Advertisement

எனை மாற்றிய தருணம்
                           அத்தியாயம்  –  9
 
கோபியும் தெருவிற்குள் நுழைய சுமதி வேகமாக வீட்டிற்குள் நுழைந்து கதவை தாழிட்டு கொண்டாள்.. விரட்டி வந்தவன் சுமதியை காணாமல் திகைக்க.. கண்டிப்பா அவ சுமதி தான்.. இல்லாட்டா இவ்வளவு வேகமா ஏன் ஓடி ஒளிய போறா.. ?? பல்லை கடித்தவன் அவ மட்டும் என் கையில மாட்டட்டும்.. இருக்கு அவளுக்கு…!! தெருவை பார்க்க ஆள் அரவும் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது…
 
கண்டிப்பா அவ இந்த தெருவுல தான் இருக்கா..?? விடக்கூடாது கோபி..?? சுற்றிலும் பார்வையிட சற்று தள்ளி ஒரு டீக் கடை இருந்தது.. வேகமாக அந்த டீக் கடையை அடைய ஒரே ஒரு ஆள் மட்டும் டீக் குடித்துக் கொண்டிருந்தான்..
 
அவன் அருகில் சென்று அமர்ந்தவன் தனக்கும் ஒரு டீ சொல்லி.. மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.. நீங்க இந்த ஏரியாவாண்ணே..??”
 
ம்ம்ம்..
 
ரொம்ப வருசமா இந்த தெருவுல தான் இருக்கிங்களா..??”
 
ம்ம்ம்..”  தன் டீயில் மூழ்கியிருக்க,
 
 அப்போ இங்க யார் புதுசா வந்தாலும் உங்களுக்கு தெரியும்தானே..??”
 
ஒன்றும் சொல்லாமல் இருக்க,
 
சரியான திமிர் பிடிச்சவன்கிட்ட மாட்டிக்கிட்டேன் போல.. ஆனா இப்ப இவன விட்டாலும் வேற ஆள் இல்லையே..
 
இல்ல இங்க சுமதின்னு யாராச்சும் புதுசா வந்திருக்காங்களா..??”
 
டீயை குடித்துமுடித்தவன் நிதானமாய் டீ கிளாஸை வைத்தபடி டீக்கடைக்காரரை பார்க்க அவர் வேகவேகமாக கடையை ஏறக்கட்டும் வேலையை பார்க்க ஆரம்பித்தார்… இதை வைத்துத்தானே அவர் பிழைப்பு ஓடுகிறது..
 
என்னங்க ஒன்னும் சொல்லாம இருக்கிங்க..?? பேரு சுமதி.. வயசு ஒரு 23..24 இருக்கும் ஆளு தளதளன்னு இருப்பா..?? நல்ல உயரமா மாநிறமா முடி சுருள் சுருளா இருக்கும்...ஒரு 4..6  மாசமாக போகுது அவ வீட்டவிட்டு வெளியில வந்து … இந்த ஊரையே சல்லடையா சலிச்சுட்டேன் கண்டு பிடிக்க முடியல..
 
இன்னைக்குத்தான் மார்கெட்ல பார்த்தேன்.. விரட்டி பிடிக்கிறதுக்குள்ள எங்க ஓடி ஒளிஞ்சானு தெரியல.. கடைசி நேரத்தில என் கையில இருந்து எஸ்கேப் ஆகிட்டா.. அநேகமா இந்த தெருவாத்தான் இருக்கும்..யார் வீட்ல இருக்கான்னு தெரியல.. என்னங்க கேட்கிறேன் ஒன்னும் சொல்லாம இருக்கிங்க.. வாயத்திறந்துக்கூட சொல்லவேணா அந்த வீட்ட கைய மட்டும் காட்டுங்க.. அவ தலைமுடிய பிடிச்சு இழுத்துட்டு போறேன்..
 
அடுத்து என்ன சொல்ல வந்திருப்பானோ மறுவார்த்தை பேசும்முன் தரையில் கிடந்தான்.. அங்கிருந்த கல்பட்டு நெற்றியில் ரத்தம் கசியத்துவங்கியது..
 
