், காய், சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கோங்க.”
“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்.. நல்லா பார்த்துகிறேன்..” 
“நீங்க கேர் புல்லா பார்த்துகனும் அதுல உங்க மனைவியோட ஹெல்த் கண்டிஷன் இருக்கு. நெக்ஸ்ட் மன்த் செக்கப் வாங்க, முன்னாடியே அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு வாங்க.” மருத்தவர்கள் அவர்களை வழியனுப்பி வைத்தார்.
அதே மருத்துவமனைக்கு தான் ஹேத்துவை அழைத்துகொண்டு வந்திருந்தான் ரகுவும், கௌசல்யாவும். மருத்துவர் ஏற்கனவே அவர்களின் குடும்பத்துக்கு தெரிந்தவர் என்பதால் அவர்கள் முன்னேயே சொல்லி வைத்திருந்தனர். விஜயும், சரண்யாவும் வெளியில் வர, ஹேத்துவும், ரகுவும் உள்ளே நுழைந்தனர்.
“என்ன ரகு மனைவிக்கு செக்கப் பண்ண வருவேனு பார்த்த இப்படி அவளுக்கு காய்ச்சல் வர வச்சு அழைச்சிட்டு வந்திருக்க. இப்படி வந்து உட்க்காரு ம்மா..” அவளை அமர சொல்ல, அவளை முழுதாக பரிசோதித்தார். காய்ச்சல் அவளின் சோர்வுக்கும், இரவின் பனிக்கும் தான் வந்திருக்கிறது என அவர் தெரிந்துகொண்டார்.
“இல்லை ஆண்டி, திடீர் காய்ச்சலாக  இருக்குனு தொட்டு பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.” 
“சாதாரண காய்ச்சல் தான், ரகு ஊசி போட்டு டேபிளட் சாப்பிட்டா சரியாகும்.” மருத்துவர் சொல்ல, காய்ச்சலில் இருந்தவள், ஊசி என சொன்னது அலறி விட்டாள்.
“நோ.. நோ ஊசி எல்லாம் வேண்டாம்.. எனக்கு ஊசினா பயம்.. டேபிளட் மட்டும் போதுமே டாக்டர்.” அவள் பயந்து போய் சொல்ல
“என்னமா நீ இந்த சின்ன ஊசிக்கு பயமா.. குழந்தைங்களே சிரிச்சிட்டு ஊசி போட்டு போகுதுங்க நீ வளர்ந்த பொண்ணு இப்படி பயப்படலாமா?” அவர் சொல்லிகொண்டே ஊசியை எடுக்க, 
அவளோ, எழுந்து நின்றே விட்டாள்.. “வேண்டாமே நீங்க சொல்லுங்க ஊசி எனக்கு வேண்டாம்.” அவள் ரகுவினை துணைக்கழைக்க, அவனோ அவளின் பயத்தை பார்த்து சிரித்துவிட்டான்.
“ஹே சின்ன ஊசி தான்.. பயப்படாதே..” அவன் மெல்லிய சிரிப்புடன் சொல்ல
“உங்களுக்கென்ன நீங்களா போடப்போறீங்க அந்த ஊசிய. நான் தான போட போறேன் நோ வே..” அவள் மீண்டும் சொல்லிக்கொண்டே வெளியேற பார்க்க அவளை பிடித்துகொண்டான்.
“என்னை விடுங்க.. ப்ளீஸ்.. அய்யோ ஊசி வேண்டாம்”. அவள் அவனின் கையை பிடித்துகொண்டு கெஞ்ச
அவளின் வலது கையில் ஊசி போட போக, ஹேத்துவோ அருகில் ரகு நின்றவனை இடது கையால் இடுப்பினை அணைத்துகொண்டு அவனின் வயிற்றில் முகத்தை புதைக்கொண்டு அந்த ஊசியின் வலியை “அம்மா”  என்ற சத்ததோடு வாங்கிகொண்டாள். 
