Advertisement

             என் காதல் தோழா 10
கோவிலில் கூட்டம் மிக குறைந்தே காணப்பட்டது. ரகுவும், ஹேத்துவும் அர்ச்சனை கூடை வாங்கி கொண்டு சன்னதிக்குள் சென்றனர். இவர்களை பின்தெடர்ந்தே வந்த ஷனாவும், அவர்கள் பின்னே கோவிலுக்குள் நுழைந்தாள். ஹேத்து அர்ச்சனை கூடையை அர்ச்சகரிடம் கொடுத்து சாமிக்கே அர்ச்சனை செய்ய சொல்லி கொடுத்தாள்.
இருவரும் கண் மூடி வேண்டிகொண்டனர், அவர்களின் வேண்டுதல் மற்றவர்களுக்காக மட்டுமே இருந்ததே தவிர அவர்களுக்காக இல்லை. வெளியே கணவன் மனைவியாக இருந்தாலும் அவர்களுக்குள்ள அமைதி போர் நிகழ்ந்து கொண்டிருந்தது யாரும் அறியாமல்.
கடவுளை வணங்கிவிட்டு இருவரும் எதிர் எதிராக அமர்ந்தனர். புதுமண ஜோடிகள் இப்படியா தனித்தனியே அமர்வார்கள் என மற்றவர் பார்க்கும் வண்ணம் இருந்தது. ஷனாவும் வந்தது முதல் கவனித்துகொண்டு தானே இருக்கிறாள்.
எதுவும் பேசிக்கொள்ளாமலே இருவரும் அமர்ந்திருப்பதை பார்த்து அவன் சொல்லியது சரியோ என ஷனாவுக்கும் தோன்றியது. நேரம் ஆனா பின் இருவரும் கிளம்பினர் கோவிலின் வெளியே அவர்கள் வர, அதே நேரம் கிருஷ்ணவ் காரில் அங்கு வந்தான்.
“நான் கார் எடுத்துட்டு வரேன்.. இங்கயே இரு.” ஹேத்துவை நிற்க வைத்துவிட்டு அவன் செல்ல, சரியாக ரகுவின்  கார் பக்கத்திலே கிருஷ்ணவின் கார் வந்து நின்றது. ரகு அருகில் நின்ற காரை கவனிக்காமல் அவனது காரை எடுத்துகொண்டு ஹேத்துவின் முன் நிறுத்தினான்.  
சரியாக கிருஷ்ணவ் கோவிலின் அருகே வர, ஹேத்து ரகுவின் காரில் ஏறி அமர போகையில், கிருஷ்ணவ் எதர்ச்சையாக ஹேத்துவை பார்த்துவிட்டான். யாரோ என கிருஷ்ணவ் நினைக்க, பின் ஹேத்துவின் முகத்தை உற்று பார்த்து அவன் ஹேத்துவின் அருகில் வேகமாக நடக்க, அதற்க்குள் ரகுவின் கார் வேகமெடுத்து கிளம்பியது.
கார் நின்றிருந்த இடத்திற்க்கு வந்தவன் “ச்சே மிஸ் பண்ணிட்டேன் அது ஹேத்து தான் எனக்கு நல்லா தெரியும். ஆனா புது பொண்ணு மாதிரி தெரியுறாலே.” அவன் வாய்விட்டு சொல்ல, அந்த நேரம் பார்த்து ஷனா அவன் சொன்னதை கேட்டுவிட அவளுக்கு மற்றொரு அதிர்ச்சியாக இருந்தது. 
