Advertisement

எனை மாற்றிய தருணம்
                             அத்தியாயம்  –  4
 
சுமதி எவ்வளவுதான் பொறுத்து போனாலும் அண்ணி , அத்தை இருவரின் பேச்சும் அளவுக்கு மீற பாதி நேரம் அவளுடைய ஒழுக்கத்தை வைத்தே பேசினார்கள்..  அண்ணனிடம் சொல்லி தன்னால் இருவருக்கும் பிரச்சனை வருவதையும் விரும்பவில்லை.. முடிந்த அளவு பொறுத்து போனாலும் பாதி நேரம் அழுகையில் கரைந்தாள்..
 
தாய் தகப்பன் இல்லாதவளை எந்த நேரமும் வார்த்தைகளால் குதறி எடுக்க சுமதியால் தாங்கமுடியவில்லை. வீட்டிலும் வேலை, கார்மென்ஸிலும் வேலை  மனதிற்கும் நிம்மதி இல்லாமல் வயிற்றிற்கும் சாப்பாடு இல்லாமல் சுமதிக்கு ஒவ்வொரு நாளும் நரகமாகத்தான் இருந்தது..
 
இருந்தாலும் கோபி தனக்காக ஏதாவது செய்வான் நல்ல முடிவெடுப்பான் என்ற நம்பிக்கையும் இருந்தது.. இவள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததில் இருந்து கோபியிடம் பேசவே நேரம் இல்லை… வேலையே சரியாக இருக்க அப்படி ஏதாவது பேச நினைத்தாலும் அத்தையின் கோபத்திற்கு பயந்தே இருவரும் பேசிக் கொள்ளவில்லை..
 
குணசேகரன் வேலை விசயமாக 10 நாள் வெளியூர் செல்வது போலிருக்க ஊருக்கு போகும் முதல்நாளே தங்கையை வந்து சந்தித்திருந்தான்.. தங்கை கையில் 500 கொடுத்தவன்,
 
 நான் நடக்கிறத எல்லாம் பார்த்துட்டுத்தான்தா இருக்கேன்..?? நீ கோபிய விரும்பினன்னு சொல்லவும்தான் என்னால அவங்க கூட சண்டை போட முடியல.. என்னைக்கிருந்தாலும் நீ வாழப்போற வீடுன்னு நினைச்சேன்.. ஆனா இந்த கோபிய விசாரிச்ச வரைக்கும் யாரும் எதுவும் நல்லதா சொல்லல..!!
 
ஏய் கழுதை அதுக்கு ஏன் முகம் வாடுது.. ?? நான்  ஊருக்கு போயிட்டு வந்து முன்ன அவங்க குடியிருந்த ஏரியாவுக்கு போய் நல்லா விசாரிச்சிருறேன்டா.. அப்புறமா முடிவெடுக்கலாம். அதுவரை நீ இந்த ராட்சசி கூட்டத்துக்கிட்ட கொஞ்சம் பொறுத்து போ.. யார் என்ன சொன்னாலும் அண்ணனுக்காக பொறுத்துப்போத்தா..!! நான் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்.. இந்த பணத்தை வைச்சுக்கிட்டு உனக்கு வேண்டியத வாங்கி சாப்பிடு.. கையும் காலும் பாரு குச்சிகுச்சியா இருக்கு..
 
தங்கையை நினைத்து அவனுக்கு கவலையாக இருந்தது.. இப்படி எல்லார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அமைதியா இருந்தா இந்தா பாழப்போன உலகத்துல இவ எப்படி இருப்பா..?? நான் இருக்கும் போதே அந்த பாடு படுத்துதுக.. ஆண்டவா இந்த பத்து நாளும் நீதான் இந்த புள்ளைக்கு துணையா இருக்கனும்.
 
அண்ணன் ஊருக்கு போய் வெற்றிகரமாக நான்கு நாட்கள் முடிந்திருக்க இந்த நான்கு நாட்களுள் சுமதி மேலும் ஒரு சுற்று மெலிந்திருந்தாள்..
 
ஏய் மனோ உன்புருசன் ஊருக்கு போனதோட உன் நாத்தனார அந்த கோனாருக்கு கல்யாணத்தை பண்ணி வைச்சிருவோம்டி..?? இத விட்டா நல்ல சான்ஸ் ஏதும் இல்ல..!!”
 
அம்மா அவரு வேணான்னு சொல்லிட்டாருல்ல..?? மீறி நாம ஏதாவது செய்ய போய் பிரச்சனையாகிரும்மா…??”
 
