Advertisement

எனை மாற்றிய தருணம்
                             அத்தியாயம்  –  2
 
                        “போட்டது பத்தல மாப்பிள்ளை
                                    இன்னொரு குவாட்டர் சொல்லுடா
                        அப்படியே மேட்டரு கேளுடா

                        கண்ணுல ரம்மு ஜின்னு
                                  ஊத்துனா அத்தை பொண்ணு
                       போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா

                       வேணாண்டா வெட்டு குத்து
                                  போடுடா டப்பான் குத்து
                       எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா..”

 
அங்கு ஒயின்ஸாப் பாரில் ஒரே சத்தமாக இருக்க தீனாவும் அவர்கள் கூட்டாளிகளும் அங்குதான் அளவுக்கு அதிகமாக குடித்துக் கொண்டிருந்தனர்.. இன்று வாங்கிய பணத்தில் பாதிக்கு மேல் குடித்தே அழித்திருக்க..இவனால் அங்கு ஒரு குடும்பமே கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தது..
 
தங்களுக்கு முட்டை ஆம்லெட் கொண்டு வந்தவனிடம் தீனாவின் கூட்டாளி, டேய் ஏன்டா இவ்ளோ சவுண்ட்.. ஆப் பண்ணுடா சீடிய..??”
 
அண்ணே அது வந்து….!!” அவன் கையை பிசைய பளாரென அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்திருந்தான் தீனா..
 
கன்னம் அதிர்ந்திருக்க வலியில் கன்னத்தை பிடித்தவன், அண்ணே சவுண்ட குறைச்சா அவங்க என்னை திட்டுறாங்கண்ணே ..??” தூரத்தில் வேறு டேபிளில் அமர்ந்திருந்த நான்கைந்து பேரை கைகாட்ட,
 
ம்ம்ம் வா..” சட்டை கையை மடித்துவிட்டவன் தள்ளாடியபடி எழுந்து போய் அந்த சீடியை ஆப் செய்ய அதுவரை சலசலவென பேசிக் கொண்டிருந்த கூட்டம் கப்சிப்பாகியது..
 
அந்த டேபிளில் இருந்தவர்களோ டேய் சவுண்டே குறைக்க வேணா சொன்னேன்..  பாட்டை எவன்டா ஆப் பண்ணினது..??” கோபத்துடன் எழுந்து வர அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் தீனா பளார் பளாரென அவனை நான்கைந்து அறைகள் வைத்திருந்தான்..
 
நண்பன் அடிவாங்குவதை பார்த்து அவன் கூட்டாளிகள் ஓடிவர.. இங்கு தீனாவின் கூட்டாளிகளுக்கும் அவர்களுக்கும் சண்டை மூண்டு சற்று நேரத்தில் அந்த இடமே களேபரமாகியது.. அனைவரும் அடிப்பட்டு கீழே கிடக்க தள்ளாடியபடி வந்த தீனா அவர்களை ஓங்கி மிதித்திருந்தான்..
 
பாட்டில்களை அவர்கள் தலையில் ஓங்கி அடித்ததால் அவர்கள் ரத்தவெள்ளத்தில் கிடக்க…தள்ளாடியபடி தீனாவும் அவன் கூட்டாளிகளும் தங்கள் வண்டியை கிளப்பியிருந்தனர்.. இவர்கள் வெளியில் வர எதிரில் வண்டியில் கீழே விழுந்து கிடந்தவர்களின் நண்பர்கள் தன் நண்பர்களை பார்க்க வந்து கொண்டிருந்தனர்..
 
………………………
 
சுமதி களைத்து போய் வீட்டிற்குள் நுழைய மணி ஆறாக போகுது.. இப்பதான் ஆடி  அசைஞ்சு வர்ற..?? 5 மணிக்கு வேலைவிட்டா இப்பத்தான் வருவியா.. எவன பார்த்துட்டு வர்ற..??”
 
ஐயோ அத்த.. நான் யாரையும் பார்க்கல.. பஸ்ஸ விட்டுட்டேன்.. அதான் நடந்து வந்தேன்..??”
 
