Advertisement

அண்ணே அதான் சொன்னுச்சு இன்னும் ரெண்டு வருசத்துல தேனுவ அங்க சேர்த்துவிட்டுட்டா போதும் நல்லா படிச்சு ஒரு டாக்டர் இல்ல வக்கிலாச்சும் ஆவான்னு.. எனக்காக இல்லாட்டாலும் தேனுக்காகவாச்சும் அங்க வேலைக்கு போறேனே…?? நான்தான் நல்லா படிக்கனும் நினைச்சாலும் படிக்க முடியல.. இவள நல்லா படிக்க வைக்கனும்ங்க..”
 
வேறு எதை சொல்லியிருந்தாலும் மறுத்திருப்பானோ என்னவோ தேனுவின் படிப்பு அவள் எதிர்காலம் என சொல்லவும் தீனா அமைதியாய் இருக்க அதையே சாக்காய் வைத்து அவனை பேசிபேசியே சம்மதம் வாங்கிவிட்டாள்.. பெறாமலே இருவரும் குழந்தையின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க துவங்கிவிட்டனர்..
 
அடுத்தடுத்த நாட்கள் வேகமாய் கரைய தீனாவும் , பழனியும் வேலைக்கு செல்ல துவங்கிவிட்டனர்… அதிகாலையிலேயே கணவனுக்கு இருவேளை உணவை கட்டி கொடுத்துவிடுவாள்.. அடுத்த ஒரு வாரத்தில் அவளும் வேலைக்கு கிளம்ப காலையில் மட்டும் தேனுவோடு பஸ்ஸில் வர மாலை தீனா அவர்களுக்காக காத்திருப்பான்.. அவனுக்கு 5 மணிக்கே வேலை முடிந்துவிடும் சுமதிக்கு ஆறுமணியாகும்.. 5 மணிக்கே கார்மென்ஸ்க்கு வருபவன் மகளோடும் மற்ற குழந்தைகளோடும் பொழுதை கழிக்க மனைவி வேலை முடித்து வரவும் அவளோடு கிளம்பிவிடுவான்..
 
சிலநாட்கள் ராசாத்தி அம்மாளும் குழந்தையை வீட்டில் வைத்துக் கொள்வார்.. சுமதியை சமையலை மட்டும் முடித்தால் போதும் என்பவர் மற்ற வேலைகளை இவரே செய்வார்.. அவர் எவ்வளவு அதட்டினாலும் சுமதி முக்கால்வாசி வேலைகளை முடித்துவிட்டே செல்வாள்.. 
 
வாழ்க்கை தெளிந்த நீரோட்டமாய் மாறியிருக்க யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் நாட்கள் கடகடவென ஓடத்துவங்கியது… சுமதிக்கும் நல்ல சம்பளமே கொடுத்திருக்க அதை அப்படியே சேமிக்கத் துவங்கியிருந்தாள்.. கார்மென்ஸிலும் அவளுடைய முந்தைய சேமிப்பு பணத்தை கொடுத்திருக்க கணிசமான ஒரு தொகை அவள் கையிருப்பாய் இருந்தது..
 
தீனாவும் சம்பள பணத்தை மொத்தமாய் மனைவியிடம் கொடுத்துவிட்டு தேவைக்கென வாங்கிச் செல்வான்… வாரத்தில் ஒருநாள் குடித்துக் கொண்டிருந்தவன் இப்போது மாதத்திற்கு ஒரு முறை சம்பள நாள் அன்று மட்டும் என்று மாறியிருக்க சுமதிக்கு கணவன் இந்த குடிப்பழக்கத்தை விரைவில் விட்டுவிடுவான் என்ற நம்பிக்கை வந்திருந்தது..
 
காலையில் வேலைக்கு செல்லும்போது அடிக்கடி கமலாம்மாளை அந்த பஸ்ஸில் பார்ப்பாள்.. தன்னையே பார்ப்பது தெரிந்தாலும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாள்.. தன்னை எந்த தொந்தரவும் செய்யாததால் தீனாவிடம் எதுவும் சொல்லவில்லை..  இந்த அம்மா ஏன் என்னையும் தேனுவையும் இப்படி பார்க்குது..?? அடிக்கடி தோன்றுமே தவிர வேறு எதையும் நினைப்பதில்லை..
 
எல்லாம் நல்லபடியாக நடந்தாலும் தீனாவின் கூட்டாளிகள்தான் இப்போது  அவனுக்கு எதிரிகளாய் மாறியிருந்தனர்… பணத்தை தராமல் தீனாவை இழுத்தடிக்க கொஞ்சம் பொறுமையாய் இருந்தவன் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியாமல் ஆடித் தீர்த்துவிட்டான்.. அவர்கள் வீட்டிற்கே சென்று வீட்டு ஆட்களை வெளியில் போகச் சொல்லி கதவை பூட்டிச் சென்றிருக்க அடுத்த அரைமணி நேரத்தில் மொத்த பணம் அவன் கையில்.. குடும்பத்தினர் முன் அவமானப்பட்டவர்கள் தீனாவை பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்..
 