என்னடி பிரச்சனையாகுது..?? மிஞ்சி போனா ரெண்டு திட்டு திட்டி அடிப்பாரா..!! இந்த அம்மாவுக்காக வாங்கிக்க.. அதோட இந்த கோபிப்பய உன் நாத்தனார பார்க்கிற பார்வையே சரியில்ல..இவன் பாட்டுக்கு அவள தொட்டுக்கிட்டு வைச்சா அப்புறம் என் கனவு அவ்வளவுதான்.. அவன கொஞ்சம் கவனிச்சுக்கோ..??”
 
ம்மா தம்பியை பத்தி நீயே குறை சொல்லாத..?? அவன் அப்படி பட்டவன் இல்ல..??”
 
அடி நீ சும்மா இரு.. அவனப்பத்தி உனக்குத் தெரியாது..?? அத உனக்கு விளக்கமா சொல்ல இப்ப நேரமும் இல்ல.. எத செஞ்சாலும் உன்புருசன் வர்றதுக்குள்ள சீக்கிரமா செய்யனும்.. நான் போய் அந்த கோனார பார்த்துட்டு வர்றேன்.. இன்னைக்கு நாளைக்குள்ள அவளுக்கு கல்யாணத்தை முடிச்சு வைச்சிரனும்.. உன் புருசன் போன வேகத்துல வேலையை முடிச்சிட்டு சீக்கிரமே வந்தாலும் வரலாம். அதுக்குள்ள என்காரியத்தை முடிச்சிரனும்..
 
அம்மா நீ என்ன சொன்னாலும் எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.. அவரு கோபத்துல என்னை வீட்ட விட்டு வெளிய விரட்டிட்டா என்ன பண்றது…??”
 
நீ கவலைப்படாத உன் புருசன் வீட்டவிட்டு வெளியில அனுப்பினா என்ன??.. எனக்குத்தான் நிலமும் நகையும் வரப்போகுதுல அதை வைச்சுக்கலாம்..!! ஆனா அப்படியெல்லாம் உன்புருசன் உன்னை வீட்டு விட்டு வெளியில அனுப்ப மாட்டாருடி..
 
என்னையும் உன் தம்பியையும் வேணா விரட்டலாம்.. அதுக்குள்ள எனக்கு வேண்டியதை முடிச்சிருறேன்.. அவர் வேகமாக வெளியில் செல்ல மனோகரிக்கு தன் கணவனை நினைத்துப் பயமாக இருந்தாலும் நாத்தனார் இந்த வீட்டைவிட்டு தொலைந்தால் போதும் என்றிருந்தது..
 
மறுநாள் காலை வேலைக்கு செல்லும் போதே சுமதிக்கு காய்ச்சல் வருவது போலிருக்க அங்கிருந்து வேலையே பார்க்க முடியவில்லை .. மதியம் வரை பொறுத்தவள் அதற்கு மேல் முடியாமல் 3 மணி போல வீட்டுக்கு வர.. உள்ளே அத்தை கோபியின் குரல் சத்தமாக கேட்டது..
 
அம்மா… அத்தான் வர்றதுக்குள்ள நீங்க சுமதிக்கு கல்யாண ஏற்பாடு பண்றது ரொம்ப தப்பும்மா..?? அவருக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிரும்..??”
 
வெளியில் இருந்து அனைத்தையும் கேட்டவள் அதிர்ச்சியாகி எனக்கு கல்யாணமா..?? யார்கூட..?? ஒருவேளை கோபி அத்தான் கூடவா..?? மனம் சில்லென்றிருக்க அத ஏன் அண்ணன் வர்றதுக்குள்ள பண்ணனும்.. அண்ணன்தான் என் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரே..!! பரவால்ல அத்தைக்கிட்ட இவங்க கரெக்டாத்தான் பேசுறாங்க.. மனதிற்குள் இன்னும் இன்னும் கோபி மேல் காதல் பெருக… மனம் மகிழ்ச்சியில் திளைத்தது..வாயெல்லாம் பல்லாக சிரிப்பு தாளவில்லை.. அண்ணன் நினைக்கிறாப்போல இல்லாம இவங்க நல்லவங்கதான் போல..
 
கதவை தட்ட கையை ஓங்கப்போக டேய் நீ ஏன் அவளுக்கு இப்படி சப்போர்ட் பண்றன்னு தெரியும்.. நீ வாயமூடு..?? பெத்தபிள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன்.. என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..!! ஏன் அங்க தெரு சிரிச்சது பத்தாதா இங்கயும் உன் வேலையை காட்டனும்னு நினைக்கிறியா..?? தெரியும்டா அங்க எத்தனை பொண்ணுகள என்னென்ன வேலை பார்த்தன்னு.. அங்க அடி வாங்கினதெல்லாம் பத்தாதா..?? இங்க உன் அக்கா புருசன்கிட்டயும் நல்லா செமத்தியா வாங்கனுமா..??”
 
