Advertisement

எனை மாற்றிய தருணம்   
                     அத்தியாயம்  –  16
 
தீனா சுமதியை மாடிக்கு தூக்கிச் செல்ல அவன் முத்தத்தில் மூழ்கியிருந்தவளுக்கு கணவனின் வேகத்திற்கு ஈடு செய்ய முடியவில்லை.. அவன் முத்தமே அடுத்து செய்ய போகும் காரியத்திற்கு அச்சாரமாய் இருக்க சுமதியின் உடலுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம்.. அச்சமா, நாணமா, பயமா தெரியவில்லை ஆனால் அவனுடன் ஒத்துழைக்க மனம் இடம்தரவில்லை.. அடுத்து என்ன நடக்கும் தெரிந்திருந்தாலும் தன்னை பற்றிய உண்மையை இன்னும் சொல்லலையே..
 
மனதிற்கு ஏதோ போலிருக்க இப்பவே இவருக்கிட்ட சொல்லிருவோம்.. தரையில் விட்டு தன் மேல் படர்ந்திருந்தவனை தன்னை விட்டு விலக்க..
 
ச்சு  என்ன புள்ள..??”
 
உ…உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்..
 
ஆமா நீ பேசிட்டாலும் ..!! பேச நல்ல நேரம் பார்த்த.. போடி..” இன்னும் அவளை தன்னுள் மூழ்கடிக்க ,
 
ஒருநிமிசம் நான் சொல்றத கேளுங்க…??”
 
பச்… அவளை விட்டு விலகியவன் சற்று தள்ளி அமர்ந்து… சொல்லித் தொலை..!!” அவன் குரலில் கோபமா.. தாபமா ஏதோ ஒன்று..
 
குத்துக்காலிட்டு அமர்ந்தவள் தன் கைவிரல்களையே பார்த்துக் கொண்டிருக்க தீனா சுமதியையே பார்த்தபடி..
 
என்ன புள்ள.. விடியலுக்குள்ள சொல்லிருவியா..?? இல்ல நான் தொடுறது பிடிக்காமத்தான் இது போல சாக்கு சொல்லிட்டு இருக்கியா..!!”
 
ம்கூம் அதெல்லாம் இல்ல.. அவனை நெருங்கி அமர்ந்தவள் அவன் கைகளை பிடித்தபடி… உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லனும்.. மறைக்கனும்னு எப்பவும் நினைக்கல.. ஆனா அப்ப இருந்த சூழ்நிலை அப்படி..!!”
 
என்ன புள்ள ஓவர் பில்டப்பா இருக்கு..??”
 
அது வந்து….” சற்று தயங்கியவள் பின் தைரியத்தை வரவழைத்து.. தேனு எனக்கு பிறந்த குழந்தை இல்ல… எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல…!!”
 
என்ன புள்ள சொல்ற…??”
 
கோபியை தான் விரும்பியது .. அத்தை தனக்கு இரண்டாந்தாரமாய் திருமணம் செய்ய முடிவெடுத்தது கோபியின் சுயரூபம்.. வீட்டை விட்டு சாக வந்தது தேனுவை பார்த்தது எல்லாம் சொல்ல .. எந்த ஒரு எதிர்விளைவும் இல்லை தீனாவிடம்..!! அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தான்.. சுமதிக்கு மனதிற்குள் பயம்..
 
எ… என்ன ஒன்னும் சொல்லாம இருக்கிங்க..??”
 
என்ன சொல்லனும் சொல்ற..??”
 
என்ன சொல்வாள் எப்படியும் தான் உண்மையை சொல்லாதது தவறுதானே..
 
மனைவியை தன்னை நோக்கி இழுத்தவன், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன் ..ஆனா நீ இங்க வந்து எட்டு மாசத்துக்கு மேலாக போகுது… இப்பதான் உண்மைய சொல்ற.. ஆனா உங்க அண்ணன் என்ன பார்த்த அன்னைக்கே எல்லாம் சொல்லிட்டார்..!!”
 
அ.. அண்ணனா..!!”
 
