Advertisement

சுதா மறுபுறம் திரும்பி படுத்திருந்தாலும் உறங்கவில்லை தெரிந்தது.. அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது புரியாமல் மகளை எதிலிருந்தோ காப்பது போல இறுக்கி பிடித்து படுத்திருந்தவர் எப்படிதான் கண் அசந்தாரோ சற்று நேரத்தில் விழித்துப்பார்க்க மகளை காணவில்லை..   
 
அச்சோ…?” பதறியபடி வெளியில் ஓடிவந்தவர் அந்த இருட்டில் தேட துவங்க சுதா ஏதும் தவறான முடிவெடுத்துவிட்டாளோ..?? சுதா சுதா..” கத்தியபடி அந்த இருட்டில் தேடி தேடி அந்த குளத்தின் அருகில் வர குளத்தில் யாரோ குதிப்பது போல தொப்பென்ற சத்தம் கேட்கவும் மகள்தான் இந்த காரியத்தை செய்துவிட்டாள் புரிந்தவர் அவள் இல்லாத உலகில் தனக்கும் இடமில்லை என்றுணர்ந்து கடைசி நேரத்தில் தன் பேத்தியின் முகத்தையும் சுமதியின் முகத்தையும கண் முன் கொண்டு வந்தபடி தானும் அந்த குளத்தில் குதித்திருந்தார்…சுதாவும் கமலாவும் மூச்சுக்காற்றுக்கு ஏங்கி இரண்டு மூன்று முறை மேலெழுப்பி பின் கீழே செல்ல,
 
சற்று நேரம் சென்றிருக்கும்… அந்த நேரத்தில் இரவு ரோந்திற்கு வந்து கொண்டிருந்த போலிஸ் ஜீப் குளத்தின் முன்பு வந்து வேகமாக நிற்கவும் அதில் இருந்து இரண்டு போலிஸ்காரர்கள் இறங்கினார்கள்..
 
முன்புறம் இருந்து இறங்கிய திலகவதி தூரமா இருந்து பார்க்கும் போது யாரோ தண்ணியில குதிச்ச மாதிரி சத்தம் வந்துச்சு யாருன்னு பாருங்க..??” அவர்களை தண்ணீரில் குதித்து தேடச்சொல்ல இரண்டு பேரும் குளத்தில் குதித்திருந்தார்கள்.. நீண்ட நேர தேடலுக்கு பின் இருவரும் கமலா சுதாவோடு வெளியில் வர,
 
ஒருத்தங்கதான குதிச்ச மாதிரி இருந்திச்சு .. ரெண்டு பேரா..?? மெல்ல கரைப்பக்கமா கொண்டு வாங்க… அவர்கள் இருவரின் தலைமுடியை கொத்தாக பிடித்தபடி கரைக்கு கொண்டு வர தன் கையிலிருந்த டார்ச்சை அவர்களை நோக்கி அடித்தவர் முகத்தில் படிந்திருந்த முடியை ஒதுக்கிவிட இருவரையும் பார்க்கவும் துணுக்கென்று இருந்தது.. இவங்களா..??”
 
ம்ம்ம் வேகமா ஜீப்பில ஏத்துங்க..??”
 
 தன் குடும்ப டாக்டருக்கு போன் செய்தவர் ம்ம்ம் சீக்கிரமா வீட்டுக்கு வந்துருங்க..?? ம்ம்ம்.. எனக்கு ரொம்ப வேண்டியவங்க.. இன்னும் சற்று நேரம் பேசியவர்.. டிரைவரிடம் ஜீப்ப வீட்டுக்கு விடுங்க..??” தன்னை அறியாமல் சுதாவை வருடியது திலகவதியின் கைகள்… சுதாவின் வாழ்க்கையை மாற்றும் தருணமாக இது அமையுமா..??
 
……………………………………………..
 
சுமதியின் கைவிரலை சுவைத்த குழந்தை லேசாக கண் அசந்திருக்க இப்போதுதான் சுமதிக்கு தன் நிலை புரிந்தது… நாம சாகத்தானே வந்தோம்.. இப்போ இந்த பாப்பாவ என்ன பண்றது..?? ஏனோ குழந்தைவிட்டு பிரிய மனம் இடம்தர வில்லை.. சுற்றுப்புறத்தை பார்த்தவளுக்கு அப்போதுதான் ஒரு பத்துவீடுகள் தள்ளி தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வீடும் இங்கு இருப்பது நியாபகத்திற்கு வந்தது..
 
