Advertisement

அதிக போதை போல அவனுக்கு பாதி சுயநினைவை இழந்தவன் சுதா தன்னை அடித்தது.. கட்டிப்போட்டது கூட தெரியாமல் ஒரு கையால் துளாவிக் கொண்டிருந்தான்.. “ஏண்டா நாயே அக்கா மகக்கிட்டயே தப்பா நடந்துக்குவியா…?” மீண்டும் ஒரு அறை வைத்தவள் அந்த பெண் வைத்திருந்த வாட்டர்கேன் தண்ணீரை அவன் முகத்தில் ஊற்ற அப்போதும் அவன் போதை தெளியவில்லை…
 
ஆனால் அவன் முகத்தை உற்றுப்பார்த்த சுதாவுக்கு அவன் யார் என்று தெரிந்துவிட்டது.. அடுத்து இவனை என்ன செய்யவேண்டும் என்றும் புரிந்துவிட்டது என் வாழ்க்கையை மட்டும் கெடுத்தது பத்தாம இன்னும் என்னை மாதிரி எத்தனை பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கிற நீ… அவன் முகத்தை உற்று பார்க்க பார்க்க வெறி வந்தது.. இந்த முகத்தை பார்த்துதான நான் நம்பி ஏமாந்தேன்..
 
அவனை மீண்டும் அந்த இருட்டுக்குள் தள்ளி அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப்போட்டு அவன் வாயையும் துணியால் அடைத்திருக்க அவன் அங்கிருப்பது யாருக்குமே தெரியாது.. தன் புல்லட்டை கிளப்பி தேவியை பின்னால் ஏற்றியவள் அவள் வீடு இருக்கும் திசையை நோக்கி வண்டியை விட்டாள்..
 
மறுநாள் காலை குணா கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க மனைவியை திட்டிக் கொண்டிருந்தான்.. “உன் தம்பிக்கு என் கையாலதான்டி சாவு..?? ராத்திரியே சொல்ல மாட்டியா.. எவ்வளவு திமிரு என் பொண்ணுகிட்டயே தப்பா நடந்துக்க பார்த்திருக்கான் அவனை…!!”
 
“அப்பாஆஆஆஆ…..!!!” மகனின் குரலில் பேச்சை நிறுத்தியிருக்க
 
“என்னடா..??”
 
“இங்க பாருங்க பேப்பரை…??” பேப்பரை தந்தையிடம் நீட்ட அதில் கோபியின் புகைப்படம்.. அதற்கு கீழ்… தெருவில் படுத்திருந்த பிச்சைக்காரனை தெருநாய்கள் கடித்து குதறியதால் பரிதாபமாக உயிரழந்தார்..
 
“கடவுள் இருக்கான்டி அதான் உன்தம்பி அனாதையா செத்துக்கிடக்கிறான்..??” மனோகரியும் அவன் தாயும் இரவில் இருந்தே கோபி மீது வெறுப்பில்தான் இருந்தனர்…
 
“பச்சப்பிள்ளக்கிட்ட எப்படி தப்பா நடக்க மனசு வந்துச்சு… படுபாவி..?? அவனுக்கு நல்லசாவே வராது..!!” ஏற்கனவே அவனுக்கு சாபம்தான் விட்டுக்கொண்டிருந்தனர்..
 
இரண்டு மாதங்கள் கழித்து…
 
சுமதி மகளுக்கு தலைவாரி விட்டவள் “தேனு அப்பா கிளம்பிட்டாங்களா பாரு.. நான் அம்மாச்சிக்கு சுடுதண்ணி காய வைச்சுட்டு வர்றேன்.. தேனுவுக்கு இப்போது பத்துவயது நிறைவடைந்திருந்தது.. அப்படியே உன் தம்பிகளையும் பாரு… எப்ப பாரு போனுதான்..??”
 
“இதோ போறேன்மா..”
 