ம்ம்ம் நீ கோபமா போயிருந்தப்போ உன்னை தேடி இங்க வந்தார்ல அப்பவே எல்லாம் சொல்லிட்டார்.. தேனு உன் பிள்ளையாவே இருந்திருந்தாக்கூட நீ என் பொண்டாட்டிதான்.. தாலி கட்டும் போது இந்த விசயம் எதுவும் எனக்கு தெரியாது.. நீயும் தேனுவும் என்னை விட்டு எப்பவும் போகக் கூடாதுன்னு நினைச்சேன் அது ஒன்னுதான்..
 
மத்தபடி நீ விதவையா இருந்தா அதப்பத்தி எனக்கு எதுவும் இல்ல .. என்னைத்தேடி வந்த உறவு நீங்க ரெண்டு பேரும் உங்கள எப்பவும் கைவிடக்கூடாதுன்னு நினைச்சேன்.. அதான் உங்க அண்ணன உன்கிட்ட பேச சொன்னேன்..
 
அடிப்பாவி.. இதானாக்கும் அந்த முக்கியமான விசயம்..!!!”
 
ம்ம்ம்..
 
அனாதையா வாழ்க்கை பூராவும் ஒத்தையில கிடந்தவன்டி.. யாருக்காகவும் எதுக்காகவும் உங்க ரெண்டு பேரையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. விதவையா இருந்திருந்தாலும் ஏத்துக்கிட்டுதான் இருப்பேன்..
  
சுமதியும் தனக்கென்று ஒரு உண்மையான உறவுக்காக ஆசைப்பட்டவள் தானே.. எப்படி முரடனாயிருந்தால் என்ன..!! தன்னுடையவன்.. தன்னை எந்த நிலையிலும் ஏற்று கொள்ள தயாராய் இருப்பவன் இவனை விடவா மற்றவர்கள் தன்வாழ்க்கையில் வரப்போகிறார்கள் தன் கைப்பிடித்திருந்த கணவனை நெருக்கி அணைத்துக் கொள்ள.. தீனாவும் விடவில்லை..
 
இருவருமே தனக்கே தனக்கென்று ஒரு உறவுக்காக ஏக்கப்பட்டவர்கள் அதுவே கணவன் மனைவியின் உறவாய் இருக்க சுமதிக்கு தன் கணவன் மேல் காதல் பொங்கியது… தானாய் அவன் கைகளில் விழுந்திருக்க மனைவியை மார்பில் தாங்கியவன் கணவனாய் தன் உரிமையை எடுத்துக் கொள்ளத்துவங்கினான்..
 
32 வயதுவரை எந்த பெண்ணையும் மனதால்கூட நினைக்காதவன் தன் ஒட்டு மொத்த காதல்.. மோகம் அனைத்தையும் மனைவியிடம் காட்ட சுமதி அவனின் முரட்டுத்தனத்தில் திகைத்துத்தான் போனாள்.. புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.. மெல்ல மெல்ல அவனின் முரட்டுத்தனத்திற்கு இவள் பழக அவனும் மெல்ல மெல்ல மென்மைக்கு மாறியிருந்தான்.
 
எவ்வளவு நேரம் கழிந்ததோ தன் மார்பில் சாய்ந்திருந்த மனைவியின் உச்சியில் முத்தமிட்டவன் பாப்பா எழுந்திருவாளா..??”
 
சுமதியிடம் பதிலில்லை.. அந்த நிலா ஒளியில் மனைவியின் முகத்தை பார்க்க களைப்பு தெரிந்தாலும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..
 
என்ன புள்ள ரொம்ப இம்சைப்படுத்திட்டேனோ…??”
 
இல்லையென தலையை  ஆட்ட.. அவள் தலையில் கைவைத்து தடுத்து பேசவே மாட்டியா ..??” அவளின் அமைதியே இன்னும் இன்னும் மனைவி மேல் காதல் கொள்ள சொல்லியது..
 
மனைவியின் முகத்தையே பார்த்தபடி இருக்க ஏங்க போவோம் பாப்பா எழுந்திருவா..??” சுமதி தன் உடைகளை சரி படுத்த துவங்கினாள்..
 
ஏய் இப்போ போகலாம் ஆனா தினமும் நீ இங்க வந்திரனும்.. சரியா..!!”
 
எல்லாம் சரிங்க… நீங்க இந்த அடிதடி வேலையை மட்டும் விட்ருங்க போதும்..
 
