Advertisement

இந்த வீடே ஒரு அரசியல்வாதி இவன் பார்த்த வேலைக்கு கூலியாக கொடுத்திருக்க இது ஒன்றுதான் அவன் சொத்தாக இருந்தது. கூட்டாளிகள்தானே எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு பணம்தான் நண்பர்களையும் பகைவர்களாக மாற்றும் அப்போது புரியவில்லை..
 
மீண்டும் மீண்டும தீனாவிடம் இருந்து போன் வந்திருக்க.. ஒருவன் போனை ஆன்செய்யவும்.. டேய் போன எடுக்க மாட்டிங்களா..?? எங்கடா அவனுக ரெண்டு பேரும்…!!” தீனா கோபமாய்..
 
அ.. அண்ணே தெரியலண்ணே..
 
இன்னும் அரைமணி நேரத்தில அவங்க இங்க இருக்கனும்.. அதோட நான் சொன்ன வேலையும் நடந்திருக்கனும்.. ஏதாச்சும் முன்ன பின்ன ஆச்சு.. தீனாவ பத்தி தெரியும்னு நினைக்கிறேன்..
 
இதோ கிளம்பிட்டேண்ணே.. போனை வைத்தவனுக்கு உள்ளுக்குள் உதறலெடுக்க ஆரம்பித்தது..  
 
டேய் வாங்கடா அண்ணே ரொம்ப கோபமா இருக்காரு.. மத்தத அப்புறமா பேசிக்கலாம்.. அடுத்த அரைமணி நேரத்தில் அவன் சொன்ன பொருட்களோடும் ஆட்களோடும் வந்துவிட்டனர்…
 
தீனாவின் கூட்டாளிகளையும் கூட வந்த ஆண்களையும் பார்த்து தயங்கியவள் ஒரு அறைக்குள் குழந்தையோடு ஒதுங்கிக் கொள்ள ராசாத்தி அம்மாளுக்கோ வியப்பு.. தீனா…” ஏதோ கேட்கப் போனவரை இன்னும் முறைத்துக் கொண்டு திரிந்தான்..
 
போடா டேய்..” கழுத்தை நொடித்துக் கொண்டவர் மறுநாளுக்கான காய்களை வாங்க மார்கெட் கிளம்பினார்..
 
அவர் வருவதற்குள் கதவு போடப்பட்டு ஜன்னல்கள் பாதி மாட்டப்பட்டிருக்க பாத்ரூம் வேலையும் பாதி முடித்திருந்தனர்..
 
இப்போதுதான் ராசாத்தி அம்மாளுக்கு திருப்தி.. ஏன் தீனா நான் சொல்லும் போதெல்லாம் கதவ போடாம இருந்துட்டு இன்னைக்கு என்ன வந்துச்சுன்னு ஒரே நாள்ல எல்லாம நடக்குது..
 
கிழவி நீயெல்லாம இருக்கியே …?? வாய்தான் வேற ஒன்னும் இல்ல..
 
அட இதென்னடா காலக்கொடுமையா இருக்கு.. நான் என்ன பண்ணினேன்..??”
 
போ.. இம்சை.. சும்மாவெலாம் வாய் பேசுவ.. இந்த வீட்டுக்கு ஜன்னல் வேணும்.. கதவு வேணும்னு சொல்லத் தெரியாதா..??”
 
அட  பாவத்த… நான் சொல்லும் போதெல்லாம் வாயமூடு கிழவின்னு எறிஞ்சு எறிஞ்சு விழுவ..?? இப்ப என்னடான்னா எங்கயோ போன மாரியாத்தா என்மேல ஏறாத்தான்னு குதிக்கிற..!!”
 
ம்ம் கிழிச்ச.. முன்ன நான் மட்டும்தான் இருந்தேன்.. இப்பதான் இந்த புள்ள இங்க இருக்குள்ள.. அப்ப சொல்ல மாட்டியா..??”
 
ம்ம் நாங்க என்ன ரெண்டு மூனு மாசம் இருப்போம் அப்புறம் எங்க வீட்டுக்கு போயிருவோம்ல.. அதுக்கு ஏன் இப்ப அவசரம்..??”
 