அவளின் செயலை பார்த்து அவன் தான் அதிர்ந்து நின்றான். கல்யாணம் ஆன நாள் முதல் அவள் தன்னை எதற்க்கு தொடவில்லை. அப்படியிருக்க இன்று ஊசிக்காக பயந்து தன்னை கட்டியிருப்பதை பார்த்து அவளின் பயத்தை போக்க ஹேத்துவின் தோளில் கை வைத்தும், மறு கையை அவளின் தலையை கோதிவிட்டு சமதானமாக வைத்துகொண்டான். அவனுக்கே ஒரு நிமிடம் அவளிடம் இப்படி ஆறுதலாக நடந்துகொள்வோம் என அறியவில்லை.
“ம்ம்.. முடிந்தது.. ஏம்மா சின்ன ஊசிக்கு இனி எல்லாம் பயப்படக்கூடாது சரியா. இப்போ பாரு வலி தெரியுதா என்ன.”
“உங்களுக்கு ஒரு நாள் ஊசி போடும் போது தெரியும் என் வலி என்னனு.” அவள் கையை தேய்த்துகொண்டே சொல்ல.
“ரகு, அவளோ கையை நல்ல அழுத்தி தேய்ச்சுவிடு இல்லனா ஊசி போட்ட இடம் வீங்கிவிடும். அப்புறம் இந்த சீட்டுல இருக்குற டேபிளட் கொடுங்க மூனு வேளைக்கு.” அவர் எழுதிகொடுக்க அவனும் வாங்கிகொண்டான். அம்மா இருந்தா வரச்சொல்லு ரகு போகும் அவனிடம் சொல்லிவிட்டார்.
“அம்மா உங்களை ஆண்டி கூப்பிட்டாங்க போங்க.. நான் மருந்து வாங்கிட்டு வரேன்.” அவன் சொல்லிவிட்டு மெடிக்கல் ஷாப் சென்றுவிட்டான்.
இருக்கையில் சோர்வின் காரணமாக அமர்ந்திருந்தவளின் அருகே வந்தவன். “வலிக்குதா இன்னும்.. ஐஸ் வச்சா சரியாகும் வீட்டுல போய் வைக்கலாம்.” அவன் சொல்ல
“சாரி..”
“எதுக்கு.”
“ஊசி போடும் போது உங்களை… உங்களை..” அவள் தயங்க, அவன் புரிந்துகொண்டான் எதற்க்காக மன்னிப்பு கேட்கிறாள் என்பதை.
“சரி விடு.. பயத்துல தான பண்ண.. உன் அப்பா அந்த இடத்துல இருந்தாலும் அதே தான் செய்வியா?” அவன் கேட்க
“ஆமா.” தயங்காமல் பதில் கூறினாள்.
”கௌசி நான் சொன்னது நமக்குள்ள இருக்கட்டும். உன் மகன், மருமககிட்ட வெளியே காட்டிக்காத.. நான் சொன்ன மாதிரி நீ கவனிச்சு பாரு கௌசி.” மருத்துவர் சொல்ல.
”ம்ம்.. நான் பார்த்துகிறேன்..” அவர் சொல்லிவிட்டு வெளியே வர, ரகுவும் ஹேத்துவும் அருகருகே அமர்ந்தாலும் அதில் ஒரு ஒட்டுதல் இல்லை. தாயின் கண்ணுக்கு அவர்களின் வாழ்க்கை வெட்ட வெளிச்சமாகியது.
வீட்டுக்கு வந்ததும் சரண்யாவை அமர வைத்துவிட்டு அனைத்து வேலைகளையும் அவனே பார்த்துகொண்டான். வேலையின் நடுவே அவளுக்கு பழச்சாறு கொடுக்க தவறவில்லை. அவளோ அதையெல்லாம் பார்த்துகொள்ள சொன்னாலும் அவன் அவளை வேலை பார்க்க விடவில்லை.
