Advertisement

அடுத்தடுத்த நாட்கள் வேகமாய கரைய கோபி பதுங்கியிருந்தான்.. இரண்டு மூன்று நாட்கள் இந்த தெருவை ஆராய்ந்தவன் தீனா இருக்கும்வரை சுமதியை இங்கிருந்து கொண்டு செல்ல முடியாது…
 
குழந்தையை பார்த்தவன் அவனோட குழந்தையா இது..?? இவனுக்கு பொண்டாட்டி இல்ல போல..!! அதான் அதை பார்த்துக்கிட்டு அவன் ஆத்தாளுக்கு சமைச்சு போடுறாளோ.. ஆனா புத்திசாலிதான் கன்னிப்பொண்ணுன்னு சொன்னா ஏதும் பண்ணிருவான்னு எல்லார்க்கிட்டயும் விதவைன்னு சொல்லி வைச்சிருக்காளா..??
 
சுமதியை பற்றி யாரிடமும் விசாரிக்கத் தயங்கினான்.. அன்று தீனா அடித்த அடி இன்னும் நினைவில்.. ராசாத்தி அம்மாளுக்கு சற்று உடல்நிலை தேறியிருக்க இப்போதெல்லாம் வாடிக்கையாக இட்லி கொண்டு செல்லும் இடங்களுக்கு தேன்மொழியோடு கிளம்பிவிடுவார்.. குழந்தைக்கும் வேடிக்கை பார்ப்பது பிடித்துப் போக ராசாத்தி அம்மாளிடம் அழாமல் அவர் வீடுவரும்வரை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருக்கும்..
 
எப்போதும் போல விறுவிறுவென வேலைகளை முடிப்பவள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை மார்க்கெட் செல்லும் வேலையை வைத்துக் கொண்டாள்.. இப்பொழுதெல்லாம் தீனாவே அவளை அழைத்துச் செல்ல முதல்நாள் தயக்கமாக இருந்தாலும் காய்கறிகளை தூக்கிக்கொண்டு இவ்வளவு தூரம் நடக்க முடியாமல், அதோடு கோபியிடம் மாட்டி விடுவோமோ பயந்து  ஏதும் பேசாமலே அவனுடன் ஏறிச் சென்றாள்..
 
வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்தாற் போலிருக்க தினம் தினம் பெண்களின் வாய்களில் அரை பட்டனர் தீனாவும் சுமதியும்…!! ஒரு பத்து நாட்கள் சென்றிருக்க, ஏய் இந்தா புள்ள ரெண்டு நாளைக்கு காய் சேர்த்து வாங்கிக்கோ..??”
 
ஏதும் பேசாமல் அவனை பார்க்க,
 
ஆமா எனக்கு வெளியூர் போற வேலை இருக்கு நாளைக்கு கிளம்பினா எப்ப வருவேன்னு தெரியாது.. நாலஞ்சு நாள் ஆகலாம்.. நீ சேர்த்து வாங்கு.. பத்தலைன்னா பக்கத்துல கடையில வாங்கிக்கோ.. இவ்வளவு தூரம் வரவேணா.. என்ன புள்ள பேசாம இருக்க.. ப்பா பேசினா முத்தா கொட்டிப் போகும் ஆளும் மொகறையும் பாரு..??”
 
அவன் திட்டியதற்கும் முகத்தில் எந்தவித பிரதிபலிப்பும் இல்லாமல் தன் வேலையை பார்க்க ப்பா செம அழுத்தம்.. இப்படி ஒருத்திய பார்க்கவே இல்ல..!!
 
அன்று அளவுக்கு அதிகமாகவே காய்களை வாங்கியிருக்க இவள் கைப்பிடிக்க இடம் இல்லை.. அனைத்தையும் கம்பியில் கோர்த்தவள் மடியில் ஒரு பையை வைத்துக் கொள்ள இலைக்கட்டை முன்னால் வைத்துக் கொண்டான்..
 
நல்லா உட்கார்த்திட்டியா..??” வண்டியை கிளப்ப போனவன் கண்ணாடியில் சுமதியை பார்க்க அவள் கைப்பிடிக்க இடம் இல்லாமல் ஒரு கையில் பையை வைத்தபடி திருதிருவென விழிக்க திரும்பி பார்த்து அவளை முறைத்தபடி ஒரு கையை வெடுக்கென முன்னால் இழுத்து தன் தோளில் வைத்துக் கொண்டான்..
 