முதல்ல அந்த அக்கா வீட்டுக்கு போய் பாப்பாக்கு பால் வாங்கி கொடுப்போம் மத்தத அப்புறமா யோசிச்சுக்குவோம்.. செல்லக்குட்டி கொஞ்சம் பொறுத்துக்கோங்கடா.. அடுத்த தெருதான் அந்த அக்கா வீடுன்னு நினைக்கிறேன்.. அவள் அடுத்த தெருவிற்குள் நுழைய இங்கு சுதாவையும் கமலாவையும் ஏற்றிக் கொண்டு போலிஸ் ஜீப் திலகவதியின் வீட்டை நோக்கி வேகமாக சென்றது..
 
ஊரே ஆழந்த உறக்கத்தில் இருக்க சுமதி அந்த பெண்ணின் வீட்டை நோக்கி நடக்க துவங்கினாள்.. திடிரென திருப்பத்தில் இருந்து தன்னை நோக்கி யாரோ ஓடி வரும் சத்தம்… என்னவென உணர்வதற்குள் மூச்சுவாங்க வந்து கொண்டிருந்த தீனா சுமதியின் மீது மோதியிருக்க குழந்தையோடு மூவருமே கீழே விழுந்திருந்தார்கள்..
 
அந்த நேரத்தில் திடிரென இப்படி ஒருவன் மோதுவான் என்று எதிர்பார்க்காதவள் கடைசி நேரத்தில் சுதாரித்து குழந்தை தரையில் விழாமல் பிடித்திருக்க அதுவரை உறங்கி கொண்டிருந்த குழந்தை லேசாக அழுகையை ஆரம்பித்திருந்தது..
 
ஆத்தி மலை மேல மோதுன மாதிரியில்ல இருக்கு..?? இவன் மனுசன் தானா இல்ல காத்துகருப்பு ஏதுமா..?? தீனாவை தன் குண்டு கண்களால் அந்த இருட்டில் முறைத்தவள் எதுக்கும் கால் இருக்கான்னு பார்த்துக்குவோம்… ஸ்ஸ்ஸ் அப்பாடா இருக்கு அப்ப மனுசன் தான் போல ஏங்க உங்களுக்கு கண்ணு தெரியாதா..??” குழந்தை அணைத்துப்பிடித்தபடி தீனாவிடம் விசாரனையில் இறங்க தீனா அப்படியே குப்புற விழுந்தபடி எழாமல் படுத்திருந்தான்..
 
என்னாச்சு..?? ஏங்க ஏங்க..??” அவனை தட்டி எழுப்ப…
 
ம்ம்..” லேசாக முனங்கியபடி திரும்பி படுத்தவன் உடலெங்கும் அரிவாள் வெட்டு.. எத்தனை இடங்களில் என்ற கணக்கே இல்லாமல் ஏகப்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் வெள்ளை நிறச்சட்டை ரத்தத்தில் குளித்திருக்க அந்த லேசான தெருவிளக்கின் வெளிச்சத்தில் தீனாவை பார்த்தவள் குழந்தையை இறுக்கி பிடித்தபடி அலறியிருந்தாள்..
 
இவளின் அலறலில் லேசான உணர்வுக்கு வந்தவன் மெதுவாக கண்திறந்து பார்க்க தன் முன்னால் ஒரு பெண் கைக்குழந்தையோடு.. அந்த குழந்தை வேறு வீறிட்டு அழுது கொண்டிருக்க சுமதியும் பயத்தில் கத்திக் கொண்டிருந்தாள்..
 
ஏய்ய்ய்ய்ய்… வாய மூடு..??” அவனின் அதட்டலில் அவள் பயந்து வாய்மூடியிருக்க… குழந்தை அழுகையை நிறுத்தவில்லை… தீனாவின் முகமெங்கும் ரத்தம்.. எங்கிருந்து வருகிறதென்றே தெரியவில்லை…
 
போன் வச்சிருக்கியா..தா ..?? ஒரு போன் பண்ணிட்டு தர்றேன்… சுமதி அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க வாய் மட்டும் அசைவது புரிந்தது..
 
