Advertisement

உன் போன்ல உன் போட்டோ மட்டும் இவ்ளோ இருக்கு நீயும் அவனும் சேர்ந்து ஒரு போட்டாக்கூடவா எடுக்கல..??”
 
இல்ல நிறைய எடுத்தோம்.. எல்லாம் அவங்க போன்லதான்.. நான்தான் எப்பவாச்சும் அம்மா பார்த்தா மாட்டிக்குவோம்னு என் போன்ல எடுக்கல.??”
 
பாவி மக படிப்பான்னு தான்மா அந்த பாழாப்போன போனை வாங்கிக் கொடுத்தேன்.. இப்படி சீரழிஞ்சு போய் நிற்கிறாளே..!!”
 
படித்த பெற்றோர்கள் இருக்கும் வீட்டிலேயே பிள்ளைகள் தருதலையாய் இருக்க எழுத படிக்காத இந்த தாய் என்ன செய்ய முடியும்….ம்ம் சொல்லு வேற என்னலாம் சொல்லியிருக்கான்.. உன்னை தொட்டுருக்கானா..??” கேள்வி கேட்டு முடிக்கவில்லை சுதாவும் கமலாவும் ஓவென்று அழ.. அதிலேயே அந்த கேள்விக்கான விடை தெரிந்தது..
 
ம்ம்ம் சொல்லுங்க எத்தனை மாசம் இப்போ..??”
 
இவ மூனுமாசமா வீட்டுக்கு ஒதுங்கலைன்னு சொல்றா..?? ஆனா எத்தனை மாசம்னு தெரியலைம்மா..??”
 
ப்பச்.. என்ன பொண்ணு நீ..?? வயசு பதினைஞ்சு ஆச்சு.. படிச்சிருக்க இதுக்கூடவா தெரியாது..?? சரி சொல்லு இதப்பத்தி எப்பவாச்சும் அவன் கிட்ட பேசியிருக்கியா.. இல்ல அவன் கேட்டிருக்கானா..??”
 
ம்ம் நேத்துத்தான் கேட்டாங்க.. நான் சொல்லவும் அடுத்தவாரம் அவங்க வீட்லயிருந்து பொண்ணு கேட்டு வரேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க..கண்டிப்பா வருவாங்க..!!”
 
கிழிச்சான்.. பதினைஞ்சு வயசு பொண்ண தொட்ருக்கான்.. சரியான ப்ராடு.. பொம்பள பொறுக்கி.. இப்படி ஏமாந்து போய் நிக்குற…??”
 
இல்ல கண்டிப்பா வருவாங்க..!!”
 
ச்சீ வாயமூடு அவனுக்கென்ன மரியாதை.. படிக்கிற வயசுல என்னென்ன வேலை பார்த்து வைச்சிருக்க..?? உங்க அம்மாவ பாரு.. அவங்க வீட்டு வேலை பார்த்து தானே உன்னை படிக்க வைக்கிறாங்க.. அந்த அறிவுகூடவா உனக்கு இல்ல … ??” போனை எடுத்து நான்கைந்து பேருக்கு பேசியவர்.. ஹாஸ்பிட்டல்ல போய் செக் பண்ணுங்க.. ரிப்போர்ட் வரட்டும்..??”
 
எப்படி அவனை கண்டுபிடிப்பது.. இவர் யோசனையில் இருக்க .. எவ்வளவு சொல்றோம் பெண்கள் இது போல சோசியல் மீடியால கவனமா இருங்க.. கவனமா இருங்கன்னு.. அவன்கிட்ட பேசினது கூட தப்பில்ல ஆனா அவன வீட்டுக்கே வரச் சொல்லியிருக்க.. உன்னல்லாம்.. அவள் போனை முழுதும் ஆராய்ந்தவர்.. அனைவருக்கும் போட்டோ அனுப்பி உள்ளதும் சகஜமாக பேசியிருப்பதும் தெரிந்தது..
 
இந்த ஊர்காரன்னு சொல்ற.. எந்த ஏரியான்னு சொல்லியிருக்கான்னா..?? அவன் பேம்லிபத்தி.. அவங்க போட்டோஸ் எதாச்சும் உன்கிட்ட இருக்கா..??”
 
எல்லாம் பார்த்திருக்கேன் அவங்க போன்லதான் காட்டினாங்க..
 
இவளை என்ன செய்வது.. நீங்க ஹாஸ்பிட்டல் போயிட்டு வாங்க.. நான் எல்லாம் சொல்லியிருக்கேன்.. ஒரு கம்பிளைண்ட் கொடுக்கனும்..  
 
எல்லாம் முடித்து அவர்கள் வீட்டிற்கு வரவே மாலையாகியது.. அன்று முழுவதும் இருவரும் சாப்பிடாமல் இருக்க வள்ளிதான் வற்புறுத்தி சாப்பாடு வாங்கி கொடுத்தார்.
 