கோபியோ ம்மா ஏன் சுமதிய திட்றிங்க..?? நீ என்கிட்ட ஒருவார்த்தை போன்ல சொல்லியிருக்கலாம்ல.. நான் வண்டியில வந்து கூட்டிட்டு வந்திருப்பேன்.. இப்போ பாரு 5 கிலோமீட்டர் நடந்து வந்திருக்க.. அவளை பார்த்து லேசாக சிரிக்க..
 
தனக்காக பரிந்து பேசும் கோபி மீது எப்போதும் போல இப்போதும் காதல் பொங்கியது..
 
டேய் உன்னை யாராச்சும் இங்க பஞ்சாயம் பண்ண கூப்பிட்டாங்களா..?? போடா போய் உன் ஜவுளிக்கடை எப்ப திறக்கறாங்கன்னு கேளு.. சும்மா டிப்பாட்டா டிரஸ பண்ணிட்டு ஊர ஊர சுத்தாம ..?? போ.. !!”
 
சுமதி முறைத்தவர் இங்க என்ன பார்வை..?? ஒருத்தன் வாட்டசாட்டா இருந்தா போதுமே அவனையே பாருங்க..?? போ போய் டீயப்போட்டு கொண்டா.. கத்தி கத்தி தொண்டத்தண்ணி வத்திப்போச்சு..!!”
 
எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவள் களைத்த முகத்தை கழுவ..
 
நீ ஏன்மா அவள் மேல பாய்ற..??”
 
ஆமாண்டி ஒன்னத்துக்கும் லாயக்கில்லாத பிள்ளைக ரெண்டையும் பெத்ததுக்கு நான் வேற என்னதான் பண்றது..??”
 
அம்மா நான் என்ன பண்ணினேன்..??”
 
ஆமா கிழிச்ச நானும் வந்த நாளுல இருந்து சொல்றேன் உன் நாத்தனார வீட்ட விட்டு விரட்டுன்னு .. மாசம்தான் போகுது அவள விரட்ட துப்பு இல்ல.. வாய் மட்டும் நல்லா பேசு..??”
 
 அவரு தங்கச்சிய ரெண்டாந்தாரமா கட்டிதர மாட்டேன்னு சொன்னதுக்கு நான் என்ன பண்றது..??”
 
ஆமா ரெண்டு பிள்ளைக பொறந்திருச்சு.. இன்னும் புருசன உன் கைக்குள்ள கொண்டு வரத்துப்பில்ல.. நான் வேற வாய் இல்லாம அந்த கோனாருக்கிட்ட உன் நாத்தனார அவருக்கு கல்யாணம் கட்டி வைக்க நானாச்சுன்னு வாக்கு கொடுத்துப்புட்டேன்..!!
 
அவரும் நல்லா படியா கல்யாணம் முடிஞ்சா அஞ்சு ஏக்கர் நிலமும் 5 பவுண் நகையும் எனக்கு தர்றேன்னு சொல்லியிருந்தாரு..?? இப்ப தினமும் காலையிலயும் சாயங்காலமும் போன போட்டு எப்ப கல்யாணத்தை வைச்சுக்கலாம்னு என்னை பாடாப்படுத்துறாரு…?? என்னத்த சொல்ல..!! பெத்த பையன் ஒழுங்கா இருந்திருந்தா நான் இந்த கஷ்டப்படனும்னு அவசியம் இருக்கா..??”
 
அம்மா ஜவுளிக்கடை திறக்காததுக்கு அவன் என்ன பண்ணுவான்..??”
 
அடி ஏன்டி நீ வேற…?? நான் அவன் பண்ணினதுல பாதிய வெளியிலயே சொல்லல..!! அந்த ஏரியாவே வேணாம்னு இங்க வந்துருக்கோம்னா அப்போ உன் தம்பி என்ன மாதிரி வேலையெல்லாம் பார்த்திருப்பான்னு நீயே யோசிச்சு பாரு..??”
 
அம்மா என்ன சொல்ற..??” மனோகரிக்கு அதிர்ச்சிதான்..
 