சுமதி வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் முழுதாய் முடிந்திருக்க ஏனோ இதுவரை சுமதிக்கு குழந்தை பிறக்கவில்லை.. தேனு இருப்பதால் அது அவர்களுக்கு பெரிதாய் தெரியாமலிருக்க ராசாத்தி அம்மாள்தான் அடிக்கடி இன்னொரு பிள்ளை பெத்துக்கோங்க..?? நச்சரிக்க துவங்கியிருந்தார்.. சுமதிக்கு மனதிற்குள் வருத்தம் இருந்தாலும் கடவுளை வேண்டுவதை தவிர வேறு செய்வதற்கில்லை..
 
அன்று தீனாவுக்கு சம்பளநாள்.. மனைவிக்கு தெரியும் கணவன் எந்த மனநிலையில் இருப்பான் என..!! அவன் கார்மென்ஸ்க்கு வரவும் இவளும் வந்திருக்க அப்பா என பாய்ந்து வந்த மகளை முகமெங்கும் முத்தமிட்டு வண்டியின் முன்புறம் வைத்துக் கொள்ள சுமதி பின்புறம் கணவன் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.. அன்று நடந்த அனைத்தையும் மழலை மொழியில் தந்தையிடம் ஒப்பித்திருக்க..
 
இவனும் அவளிடம் ம்ம்ம் கொட்டிக் கொண்டிருந்தான்… இயல்பாய் பெண் பிள்ளைகளுக்கு தகப்பன் மேல் அதிக பாசம் இருப்பது போல அந்த தெருமுனையில் தீனாவின் வண்டி வரும் சத்தம் இவள் எப்படித்தான் உணர்வாளோ மறுநிமிடம் தந்தையை காண வாசலுக்கு ஓடிவிடுவாள்..
 
முன்பு போல இல்லாமல் இப்போது தீனாவையும் சுமதியையும் அந்த தெருவே மதிப்பாய் பார்க்க தீனா எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் சுமதி அவ்வப்போது தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு முடிந்த உதவி செய்வாள்.. மற்றவர்களிடம் ஒரு நல்லுறவை வளர்க்கத் துவங்கியிருந்தாள்..
 
அவளின் அமைதியும் திட்டமிடலும் மற்ற பெண்களையும் கவர்ந்திருக்க அடிக்கடி தானாகவே வந்து பேசத் துவங்கியிருந்தனர்… எவ்வளவு பணம் வந்தாலும் சுமதி மாறவில்லை.. இந்த இரண்டு வருடங்களில் கார்மென்ஸின் அத்தனையும் இவளுக்கு அத்துப்படி.. மற்றவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதாகட்டும் .. கணக்கு வழக்காகட்டும் அனைத்திலும் தேறியிருந்தாள்..
 
இப்போதெல்லாம் தேனு ராசாத்தி அம்மாளிடமே படுக்க பிரியப்பட அவரும் கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து கதை சொல்லியே பேத்தியை தூங்க வைப்பார்.. இரவு பத்துமணியிருக்கும் கணவன் மனைவி இருவரும் மாடியில்..
 
“ஏய்… ஜில்லு இங்க வாடி..??” தனக்கு முன்னால் அமர்ந்து வம்பு செய்து கொண்டிருக்கும் கணவனை பார்க்க அவளுக்கு ஏனோ அவ்வளவு சிரிப்பு… சில்லென ஒரு காதலில் வரும் சூர்யாவை போல இந்த ஒரு நாள் இவன் குடித்துவிட்டு செய்யும் வம்புகள் ஏராளம்.. அன்று மட்டும் மனைவியை பாடாய் படுத்துவான் தனக்காக இவ்வளவு மாறியிருக்கும் கணவனுக்கு இவளும் ஈடு செய்ய அவ்வளவு சந்தோசம் அவனுக்கு.. தீனாவின் உள்ளத்திலும் உருவத்திலும் அவ்வளவு மாற்றங்கள்..
 
“ஓஓஓய்ய்ய்ய் பொண்டாட்டி..??”
 
“ம்ம்ம் என்னவாம் பொண்டாட்டிக்கு..!!”
 
“ம்ம் என்னவோ ரொம்ப அழகாயிருக்கியே இன்னைக்கு..?? என்னவாம்..?? இந்த புடவை புதுசா…??”
 
“தெரியலயே யாரோ போன மாசம் எடுத்துக் கொடுத்தாங்க..!!”
 
“எவன்டா அவன் என் ஜில்லுக்கு புடவை எடுத்து தர்றவன்..??” சவுடலாய் குரலை உயர்த்த எட்டி வாயை மூடியவள்..
 
“ச்சு ஏன் இப்படி கத்துறிங்க..?? நீங்கதாங்க எடுத்து தந்திங்க..!!”
 