மேடுபள்ளங்களில் அவன் மேல் மோதினாலும் ஏதும் செய்யமுடியவில்லை.. எங்கே விழுந்துவிடுவோமோ பயந்து இன்னும்தான் தோளில் கையை அழுத்தமாக பதித்திருந்தாள்..
 
இதோ தீனா ஊருக்கு சென்று முழுதாய் மூன்று நாட்கள் முடிந்திருக்க எப்போதும் போல ராசாத்தி வாடிக்கைக்கு தேனோடு கிளம்பிவிட்டார்..
 
ஆத்தா உன் மகள பார்த்தியா அந்த தீனா பயலையே தேடுது..?? ஆத்தி இந்தப்புள்ள அவன பார்க்கலைனா ஏங்கி போயிரும் போலயே..?? இந்தப்பய எப்ப வரப்போறானோ..?? ம்ம் என்னத்த சொல்ல..!! அவனையும் தேட இந்த உலகத்துல ஒரு ஜீவன்..??” வாய்க்குள் ஏதோ முனங்கியவர் குழந்தைக்கு பால்டப்பாவில் பாலை ஊற்ற ஆரம்பித்தார்..
 
இப்போது குழந்தை குப்புற படுக்க கற்றிருக்க நெஞ்சால் தவழந்து தீனா மாடியில் இருந்து இறங்கி வரும் திசையையே அடிக்கடி பார்த்திருக்க சுமதியும் இதை கவனித்தபடி தான் இருந்தாள்.. சுமதியோ ராசாத்தியோ தூக்கினால் அவர்கள் கன்னத்தை பிடித்தும் மாடியை காட்ட குழந்தைகள் எப்போதும் கொண்டாடும் இடத்தில்..!! அதற்கு அவனின் குணமோ, பணமோ, உருவமோ தேவையில்லை..
 
ராசாத்தி அம்மாள் குழந்தையோடு அந்த தெருமுனைக்கூட திரும்பியிருக்க மாட்டார்.. கோபி தன் அன்னையோடும் அக்காளோடும் ஆட்டோவில் வந்து இறங்கிவிட்டான் ..
 
இந்த வீடுதான்கா..?? உள்ள போ.. போய் உன் நாத்தனார இழுத்துட்டு போய் உன் புருசன் முன்னாடி நிப்பாட்டு..!!”
 
இருடா அந்த மனுசனுக்கும் ஒரு போன பண்ணிருறேன்.. என்னா ஆட்டம்.. ?? என்னமோ அவரு தங்கச்சிய நாம கொன்னு பொதச்சமாதிரி அந்த ஆட்டம் ஆடி தீர்த்தாரு.. பிள்ளைகளையும் என்கிட்ட இருந்து புடுங்கிக்கிட்டு வீட்ட விட்டு வெளிய தொறத்தினாரு.. அடிடா அந்த மனுசனுக்கு போன…!!” போனை எடுத்து ஏதோ கோபமாக பேசியவள்  போனை வைத்திருந்தாள்..
 
இட்லி அனைத்தும் விற்றிருக்க கணக்கை எழுதிக் கொண்டிருந்தவளுக்கு தைக்கும் வேலையும் கொஞ்சம் இருந்தது.. இனி அதை பார்த்துட்டே சமைக்க வேண்டியதுதான் இந்த வாழ்க்கையே அவளுக்கு பிடித்தமாய் இருக்க அதற்கு வாழப்பழகிக் கொண்டாள்.. அடுத்தவரோடு அனாவசிய பேச்சில்லை.. ராசாத்தி அம்மாளோடு மட்டும் பேசுபவள் பாதி நேரம் தேன் மொழியோடுதான்.. வாசலில் பேச்சுக்குரல் கேட்க கதவை திறந்தவள் அங்கிருந்தவர்களை பார்த்து திகைத்து அதிர்ச்சியில் நின்றிருந்தாள்..
 
வாடி அம்மா பரதேவதை  …. எப்படி இருக்க..??” மனோகரியின் தாய் முன்னால் வந்திருக்க, சுமதிக்கு மனம் படபடவென அடித்து கைகால்கள் நடுங்கத் துவங்கியது..
 
இவர்களின் சத்தமான குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்திருக்க நாங்க என்ன கொடுமை பண்ணுனோம்னு நீ வீட்ட விட்டு வெளியில் வந்த..?? அதுவும் ஒரு ரௌடி பயலோட தங்கியிருக்கியாம்… உன் நொண்ணன் என்னவோ என் தொங்கச்சி பத்தரமாத்து தங்கம்.. உன்னை நாங்கதான் கொடுமை படுத்துறோம்னு ஒரே குதியா குதிச்சாரு.. பத்தாததுக்கு கேவலப்பட்ட உனக்காக என் பேரன் பேத்திகள புடுங்கி வைச்சிட்டு இவள விரட்டி விட்டாரு.. இதுதான் உன் லெட்சனமா..??”
 