அதிகாலையில் வள்ளி மனது கேட்காமல் இவர்ளை பார்க்க வீட்டுக்கு வர பெரிய பூட்டுத்தான் அவரை வரவேற்றது.. பதறி அக்கம் பக்கத்தாரிடம் விபரம் கேட்க யாருக்கும் எதுவும் தெரியவில்லை.. என்ன செய்வதென திகைத்தவர் திலகவதியிடம் தகவல் சொல்ல அவருக்கும் அதிர்ச்சிதான்.. ஏதும் விபரீதமான முடிவு எடுத்து விடுவார்களோ என..!!
 
………………………
 
சுமதி வேலை முடிந்து வந்து இரவு சமையலை அவசரமாக முடித்துக் கொண்டிருக்க தன் முதுகுபக்கம் யாருடைய மூச்சுக்காற்றையோ உணர்ந்து பதறி விலக முதுகில் முத்தமிட வந்த கோபி அது நடக்காததில் ஏமாற்றமடைந்தவன்,
 
 என்ன சுமதி நான் தானே..?? எத்தனை மாசமா ஒரே ஒரு முத்தம் கேட்கிறேன்.. அதுக்கு என்னமோ ஓவரா பண்ற..!! நான் என்ன வேத்து ஆளா உன்னைக்கட்டிக்க போற உன் புருசன் தானே..??” காதல் ரசம் சொட்ட சொட்ட அவளிடம் வழிய,
 
சுமதி மனம் கோபி பக்கம் சாய்ந்தாலும்.. ஏனோ இதற்கு அவள் மனம் ஒத்துக் கொள்ளவில்லை.. ஏற்கனவே தன்னை கார்மென்ஸில் பார்க்க வந்த அண்ணனிடம் தன் காதலை பற்றி சொல்லியிருக்க சற்று யோசித்தவன்..
 
 கோபிய கட்டினா நீ என்கூட இருக்கலாம் நல்லதுதான்மா.. ஆனா எல்லாம் முறைப்படி நடக்கனும்.. நான் சொல்ல வேண்டியது எதுவும் இல்ல.. நாம ரெண்டுக பேரும் அம்மா அப்பா இல்லாதவங்க.. உன்னை கௌரவமா ஒரு இடத்துல கட்டிக் கொடுக்கனும் நினைக்கிறேன்.. இதுவரைக்கும் எப்படி இருந்தியோ அதே மாதிரி கடைசி வரைக்கும் நல்ல பொண்ணுன்னு பேர் வாங்கனும்..
 
உன்கிட்ட இப்ப ஒரு உண்மையை சொல்றேன்த்தா.. கோபி உன்னை விரும்பினான்னா அவங்க அம்மா ஏன் உனக்கு வெளியில மாப்பிள்ளை சொல்றாங்க.. ?? அதுவும் ஒரு தெரு பொறுக்கிக்கு.. !! இந்த கோபிப்பயலும் என்ன பண்றான் ஏது பண்றான்னு  விசாரிக்கிறேன்.. இனியாச்சும் உன் வாழ்க்கை நல்லாயிருக்கனும்னு நினைக்கிறேன்..
 
கழுத்துல தாலி ஏறுற வரைக்கும் நீ ரொம்ப கவனமா இருக்கனும்தா.. யார் என்ன சொன்னாலும் பேசி ஏமாத்தினாலும் நாமதான் கவனமா இருக்கனும்.. இப்ப நாட்டுல பொம்பள பொறுக்கிக தான் நிறைய பேர் இருக்கானுக நீதான் சூதானமா பார்த்து நடந்துக்கனும்.. அண்ணன் இருக்கேன் நான் எல்லாம் பார்த்துக்கிறேன்.. இந்தா உனக்கு பிடிச்ச சிக்கன் பிரியாணி.. சாப்பிடு..
 
அண்ணே உனக்கு …??”
 
நான் சாப்பிட்டேன்தா..
 
இன்னும் தங்கைக்கு சிலபல அறிவுரைகளை கூறியவன் தன் வேலைக்குச் சென்றிருக்க..
 
அன்றிலிருந்தே கோபியிடம் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கிறாள்.. அண்ணன் சொல்வது போல எப்படியும் அண்ணியும் அத்தையும் சம்மதம் கொடுக்க வேண்டும்தானே..
 
இன்னும் சுமதியின் அருகில் வந்தவன் எங்க சுமதி வீட்ல யாரையும் காணோம்..??”
இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி அமையாது.. எப்போதும் யாராவது வீட்டில் இருந்தபடி இருக்க அம்மாவும் அக்காவும் இருக்கும்போது மறந்தும்கூட சுமதி அருகில் வந்துவிட முடியாது.. இந்த சான்ஸ மிஸ்பண்ணக்கூடாது.. சுமதியின் கையை பிடித்திருக்க,
 
ச்சோ விடுங்க..??”
 
ஏய்  என்ன யாரோ போல விரட்டற..?? நான்தான் தாலி கட்டனும்..  புரியுதுதானே எங்க போனாங்க எல்லாரும்..??”
 
அண்ணியும் அத்தையும் வெளியில போயிருக்காங்க.. பிள்ளைங்க இங்க பக்கத்து வீட்டுக்கு விளையாட..
 
