Advertisement

இல்ல இல்ல அவ இருக்கட்டும் வரும்போது பலூன் மட்டும் வாங்கிட்டு வாங்க போதும் வீட்ல எவ்வளவு விளையாட்டு சாமான்கள் கிடக்கு..!!” மகளை தன் மடியில் வைத்துக் கொண்டாள்..
 
சற்று நேரம் ராசாத்தி அம்மாளோடு பேசிக் கொண்டிருக்க இந்தா அமுதா போறா பாரு..?? எனக்கு ஒரு 500 பணம் தரனும்.. நாலைஞ்சு தரம் வீட்டுக்கு போனேன் அவ இல்ல இரு இப்ப போய் ஒரெட்டு கேட்டுட்டு வந்திடுறேன்..
 
சுமதி தலையை மட்டும் அசைக்க இப்போது சுமதி தேனுவோடு கமலாம்மாள் மட்டும்..
 
மறைவில் அமர்ந்திருந்தவர் சற்று நெருங்கி சுமதியிடம் அமர குழந்தையை தரையில் வைத்தவள் பார்வை முழுதும் மகள் மீதுதான்..
 
தேனு செல்லத்துக்கு என்ன விளையாட்டு சாமான் வேணும்…?? அப்பா உனக்கு என்ன வாங்கிட்டு வரப்போறாருன்னு தெரிலையே..??. பவுனுக்கு என்ன வேணும்..?? தங்கத்துக்கு என்ன வேணும்..?? ஒவ்வொரு கேள்விக்கும் தேனு தன் அப்பா போன திசையை கைகாட்டி ஏதோ மழலை மொழியில் பதிலுரைக்க பெறாமலே பெற்ற தாயைவிட ஒரு படிமேல் பாசத்தை காட்டினாள் மகளிடம்..
 
ஆத்தா உன் பிள்ளையாத்தா..??”
 
குரல் வந்த திசையை பார்க்க கமலாம்மாளை பார்க்கவும் இவங்கள கோவில்ல பார்த்தோம்ல..
 
ஆமாம்மா என் பொண்ணுதான்..
 
தூக்குவது போல கைநீட்டி வாங்க தங்கம் பாட்டிக்கிட்ட..??”
 
 தேனு தாயை பார்க்கவும் போடா தங்கம் பாட்டிதான்..!!” அவர் மடியில் வைத்தாள்..
 
ஆத்தா கோவில்ல உன்கிட்ட நின்னதுதான் உன்புருசனாத்தா..??”
 
ம்ம்..

கமலாம்மாளை பார்க்கும் போது சுமதிக்கு ஏதும் தவறானவராக தெரியவில்லை.. குழந்தையை கொஞ்சியபடியே மெதுவாக சட்டையை தூக்கிப் பார்க்க தன் மகளுக்கு இருப்பதை போல வெள்ளை நிறத்தில் அழகான பிறை போல ஒரு மச்சம் தொப்புளின் அருகில் இருந்தது… குழந்தை பிறந்த போது கமலாம்மாள் கவனித்தது இது ஒன்றைத்தான்.. தற்செயலாக அந்த மச்சம் கண்ணில் பட அது மட்டுமே இப்போது நியாபகத்திற்கு வந்தது..

 
இது உண்மையாவே உன்புள்ளதானாத்தா..??”
 
சட்டென சுமதிக்கு ஏதோ போலிருந்தது.. தீனா, குணாவை தவிர இன்னும் ராசாத்தி அம்மாளிடம் கூட உண்மையை சொல்லவில்லை.. சுமதியின் குழந்தையாகவே இருக்கட்டும் என விட்டுவிட இவர் இப்படி கேட்கவும் சுமதிக்கு சுள்ளென்று கோபம்..
 
என்னங்க கேள்வி இது..??”
 
இல்லத்தா குழந்தைக்கு உன் முகச்சாயலோ அவங்க அப்பா முகச்சாயலோ இல்லையே அதான் கேட்டேன்..!!”
 
அது எங்க கவலை உங்களுக்கென்ன…??”குழந்தையை வெடுக்கென வாங்கியவள்.. தன் மார்போடு அணைத்து இது என் குழந்தைதான்..??”
     
விறுவிறுவென தன் கணவனை தேடி நடக்க ஆரம்பித்தாள்… அவசரப்பட்டுடமோ சற்று நேரம் அமர்ந்திருந்தவர் மீண்டும் சுமதியை தேட ஆரம்பித்தார்.. அவர்களை அறியாமல் பின்தொடர்ந்தவர் வீட்டை கண்டு பிடித்தே தன் வீட்டை நோக்கி நடக்கதுவங்கினார்..
 