குழந்தையை சுமதியிடம் இருந்து வெடுக்கென பறித்து தோளில் போட்டவன் சூன்யகாரக்கிழவி இந்த குழந்தையை என்கிட்ட இருந்து பறிக்கிறதே முத வேலையா வைச்சிருக்கு..
 
இம்சை.. போய் தொல உன்கிட்ட வந்து பேச வந்தேன் பாரு.. என் வீடு என் இஷ்டம் நான் கதவு போடுவேன் போடாம இருப்பேன் ..அதெல்லாம் நீ ஏன் கேட்கிற..??”
 
அட அப்பா ரொம்பத்தான்..!!”
 
ஏய் இங்க பாருபுள்ள நாளைக்கு ஒன்னும் நீ குளிக்கவெல்லாம் வேணா.. மீதி வேலைய நாளைக்கு முடிச்சிருவாங்க அப்புறமா குளி.. புரியுதா..??”
 
நாம எப்ப குளிச்சா இவருக்கு என்ன..?? அத இப்ப கேட்டுட்டு..!! ஏதோ போல இருந்தது சுமதிக்கு.. சும்மாவே தீனாவின் கூட்டாளிகள் வந்ததில் இருந்து இவளை முறைத்தபடி இருக்க இதை கேட்கவும் இன்னும் அவர்களின் முகம் விகாரமாய் மாறியது.. ஒருவேளை இவள வைச்சிருக்காரா அண்ணே..?? ராசாத்தி அம்மாளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.. சுமதிக்காகத்தான் இவன் அவசரமா ஜன்னல் கதவு போட்டிருக்கான் போல ,
 
 கதவு ஜன்னலை அடைத்தவள் எப்போது போல அரைகுறை தூக்கம் இல்லாமல் அன்று இரவுதான் நிம்மதியாக கண்ணயர்ந்தாள்.. விடிகாலை மூன்றுமணி போல கண்விழித்தவள் தீனா சொன்னதை மறந்தவளாக குளிக்க கதவை திறக்க.. கதவை மறைத்தாற்போல கட்டிலை போட்டபடி வாசலில் தீனா படுத்திருந்தான்..
 
இதென்ன எப்பவும் மாடியிலதானே படுப்பாங்க..?? இப்ப எப்படி நாம வெளியில போறது.. திகைத்தவள் எப்படி எழுப்புறது..அருகில் சென்று தீனாவை நோட்டமிட ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.. லேசாக பனிகாலம் துவங்கியிருந்தது போல கட்டில் சில்லென்றிருக்க தொடவும் பயந்தாள்..
 
ஏனோ அவனை பார்த்து பயமெல்லாம் இப்போது இல்லை தயக்கம்தான்..மணி 3.30 தாண்டியிருக்க ஏ.. ஏங்க..எழுந்துருங்க..??” அவள் குரல் அவன் காதைக்கூட வந்தடையவில்லை.. அம்மாவ எழுப்பி இவங்கள எழுப்பச்சொல்வோமா..?? ராசாத்தி அம்மாளும் ஆழ்ந்த உறக்கத்தில்.. என்ன பண்ணுவது.. இனி ஆளுக எல்லாம் நடமாட ஆரம்பிச்சிட்டா குளிக்க சிரமமாகிருமே..??
 
தைரியத்தை வரவழைத்தவள் அருகில் சென்று ஏங்க எழுந்திருங்க.. ஏங்க..!!” குரலை உயர்த்தி எழுப்பி பார்த்தவள் முடியாமல் அவனை தொட்டு உலுக்கப் போக என்னவென்று உணர்வதற்குள் கட்டிலில் அவன் மேல் கிடந்தவளின் கையை பின்னால் வளைத்திருந்தான்..
 