என்னத்த சொல்ல…?? வெளியில சொல்ற மாதிரி எதுவும் இல்ல.. அதான் நான் சொல்றத கேளு.. எப்படியாச்சும் உன் நாத்தனார அந்தாளுக்கு கட்டி வைச்சிரு.. நான் கொஞ்சம் நல்லா வந்துருவேன் உன் தம்பி கைய எதிர்பார்க்க வேணாம் பாரு..??” வெளியில் குணசேகரன் வரும் அரவம் கேட்க பேச்சை அப்படியே பாதியில் நிறுத்தியிருந்தார்கள்..
 
உள்ளே வந்த குணசேரன் சுமதி வந்திருச்சா..??”
 
என்ன வரும்போதே தங்கச்சிய கேட்கிறிங்க..?? என்னவாம்..??”
 
பஸ்ஸ விட்ருச்சுன்னு அங்க கார்மென்ஸ்ல சொன்னாங்க.. நடந்தா வந்தா.. சுமதி சுமதி.. சத்தமாக அழைக்க,
 
சுமதி என்னண்ணே..??” வேகமாக அடுப்படியில் இருந்து வெளியில் வர, களைத்த முகம் அதிகாலை முதல் வீட்டு வேலை அனைத்தும் பார்த்து, கார்மென்ஸிலும் வேலை பார்த்து அங்கிருந்து நடந்து வந்திருக்க வரவும், மீண்டும் வேலை… தூக்கி சொருகிய சேலை கலைந்த தலையை அள்ளி கொண்டையாய் போட்டிருக்க சோர்வு அவள் முகத்தில அப்பட்டமாய் தெரிந்தது..
 
சுமதி தன் ஐந்து வயதில் அன்னையை இழந்துவிட்டு இரவெல்லாம் அழும்போது ஒரு தாயாய் பார்த்துக் கொண்டவன் .. தந்தை காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வர எப்போதும் அண்ணே அண்ணே என அவன் பின்னேயே திரிபவள் வருடங்கள் ஓட ஓட அவனுக்கு தாயாய் அவள் மாறியிருந்தாள்..
 
தனக்கு திருமணம் ஆனதிலிருந்து இருவரும் இடையே விரிசல் விழுந்திருப்பது தெரிந்ததுதான்.. ஏதும் செய்யமுடியாமல் மனைவி, குழந்தைகள் என மனம் அவர்கள் பக்கம் சாய்ந்திருந்தது.. ஆனால் இரவு மனோகரி சுமதியை இரண்டாந்தாரமாய் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தும் போதுதான் விழித்துக் கொண்டான்..
 
என்னண்ணே என்னையே பார்க்கிற..??”
 
ஏங் கழுத.. பஸ்ஸ விட்டுப்புட்டா எனக்கொரு போன போட்டு சொல்லப்பிடாதா.. இம்புட்டு தூரம் நடந்தா வந்தா.. லூசு..
 
இவ்வளவு நேரம் வெறுமையில் இருந்த மனம் சட்டென அண்ணனின் பாசத்தில் நனைந்திருக்க பளிச்சென சிரித்தவள் இல்லண்ணே நீ என்ன வேலையா இருப்பியோ..?? அப்படியே நடந்து வந்துட்டண்ணே..??”
 
போ லூசு எம்புட்டு தூரம் நடந்து வருவ..?? அவள் தலையில் கைவைத்து வருடியவன் முகத்தை பாரு சோர்ந்து போய் இருக்கு போத்தா போய் சாப்பிடு.. இனி பஸ்ஸ விட்டுட்டா எனக்கு போன பண்ணு.. ஓரெட்டு வந்து விட்டுட்டு போறேன் புரியுதா..??”
 
சரிண்ணே.. காப்பி குடிக்கிறியா..??”
 
கொண்டாத்தா போ.. சுமதி வேகமாக அடுப்படிக்குள் நுழைய.. இவ்வளவுநேரம் அண்ணன் தங்கை பேசியதை கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மனோகரி ,
 
என்ன தங்கச்சி மேல பாசம் ஓவரா இருக்கு..??”
 