பாதி திருவிழா கடையையே காலிசெய்து பிள்ளைகள் வீட்டில் கடைப் பரப்பியிருக்க “ஏங்க நான்தான் பாப்பாக்கு பலூன் மட்டும் போதும்னு சொன்னேன்ல..??”
 
“ஏய் இருக்கட்டும் விடுபுள்ள… பாப்பா முகத்துல பாரு எம்புட்டு சந்தோசம்..!!”
 
“ஆத்தா சுமதி நாளைக்கு நான் பிள்ளைகள கூட்டிட்டு வீட்டுக்கு போகலாம்னு பார்க்குறேன்தா..??”
 
“ஏண்ணே அதுக்குள்ள..??”
 
“அதுக்குள்ளயா…!! நாங்க வந்து இருபது நாளாக போகுது..”
 
“அண்ணே… அண்ணிய வீட்டுக்கு..??”
 
 “அந்த கழுதைத்தான் தினம்தினம் என்கிட்ட வந்து கெஞ்சுறாளே..!! அதான் வீட்டுக்கு வரச் சொல்லிட்டேன்..”
 
 “ரொம்ப சந்தோசம்ண்ணே.. அண்ணி இங்கயும்தான் வந்தாங்க..??”
 
“தெரியும் தெரியும் சொன்னா..”
 
“ஆமாண்ணே கூட அத்தையும் வந்திருந்தாங்க.. ரொம்ப மன்னிப்பு கேட்டாங்க.. அவங்க பிள்ளை வீட்ட விட்டு விரட்டிட்டாராம்… பாவம்ண்ணே கூட வைச்சுக்கோ..!!”
 
“ஏன் உன்னை வீட்டவிட்டு விரட்டினதுக்கா..??”
 
“விடுண்ணே பழச பேசி இப்ப என்ன பண்ண போறோம்..”
  
“நான் விடியக்காலையில வேலைக்கு போகும்போதே பிள்ளைகள கூட்டிட்டு போறேன்தா… அப்புறம் நான் சொன்னத மாப்பிள்ளைக்கிட்ட எடுத்துச் சொல்லு.. நல்ல சான்ஸ் உனக்கும் உன் பிள்ளைக்கும் நல்ல எதிர்காலம் அமையும்… அம்மாதான் துணைக்கு இருக்காங்கள்ல .. அவங்கள வைச்சுக்கிட்டு நான் சொன்னத யோசித்தா..?? அதோட மாப்பிள்ளையும் அந்த பழனி தம்பியும் திங்கட்கிழமையில இருந்து வேலைக்கு வரேன்னு சொல்லியிருக்காங்க..”
 
 “ம்ம் சொன்னாங்கண்ணே..”
 
“சரித்தா நான் படுக்குறேன்.. வெள்ளனவேற எந்திரிக்கனும்..??”
 
 ஏனோ கோவிலில் இருந்து வந்ததில் இருந்து தேனு சினுங்கி கொண்டே இருக்கவும் அவளை வென்னீரில் குளிப்பாட்டி வேறு உடைமாற்ற ராசாத்தி அம்மாள் குடும்பத்தையே அமர வைத்து திருஷ்டி கழித்தார்..
 
“ஏய் கெழவி.. அந்த பச்ச புள்ளைக்கு சுத்து… அதவிட்டுட்டு இந்த தடிமாட்டுக்கு ஏன்…??” அவன் எழப்போக கணவனின் கையை பிடித்து தன் அருகில் இழுத்துக் கொண்டவள்,
 
“ பேசாம இருக்கிங்களா என்ன… ??”
 
ஏனோ கமலாவின் பார்வையை பார்த்ததில் இருந்து இவளுக்கும் உருத்தல்.. எதுக்கு அந்த அம்மா இந்த கேள்விய கேட்டுச்சு..?? அதோட தேனுவை பார்த்த பார்வையும் சரியில்ல கொள்ளிக்கண்ணு…!! யாரென்று தெரியாமலே அவரை திட்டியவள், திருஷ்டி கழித்த பின்னரே கணவனின் கையை விட்டாள்..
 
 “ஹோய் பொண்டாட்டி வரவர ரொம்பத்தான் பண்ணுற…?? அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..??”
 
“க்கும் அதெல்லாம் தெரியுமாக்கும்..” சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவள் கணவனின் தோளில் செல்லமாய் ஒரு கடி வைத்து..
 