ம்ம்ம் அப்பாடா இங்க வா.. அவளை தோளோடு சேர்த்து அணைத்தவன் இங்க பாரு உழைச்சு உழைச்சு இப்படி மெலிஞ்சு போயிட்ட.. கொஞ்சநேரம் பேசிட்டு இருப்போம். அவளை உள்ளறைக்கு அழைத்தச் சென்றவன் ஏதேதோ பேசி அவளை மயக்க அவளும் அவன் அண்ணையில் பேச்சில் மயங்கித்தான் போனாளோ..
 
அதுவரை அவள் கையை .. விரலை வருடியபடி பேசிக் கொண்டிருந்த கோபி அவள் கண்ணில் மயக்கத்தை பார்த்து மெல்ல மெல்ல உணர்ந்து கன்னத்தை தொடப்போக,
 
அத்தை….எங்க இருக்க..??” அண்ணன் குழந்தைகளின் குரல் சத்தமாக கேட்க, சட்டென சுயத்துக்கு வந்தவள் கோபியின் கையை தட்டிவிட்டு வேகமாக வெளியில் வந்திருந்தாள்..
 
………………………………………….
அண்ணே அந்த ரௌடி பயல தேடாத இடமில்ல..?? அவன் இருக்கிற இடத்தைக்கூட கண்டு படிச்சிட்டோம்.. ஆனா அவனும் அவன் கூட்டாளிகளும் வெளியூர்க்கு போயிருக்காங்களாம்..
 
அன்று திருமணம் நின்பதில் கொலைவெறியில் இருந்த மணமகனோ தீனாவை போலவே வேறு சில ரௌடிகளை ஏற்பாடு செய்திருக்க தீனாவை பழிவாங்க நேரம் பார்த்திருந்தனர்..
 
டேய் எம்புட்டு நாளைக்கு வெளியூர்ல திரிய முடியும் எப்படியும் இங்க வந்துதான ஆகனும்.. நான் பட்ட கஷ்டத்துக்கு அவன் பதில் சொல்லனும்.. என் கையாலத்தான் அவனுக்கு சாவு.. எப்பவும் அவன் வீட்டு மேல கண்ண வைச்சுக்கோங்க. அவன் இந்த ஊர்ல என்னைக்கு காலை வைக்கிறானோ அதுதான்டா அவனுக்கு கடைசி நாளா இருக்கனும்..!!”
 
தீனாவும் அவன் கூட்டாளிகளும் ஒரு அரசியல்வாதிக்கு கைக்கூலியாக வந்திருக்க அடுத்த ஆறு மாதத்தில் எலெக்ஷன் வர இருப்பதால் அவர்களுக்கு வேலை கொடுத்து அங்கேயே வைத்துக் கொண்டார்..
 
தனியாக வீடு எடுத்துக்கொடுத்திருக்க சாப்பாடு..தண்ணி என அனைத்தும் அங்கேயே வர அவர்களுக்கும் அதிகவேலை என்று எதுவும் இல்லை.. அமைச்சர் சொல்லும் வேலைகளை மட்டும் செய்துகொண்டு அங்கேயே தங்கிக் கொண்டனர்..
 
நாட்கள் வேகமாக ஓடியதில் ஐந்தாறு மாதங்கள் முடிந்திருக்க அன்று தீனாவும் அவன் கூட்டாளிகளும் திரும்பியிருந்தனர்.. பகலெல்லாம் வீட்டில் தூங்கியிருக்க இரவு ஒன்பது மணியிருக்கும் தன் வண்டியில் பாருக்கு கிளம்பியிருந்தான்.. தன் கூட்டாளிகளுக்கு போனடிக்க இருவர் போனை எடுக்கவில்லை.. ஒருவன் மட்டும் போனெடுத்து பேசி மனைவியுடன் சினிமா தியேட்டரில் இருப்பதாக சொல்லவும் தீனா மட்டும் தனியாக பாருக்கு கிளம்பியிருந்தான்..
 
அண்ணே அந்த ரௌடி பய வந்துட்டான்.., தனியா பாருக்கு போறான்ணே..?? அவன போட இதுதான் சரியான டைம் எல்லாரையும் கூட்டிட்டு வந்துருங்க..!!” பாரின் அட்ரஸை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க…
 
அங்கு அதே ஊரின் மறுகோடியில் சுதாவுக்கு பிரசவ வலி வந்திருக்க வலியால் துடித்துக் கொண்டிருந்தாள்.. செய்வதறியாமல் திகைத்த கமலா அதே தெருவில் இருந்த ஒரு நர்ஸை கெஞ்சி பிரசவம் பார்க்க அழைத்து வந்திருக்க சுதாவின் அழுகை ஒலி அந்த வீட்டையே அதிர வைத்தது..
 
இங்கு தீனாவை போட்டுத்தள்ள ஒரு கூட்டமே கிளம்பியிருக்க.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுதாவுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது.. !!!
 
                                                                     இனி……………??????

Advertisement