“இவன் யாருடா புதுசா? இப்போ தான் என் மாமா பையன் அவன் வாழ்க்கையை வாழலைனு நான் கவலையா இருந்தா இவன் ஹேத்துவ பற்றி பேசிட்டு இருக்கான். என்ன டா நடக்குது இங்க.” அவளும் அவள் பங்குக்கு புலம்பிகொண்டே வந்த ஆட்டோவில் ஏற, கிஷோர் சொன்னது உண்மை தான் இருவரும் எதையோ நினைத்து வாழாமல் இருக்கிறார்கள் என அவள் நினைத்துகொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
வந்தவுடனே கிஷோர்க்கு மெசேஜ் செய்தாள், “ஆம் நீ சொன்னது உண்மை தான். என்ன செய்யலாம், மற்றொரு விஷயம் இன்று என் காதில் கேட்டேன். அதையும் உன்னிடம் சொல்ல வேண்டும் நாளை மீட் பண்ணலாம். இடத்தை நீயே தேர்வு செய்து காலையில் மெசேஜ் செய்யவும்” என அவனுக்கு மெசேஜ் அனுப்பிகொண்டே உள்ளே நுழைந்தவள் கௌசல்யாவின் மீது மோதிகொண்டாள்.
“ஏன் டி ஒழுங்கா பார்த்து நடக்கமாட்டியா.. இப்படியா வந்து என்மேல மோதுவ.”
“கவனிக்கலை அத்தை.. சாரி.. ஆமா எங்க உங்க பிள்ளையும் மருமகளும்.” 
”அவங்க அப்போவே வந்துட்டாங்க, நீ எங்க போய் ஊர் சுற்றி வர.. முதல உனக்கு மாப்பிள்ளை பார்க்கனும். கண்ட நேரத்துல ஊர் சுற்ற போற உன் மாமாகிட்ட சொல்லி உனக்கும் கால்கட்டு போடனும்.” கௌசல்யா சொல்ல.
“அதை அப்புறம் பார்த்துகலாம்.. நான் உங்க பிள்ளைகிட்ட பேசனும்.” 
“மாமா.. மாமா.. உள்ள வரலாமா?” அவனின் அறையை தட்டி அனுமதி கேட்டுகொண்டிருந்தாள் ஷனா.
இவள் எதற்க்கு இந்த நேரத்தில் அழைக்கிறாள் என நினைக்காமல் கதவை திறந்தாள் ஹேத்து. 
“உள்ள வா ஷனா..” ஹேத்து அழைக்க
“மாமா எங்க ஹேத்து.”
“பால்கனில இருக்காங்க.. உள்ள வா” அவளை அழைத்துவிட்டு ஹேத்து புடவையை மடிக்க சென்றாள்.
முக்கியமான போன்காலில் அவன் பிசியாக இருக்க. அவன் முன் போய் நின்று பேச வேண்டும் என சைகையில் அவனிடம் சொல்ல. அவனோ, அப்புறம் பேசுவதாக சொல்லிவிட்டு அவளை தாண்டி சென்று ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு பேசிகொண்டிருந்தான்.
ஹேட்டல் அறைக்கு வந்தவன் இன்று கோவிலின் முன் பார்த்த பெண் ஹேத்து தான் என அவன் முடிவே செய்துவிட்டான். ஆனால் அவளின் நடை, உடை எல்லாம் மாறியிருப்பது எதனால் என்று தான் அவனுக்கு புரியாமல் யோசித்துகொண்டிருந்தான்.
யோசித்தவன் மனம் முழுவதும் அவள் மீது உள்ள காதல் மட்டுமே அவன் இன்றளவும் நினைத்துகொண்டிருந்தான். கோவிலில் பார்த்த பெண் ஹேத்துவாக இருக்க வாய்ப்பே இல்லை என அவன் நினைக்க. அவனின் நினைப்பில் கடவுள் கல்லை எரிந்தார். அடுத்த முறை அவன் ஹேத்துவை அவளது கணவனுடன் சந்திக்க போவதை அறியாமல் வேறு வழியில் ஹேத்து எப்படி பார்க்கலாம் என யோசித்துகொண்டிருந்தான் க்ருஷ்ணவ்.
”பைத்தியம் மாதிரி அவன் உன்னை காதலிச்சா நீ திமிரெடுத்து போய் அவனை வேண்டாம்னு சொல்லிட்டு ஊருக்கு போயிருவ. இப்போ அவன் உனக்கு கல்யாணம் ஆக போகுதுனு மெசேஜ் பண்ண உடனே அடிச்சு பிடிச்சு ஓடிவருவ அவனை தேடி. என்ன டி இதெல்லாம் இதுக்கு எதுக்கு அவன்கூட நீ சண்டை போடனும்.”
