Advertisement

எனை மாற்றிய தருணம்
                        அத்தியாயம்  –  18
 
என்ன கமலா இப்போ சந்தோசமா இருக்கா..?? உன் மக பத்தாவதுல நிறைய மார்க் வாங்கிட்டா…?? இனி பெரிய படிப்பு படிக்க வைக்கலாம்தானே..??”
 
அக்கா எல்லாம் திலகா அம்மாவோட தயவுதான் அவங்க மட்டும் இல்லைனா இன்னேரம் நானும் என்மகளும் செத்து மாசக்கணக்கா ஆகியிருக்கும்..
 
 இருந்தாலும் உனக்கு அழுத்தம் ஜாஸ்திதான்…?? உங்கள காணாம நான் எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா..?? அம்மா சொல்லிதான் நீயும் சுதாவும் அவங்க பொறுப்புல இருக்கிறதே தெரியும்..
 
கமலாம்மாளுக்கு வள்ளி சொல்வது காதில் விழுந்தாலும் இத்தனை மாதங்களில் அவர் என்ன நிலையில் இருந்தார் அவருக்குத்தான் தெரியும்.. திலகவதி தங்களை காப்பாற்றி பிழைக்க வைத்தாலும் சுதாவை சுயத்துக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை.. அவள் உலகம் சூன்யமாய் மாறியிருக்க பதினைந்து வயதிற்குள் வாழ்வில் படவேண்டிய அனைத்து துன்பத்தையும் பெற்றிருந்தாள்..
 
திலகவதி சுதாவை மனநல மருத்துவமனையில் சேர்த்திருக்க கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றங்கள்.. கமலாம்மாளும் அங்கேயே வேலைப்பார்த்து  மகளோடு தங்கிக் கொண்டார்.. அங்கிருப்பவர்களை பார்க்கும்போது இப்போதுள்ள பெண் பிள்ளைகள் எவ்வளவு சுலபமாக ஏமாந்து போறாங்க..
 
 மற்ற பெண்களை பார்க்கும் போது நல்லவேளை நம்மகிட்ட பணம் … வசதி ரொம்ப இல்லாம போச்சு ஒரு போன் வாங்கி கொடுத்ததுக்கே சுதா இப்படின்னா.. காசு பணம் நிறைய இருந்திருந்தா  இப்படிதான் குடி போதை, விபச்சாரம்ன்னு தப்பு பண்ணியிருப்பாளோ..!! இப்போது தான் வாழ்ந்த சிறுவயது வாழ்க்கையே சொர்க்கமாக தெரிந்தது கமலாம்மாளுக்கு..!!
 
அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு ஐந்தாறு, அதற்கு மேலும் பிள்ளைகள் இருக்க வசதி, வாய்ப்பு இல்லாவிட்டாலும் ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல் , பொறுமை எல்லாம் தன்னாலேயே வந்திருந்தது.. குடும்ப சூழ்நிலை அறிந்து நடந்து கொள்ளுதல், கீழ்படிதல் என அனைத்து இருந்தது..  
 
அன்றெல்லாம் கேட்ட பொருட்கள் உடனேயே கிடைக்காது… போடும் உடையிலிருந்து படிக்கும் புத்தகம் நோட்டுகள் வரை அண்ணன்கள்.. அக்காக்கள் பயன் படுத்தியதையே இவர்களும் முகம் சுழிக்காமல் எடுத்துக் கொள்ள இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு கேட்ட பொருட்கள் உடனேயே கிடைப்பதுடன் வீட்டில் அண்ணன் தம்பி என யார் இருந்தாலும் தனியாகவே கிடைப்பதால் இவர்களும் விலகியே இருக்கிறனர்..
 
தனிதனி அறைகள், பொருட்கள் என குடும்பத்திலிருந்து தனித்து செல்ல பெற்றோர்களே வழிவகுக்கிறோம்.. இவர்களும் சுலபமாகவே தங்கள் தனிமையால் அவர்கள் கையில் இருக்கும் போனையே வேறு உலகமாக்கி கொண்டுள்ளனர்..
 