ஏய்…… ஏய்….ஏய்ய்ய்ய் லூசு..” அவள் கையில் லேசாக ஒரு அடி வைத்திருக்க…
 
பே.. பேய்… பேய்… அவன் ரத்த முகத்தை பார்த்து அலற துவங்கியிருந்தாள்… அவனுக்கு இருந்த உடல் வேதனையில் இதென்னடா இம்சை மெதுவாக எழ முயல அவன் அடித்திருந்த சரக்கின் வேகமும் இவ்வளவு நேரமும் அவர்களிடமிருந்து ஏகப்பட்ட அரிவாள் வெட்டு வாங்கி தப்பி ஓடிவந்ததில் மூச்சுவிடவே சிரமப்பட இதில் சுமதியின் அலறல் வேறு எரிச்சலை கிளப்பியது..
 
ஏய் வாய மூடுடி..??” அவளை நோக்கி கையை நீட்ட மீண்டும் அவன் அதட்டலில் அமைதியானவள் தன்னை நோக்கி நீட்டப்பட்டிருந்த கையை பயத்துடன் பார்த்தாள்..
 
 என்ன பார்க்கிற..?? தூக்கிவிடு பிடி..” கைகளை நீட்டியபடியே இருக்க..
 
தூக்கிவிடவா…?? மலையை தூக்கிவிட முடியுமா.. இருந்தும் அவன் உடலில் இருந்த காயங்கள் அவன் மேல் பரிதாபத்தை உருவாக்க ஒரு கையால் குழந்தையை இறுகப்பிடித்துக் கொண்டு மறுகையை அவன்புறம் நீட்டியிருந்தாள்..
 
அவனின் பெருமுயற்சியோடு சுமதியின் சிறுமுயற்சியும் சேர மெதுவாக எழ முயலும் போதே தூரத்தில் ஐந்தாறுபேர் ஓடிவரும் காலடி சத்தம்.. தீனா எழுவதற்குள் இவர்களை சுற்றி வளைத்திருக்க சுமதியின் கையை விட்டவன் நீ ஓடிரு..?? போ.. அவளை தள்ளி விட கீழே விழப்போய் கடைசி நேரத்தில் சுதாரித்திருந்தாள்..
 
அதற்குள் அந்த ரௌடிகளின் தலைவனும் அவர்களிடம் வந்திருக்க இப்போது சுமதியும் அவர்களிடம் மாட்டிக் கொண்டாள்..
 
டேய் யார்டா இவ..? இவன்கூட இருக்கா..?”
 
அண்ணே தெரியலண்ணே இவளப்பார்க்கத்தான் இந்த பக்கம் ஓடி வந்திருப்பானோ…!! பிள்ளை வேற இருக்கும் போலண்ணே.. இவன் பொண்டாட்டியா இருக்குமோ..!!”
 
டேய் விடுங்கடா அவள …?? அவ யாருண்ணே எனக்கு தெரியாது… ஏய் என்ன பார்த்துட்டு இருக்க ஓடு..??”
 
எங்கே ஓடுவது அவள்தான் அவர்களிடம் வசமாக சிக்கியிருந்தாளே…?? என்ன நடக்கிறதென்றே சுமதிக்கு புரியவே இல்லை.. ஏன் தன்னை பிடித்திருக்கிறார்கள்… குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டவள் விடுங்க விடுங்க..” அலறிக் கொண்டிருக்க… தலைவனோ வேறொருவனுக்கு போன் செய்து விசயத்தை சொல்ல
 அந்த தலைவனுக்கு மறுபுறம் என்ன கட்டளை வந்ததோ…
 
டேய் ரெண்டு பேரையும் போட்டுத்தள்ள சொல்லிட்டாங்க…?? போடுங்கடா அவன…?? இவளையும் போட்டுத்தள்ளுடா..!!”
 
தலைவனின் கட்டளையில் தீனாவுக்கு இன்னும் ஏழெட்டு வெட்டுக்கள் விழுந்திருக்க மீண்டும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்திருந்தான்.. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே சாவு என்பது போல.. பலபேரின் சாபத்தை வாங்கியிருந்தவனுக்கு அந்த கத்தியே பதில் சொல்ல துவங்கியிருந்தது..
 
சுமதியை பிடித்திருந்தவனோ தன் கையில் வைத்திருந்த கத்தியால் சுமதியையும் குத்தியிருக்க தீனாவை அவர்கள் அரிவாளால் வெட்டுவதை அதிர்ச்சியில் பார்த்திருந்தவள் என்னவென்று உணர்வதற்குள் கத்தி அவள் வயிற்றில் இறங்கியிருந்தது.. கத்தியை வெளியில் எடுத்தவன் மீண்டும் ஒருமுறை அவளை கத்தியால் குத்தி தீனா மீது தள்ளிவிட அப்போதும் கூட குழந்தையை கைவிடாதவள் அலறியபடி குழந்தையோடு தீனாவின் மீது விழுந்திருந்தாள்..
 