ஒரு வாரம் அவன் வேலைக்கு லீவ் போட்டு அவளை நன்றாக கவனித்துகொண்டான். ஆனால் ஒரு வாரத்திற்க்கு பின் தான் அவனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
கொஞ்ச நாள் சென்ற பின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த நல்ல விஷய்த்தை சொல்லலாம் என அவர்கள் நினைத்திருந்தனர் விதியின் விளையாட்டில் குழந்தை பழியாக போவது அறியாமல் அவளும் சரி என ஒப்புகொண்டாள். 
அன்று கம்பெனியில் முக்கியமான மீட்டிங்கை முடித்து வந்தான் விஜய். அவனின் கொலிக் சோகமா அமர்ந்திருப்பதையும், அவனை சுற்றி அவனது நண்பர்கள் அமர்ந்திருப்பதையும் பார்த்து என்னவென்று அவன் விசாரிக்க. அவனின் நண்பன் சொல்ல ஆரம்பித்தான்.
“அவனுக்கு குழந்தை பிறந்திருக்கு.. அவனுக்கு சந்தோஷம் தான். ஆனா மனைவி அவனை விட குழந்தைகிட்ட தான் அதிகமா நேரம் செலவழிக்கிறாளாம். குழந்தை தூங்கின பின்பும் கூட அவன்கூட பேசாம குழந்தை தூங்குறதையும் குழந்தைக்கான வேலையையும் மட்டும் கவனிக்கிறாங்களாம். காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டான். இவனுக்கு அம்மா, அப்பா இல்லை, அதனால அவன் மனைவியே அவனுக்கு எல்லாமும் இருந்தா குழந்தை வர்ரதுக்கு முன்னாடி. ஆனா இப்போ குழந்தையைவிட்டு கொஞ்சம் கூட அவன் மனைவி நகர மாட்டேங்குறாளாம். கேட்டா குழந்தை இப்போ தான் பிறந்திருக்கு, அது வளர்ர வரைக்கு நாம கொஞ்சம் தள்ளி தான் இருக்கனும், நீயும் குழந்தையை கவனிச்சுக்கோனு சொல்லிட்டாங்களாம்.” அவனின், நண்பன் விளக்கி கூறினான்.
”இதுக்கு தான் எனக்கு இப்போதைக்கு குழந்தை வேண்டானு இரண்டு வருஷம் தள்ளி போட்டுருக்கோம்.” வேறொருவன் சொல்ல.
“ஆமா, குழந்தை வந்தா பொண்டாட்டிங்க கண்டுக்கவே மாட்டாங்க. இப்போ எல்லாம் இரண்டு மூனு இல்லைனா ஐந்து வருஷம் கழிச்சு தான் குழந்தை பெத்துகிறாங்க.” அதற்க்கு ஆமா சாமி போட்டவனும் சேர்ந்துகொண்டான்.
இவர்கள் அனைவரும் பேசியது விஜயின் மனதை குழப்பிவிட்டது. அவனுக்கும், அவன் இப்பொழுது தான் கரு உண்டாகியிருக்கிறாள், சோர்வினால் அவனுக்கு முன்னே தூங்கிவிடுவதை அவன் பார்த்து இருக்கிறான். ஆனால் இவர்கள் சொல்வது போல குழந்தை வந்ததும் தன் நிலைமையும் இப்படி தான் ஆகுமா? என அவன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு தெரியாதே குழந்தையின் வரவை எண்ணி பலகோடி பெண்கள் கோவில், விரதம் என இருப்பதை அவன் அறியவில்லை.
இங்கு தான் சரண்யாவின் வாழ்வில் விதி விளையாடியது. இனி சரண்யாவின் மனதையும் அவன் கலைத்து விடுவானா? குழந்தையும் சேர்த்து?
                                           தொடரும்…………….

Advertisement