மகள் கொஞ்ச கொஞ்சமாக குணமாகிக் கொண்டிருக்க பழைய துள்ளல்தான் இல்லை… ஒரளவுக்கு நன்றாக குணமாகவும் திலகவதியும் வந்து பார்த்து சுதாவுக்கு அறிவுரைகளை வழங்கி பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தனி ஆசிரியர்களை வைத்து தயார்படுத்த இயல்பிலேயே புத்திசாலியான சுதா இப்போது உண்டான புது உத்வேகத்துடன் படிக்க அதிக மதிப்பெண்கள் எடுத்து பாஸாகியிருந்தாள்.. மற்ற அனைவரையும் பொறுத்தவரை சுதாவுக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக நம்பியிருக்க ஆனால் கமலாம்மாளுக்கு தெரியும்தானே..!!
 
தவறு செய்துவிட்டாமோ..??? குற்றவுணர்ச்சியில் தவித்து கொண்டிருந்தார்…  அந்த பொண்ணு நல்லா பார்த்துக்குமா..??? இல்ல பார்க்க முடியாம நம்மள போல எங்கயும் போட்டுட்டு போயிருக்குமா…?? கடவுளே நாம கோவில்ல போடும்போதே நாய்க எல்லாம் பிள்ளைய சுத்தி சுத்தி வந்துச்சு…!! இப்ப புள்ள உசிரோட இருக்கா …!! இல்ல… அடுத்து நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது..
 
இப்போது திலகவதியின் வீட்டிலேயே சுதா தங்கியிருக்க கமலாம்மாள் அங்கே வீட்டு வேலை பார்த்தார்.. சுதாவின் எதிர்காலத்தை திலகவதி கையில் ஒப்படைத்துவிட்டார்.. அவருக்கு இப்போதெல்லாம் தன் பேத்தியை பற்றிய கவலைதான் அன்னைக்கு கொஞ்சம் அவசரபடாம இருந்திருக்கலாமோ..?? அம்மாக்கிட்டயே வந்திருக்கலாம்..
 
அப்ப நல்லதுன்னு நினைச்சு நாமளே ஒரு பச்ச மண்ணுக்கு துரோகம் பண்ணிட்டோம்.. சுமதியை ஒரு முறையாவது பார்த்துவிடமாட்டோமா..?? குழந்தையின் நிலையை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாவது கிட்டாதா..?  அன்று குழந்தையை விட்ட கோவில் இருந்த தெருவையே சுற்றி சுற்றி வர சுமதிதான் அவர்கள் கண்களில் படவே இல்லை..
 
வள்ளி இந்த அம்மனின் பெருமையை பற்றி சொல்லியிருக்க பேத்தி நல்லபடியாக இருக்கவேண்டும் வேண்டிக் கொள்ளவே மகளோடு வந்திருந்தார்.. அதோடு சுதாவும் நல்ல மார்க்கில் தேறியிருக்க திலகவதி போல போலிஸ் ஆக வேண்டும் என்பதே இப்போது சுதாவின் விருப்பமாக இருந்தது..
 
இப்போதெல்லாம் திலகவதியோடு பேச துவங்கியதிலிருந்து தான் செய்த தவறும் அதோடு தன்னை ஏமாற்றியவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற வெறியும் வந்திருக்க ஆனால் எப்படி என்றுதான் புரியவில்லை.. அவனை பற்றிய எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி..?? ஆனால் கண்டிப்பா ஒரு நாளைக்கு அவனை பார்ப்பேன் அவளுள் தோன்ற ஆரம்பித்தது..      
 