ஆஹா ஆரம்பிச்சுட்டாடா இவ…?? வாயத்திறந்து பேசமாட்ற.. பேசினா.. ஆத்தா வையும் சந்தைக்கு போனும் காசு கொடுன்னு சொல்றா போல இத ஆரம்பிச்சுற.. வாடி இம்சை..!!”
 
நான் இம்சையா..?? இந்த இம்சையைத்தான் இவ்வளவு நேரம் கட்டிக்கிட்டு இருந்திங்க..??”
 
அடடா பார்றா வாய் பேசுறத.. !! என் பொண்டாட்டி நான் கட்டிக்கிறேன் என்னவாம் இப்போ..??” சட்டையை மடித்துவிட்டு சண்டைக்கு கிளம்ப…
 
யோவ்வ்வ்…… போயா.. அவனை முறைத்தவள் வேகமாக மாடியிலிருந்து இறங்கி ஓடிவர..
 
ஏய்ய்ய்ய்ய் நில்லுடி… என்னடி வாயா போய்யான்னு சொல்ற..??” கணவன் குரல் காதில் விழுந்தாலும் இனி தேனு எழும் நேரம் அழுவதற்குள் பால் கலக்க வேண்டும் வேகமாக அறைக்குள் நுழைந்திருந்தாள்..
 
மனைவியை ரசித்தபடி நின்றிருந்தவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.. மனைவியோடு சற்று முன் நிகழ்ந்த நிகழ்வை மீண்டும் அசைப்போட்டபடி அங்கேயே படுத்துவிட்டான்..
 
மனிதர்கள் மேல் ஆள் மனதில் ஒரு வெறுப்பு எப்போதும் இருக்கும்..  பத்துவயதில் தான் பட்ட பாடுகள் கொஞ்ச  நஞ்சமில்லை.. தன்னுடன் இருந்தவர்களுக்கும் அதே நிலைதான்.. அதிலும் பெண் பிள்ளைகளை தங்கள் கண்முன்னாலேயே கண்ட இடத்தில் தொடுவது.. அசிங்கமாய் பேசுவதுமாய் இருக்க பார்க்க பார்க்க கோபம்தான் வரும்.. அருவருப்பாய் இருக்கும் அவர்களை நடத்தையை பார்த்து..
 
நண்பர்களாய் பாவித்து பகலெல்லாம் தங்களிடம் அழும் அந்த பெண்களை பார்க்கும் போது ஏதாவது இவர்களுக்கு செய்ய வேண்டும் போல தோன்றும் ஆனால் என்ன செய்ய தெரியவில்லை… கொஞ்சம் கோபத்தை முகத்தில் காட்டினாலே இரண்டு சூடு விழும் இவர்கள் உடலில்.. தீனாவின் கோபத்தால் அவன் உடலில்தான் இருமடங்கு சூடுதழும்புகள் இருக்கும்.. பல்லைக்கடித்து பொறுத்துக் கொள்வான்..
 
அதிலும் கடைசி நாளன்று 60 வயது கிழவன் பத்து வயது சிறுமியிடம் தன் கண்முன்னாலேயே தவறாய் நடக்க முயல.. அந்த பெண் கதறிய கதறல் இன்னும் தன் காதில் விழுவது போலிருக்கும்.. அதிலும் அந்த சிறுமி தீனாவின் சட்டையை பிடித்துக் கொண்டு விடவே இல்லை.. இவனும் எவ்வளவோ கெஞ்சிப் பார்க்க…. அந்த காமுகனுக்கு ஏதும் காதில் ஏறவில்லை.. பொறுக்க முடியாமல்தான் அங்கிருந்த கடப்பாரையால் அவன் தலையை உடைத்திருந்தான்..
 