மனைவியை முறைத்தவன் இதுல உனக்கென்ன வருத்தம் ..?? அவ என் தங்கச்சி தானே..?? நீ எனக்கு பொண்டாட்டியா வர்றதுக்கு முன்ன இருந்து அவ என் தங்கச்சி.. அத நீ சொல்லித்தான் நான் புரிஞ்சுக்கனும்னு அவசியம் இல்ல.. அப்புறம் இன்னொன்னு சொல்றேன்.. நீயோ உன் அம்மாவோ என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலையை இதோட நிறுத்திக்கனும்.. உன் சொத்துல நாங்க ரெண்டுபேரும் சாப்பிடல.. அவ பதினைஞ்சு வயசுல இருந்து உழைக்கிறா.. என்ன.. ஏதும் பேசாம இருக்கிறதால எனக்கு ஏதும் தெரியாதுன்னு நினைக்கிறியா..?? எல்லாம் தெரியும்..  
 
அப்புறம் பேசாம இருக்கிறதா இருந்தா உங்க அம்மாவும் தம்பியும் இங்க இருக்கலாம் அத விட்டுட்டு இது போல தேவையில்லாத வேலை ஏதாச்சும் பார்த்தா நான் சும்மா இருக்க மாட்டேன்.. அவனுக்கு இரவு முழுதும் அவ்வளவு கோபம்.. தன் மனைவி வந்து தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்ல முதலில் சந்தோசம்தான் மாப்பிள்ளை யார் என்று தெரியும் வரை,
 
அந்த ஆளைப்பற்றி ஊருக்கே தெரியும் ஒரு சரியான பொம்பளை பொறுக்கி .. இரண்டு மகள்கள் பெரிய பெண்களாக இருக்க அந்த பாழாப்போனவனுக்கு தன் தங்கையா.. இது வரை தன் மனைவி தங்கையை பேசும்போது கண்டும் காணாமல் இருந்தவனால் இதை அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை.. இன்று மதியமே சென்று தங்கையை தனியாக சந்திந்து பேசலாம் என்று நினைத்திருந்தான்.. நேரம் கிடைக்கவில்லை.. நாளைக்கு கண்டிப்பா போகனும்..தங்கை காப்பி கொண்டு வந்து தர அதை குடிக்க ஆரம்பித்தான்..
 
…………………..
 
சுதாவுக்கு போன் வாங்கி கொடுத்து நான்கைந்து மாதங்கள் சென்றிருக்க அன்று இரவு கமலாம்மாள் வேலை முடித்து வீட்டுக்கு வர எதிரே தன் மகளின் சினேகிதி கவிதா வரவும் அவளை பார்த்து பேசத் துவங்கியிருந்தார்..
 
அம்மா நல்லாயிருக்கிங்களா..??.சுதா நல்லாயிருக்காளா..??”
 
வாத்தா கவிதா நல்லாயிருக்கியா..?? வீட்ல எல்லாரும் நல்லாயிருக்காங்களா..??”
 
ம்ம் நல்லாயிருக்காங்கம்மா.. சுதா என்னமா பண்றா..??”
 
இப்ப நல்லா படிக்கிறா..ஆமா உங்க வாத்தியாருக என்ன பொழுதுக்குமா பாடம் எடுப்பாக..!! ராத்திரி ரெண்டு.. மூனு மணி வரைக்கும் புள்ள போன்ல பாடம் படிக்கிது.. இதெல்லாம் ரொம்ப அநியாயம்தா.. இப்படி ராத்திரி பகலா பாடம் படிச்சா உடம்பு என்னாகுறது..??”
 
கவிதாவுக்கே இது ஆச்சர்யம்.. ரெண்டு இல்ல மூனு மணி நேரம்தானே கிளாஸ் நடக்குது.. சுதா பொய் சொல்றாளா வீட்ல..?? அம்மாவிடம் சொல்வோமா வாய் திறந்தவள் வேணா அவக்கிட்டயே கேட்போம்..
 
சரிம்மா அம்மா தேடுவாங்க வரவா..??” சொல்லிக்கொண்டு கிளம்ப வழியெங்கும்  சுதாவை பற்றிய யோசனைதான்.. என்னாச்சு இவளுக்கு இப்ப ஒழுங்கா கிளாஸூம் அட்டெண் பண்ணலையே..!!
 