கோவிலில் ஒரே கூட்டம்.. சுமதி குடும்பமாக அர்ச்சனை செய்ய வரிசையில் நிற்க கமலாம்மாளும் அந்த வரிசைக்கு வந்திருந்தார்.. அவருக்கு மனதில் மகிழ்ச்சியும் துக்கமும் கலந்தே இருந்தது.. மகள் இந்த அளவுக்கு உடல்தேறி இவ்வளவு மதிப்பெண் வாங்குவாள் எதிர்பார்க்கவே இல்லை.. எல்லாம் திலகா அம்மாவால தான் அவங்க நல்லா இருக்கனும்.. அவருடைய உடல்நலனுக்காக வேண்டிக் கொண்டவருக்கு கண்கள் கலங்கியது..
 
ஆத்தா மகமாயி தெரியாம எம்பேத்திய உன் வாசல்ல விட்டுட்டேன்..!! அவளுக்கு எந்த குறை வராம அவளையும் என் பேத்திய தூக்கிட்டு போன அந்த பொண்ணும் நல்லாயிருக்கனும்.. சுமதிதான் கமலாம்மாளை பார்க்கவில்லையே தவிர அந்த இருட்டிலும் சுமதியின் முகம் இவருக்கு இன்னும் நினைவிருந்தது..
 
எவ்வளவு நேரம் கண்மூடி தன் பேத்திக்காக வேண்டிக் கொண்டாரோ யாரோ தன் தலைமுடியை பிடித்து இழுப்பது போலிருக்க சுள்ளென்ற வலியில் முகம் சுளித்தவர் சட்டென கண்திறந்து பார்க்க தனக்கு முன்னால் நின்றிருந்த பெண் தூக்கி வைத்திருந்த குழந்தைதான் … இவரை இழுத்திருந்தது.. யாரோ என கோபத்தில் நிமிர்ந்தவர் கண்முன் குழந்தையை பார்க்கவும் வந்த கோபம் சட்டென மறைய குழந்தையை பார்த்து சிரிக்கவும் அதற்கும் சிரிப்பு தாளவில்லை..
 
ராசாத்தி அம்மாளோடு அடிக்கடி வெளியில் செல்லும் போது இது போல பெரியவர்களை பார்த்து பழகியதால் தேனுவிற்கு கமலாம்மாளை பார்க்கவும் இயல்புபோல அவரிடம் கை நீண்டிருந்தது.. முகமெல்லாம் சிரிப்போடு அவர் தலைமுடியை இழுத்து விளையாடுவதையே விளையாட்டாய் கொள்ள வாய் கொள்ளா சிரிப்பு வேறு…
 
தந்தை, தாயை பார்த்தால் ஒரு சிரிப்பு, தேவி ,அருணோடு விளையாடும் போது ஒரு சிரிப்பு என குட்டி கண்ணன் தன் புன்னகையால் கோபியரை கவர்ந்தது போல தேனுவின் சிரிப்பு அனைவரையும் கவரும்.. அதிலும் தீனாவோடு இருக்கும்போது அவ்வளவு குதூகலம் அதன் முகத்தில்..
 
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்தான் தீனாவும் சுமதியும் உண்மையான தாய் தந்தையாகவே மாறியிருந்தனர்.. இந்த குழந்தை மேல் வைத்த உண்மையான பாசத்தால்தான் தீனா இன்று தன் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியிருக்கிறான்…!!
 
சுமதி முன்னால் நடக்க ஏதோ குரல் கேட்கவும் திரும்பியவள் தேனுவின் செயலை பார்த்து ,”அச்சோ… என்ன வேலை இது..??” தன் மகளை செல்லமாக வைதபடி
 
மன்னிச்சுக்கோங்கமா இவ அவங்க பாட்டின்னு நினைச்சுட்டா போல..!!”
 
தேனுக்குட்டி பாட்டி முன்னாடி போறாங்க பாரு..??” தங்களுக்கு முன்னால் நின்ற ராசாத்தி அம்மாளை கைக்காட்ட…
 
செல்லப்பொண்ணு அப்பாக்கிட்ட வாங்க தங்கம்..” மகளை தீனா வாங்கிக் கொண்டான்..
 