“ஏதோ கோவத்துல என்னை காதலிக்காம கூட அவன் தொழில் பின்னாடி போறது எனக்கு பிடிக்கலை டி. அதான் சண்டை போட்டுட்டேன் ஆனா அவனுக்கு இப்படி திடீர் கல்யாணம் நடக்கும்னு எனக்கு தெரியாது.”
”அஞ்சலி அவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு, அவன் மனைவியோட வாழ ஆரம்பிச்சுட்டா என்ன செய்வ. உன் காதலால ஒன்னும் செய்ய முடியாது அஞ்சலி. அவனை மீட் பண்ணி பேசுனா கூடா எல்லாம் வீண் தான்.” அஞ்சலியின் தோழி எடுத்துக்கூற.
“என்ன என்னனு நினைச்ச, அவனை அவனோட மனைவிக்கு கூட நான் விட்டுக்கொடுக்கமாட்டேன். ஏன்னா என் காதலே அவன் தான். அப்படி இருக்க நீ சொன்னதை நான் எப்படி கேட்ப்பேன். அவன் என் ரகு, என்  காதல், அவனை வாழ்க்கை முழுசும் நான் தான் பார்த்துப்பேன் அவன் மனைவி இல்ல.” அவன் மேல் காதல் பித்து பிடித்தவள் போல் அஞ்சலி சொல்ல, அவளது தோழி வாய் பிளந்து கேட்டிருந்தாள்.
இரவின் தாலாட்டில் அனைவரும் உறங்க, ஹேத்துவோ உறக்கம் வராமல் கைப்பேசியை பார்த்துகொண்டிருந்தாள். அவளது தோழிகளுடன் எடுத்த புகைப்படம், அவர்களுடன் வெளியே சுற்றிய புகைப்படத்தை பார்த்துகொண்டே இருந்தவள். சற்று போர் அடிக்க எழுந்து பால்கனியில் அமர சென்றாள். ரகுவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மெதுவாக மெத்தையில் இருந்து இறங்கி சென்றாள்.
பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து நிலாவை வெறித்தவளின் விழிகளின் இன்று க்ருஷ்ணவின் உருவம் அவளின் கண்ணில் பட அப்போதே அதிர்ந்துவிட்டாள். தான் அதிர்ந்ததை யாரின் முன் காட்டாமல் காரிலும், வீட்டிலும் அமைதியாகவே இருந்தாள்.
தன்னை தேடி அவன் இப்போது வருவான் என அவள் நினைக்கவில்லை. ஆனால் அவன் வந்த நேரம் தான் வேறொருவரின் மனைவி என தெரிந்தால் அவன் மனம் என்ன பாடுபடும் என அவள், அவனுக்காக யோசித்தாள். எங்கோ தொடங்க வேண்டிய வாழ்க்கையை, தான் இங்கு அதுவும் ரகுவின் மனைவியாக வாழ போகிறோம் என அவள் நினைக்கவில்லை.
ரகுவிற்க்கு முன் பார்த்த மாப்பிள்ளையாக க்ருஷ்ணவ் இருக்கக்கூடாதா? என அவள் எண்ணிய நாளோ அதிகம் இருந்தது கல்யாணம் முடிவு செய்யும் நாளுக்கு முதல் நாள் வரை. ஆனால் என்று வேறொருவரின் மனையாகிவிட்டாளோ அன்றே க்ருஷ்ணவ்வை அவள் நினைத்துப்பார்க்கவில்லை.
ஒன்று கட்டியவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும். இல்லை காதலனுக்கு உண்மையாக இருக்க வேண்டும். இரண்டிற்க்கு நடுவே ஒரு வாழ்க்கை என்பது அர்த்தமற்றது ஆகும். அதனால் தான் க்ருஷ்ணவ்வை கோவிலில் பார்த்தாலும் அவனை கண்டும் காணாமல் அவள் சென்றுவிட்டாள்.