இதுவரை அன்று தான் செய்த செயலுக்காகவும் எந்த தவறுக்காகவும் அவன் வருத்தப்பட்டதே இல்லை.. இந்த வீடு காலிசெய்யும் வேலையும், அடியாள் வேலையும் ஒரு தொழிலாய்தான் இவனுக்கு தெரிந்தது.. அவன் கூட்டாளிகளும் அதற்கு தூபமிட அதையே தொழிலாக்கிக் கொண்டான்…
 
நான் எந்த பொண்ணுகிட்டயும் தப்பா நடக்கல..?? எவளையும் கெடுக்கல..?? இந்த தொழில் ஒன்னும் தப்பு இல்ல.. !! எல்லாரும் என்னை அடிச்சாங்க.. ஒருவேளை சோறுக்கு நாயா அலையவிட்டாங்க.. ஆனால் எல்லாம் சுமதி இவனிடம் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு போகும்வரைதான்… பின் எல்லாம் தலைகீழ்.. சுமதி வீட்டைவிட்டு போய் இத்தனை நாட்களில் எத்தனையோ அடிதடி வேலை வந்திருக்க தீனாதான் எதையும் செய்யவில்லை…
 
இப்போதும் சுமதி இந்த வேலையை விடும்படி இவனிடம் கெஞ்சுவது மிகவும் பிடித்திருக்க கண்டு கொள்ளாமல் இருப்பதைபோல இருந்து கொள்வான்.. இதை சாக்கிட்டாவது தன்னிடம் அதிகம் பேசமாட்டாளா என… குணாவும் இதையே பேசி தன் பேக்டரியிலேயே வேலைக்கு வரச் சொல்ல அதைப்பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தான்.. சுமதியிடம் ஏதும் சொல்லவில்லை..
 
தீனாவின் மனமாற்றம் அவனுக்கு எவ்வளவு நல்லதோ அது அவன் கூட்டாளிகளுக்கு பிடிக்கவே இல்லை.. இதைவிட பெரிய பெரிய அடிப்பட்ட பொழுதெல்லாம் மறுவாரமே வேலைக்கு கிளம்பியிருக்க இப்போதும் பத்து நாட்களுக்கு மேலாக போகிறது.. வரும் வேறு வேலைகளையும் அவன் தட்டிக்கழிக்க இதற்கு எல்லாம் காரணம் அந்த சுமதி அவளைதான் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்… அவனை தூண்டிவிட்டு இத்தனை நாள் அதில் குளிர்காய்ந்தவர்கள் இப்போது வருமானம் இல்லாமல்…!!
 
மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க தீனாவும் சுமதியும் வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியாய் உணர்ந்தார்கள்.. காலையில் இருந்தே தேவி தன் மாமனை பாடாய் படுத்திக் கொண்டிருக்க பார்க்க பார்க்க சுமதிக்கு சிரிப்பு..
 
என்ன புள்ள சிரிப்பு ஓவரா இருக்கு..??” சுமதியின் இடுப்பில் இருந்த தேனுவுக்கு என்ன புரிந்ததோ தாய் தந்தையின் மகிழ்வில் அதற்கும் சிரிப்பு தாளவில்லை..
 
தேவி மாமனின் தோளில் ஏறி அமர்ந்து கொண்டு , மாமா நல்லவே இல்ல இந்த முடி…?? தாடியும் நல்லாவே இல்ல.. வேற நல்லதா மாத்துங்க மாமா..
 
என்னடா செல்லம் சொல்ற அவ்வளவு கேவலமாவா இருக்கேன்..
 
அச்சோ பார்த்தாலே ..உவ்வாக் நல்லாவே இல்ல.. நான்கூட அண்ணா கிட்ட அப்பவே சொன்னேன்.. அண்ணா சொன்னேன்தானடா ..!!” அண்ணனையும் துணைக்கு அழைக்க இளங்கன்று பயமறியாது என்பது போல பலர் சொல்ல தயங்கிய விசயங்களை எளிதாக சொல்லிக் கொண்டிருந்தது அந்த குழந்தை..
 
ஏனோ தேவியை தீனாவுக்கு அதிகம் பிடிக்கும் வந்த நாளில் இருந்து எந்த பயமும் இல்லாமல் மாமன் என்ற உறவில் அதிகமாய் சலுகை கொண்டாட அவனோடு ஒட்டிக் கொண்டும், உரசிக் கொண்டும் அவன் மடியில் அமர்ந்துதான் பாதி பொழுதை கழிக்கும்..
 
அச்சோ செல்லக்குட்டி சரிடா நான் போய் முடியெல்லாம் வெட்டிட்டு வரவா…??”
 