“அம்மா… அப்பா உங்கள கூப்பிடுறாங்க..” அவள் விளையாட கிளம்ப… காலங்கள் உருண்டதில் உருவத்தில் சிலசில மாற்றங்கள் வந்தாலும் குணங்கள் மாறவில்லை..தேனுதான் அந்த வீட்டின் முடிசூடா இளவரசி ..தம்பிகள் இருவருக்கும் அக்காள் என்றால் உயிர்.. தீனாவின் முன்வாழ்க்கை எதுவும் குழந்தைகளுக்கு தெரியாமல் சுமதி அவனையே அனைத்திற்கும் முன்னிறுத்த அவன்தான் பிள்ளைகள் மூவருக்கும் ஹீரோ…
 
ஆரம்ப காலத்தில் இந்த தெருவாசிகள் தீனாவை எவ்வளவு வெறுத்தார்களோ இப்போது அவனை கொண்டாடினார்கள்.. அந்த தெருவில் இருக்கும் பல பெண்கள் இப்போது தீனாவின் கார்மெண்ட்ஸில்தான் வேலை பார்த்தார்கள்.. மாடியில் மட்டும் மூன்று அறைகள் வைத்துக் கட்டியிருக்க கீழ்வீட்டில் எந்த மாறுதலும் செய்யவில்லை.. 
 
“பட்டுப்பாவாடை  கசங்காம வைச்சுக்கோடா..!!” மகளின் அழகை ரசித்தவள் நேரமாச்சே.. கமலாம்மாளின் மகள் சுதாவுக்கு திருமணம் அதற்குத்தான் குடும்பமாக கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. தானும் கிளம்பவேண்டும்… உள் அறைக்குள் நுழைய தீனா கட்டிலில் குப்புற படுத்திருந்தான்..
 
இந்த இரண்டு வருடங்களில் இடைவிடாத உழைப்பால் ஓரளவுக்கு கடன்களை கட்டியிருக்க.. இன்னும் ஒரு வருடம் போதும் கார்மென்ஸின் முழுலாபமும் அவர்கள் கையில்.. எப்போதும் போல கணவனின் அந்த தழும்புகளில் முத்தமிட வேண்டும் போல தோன்ற அருகில் சென்றுவிட்டாள்..
 
சற்று நிதானித்தவள் ம்கூம் இதை இப்ப ஆரம்பிச்சா இவர் விடமாட்டார் ராத்திரிக்கு வைச்சுக்குவோம்..!! பின்னால் நகரமுயல அப்படியே தீனாவின் கை மனைவியை வளைத்திருந்தது. “ஓய்ய்ய்ய்ய் பொண்டாட்டி என்ன கொடுக்க வந்தியோ அதை ஒழுங்கா கொடுத்திட்டு போ..??”
 
“ம்ம்ம் நானா… கையை ஓங்கியவள் நாலு அடிதான் கொடுக்க வந்தேன் தரவா..??”
 
“ஓஹோ…. தரலாமே அடிதடிகாரன் பொண்டாட்டி என்ன கொடுத்தா என்ன..?? வாங்கிக்கிறேன்..??” முதுகை வாகாய் காட்ட,
 
அவன் முதுகை பார்த்தவளுக்கு எப்போதும் போல இப்போதும் முத்தமிடவே தோன்ற அந்த தழும்பு முழுதும் அவள் முத்தங்கள்… சடாரென திரும்பியவன் அவளை தன் மார்பில் போட்டுக் கொள்ள மனைவியும் கணவனை விடவில்லை.. இத்தனை வருட தாம்பத்தியத்தில் இவர்களுக்குள் எந்த சண்டையும் வந்ததில்லை.. தீனாவின் மனதறிந்து நடந்துகொள்வாள் அதைவிட மனைவி பிள்ளைகள் என்றால் அவனுக்கு உயிர்…!! அவன் வாழ்க்கையே தன் மனைவி, பிள்ளைகள், வேலை என ஒரு வட்டத்திற்கு வந்திருக்க … சுமதியும் அன்பு, பாசம் என்னும் அச்சாணியால் கணவன், குழந்தைகளை தன் நெஞ்சில் சுமந்தாள்..
 
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ “ஏ புள்ள.. இன்னைக்கு கார்மெண்ட்ஸ்க்கு போகலைன்னு ஆகிப்போச்சு..”
 
“ஆமாங்க கல்யாணத்துக்கு போனமா வந்தோமான்னு இருக்க கூடாது.. நம்ம வீட்டு கல்யாணம் மாதிரி எல்லாம் முடிச்சுத்தான் வரனும்..”
 
“ப்பச் நான் அதுக்கு சொல்லலைடி… மாமா தண்ணி அடிச்சு பலமாசம் ஆச்சு இன்னைக்கு ராத்திரிக்கு மட்டும் சரின்னு சொல்லேன்.. பிள்ளைகளுக்கு தெரியாம குடிச்சிட்டு படுத்திருறேன்…”
 
“ரொம்ப பண்ணாதிங்க வரவர பிள்ளைகள் எல்லாம் பெரிசாகுறாங்க நீங்க எப்படியோ உங்கள பார்த்துத்தான் அவங்களும் வளர்வாங்க..”
 