அம்மா.. தம்பி விரும்பினா சுமதியையே கல்யாணம் பண்ணிக்கட்டுமே..?? ஏதோ ஒரு வயசான கிழவனுக்கு ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்றதுக்கு இங்கயே இவன கட்டிக்கிட்டு நம்ம காலடியில அடிமையா கிடந்துட்டு போறா…!!”
 
ஏய் மனோ இவனா அவள விரும்புறவன்..??  இவன் மூஞ்சியும் மொகரையும் பாரு..?? அந்த தெருவுல இவன் எத்தனை பொண்ணுககிட்ட என்னென்ன வேலைப் பார்த்தான்னு தெரியுமா…? அப்படி இவன் அவள கட்டினா அது உனக்குத்தான்டி வினை..!!
 
 அவள வைச்சு குடும்பமா நடத்துவான்..!! இப்ப வேணா கேட்டுப்பாரு அவள கட்டிக்கிற எண்ணமெல்லாம் இருக்காது.. வேணா வப்பாட்டியா வைச்சுக்கலாம்.. கிழக்கு சீமையிலே படத்துல பாண்டியன் அஞ்சாறு பொண்ணோட திரிவான் பாரு அதுமாதிரி திரியத்தான் ஐயாவுக்கு ஆசை..!!
 
 அங்க எத்தனை பொண்ணுகளோட சினேகிதம்னு உனக்கு தெரியுமா..?? சம்பாரிச்ச காசு ஒத்தப் பைசா இல்ல.. எல்லாத்தையும் பொம்பளைககிட்ட கொடுத்திட்டு அவளுக காலடியில கிடப்பான்..  எந்த சீக்க இழுத்துட்டு வரப்போறான்னு தெரியல..
 
எல்லா பொம்பளைக கிட்டயும் ஒரே மாதிரி நடக்கனும்னு நினைச்சா சும்மா   விடுவாளுகளா.. அதான் ஒருத்திக்கிட்ட தப்பா நடக்கப்போய் அவன முச்சந்தியில கட்டிவைச்சு செருப்பாலே அடிச்சி அந்த ஏரியாவ விட்டு விரட்டி விட்டாங்க..!! வயசு பொண்ணா இருந்ததால அவ அப்பன் போலிஸ்க்கு போகல.. இல்ல இப்ப உன் தம்பி ஜெயில்ல கம்பி எண்ணிக்கிட்டு இருக்கனும்..??
 
இவன் உன் நாத்தனார கட்டினா உன் வாழ்க்கைக்கும் வினை வைச்சிருவான்டி… பேசாம இரு.. அதோட எனக்கு கிடைச்ச இந்த வாய்ப்பை நான் தவற விடுறதா இல்ல.. இவனால பத்து ரூபாய்க்கு பிரயோசனம் இல்ல.. இனி இவன நம்புறதுல வேலையும் இல்ல.. இவன் உன் நாத்தனார கட்டிக்கிட்டு போயிட்டா அந்த நிலமும் நகையும் என் கைக்கு எப்படி வரும்.. இவன் வேற பொண்ணப் பார்த்துக்குவான்.. நீ வேலையைப்பாரு..!!”
 
கேட்டிருந்த மனோகரிக்கே அதிர்ச்சி என்றால் சுமதிக்கு தலையில் இடி இறங்கினாற்   போலிருக்க அங்கேயே அமர்ந்துவிட்டாள்.. எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பாளோ… அண்ணன் பிள்ளைகள் வந்து அத்தையின் கைப்பிடித்து வீட்டின் உள்ளே இழுத்துச் செல்ல…
 
கோபி இப்படி பட்டவனா…?? இவன நம்பி நம்ம வாழ்க்கையையே ஒப்படைக்க இருந்தோமே..!! அண்ணியும் அத்தையும் ரெண்டாந்தாரமா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களோ..?? எவ்வளவு நேரம் கடந்ததோ வீட்டு வேலைகளை கை பார்த்துக் கொண்டிருந்தாலும் கவனம் குடும்பத்தினர் மீது தான்
 
தனக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகிறது உணர்ந்தவள் அண்ணனுக்கு போனடிக்க இவளது கெட்ட நேரமோ என்னவோ அவனது போன் ஸ்விட்ச் ஆப்…!! பலமுறை முயன்றவளுக்கு அழுகை தாங்கவில்லை.. அண்ணனை விட வேறு உறவு யாரையும் தெரியாது.. கடவுளே உனக்கு நான் என்ன பண்ணினேன் ஏன் என் வாழ்க்கையில இவ்வளவு விளையாடுற!!..கண்ணீர் நிற்கவே இல்லை..
 

Advertisement