அடிங்.. எவன்டா அவன் தே….!!” என்னென்ன கெட்ட வார்த்தைகள் இருக்க அதை ஆரம்பித்திருக்க அச்சோ.. ச்சீ என்ன இது .. என்ன இப்படி பேசுறாங்க..சுமதியால் அசையக்கூட முடியவில்லை.. அவள் இடுப்பையும் இறுக்கிப் பிடித்திருந்தான்..
 
சுமதியின் மென்மை அவன் மேல் பதிந்திருக்க அவள் வாசம் இவனுள் இறங்கத் துவங்கியிருந்தது.. திட்டி தீர்த்தவன் பதிலுக்கு எந்த சத்தமும் வராமல் இருக்க அதைவிட தன்னில் புதைந்திருந்த மென்மை அவள் பெண் என்பதை சொல்லாமல் உணர்த்தியது..
 
தூக்க கலக்கம் சட்டென்று மறைய யாரென்று பார்ப்பதற்குள் முகத்தை அவனிலிருந்து விலக்கியவள் ச்சோ என்ன இது விடுங்க.. விடுங்க..!!”
 
ஏய் என்ன புள்ள…  நீயா..?? உன்னை..??” அவன் திட்ட ஆரம்பிப்பதற்குள் விலகியவள்
 
நா… நான் குளிக்க போனும்...
 
ச்சை இம்சை .. உன்னை என்ன சொன்னேன்… நீ என்ன பண்ற…குளிக்க வேணா சொன்னேன் தானடி…??” பல்லை கடிக்க அவன் எழவுமே அவள் ஓடியிருந்தாள்..
 
ஏய் ஏ.. புள்ள..??” அவன் கூப்பிடும் குரல் கேட்டாலும் ரூமிற்குள் நுழைந்தவள் கதவை திறக்கவில்லை…கதவின் மேல் சாய்ந்து நின்றவளுக்கு மனது படபடவென அடித்தது..
 
அடுத்த பத்துநாட்கள் வேகமாக செல்ல  இந்த இரண்டு நாட்களாக ராசாத்தி அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை.. சுமதியே அனைத்தையும் கவனித்துக் கொள்ள கடைவேலை , வீட்டுவேலை, குழந்தை கவனிப்பு என வேலை சரியாக இருந்தது..
 
எல்லாவற்றையும் திறமையாக முடித்தவள் மார்க்கெட் செல்வது, கடைக்கு போவது என இந்த வெளி வேலைக்கு மட்டும் பயந்தாள்.. கோபி கையில் மாட்டி விடுவோமோ.. அத்தை அண்ணி யாராவது பார்த்துவிடுவார்களோ ஒவ்வொரு நிமிடமும் பயந்து நடுங்கினாள்.. இரண்டு நாட்கள் எப்படியோ சமாளித்துவிட்டாள்..
 
மூன்றாம் நாளும் ராசாத்தி அம்மாளுக்கு சற்று காய்ச்சல் இருக்க வெளி வாடிக்கையை மட்டும் பார்த்தவர் அதற்கு மேல் முடியாமல் படுத்துவிட்டார்.. நாளை கண்டிப்பாக சமைக்க காய்கள் வேண்டும் …. காய்ச்சலுக்கு கஞ்சி காய்ச்சி மாத்திரையை கொடுத்தவர் தானே மார்க்கெட்டுக்கு கிளம்பிவிட்டாள்.. குழந்தையையும் தூக்கி கொள்ள…
 
தேன வேணா விட்டு போ சுமதி நான் பார்த்துக்கிறேன்.. குழந்தைக்கு தேன்மொழி என்று பெயர் வைத்திருந்தான்.. குழந்தையை பொறுத்தவரை முடிவெல்லாம அவன்தான்.. யாரையும் எதையும் கேட்பதில்லை..
 
பரவால்லம்மா நீங்க தூங்குங்க நான் பார்த்துக்கிறேன்.. தெருமுக்கு வரை சென்றிருக்க எதிரில் வண்டியில் வந்து கொண்டிருந்தவன் சுமதியை பார்க்கவும் வண்டியை நிறுத்தியிருந்தான்..
 
எங்க போற..??”
 
இல்ல காய் எதுவும் இல்ல அதான் மார்க்கெட் வர..
 