இங்கு நடந்த எதுவும் கண்ணில் பதிந்தாலும் கருத்தில் பதியாமல் கமலாம்மாள் சுமதியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்க.. இ… இந்த பொ.. பொண்ணுதான அன்னைக்கு ராத்திரி கோவில்ல…???”
 
ஏம்மா ஒன்னு போங்க.. இல்ல வரிசையில இருந்து ஓரமா நில்லுங்க..?? வரிசையில நின்னுட்டு கனவுகாங்க இதென்ன நீங்க கட்டின கோவிலா…?? வரிசைய பாருங்க அடுத்த தெருவுக்கு போயிரும்போல..!!” பின்னால் வந்தவர் அவரை திட்டியபடி ஒதுக்கிவிட்டு முன்னால் நடக்க கமலாம்மாள் இன்னும் சுயத்துக்கு வரவில்லை..
 
ஏய் கமலா இப்படி நின்னா எப்ப அர்ச்சனை பண்ணி நாம வீட்டுக்கு போறது..??” வள்ளி அதட்ட நினைவுக்கு வந்தவர் முதலில் தேடியது சுமதியைத்தான்..அவர்கள் சற்று தூரத்திற்கு சென்றிருக்க இப்போது… குழந்தை பக்கத்தில் இருந்த ஆணிடம்..
 
குழந்தையை தோளில் வைத்து விளையாட்டு காட்டியபடி மனைவியின் தோளில் ஒரு கைப்போட்டு கூட்டத்தில் இருந்து காத்து கூட்டிச் செல்ல கமலாவுக்கு குழந்தையை பற்றி தெரிந்துகொண்டே ஆகவேண்டும் போல இருந்தது..
 
என்ன மாதிரி உணர்ந்தாற் புரியவில்லை.. குழந்தையையே உற்று உற்று பார்த்து எங்காவது தன் மகள் சாயல் தெரிகிறதா எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை…
 
எப்படியாவது  இது என் பேத்திதானான்னு கண்டுபிடிச்சிரனும்… எப்படி என்பதுதான் புரியவில்லை.. கூட்டத்தோடு கூட்டமாக இவர்களும் சாமி சன்னிதானத்தை நோக்கி…. பார்வை முழுவதும் சுமதி அந்த குழந்தை மேல் மட்டும்தான்..
 
இவர்கள் அர்ச்சனை செய்து வர தூரமாய் இருந்த தூணுக்கு அருகில் சுமதியும் அவள் குடும்பம் அமர்ந்திருப்பதையும் பார்த்துவிட்டார்.. இவர்களும் அவர்களை நோக்கி நடக்க திடிரென நினைவு வந்தவர் போல,
 
 வள்ளி அக்கா நீங்க சுதாவ அம்மா வீட்ல விட்டுட்டு போயிருங்களேன்.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…??”
 
அப்படி என்ன வேலை கமலா வரும்போது கூட சொல்லவே இல்ல..??”
     
இல்லக்கா இல்லக்கா இப்பத்தான் நியாபகம் வந்துச்சு அதான்..!!”
 
சரி சரி பொழுது சாயறதுக்குள்ள வந்திரு…?? வா சுதா நாம போவோம்…??” அவர்கள் இருவரும் கிளம்ப,
 
கமலா வேகமாக சென்று சுமதி அமர்ந்திருந்த தூணுக்கு அருகில் அமர்ந்து கொண்டார்..
 
சற்று நேரம் அருணும் தேவி தேனுவோடு விளையாடியவர்கள் விளையாட்டு சாமான்கள் கேட்டு அடம்பிடிக்க தீனாவும் குணாவும் பிள்ளைகளோடு கிளம்பிவிட்டனர்.. தேனுவையும் தூக்கிட்டு போகவா தீனா பிள்ளைக்காக கைநீட்ட ..
 

Advertisement