அவனுக்கு முன் ருத்ரமூர்த்தியாய் தீனா.. டீக்கடைக்காரரோ நல்லவேளை எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டோம்.. டீடெய்லு கேட்க நல்ல ஆள பார்த்தான்.. அவன் வீட்ல இருக்க பொண்ண அவன்கிட்டயே கேட்டா..!!
 
ஏய் எதுக்குடா என்னை அடிக்கிற..??” கோபி தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க அடுத்த குத்து அவன் மூக்கில் விழுந்திருந்தது.. அடுத்து அவன் வாயில் அவனது அழகான முகம் அலங்கோலமாகி கொண்டிருக்க..
 
ஒரு பொண்ணு இந்த நிலைமையில இருக்கும்போது அதுக்கிட்ட உன் வேலைய காட்டுவியா..?? அதுவும் என்கிட்டத்தானா அந்தப்புள்ளையப்பத்தி கேட்கிற.. உன்னை..!!”  அடுத்தடுத்த அடிகள் கோபியை நிலைகுலைய வைத்திருந்தது..
 
டிப்டாப்பாய் ஷோக்காய் திரிந்தவனுக்கு தீனாவின் முரட்டு அடிகளை தாங்க முடியவில்லை.. ஏழெட்டு அடிகளிலேயே மயக்கம் வருவது போல கண்ணைக் கட்டியது..
 
இனி ஒரு தரம் இந்த தெருவுல பார்த்தேன் உனக்கு அதுதான் கடைசி நாள் அத மட்டும் தெரிஞ்சுக்கோ…??”வேட்டியை மடித்து கட்டியபடி வண்டியை  வேகமாக ஸ்டார்ட் செய்திருந்தான்..
 
முகமெல்லாம் ரத்தகளரியாய் இருக்க உடைகள் ஆங்காங்கே கிழிந்து  தொங்கிய படி தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவன் அட்ரஸ்தான கேட்டோம் அதுக்கு ஏன் இந்த அடி கொடுத்திட்டு போறான்..!!
 
ஏன்ப்பா உனக்கு அட்ரஸ் கேட்க வேற ஆளே கிடைக்கலையா.. அவன்கிட்ட போய் கேட்கிற..??”
 
ஏன் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்..??”
 
தப்புதான்… நீ தேடி வந்த பொண்ணு அவன் வீட்லதான இருக்கு..
 
இ.. இவன் வீட்லயா..!!”
 
அட ஆமாய்யா..??”
 
ம்ம்ம் இவன் வீடு எங்க இருக்கு..??”
 
ஏன் என் கடை இங்க இருக்கிறது உனக்கு பிடிக்கலையா..?? போ.. நாளைக்கு காலையில இந்த தெருவுல ரெண்டு மூனுதரம் போயிட்டு வா.. அந்த பொண்ண கண்டுபிடிச்சிரலாம்.. இப்ப போன உன் உயிர் உன்கிட்ட இருக்காது.. அவன் கண்ணுல எதுவும் மாட்டி வைக்காத..!!”
 
தன்னை குனிந்து பார்த்தவன் எப்படியும் இப்ப அவ முன்னாடி போக முடியாது.. டேய் என்னையவா அடிச்ச.. வர்றேன்டா..!! இந்த தெருதான.. அவள எப்படி கூட்டிட்டு போறேன்னு மட்டும் பாரு.. ஒருவேள இவன் அவள வைச்சிருக்கானோ…?? அதான் இவ்வளவு கோபம் வருதா..??
 
அந்த பேக்கு அப்படியெல்லாம் தொட ஒத்துக்காதே.. ஆறு மாசமா அவக்கிட்ட நல்லவன் வேசம் போட்டும் அவ கைய மட்டும்தான தொட முடிஞ்சுச்சு.. ஆனா இவன எப்படி தெரியும்..?? அவன் மண்டைக்குள் ஆயிரம் கேள்விகள் அதை விட உடல்வலி நடக்க முடியாமல் நடந்து வந்தவன் வழியில் வந்த ஆட்டோவை மறித்து ஏறியிருந்தான்..
 