அதுக்கு ஏன் பாப்பாவ தூக்கிட்டு போற.. கிழவிக்கிட்ட விட்டுட்டு வரவேண்டியதுதான..??”
 
இ..இல்ல அம்மா தூங்கட்டும்னு தான்..
 
சரி தா நான் தூக்கிட்டு போறேன்.. நீ எங்க வேணா போ…?? வாங்க செல்லம்..தேனுக்குட்டி செல்லக்குட்டி அம்முக்குட்டி.. அவனது அவன் குரல் கேட்கவுமே சிரிக்க துவங்கியிருந்த குழந்தை அவன் கொஞ்ச கொஞ்ச அவன் பக்கம் கையை நீட்டியிருந்தது..
 
குழந்தையை வாங்கி வண்டியின் முன்புறம் படுக்க வைத்து அணைத்துப் பிடித்துக் கொள்ள அதுவும் வாகாய் வண்டியின் மேல் படுத்துக் கொண்டது.. வண்டியை கிளப்பி சற்று தூரம் சென்றவன் பின் திரும்பி வந்து மார்க்கெட் எங்கன்னு தெரியுமா..??”
 
ம்ம் அம்மாக்கிட்ட கேட்டுட்டு தான் வந்தேன்.. நேரா போய் வலதுபக்கம் திரும்பி அப்புறமா இடது பக்கம் திரும்பனும்தானே..??”
 
ஆமா அங்க திரும்பு பெரிய குளம் வரும் அதுல முங்கி எழுந்திட்டு வா.. வண்டியில ஏறு பக்கி..!! ஆளும் மண்டையும் பாரு.. ??” வண்டியில் பின்னால் ஏற்றியவன் மார்க்கெட்டில் கொண்டு விட்டிருந்தான்.
 
பாதையை பார்த்துக்கிட்ட தானே திரும்பி வர வழி தெரியுமா..??”
 
சுமதி நாலாபுறமும் தலையசைக்க என்னமோ பண்ணித்தொல..??” குழந்தையோடு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்..
 
அம்மா சொன்ன பாதையை மறந்துட்டோம் போல.. தன் போக்கில் மார்கெட்டிற்குள் நுழைந்தவள் அடுத்த அரைமணி நேரத்தில தேவையான எல்லா காய்களையும் வாங்கியவளுக்கு அதை தூக்கி வர முடியவில்லை.. நல்லவேல பாப்பாவ அவரு வாங்கிட்டு போயிட்டாரு.. இல்லாட்டா ரொம்ப சிரம்மா போயிருக்கும்.. மார்க்கெட்டை விட்டு வெளியில் வந்தவளுக்கு எதிரில் வந்த உருவம் கோபியை போலிருக்க சட்டென்று வேறு கடைக்குள் நுழைந்துவிட்டாள்..
 
கைகால்கள் வெடவெடவென நடுங்க நம்மள பார்த்திருப்பனோ..?? அவன் வேறு கடையில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்க இவள் வேகமாக அந்த இடத்திலிருந்து நழுவ ஆரம்பித்தாள்.. தலையில் சேலையை முக்காடிட்டு வேகமாக நடக்கத்துவங்கியிருக்க பேசியபடி திரும்பி பார்த்தவனுக்கு அது சுமதி மாதிரி இருக்குதே..?? அவளை தொடர ஆரம்பித்தான்..
 
அவளை தேடி தேடி அவனுள் ஒரு வெறியே வந்திருந்தது.. அதைவிட அக்காள் கணவன் செய்த பிரச்சனைகள் அவன் கண்முன்னால்..!! நடக்க முடியாவிட்டாலும் அவன் கையில் மாட்டக்கூடாது அதுவே அவளின் குறியாய் இருக்க பாதி தூரம் ஓடிதான் வந்திருந்தாள்.. வீட்டை அடைந்தவள் கதவை வேகமாக அடைத்திருக்க கோபியும் அந்த தெருவிற்குள் நுழைந்துவிட்டான்..
 
                                            இனி………………..?????
 

Advertisement