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொழுது போக்கு.. என்னமா சொல்றிங்க இவ்வளவு சொந்தகாரங்க இருந்தும் இந்த பொண்ணு ஏன் இவன் கூட வந்து தங்கனும்..அதுவும் வப்பாட்டியா..??”
 
“வேறென்ன உடம்புத்திமிருதான்.. ?? அதான் தினவெடுத்து இங்க வந்திருக்கா கழுதை..?? ஆத்தா அப்பா இல்லைன்னு என் பொண்ணு சொந்த தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டா.. அதுக்கு தண்டனைதான் அவ புருசன் இவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு என் பொண்ண வீட்டவிட்டு விரட்டிட்டான்…” இன்னும் ஏதேதோ சுமதியை முடிந்த அளவு அசிங்கப்படுத்த கோபிக்கு உள்ளுக்குள் அவ்வளவு சந்தோசம்..
 
நல்லா பேசட்டும் அப்போ தான் இனி ஒருதரம் இங்க வரமாட்டா.. இன்னும் குணசேகரன் வரவில்லை அதுவரை இந்த பேச்சு இருக்கட்டும் கைகட்டி சுமதியை வெறித்தபடி இருக்க முன்பை விட இன்னும் பளபளப்பாக இருந்தாள் உழைப்பும் அதனால் அவளுக்கென்று கிடைத்த பணமும் அவளிடம் ஒரு நிமிர்வை ஏற்படுத்தியிருந்தது..
 
சுமதிக்கு இப்போது என்ன செய்வது தெரியவில்லை அண்ணன் இருந்தாலாவது எல்லாத்தையும் சொல்லலாம்.. இவங்க நம்மள வாயக்கூட திறக்க விடமாட்டாங்க போல.. ஆங்காங்கே இருந்த தலைகளின் எண்ணிக்கை இருக்க இருக்க அதிகமாகிக் கொண்டே இருக்க பெண்கள் ஒரு பக்கமும் ஆண்கள் ஒரு பக்கமும் என பேசத்துவங்கியிருந்தனர்..
 
ஆண்களுக்கு இவள் கையால் சாப்பிடுவது பிடித்திருக்க இந்த தெரு பெண்களை போல இல்லாமல் அமைதியான முகம், எப்போதும் தவழும் புன்னகையுடன் சாப்பாடு பறிமாறுவது கேட்டு கேட்டு வைப்பது..யார் வம்பு தும்புக்கும் செல்லாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது.. பெண்களுக்கோ அதென்ன அவளுக்கே இங்க இருக்க ஆம்பளைங்க எல்லாம் சப்போர்ட் பண்றது.. முடிஞ்சா அந்த தீனா பய வரதுக்குள்ள இவள பொட்டி படுக்கை கட்ட வைச்சிறனும்..
 
அடுத்த அரைமணி நேரத்தில் சுமதி தீனாவோடு குடும்பம் நடத்தி அதை இந்த தெருவே பார்த்தது போல சொல்ல சுமதியால் தாங்கமுடியவில்லை.. எள் அளவும் தவறு பண்ணாத தனக்கு வேசிப் பட்டமா..?? மற்றவர்களுக்கு எப்படியோ சுமதியை பொறுத்தவரை தீனா நல்லவனாகவே தெரிந்தான்.. கண்ணீர் நிற்கவில்லை.. தலைகுனிந்து எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ நிமிர்ந்து பார்க்க குணசேகரனும் கூட்டத்தில் நின்றிருந்தான்.. அண்ணே எப்ப வந்துச்சு…??
 
“அண்ணே..??” ஓடிச்சென்று குணசேகரன் கைப்பிடிக்க அவனுக்கும் கண் கலங்கியது.. இந்த பிசாசு கூட்டத்துக்கிட்ட விட்டுட்டு போனது என் தப்பு தானே.. எங்க செத்து போயிட்டாளோ என்று நினைத்திருந்தவனுக்கு சுமதியை பார்க்கவும் மனது தாளவில்லை..
 
“ஆத்தா நல்லாயிருக்கியாடா..??”
 
தலையை ஆட்டியவள் “இவங்க சொல்றது எல்லாம் பொய்ண்ணே.. நான் எந்த தப்பும் பண்ணல.. நீ உள்ள வா எல்லாத்தையும் பொறுமையா சொல்றேன்..”
 