                      காட்டு பயலே கொஞ்சி போடா
                            என்ன ஒருக்கா நீ
                      மொரட்டு முயல தூக்கி போக
                            வந்த பையடா நீ
                      கரட்டு காடா கெடந்த என்ன
                             திருட்டு முழிக்காரா
                      பொரட்டி போட்டு இழுகுறடா நீ
                             திருட்டு பூனை போல என்ன
                       உருட்டி உருட்டி பார்த்து
                               சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ
                        என் முந்தியில சொருகி வெச்ச
                                 சில்லறைய போல நீ
                         இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
                                 செஞ்சிபுட்டு போற நீ
                         பாறங்கல்லா இருந்த என்ன
                                  பஞ்சி போல ஆக்கி புட்ட
                         என்ன வித்த வெச்சிருக்க நீ
                          யான பசி
                                    நான் உனக்கு யான பசி
                          சோளப் பொரி
                                  நீ எனக்கு சோளப் பொரி….!!!!”
 
மனைவியின் பாடல்வரியில் அவனுள் ஏதேதோ மாற்றங்கள் வந்திருக்க… “ஆத்தா பரதேவதை திருஷ்டி சுத்துங்க.. வேற எதுவோ பண்ணிக்கோங்க.. இப்படியெல்லாம் பாடி மனுசன உசுப்பேத்தாத..!! அவள் உதட்டையும் கன்னத்தையும மாறி மாறி பார்த்தவன் அப்புறம் நான் எங்க கடிப்பேன்னு எனக்கே தெரியாது… சீக்கிரமா வாடி மாடிக்கு…!!” மனைவியை பார்த்து கண்சிமிட்டியவன் தேனுவையும் தேவியையும் தூக்கியபடி குணாவை நோக்கி நடந்தான்..
 
அன்று இரவு அனைவரும் உறங்கியிருக்க அண்ணன் விடிகாலையில் கிளம்புவதால் பிள்ளைகளுக்கு சமைத்து கொடுத்துவிடலாம் எல்லாம் தயார் செய்து அடுப்படியில் வைத்தவள் மணியை பார்க்க எப்பொழுதையும் விட நேரம் அதிகமாகியிருந்தது…
 
இருமுறை தீனாவே மனைவியை தேடி வந்திருந்தான்… பின்னால் வந்து முதுகை சுரண்டி கண்ணைக்காட்டி மேலே அழைக்க சுமதிக்குள் சிரிப்பு குமிழிட்டது.. எப்படியெல்லாம் கோபமா சத்தமா பேசுவாரு.. ?? இப்ப என்னடான்னா.. கண்ணால பேசுறாரே..!!
 
மனைவி தன்னை பார்த்து சிரிக்கவும் கோபப்பட்டவன் அடுப்பை அணைத்து மனைவியை கைகளில் ஏந்தியிருந்தான்..
 
“ஏங்க இறக்கி விடுங்க நானே நடந்து வர்றேன்..??”
 
“ஷ்ஷ்ஷ்… பேசாம இரு ….” மாடிக்கு தூக்கி வந்தே அவளை கீழே இறக்கினான்..
 
மாலையில் கோவிலுக்கு சென்று வந்த அதே சேலையில் இருக்க நெற்றியில்  விபூதி ,குங்குமம் தலையில் வைத்த மல்லிகை பூவோடு கோவிலில் கொடுத்த கதம்பத்தின் மணத்தால் அந்த இடமே மணத்திருக்க மனைவியை கட்டி அணைத்தவன் விடவே இல்லை..
 
“ப்பா அப்படியே இழுக்குறடி.. என்னால் இங்க இருக்கவே முடியல.. சீக்கிரம் வாடின்னு சொல்லிட்டுத்தானே வந்தேன்.. என்ன திமிரா இன்னும் கிட்டவாடி..??”
 
“ ஓஓஓஓஓ…. யோவ் ரொம்ப மிரட்டாத நான் தீனா பய பொண்டாட்டியாக்கும்.. எம்புருசன் ஒரு மாதிரி.. புரிஞ்சு நடந்துக்கோ இந்த மிரட்டுற வேலையெல்லாம் அவன் பொண்டாட்டிக்கிட்ட வைச்சுக்காத..!!”
  
மனைவி தன்னை யோவ் என அழைக்கும் போது செல்லமாய் அழைப்பது போல மகிழ்பவன்.. அவளை அப்படியே கீழே சாய்த்து மேலே படர்ந்திருந்தான்..
 
 “வாய்… இந்த வாய் இருக்கே… வரவர ஓவரா பேசுது..?? இன்னைக்கு அத ஒருவழி பண்ணல… நான் தீனா இல்லடி..??” பேசியபடியே அதனை முற்றுகையிட,
 
தான் சொல்ல வந்த விசயத்தை சொல்லாமலே கணவனுக்கு ஒத்துழைக்க துவங்கினாள்..!!!
 
                                                           இனி………?????

Advertisement