வண்டியில் கோபமாய் கிளம்பிய தீனா எங்கெங்கோ சுற்றி வீடு வர இரவை நெருங்கியிருந்தது.. எப்போதும் இரவு சாப்பாடு வெளியில் தான் கூட்டாளிகள் இங்கு வரும்வரை மாடியில் தண்ணி அடித்து ஹோட்டலில்தான் வாங்கி சாப்பிடுவார்கள்.. சில சமயம்தான் பாருக்கு செல்வது.. இப்போதெல்லாம் கூட்டாளிகளை வெளியில் சந்தித்து அவர்களோடு குடித்து ஏதோ சாப்பிட்டு எப்போது வீட்டுக்கு வருவான் அவனுக்கே தெரியாது..
 
இன்றும் அதுபோல பாரில் இருக்க என்னண்ணே குடிக்காம அத வேடிக்கை பார்த்திட்டு இருக்கிங்க..?? யோசனை வேற பலமா இருக்கு..??” கூட்டாளியில் ஒருவன் அவன் கையில் கிளாஸை திணிக்க,
 
என் வீட்ல இருக்க அந்த புள்ளைக்கு யாருமில்ல.. அனாதைன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. இப்ப என்னடான்னா அவள தேடி ஒருத்தன் வந்தான்டா..??”
 
இவர்களுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி.. அப்படியாண்ணே அப்ப அந்த புள்ளைய வீட்ட விட்டு அனுப்பி வைச்சிட்டிங்களா..??” கேட்டவன் கன்னத்தில் தீனா பளாரென ஒரு அறை வைத்திருக்க,
 
அ.. அண்ணே..!!”
 
என்ன அண்ணே.. நொண்ணே அந்த புள்ள அங்க இருக்க முடியாமத்தானே வெளியில வந்திருக்கு.. மறுபடி நான் அனுப்பி வைச்சிருவனா.. தேடி வந்தவனுக்குத்தான் நாலு கொடுத்தேன்.. அவன…??”
 
சனியன்.. காலச்சுத்தின பாம்பு மாதிரி அண்ணன விட்டு தொலைய மாட்டா போலயே.. இனி என்ன பேசினாலும் அடி விழும்.. தீனாவின் குணம் அறிந்தவர்கள் ஆளுக்கு ஒரு வேலை இருப்பதாக நழுவியிருக்க சற்று நேரம் பாரில் இருந்தவன் வீட்டுக்கு கிளம்பியிருந்தான்..
 
வாசல்படியில் குழந்தையோடு அமர்ந்திருந்தவள் எப்போதும் போல மாடிக்கு செல்வான் நினைத்திருக்க சுமதியை பார்த்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்..
 
என்ன இப்படி பார்க்கிறாரு..??
 
என்ன கெழவி காய்ச்சல் விட்டிருச்சா..??”
 
பரவால்ல தீனா..
 
ஏ புள்ள சாப்பாடு போடு..??”
 
நம்மக்கிட்டயா கேட்டாரு..?? இரவு சமையல் அவனுக்காக எதுவும் செய்வதில்லை இருப்பதை வைத்து ராசாத்தியும் சுமதியும் சாப்பிட்டு விடுவார்கள்.. அதை விட இதுவரை தீனா சுமதியிடம் நேரிடையாக எதுவும் கேட்டதில்லை.. குழந்தையை ராசாத்தி அம்மாளிடம் கொடுக்கப் போக,
 
தேன என்கிட்ட தா…??” குழந்தையை வாங்கியபடி மாடிக்கு செல்லவும் ராசாத்தி அம்மாள் மீண்டும் படுத்துக் கொண்டார்..
 
இருந்த பழைய கஞ்சியோடு மிளகாய் வற்றலையும், கருவாட்டுத்துண்டு நான்கைந்தை வறுத்தவள் சின்ன வெங்காயத்தை உறித்து கஞ்சியில் போட்டு தயிரை ஊற்றி தண்ணீரோடு மாடிக்கு எடுத்து சென்றாள்.. பாதிப்படி ஏறும்போதே தீனா குழந்தையோடு பேசும் குரல்..
 