மனது கேட்காமல் அன்று இரவே சுதாவுக்கு போன் செய்ய.. ஹாய் கவி நல்லாயிருக்கியாடி..??”
 
ம்ம் நான் நல்லாயிருக்கேன்.. அது இருக்கட்டும் நீயேன் ஒருவாரமா கிளாஸ் அட்டெண் பண்ணாம இருக்க.. இன்னைக்கு கூட டீச்சர் என்கிட்ட கேட்டாங்க உன்னப்பத்தி..??”
 
அதவிடுடி.. ஆன்லைன் கிளாஸ்தான.. அதெல்லாம் பாஸ் போட்ருவாங்க.. நீயேன் கவலைப்படுற..??”
 
ஏய் லூசு.. நீ நல்லா படிப்பதான.. கிளாஸ அட்டெண் பண்ணாம இருந்தா பாடம் எப்படி புரியும்.. ஆமா சொல்லு..?? ஏன் எப்பவும் உன் போன் ஆன்லைன் காட்டுது அப்படி என்ன பண்ற போன்ல..?? ஏய் தப்பு ஏதும் செய்றியாடி..?? நானும் பேஸ் புக்ல  உன்னோட நிறைய போட்டோஸ் பார்த்தேன்.. இதெல்லாம் தப்பு சுதா ஏதாச்சும் வம்புல போய் மாட்டிக்காத..??”
 
ஏய் லூசு  நான் என்னடி பண்றேன்..??”
 
அதான்டி நானும் கேட்கிறேன்.. நீ ஏதோ தப்பு பண்றாப்போல எனக்கு தோனுது.. உன் அம்மா உன்ன ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்கன்னு அடிக்கடி சொல்வ.. இப்ப என்னடி படிப்ப பத்தின எண்ணமே இல்லாம இருக்க..!!”
 
இதோ பார் கவிதா ப்ரண்டுனுதான் இவ்ளோ நேரம் நீ சொன்னத பொறுமையா கேட்டேன்.. நீ எங்கள விட பணக்காரிதான் அது எனக்கும் தெரியும் அதுக்காக எங்கள ஏழைன்னு சொல்லிக்காட்டாத..!!”
 
ஏய் நான் என்ன சொல்ல வர்றேன் ..நீ என்ன பேசுற..??”
 
எல்லாம் எனக்கு தெரியும் உன் வேலையை மட்டும் பார்.. இனிமே என்கிட்ட இப்படி பேசுற வேலையெல்லாம் வைச்சுக்காத..??” போனை பாதியிலேயே வைத்திருக்க கவிதா அந்த பக்கம் விக்கித்து இவளுக்கு என்னாச்சு.. ஏதோ விபரீதமான பாதையில் சுதா செல்வது போல தோன்ற.. யாரிடம் சொல்வது போனை பார்த்தப்படி இருந்தாள்..
 
…………….
 
அங்கு தீனா வண்டியில் வந்து கொண்டிருக்க அவனோடு இருப்பவன் போன் செய்து.. அண்ணே இங்க ஒரு கல்யாணத்தை கலாட்டா பண்ணி நிறுத்தி பொண்ணு தூக்கிட்டு போய் வேற இடத்துல ஒப்படைக்கனுமாம்.. 50000 பணம் தர்றேன்னு சொல்றாங்க.. ஏதோ அவங்க தாய்மாமன்.. அவன்தான் கட்டிக்கனுமாம் அந்த பொண்ண..!! அந்த பொண்ணு வீட்ல அது மனசுக்கு பிடிச்ச பையனுக்கு கல்யாணம் பண்ண போறாங்களாம்..??”
 
ம்ம்ம் எதா இருந்தா நமக்கென்ன ..?? பணம் தர்றேன்னு சொன்னாங்கள்ள..?? எந்த மண்டபம்னு சொல்லு.. நான் வர்றேன்..??”
 
அவன் மண்டப பேரை சொல்லியிருக்க அடுத்த பத்துநிமிடத்தில் அங்கு நின்றிருந்தான் தீனா.. மணப்பெண் மணமேடைக்கு வந்திருக்க ஐயர் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.. இவனை பார்க்கவும் அவன் கூட்டாளிகள் வேகமாக வந்திருக்க என்னடா உள்ள போவமா..??”
 