கூட்டத்தை சுற்றி ஒரு பார்வை பார்த்தவன் “என் தங்கச்சியப்பத்தி எனக்கு தெரியும் எல்லாரும் போங்க அவங்கவங்க வேலையை பார்த்துக்கிட்டு..??”
 
அவ்வளவு நேரம் தாயை பேச விட்டு வேடிக்கை பார்த்தவளோ “ஏன் போகனும்? இல்ல ஏன் போகனும்னு கேட்கிறேன்..?? அதான் இந்த தெருவே சிரிக்கிதே உங்க தங்கச்சியோட பொழப்ப பார்த்து… இவளுக்காக என் பிள்ளைகள என்கிட்ட இருந்து பறிச்சிங்கள்ல மரியாதையா அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க.. வேலைக்கு போறேன் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு அந்த ரௌடி பயக்கூட தப்பான சகவாசம் வைச்சிருக்கா அவள மறுபடி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாது..”
 
கோபியோ அட எருமை மாட்டு அக்கா நான் போட்ட பிளான எல்லாம் சொதப்பி வைச்சிரும் போலயே… கோபி எப்படியாச்சும் உள்ள பூந்து ஆட்டத்தை கெளச்சுவிடு..
 
“அக்கா என்ன பேசுற நீ..?? அன்னைக்கு நீயும் அம்மாவும் பண்ணினது தப்புத்தானே?? அந்த கோனாருக்கு ரெண்டாந்தாரமா அவள கட்டி வைக்கிறேன்னு சொல்லவும்தான அவ வீட்டவிட்டு  வந்தா… வேற போக்கிடம் இல்லாம இங்க இருக்கா கூட்டிட்டு வாங்க… முதல மாதிரி எல்லாரும் ஒத்துமையா ஒரே வீட்ல இருப்போம்..” கோபிக்கு எப்படியாவது சுமதியை காரணம் காட்டி மீண்டும் அங்கே சென்றுவிடனும்..
 
தனியாக அம்மா, அக்கா, அவர்கள் பிள்ளைகள் என அனைவருக்கும் செலவு செய்யமுடியவில்லை.. உழைப்புத்தான் அவனுக்கு பிடிக்காத ஒன்றாயிற்றே.. குணசேகரன் வீடென்றால் சொந்த வீடு வாடகையில்லை.. அதைவிட அவனுக்கு நல்ல வருமானம் கணக்கிட்டவன் அந்த ரௌடி பய வரதுக்குள்ள சுமதியை இங்கிருந்து கூட்டிச் சென்றால் போதும் என்றிருந்தது..
 
தன் அக்காளையும் அம்மாவையும் திட்டுவது போல திட்டி அவர்களையும் தன் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முதலில் புரியாமல் விழித்தவர்கள் கோபியின் போக்கு புரிந்து அவனுடனேயே பேசத்துவங்கி விட்டனர்.. மனோகரிக்கு எப்படியாவது தன் வீட்டுக்கு செல்ல வேண்டும்..
 
“வாத்தா நாம வீட்டுக்கு போகலாம் .. இனி எந்த பிரச்சனையும் உனக்கு வராது..??”
 
“பரவால்லண்ணே நான் இங்கயே இருந்துக்குறேன்… நீங்க அண்ணிய மட்டும் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..?? நம்மள மாதிரி அம்மா இல்லாம உன் பசங்களும் கஷ்டப்பட வேணாம்..??”
 
“அதெல்லாம் பார்த்துக்கலாம் நீ வா முதல்ல..??” தங்கையை ஆட்டோவில் ஏறச் சொல்ல ,
 
“ஐயோ அண்ணே என்னால உடனேயெல்லாம் வரமுடியாது… அவங்க வரட்டும்.. அதோட அம்மாவும் பாப்பாவும் வெளியில போயிருக்காங்க எல்லாரும் வரட்டும் சொல்லிட்டு பாப்பாவோட போகலாம்..”
 
குணசேகரனுக்கே கோபம் “அவன எல்லாரும் ரௌடி பயன்னு சொல்றாங்க..?? அவனையும் அவன் குடும்பத்தையும் பத்தி உனக்கு என்ன கவலை..?? நீ ஏறு முதல்ல ஆட்டோவுல…??” தங்கை கையை பிடித்து ஆட்டோவில் ஏற்றப்போக அதற்கு குறுக்காய் வண்டியில் தீனா …..!!!!!
 
                                                      இனி……………..???????

Advertisement