“சரி விடுடி ..” கோபமாக எழுந்து அமர்ந்தவன் கைக்கு கிடைத்த சட்டையை எடுத்து மாட்ட போக..
 
“ப்பச் என்ன இப்போ..?? எதுக்கு இந்த சட்டை..?? வேற எடுத்து வைச்சிருக்கேன்.. சரி சரி முகத்தை தூக்காம இன்னைக்கு ஒருநாள் மட்டும்தான்..!!” ஒருகாலத்தில் முழு குடிகாரனாய்… கோபக்காரனாய்… முரடனாய் இருந்தவனை பாசம் இந்த அளவுக்கு மாற்றியிருக்க…
 
“ரொம்பஅஅஅஅஅ……. தேங்க்ஸ் பொண்டாட்டி….!!” மனைவியை இழுத்தவன் அப்படியே அவளின் இதழில் தன் இதழை புதைத்திருந்தான்..
 
அங்கு பெரிய மண்டபத்தில திருமண ஏற்பாடுகள் கோலாகலமாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க ஊரின் முக்கிய புள்ளிகள் எல்லாம் திருமணத்திற்கு வந்திருந்தனர்… கமலாம்மாள் சார்பாக தீனாவும் சுமதியும் வந்தவர்களை கவனித்துக் கொள்ள தேனு தம்பிகளோடு கமலாம்மாள் பின்னால் திரிந்தாள்.. பேத்தியை பார்க்க பார்க்க அவருக்கு அவ்வளவு பெருமை.. தேனுவை அங்கு அனைவருக்கும் தெரியும்.. சுதாவை அக்கா அக்காவென சுற்றிவர குண்டு கண்களால் தன் சுட்டித்தனத்தால் சுதாவை வெகுவாய் கவர்ந்திருந்தாள் தேனு..
 
சுதாவே அடிக்கடி தன் தாயிடம் சொல்வாள் “ஏம்மா இந்த தேனுவை பாருங்களேன்.. சின்னப்பிள்ளையில நான் பண்ணுற சேட்டை எல்லாம் இவளும் பண்ணுறா…!!”
 
“ஆமா சுதா அதான் எனக்கும் இவளைப் பார்க்கும்போது உன்னைப் பார்த்தா போல தோனும்..” சுதா, தேனு இருவரின் எதிர்காலத்தை நினைத்தே தேனுவை பற்றிய உண்மையை யாரிடமும் சொல்லவில்லை.. கடைசிவரை சொல்ல போவதும் இல்லை.. அது தனக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும் முடிவு செய்தவர் மகளின் திருமண வேலைகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்..
 
முகூர்த்த நேரம் நெருங்க அனைவரின் ஆசிர்வாத்தோடு அரவிந்த் சுதாவின் கழுத்தில் தாலி கட்ட தீனாவோ தன் மனைவியின் விலாவில் இடித்தவன் “நான்தான்டி அவசரப்பட்டு சடாருன்னு தாலிய கட்டிட்டேன்.. இங்க பாரு எப்படியெல்லாம் கல்யாணம் நடக்குதுன்னு..!!”
 
“ம்கூம் இப்படியெல்லாம் பொறுமையாத்தான் பண்ணனும்னா நம்ம கல்யாணம் நடந்தே இருக்காது இப்ப என்ன சொல்றிங்க..??”
 
பொண்டாட்டி தோளில் கைப்போட்டவன் …”ஐயோ அம்மா பொண்டாட்டி முக்கியம் பிகிலு…!! எப்படி நடந்தா என்ன…?? நீதான் என் பொண்டாட்டி…!!”
 
              “ இது சங்கீத திருநாளோ
                    புது சந்தோஷம் வரும் நாளோ
               ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
                    சிறு பூவாக மலர்ந்தளோ
               சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
                     முத்த மழை கண்ணம் விழ நனைந்தாளே
                கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே…”
 
அனைவரின் முகத்தில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் பொங்க அதற்கு ஏற்ற பாடல்களை பாடியபடி அங்கு மேடையில் இன்னிசைக் கச்சேரி நடந்துக்கொண்டிருந்தது..
                     
                         ……முற்றும் ……. வாழ்க வளமுடன்…………

Advertisement