தன் உணர்வுகளையும், தன்னையும் புரிந்துகொண்டு அவனுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும். அவனின் காதலில் நான் வாழாமல் இருக்கலாம். ஆனால் அவனின் நினைவில் நான் வாழாமல் இல்லை. அவள் நினைக்க நினைக்க மனம் கணத்தது.
“ஹேத்து.. இங்க என்ன பண்ணுற.. அதுவும் இந்த நேரத்துல.” தண்ணீர் அருந்த எழுந்தவன் ஹேத்துவின் படுக்கை இடம் காலியாக இருக்க அவளை தேடி பால்கனிக்கு வந்தான்.
“இல்லை.. தூக்கம் வரலை..”
”உடம்பு எதுவும் சரியில்லையா.”
“இல்லை அப்படியெல்லாம் இல்லை.”
“அப்போ வா உள்ள வந்து தூங்கு.” அவளை அழைக்க
அவளை உறங்க சொல்லிவிட்டு, அவளுக்கு போர்வை போர்த்திவிட்டு கீழே தண்ணீர் எடுத்து வரசென்றான்.
ஷனாவுக்கோ உறக்கம் வந்தபாடில்லை.. புரண்டு புரண்டு படுத்தவள் ஒரு கட்டதில் உறக்கம் இல்லை என்றதும் எழுந்து அமர்ந்துவிட்டாள்.
மாமா மகனின் வாழ்க்கை இப்படியா அமைய வேண்டும். ஹேத்துவும், ரகுவும் இன்னும் வாழ்க்கையே ஆரம்பிக்கலையோ என அவளின் யோசனை வேறொங்கோ செல்ல. பின் மீண்டும் கோவிலின் வெளியே ஹெத்துவை ஒருவன் பார்த்து அவனுள்ளே பேசியது வேறு சிந்தனையை அதிகமாக்கியது.
இன்று இரவில் இருவருக்கும் உறங்காத இரவாகி போனது. நாளை யாரின் வாழ்வில் என்ன விடியல் காத்திருக்கிறதோ என அறியாமல் நடு இரவில் உறங்கிய ஹேத்துவும், விடியும் போது உறங்கிய ஷனாவும் காலையில் தாமதமாக எழுந்தனர்.
எப்பொழுது எழும் நேரத்திற்க்கு எழுந்தவன், இன்னும் ஹேத்து எழாமல் இருப்பதை பார்த்து அவனின் புருவம் சுருங்கியது. இந்த நேரத்திர்க்கெல்லாம் எழுந்து கீழே அல்லவா சென்றிருப்பாள் ஏன் இவ்வளவு நேரம் உறங்குகிறாள் என ரகு நினைத்துவிட்டு குளிக்க சென்றான்.
அவன் குளித்துவிட்டு வரும் வரையில் ஹேத்து எழவில்லை. அவன் கம்பெனிக்கு கிளம்ப ஆரம்பித்து அவனின் முக்கியமான வேலையை நினைவு வைத்துகொண்டு, புறப்பட்டும்விட்டான் ஆனால் இன்னும் அவள் எழவில்லை. என்னவானது இவளுக்கு, ஏன் இன்னும் எழாமல் இருக்கிறாள். என அவன் நினைத்துகொண்டே அவளின் கையில் கை வைத்து எழுப்ப முயல கை சூடாக இருந்தது. 
ஏன் கை சூடாக இருக்கிறது யோசித்து நெற்றியில் கை வைத்து அவன் பார்க்க காய்ச்சல் சூட்டின் அதிகமாக இருந்தது. உடனே தாயை அழைத்தான், அவன் அழைத்த அழைப்பில் அவர் பதறி போய் வந்து ஹேத்துவை தொட்டு பார்த்து காய்ச்சல் தான் உறுதியாக கூற. அவளை அழைத்துகொண்டு மருத்துவமனைக்கு செல்ல ஆயுத்தமாகினர்.
ரகுவின் கம்பெனிக்கு க்ருஷ்ணவ் வருகை தர, ரகுவோ இன்னும் கம்பெனிக்கு வரவில்லை என தகவல் அவனுக்கு வந்தடைந்தது.
                                               காதல் தொடரும்

Advertisement