அண்ணே இந்த குழந்தை… அதையும் கொன்னுருவமா…??”
 
டேய் இன்னும் பத்துநிமிசத்துல கத்தி கத்தியே அது செத்துப்போகும்… வாங்க போவோம்.. தீனாவின் முகத்தை செருப்பு காலால் திருப்பி பார்க்க எந்த அசைவும் இல்லை…. அனைவரும் கிளம்பியிருந்தார்கள்.. குழந்தை மட்டும் வீல் வீலென்று கத்திக் கொண்டிருக்க இவர்கள் சண்டையிடும் போதே விழிந்திருந்த ஒன்றிரண்டு பேரும் வெளியில் வர பயந்து கதவடைத்திருந்தார்கள்…
 
எவ்வளவு நேரம் அழுததோ குழந்தையும் மயங்கிய நிலைக்குச் செல்ல… வானமும் லேசாக அழுதது போல மழை தூர ஆரம்பித்தது… சடசடவென மழைத்துளிகள் தீனாவின் முகத்தில் விழ தீனாவிற்கு லேசாக உணர்வு திரும்ப ஆரம்பித்தது..
 
உடம்பே ரணமாய் இருக்க பலமுறை இதுபோல நிகழும்தான் அப்போது அவன் கூட்டாளிகளும் இருக்க சேதாரம் இவர்கள் பக்கம் பெரும்பாலும் இருந்ததில்லை.. இன்று போல என்றும் நடந்ததும் இல்லை.. தன் மேல் விழுந்து கிடந்த சுமதியை மறுபக்கம் புரட்டியவன் எழ முயல அப்போதும் சுமதி குழந்தையை விடவில்லை.. சுமதியின் முந்தானை குழந்தை மேல் மூடியது போல் கிடந்ததால் இந்த மழைத்துளிகள் குழந்தை மேல் அதிகம் படவில்லை.. அவள் மார்புகூட்டுக்குள் பொத்தி வைத்திருந்ததால் அடியும் படவில்லை..
 
எழுந்து நின்றவன் தன் மேல் விழுந்த மழைத்துளியால் முகத்தை துடைத்து உணர்வுக்கு வர முயன்று சுமதியையும் எழுப்ப முயன்றான்.. அதிக தைரியம் கொண்டவன்தான்.. சிறுவயதில் இருந்தே தன்னை தானே செதுக்கி கொள்வதால் எப்போதும் தைரியத்தை இழக்க மாட்டான்..
 
அவனுக்கே தெரிந்தது இன்னும் பத்து இருபது நிமிடங்களுக்குள் ஏதாவது செய்ய வேண்டும்… மயக்கம் வருவது போலிருக்க தன் முகத்தில் விழுந்த மழைத்துளியால் மயக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்…
 
ஏய்… ஏய்…ஏ..புள்ள.. இங்க பாரு.. ஏய்..??” சுமதியின் கன்னத்தை தட்ட… ஓடுன்னு தான சொன்னேன்… ஓடாம என்னை வெட்டுனதை வேடிக்கை பார்த்துட்டு இருந்த…. ஏய்..” அவன் பேசியது ஏதும் கேட்கவில்லை சுமதிக்கு.. ஏற்கனவே பலவீனமாக இருந்தவள் இப்போது ரத்தம் வேறு போய்க் கொண்டிருந்தது..
 
விளக்கு வெளிச்சத்தில் சுமதியின் வயிற்றில் இருந்து ரத்தம் வருவதை பார்த்தவன் அவள் முந்தானையை கிழிந்து வயிற்றோடு சேர்த்து கட்டுப்போட்டு நாடித்துடிப்பை பார்க்க அது துடிப்பது கேட்டது…
 
ஏய்… ஏய்,… இங்கபாருபுள்ள..??” மீண்டும் எழுப்ப…. ம்கூம் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை..  மயங்கி கிடந்த குழந்தையை சுமதியின் மேல் படுக்க வைத்தவன்.. இருவரையும் சேர்த்தணைத்து தூக்கியிருந்தான்.. இந்த தருணத்திலிருந்து தீனாவின் வாழ்க்கை மாறுமா..?? அந்த மாற்றத்திற்கு சுமதியும் குழந்தையும் துணையிருப்பார்களா…!!
 
                                                             இனி……………..?????

Advertisement