உங்களுக்கு அப்பா இல்லையா..?? நான் வேணா அப்பாவா இருக்கவா?? அ… அப்பா சொல்லுங்க அப்பா..!!” குழந்தைக்கு இணையாக மழலை குரலில் பேசிக் கொண்டிருக்க சுமதி அப்படியே திகைத்து நின்றிருந்தாள்.. இதுபோல எதிர்பார்க்கவில்லை..
 
இவரோட குழந்தைன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாரா..??
 
நீங்க பெரியாளா ஆனா என்னை மாதிரி படிக்காத தற்குறியா இல்லாம பெரிய படிப்பு படிக்க வைப்பேனாம்.. பள்ளிக்கூடத்துக்கு பைக்ல கூட்டிப் போவேனாம்.. நீங்க வருவீங்களா அப்பா கூட …!!” குழந்தைக்கு என்ன புரிந்ததோ..சிரித்தபடி தன் முகத்தை தீனாவின் முகத்தில் வைக்க அவன் தாடி குத்தவும் முகத்தை சுருக்கி சிரித்தபடி அவன் தாடி மீசையோடு விளையாடியது..
 
இதை வளரவிடக்கூடாது வேகமாக மாடி ஏறியவள், இந்தாங்க சாப்பாடு.. தேன தாங்க..??” குழந்தைக்காக கை நீட்ட அது போக மறுத்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டது..
 
என்கிட்டயே இருக்கட்டும் கொஞ்ச நேரம்… ஆமா நீ சொல்லு அன்னைக்கு ராத்திரி நீ ஏன் கைப் பிள்ளையோட வெளியில வந்த..?? எங்க போக வந்த..??”
 
சுமதிக்கு திகைப்பு திடிருன்னு ஏன் இந்த கேள்வி ..?? கோபியை பார்த்தே இன்று முழுவதும் அரண்டு போயிருந்தவள் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.. அதுவும் இத்தனை மாசத்துக்கு அப்புறமா இன்னைக்கு ஏன் இதக் கேட்கிறாங்க..!!
 
உன்னைத்தான் கேட்டேன் உனக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லையா இங்க..??  ஏதாச்சும் பிரச்சனையா சொல்லு..உன் வீடு எங்க இருக்கு..?? யார் இருக்கா அங்க..??”
 
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் நின்றவளை முறைத்தவன் சொல்றியா என்ன புள்ள ..??”
 
வந்த கோபத்தில் வேகமாய் அவள் கையைப்பிடித்து இழுக்க இதை சற்றும் எதிர்பார்க்காதவள் மொத்தமாய் அவன் மேல் சரிந்திருந்தாள்.. விழப்போகும் கடைசி நொடியில் குழந்தை இருக்கிறதே சுதாரிப்பதற்குள் தீனாவே குழந்தையை மறு தொடைக்கு மாற்றியிருந்தான்.. வாகாக அவன் மடியில் விழுந்திருக்க மார்பில் நேருக்கு நேராக மோதியிருந்தாள்..
 
எவ்வளவோ அடிதடி, மது என திரிந்தாலும் இதுவரை பெண்கள் சகவாசம் இருந்ததில்லை.. இவனின் உருவததை பார்த்தோ என்னவோ எந்த பெண்ணும் இவனை நெருங்கியதில்லை.. சொல்லப்போனால் சுமதி ஒருத்திதான் அதிகநாள் இவன் அறிந்த பெண்களில் ஒருத்தி.. எவ்வளவு நேரம் அவன் மடியில் இருந்தாளோ குழந்தையின் குரலில் நினைவு திரும்ப வேகமாக  குழந்தையை அவனிடம் பறித்தபடி கீழே இறங்கத் துவங்கியிருந்தாள்..
 
ஏய்… இங்க பாருபுள்ள சொல்லிட்டு போ.. ஏய்..ஏய்..!!” அவன் குரல் காதில் கேட்டாலும் வேகமாக அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.. அவள் மனம் போகும் பாதையை பார்த்து அவளுக்கே பயமாக இருந்தது..
 

Advertisement