வாங்கண்ணே உங்களுக்காகத்தான் வெயிட் பண்றோம்..??” ஆளுக்கொரு உருட்டு கட்டையை கையில் வைத்திருக்க முன்னால் பன்னீர் சந்தனம் கொடுத்து கொண்டிருந்த பெண்களிடம் அதை பறித்து அவர்கள் மேலேயே தெளித்து தூக்கி ஏறிய அடுத்த பத்து நிமிடங்களில் ஒரே சத்தம் அனைவரும் அமர்ந்திருந்த சேரும் பாதி உடைந்திருக்க பெண்களும் குழந்தைகளும்  அலறி அடித்து ஓடத்துவங்கியிருந்தனர்..
 
தட்டிக் கேட்க வந்த ஓரிரு ஆண்களையும் தீனாவும் அவன் கூட்டாளிகளும் கட்டையால் தாக்க பாதிபேர் பயந்து ஓடி ஒளிந்திருந்தனர்..
 
அங்கு மணமகனின் தோழர்கள் வந்து தட்டிக் கேட்க அவர்களையும் அசால்டாக அடித்துப்போட்டவன் மணமேடைக்கு சென்று மணமகளின் கையை பிடித்து இழுக்க கத்தி கதறியபடி பெண்ணின் தாய் வந்து தீனாவின் கையை பிடித்திருந்தார்..
 
ஐயோ என்ன அநியாயம் இது..?? ஏன் இப்படி பண்ற…?? விடு ..” அவனோடு சண்டையிட அவரை பிடித்து தள்ளியவன் மணப்பெண்ணை ஒரு அறை வைத்திருக்க ஏற்கனவே பயந்து போயிருந்த அந்த பெண்ணும் அவன் மேலேயே மயங்கி விழுந்திருந்தாள்..
 
அதற்குள் மணமகன் மேடைக்கு வந்திருக்க.. டேய் டேய் யார்டா நீ ..??”தீனாவை வழி மறிக்க..
 
அவன் நண்பர்களோ டேய் இவன்தான்டா அன்னைக்கு பார்ல என்னையும் நம்ப ப்ரண்ஸையும் அடிச்சது..?? யாராச்சும் போலிஸ்க்கு போன் பண்ணுங்க..??” ஆளாளுக்கு கத்த,
 
தன் முன் வழிமறித்து நின்றிருந்த மணமகனின் தலைமுடியை கொத்தாக பிடித்தவன் அங்கிருந்த சுவற்றில் ஓங்கி ஒரு முட்டு முட்ட அவன் தலையில் இருந்து ரத்தம் வழிய துவங்க அனைவரும் அதிர்ந்து இன்னும் ஒரே சத்தமாக இருக்க..
 
அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தவன் மூச் யாரும் கத்தக்கூடாது..?? எவனாச்சும் போலிஸ்க்கு போன் பண்ணினா இந்த பொண்ண உசிரோட பார்க்க முடியாது.. இதுவரைக்கும் இந்த பொண்ண ஏதும் செய்யனும்னு நினைப்பில்ல.. இப்ப அத வர வைச்சுறாதிங்க..??
 
நாங்க வாங்கின பணத்துக்கு இவ தாய்மாமன்கிட்ட கொண்டு போய் ஒப்படைச்சிருறோம்.. நீங்க என்ன பேசுறதா இருந்தாலும் அங்க பேசிக்கோங்க.. டேய் வாங்கடா..!!” தன் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு அந்த மணப்பெண்ணை தோளில் போட்டபடி வெளியில் நடக்கத் துவங்கியிருந்தான்..
 
கூட்டத்தில் அவ்வளவு ஆண்கள் இருந்தும் அனைவரும் அச்சத்தில் அப்படியே உறைந்திருக்க ரத்தம் வழிய நின்றிருந்த மணமகன் முகத்திலும் அவன் நண்பர்கள் முகத்திலும் தீனாவை கொல்லும் வெறி தெரிந்தது..!!!!
 
                                                               இனி…………………?????

Advertisement