“ஹிஹிஹி அப்படியா..?? அப்ப தா..??” வேண்டுமென்றே அவள் முந்தானையை பிடித்து இழுக்க அச்சோ இவரு ஆரம்பிச்சுட்டாரா..!!
 
“என்ன சேட்டை இது..?? விடுங்க..??” தன்னிடம் திமிறியவளை தன் மடிக்கு கொண்டு வந்திருந்தவன் பின் கழுத்தில் முகம் புதைத்திருக்க மெல்ல மெல்ல அவன் ஆளுமைக்கு கொண்டு வந்து கொண்டிருந்தான்.. சற்று நேரம் கணவனோடு ஒத்துழைத்தவள் “ஏங்க கார்மென்ஸில ஏதோ சண்டை போட்டிங்களாமே..??”
 
“ஏன் உன் அண்ணன் போட்டுக் கொடுத்திட்டாரா..??”
 
“ம்ம்ம்..”
 
“அவருக்கு இருக்க பொறுமை எனக்கு இல்லடி..?? போற வர்றவன் எல்லாம் பேசிட்டு இருப்பான் கேட்டுட்டு போக நான் என்ன சொம்பையா அதான் நாலு வைச்சேன்..??”
 
“ஏங்க வேலை பார்க்கிற இடத்துல முன்ன பின்னதான் இருக்கும் நாமதான் பொறுத்து போனும்..??”
 
“அப்படியெல்லாம் போக முடியாது… வேலை ஒழுங்கா பார்க்கலைன்னா சொல்ல சொல்லலாம்..?? இவனுக வேணும்னே உன் அண்ணன்கிட்ட பல தடவ  வம்பிழுத்தானுக…?? அவரு ஒன்னும் சொல்லல..?? நானும் அதுமாதிரிதான் நடந்துக்குவேன்னு நினைச்சாங்க போல அதான் நாலு காட்டு காட்டினேன்… இனி என் பக்கம் தலைவைச்சு படுக்க மாட்டானுக.. விடு விடு எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..”
 
“ஏங்க…!!”
 
“பொண்டாட்டி நீ புருசன கவனி …??” இன்னும் இன்னும் அவளை இறுக்கி அணைக்க .. கடவுளே இப்பத்தான் எல்லாம் சரியா போயிட்டு இருக்கு.. வேற பிரச்சனை எதுவும் வராம இருக்கனும்… கணவனின் தலையை கோதிவிட அவன் கையை தன் நெஞ்சில் வைத்தவன் அவன் இதழோடு தன் இதழ் பொறுத்தியிருந்தான்..
 
அடுத்து ஒரு வாரம் கழிந்திருக்க அன்று தேனுவை வீட்டில் விட்டு வந்திருந்தாள்… அவள் தன்னிடம் வந்த நாளையே பிறந்த நாளாக இவர்கள் கொண்டாட இன்று தேனுவின் மூன்றாம் பிறந்த நாள்..
 
“அம்மா கண்டிப்பா இன்னைக்கு நான் வேலைக்கு போகனும்…?? அரைநேரம் மட்டும்தான்.. சீக்கிரமா வந்திடுறேன்… அண்ணன் ,அண்ணி..தேவி, அருணு, அத்தை எல்லாரும் பாப்பா பிறந்தநாளுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்க.. தேவியும் அருணும் காலையில இருந்து 5 தரம் போன் பண்ணிட்டாங்க.. !! வடைக்கு மட்டும் மாவு ஆட்டி வைச்சிடுங்கம்மா…?? மீதி வேலை எல்லாம் நான் வந்து பார்த்துக்கிறேன்..”
 
“சரித்தா சரித்தா போ… எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..??”
 
சுமதி வேகமாய் வேலைக்கு கிளம்பியிருக்க தீனாவும் அதிகாலையிலேயே வேலைக்கு சென்றிருந்தான்… மாலையில் அக்கம் பக்கத்தினரையும் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருக்க அதை பற்றி திட்டமிட்டபடி வேகமாக வேலையை முடித்துக் கொண்டிருந்தாள்.. பகல் 1 மணி இருக்கும் கிளம்ப வேண்டியதுதான் சுமதி நினைத்திருக்க ராசாத்தி அம்மாள் போன் செய்திருந்தார்..
 
“சொல்லுங்கம்மா..?? இதோ கிளம்பிட்டேன்…??”
 
“அச்சோ சுமதி நான் என்ன பண்ணுவேன்..?? நம்ம தேனுவ காணோம்தா…!! வாசல்ல விளையாடிட்டு இருந்த புள்ள எங்க போச்சுன்னு தெரியலையே..?? ஐயோ நான் என்ன பண்ணுவேன்..??” அவர் அழுது புலம்ப
என்னமா சொல்றிங்க…??” இந்த பக்கம் சுமதி தடாலென மயங்கி சரிந்திருந்தாள்…!!!
 
                                                           இனி………………??????

Advertisement