சரி மாமா…
 
மதியம் சமையலுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வர்றேன்.. அப்புறமா சமைக்கலாம்.. மனைவியிடம் சொல்லிக் கொண்டு வெளியில் கிளம்ப.. கோவில்காளை போல திரிந்த தீனா இப்போது விரும்பியே வீடு, குடும்பம் என வட்டத்திற்குள் வந்து கொண்டிருந்தான்..
 
ராசாத்தி அம்மாளிடம் சென்றவன் இட்லி கடையெல்லாம் இனி வைக்க வேண்டாம் கெழவி..?? நீ வேலை பார்த்தவரைக்கும் போதும்.. உன் பேத்தியோட பொழுத போக்கு..??”
 
இல்ல தீனா நான் என் வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்.. எதுக்கு உனக்கு சிரமம்..
 
ஓஓஓ… அவரை முறைத்தவன் அப்ப இது யார்வீடு…?? இதுவும் உன்வீடுதான் ஓவரா சீன போடாம இங்கயே இரு.. ஏய் சொல்லுபுள்ள..!!” சுமதியிடம் பொறுப்பை ஒப்படைத்தவன் வெளியில் சென்றிருக்க..
 
அவரின் கையை பிடித்தவள் என்னமா என்னாச்சு..?? எங்களோட இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா..??”
 
ஆத்தி என்ன சுமதி இப்படி சொல்ற..?? நான் ஒரு அனாதை .. எதுக்கு உங்களுக்கு சிரமம்னுதான்..!!”
 
அம்மா நீங்க என்னோட அம்மாதான் வந்த நாள்ல இருந்து அப்படிதான் உங்கள நினைக்கிறேன்.. பேத்திய பார்த்துக்கிட்டு இங்கதான் இருக்கனும்.. சும்மா வேற எதையும் போட்டு குழப்பிக்காதிங்க.. வாங்க சாப்பிட.. தேவி அருணு வாங்க சாப்பிடலாம்..” தன் அடுப்படி வேலையை பார்க்கச் செல்ல ..
 
சாப்பிட்டு முடிக்கவும் ஆத்தா சுமதி நாமதான் இனி கடை வைக்கலையே எனக்கு வரவேண்டிய காசு கொஞ்சம் இருக்கு அதை போய் வாங்கிட்டு வந்திருறேன்.. தேனுவ தூக்கிட்டு போகவா..??”
 
 குளிப்பாட்டி வேற டிரஸ் மாத்தி தர்றேன்மா..தூக்கிட்டு போங்க.. வேகமாக மகளை குளிப்பாட்டி உடைமாற்றி அவரோடு அனுப்ப தீனாவின் கூட்டாளிகள் வந்திருந்தனர்..
 
சுமதியையும் குணாவின் குழந்தைகளை தவிர வீட்டில் யாருமில்லை.. வந்தவர்கள் உரிமையாக வீட்டிற்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்திருந்தார்கள்.. சுமதிக்கு ஏதோ போலிருந்தாலும் எதையும் சொல்லவில்லை.. மணி காலை பதினொன்று இருக்கும்.. குணாவின் பிள்ளைகள் இரண்டும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க வீட்டை சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்தனர்..
 
சுமதியிடம் ஏதும் பேசாமல் சற்று நேரம் அமர்ந்திருந்தவர்கள் … சட்டென தண்ணியடிப்பதற்காக கிளாஸ்களை அடுப்படியில் வந்து எடுத்து சென்று கட்டிலில் வைத்தனர்.. பாட்டிலை எடுத்து திறந்து வைக்க மற்றொருவனோ வேண்டுமென்றே சுமதியிடம்..
 
ஏய்… தொட்டுக்க என்ன இருக்கு..?? ஊறுகாய் ஏதும் இருந்தா கொண்டுவா..??”
 
 இதென்ன அநாகரீகம்.. ஆம்பள இல்லாத நேரத்தில வீட்ல இப்படி சட்டமா உட்கார்ந்துகிட்டு மரியாதை இல்லாம வேற பேசுறாங்க.. இன்னும் இவர காணாமே.. தீனா கூட இவளிடம் இப்படி பேசியதில்லை..
 
ஏய்ய்ய்ய் என்ன நாங்க கேட்கிறது காதுல விழலையா..??”
 
அதற்குள் தேவிக்கு என்ன புரிந்ததோ அவர்கள் முன் வந்திருந்தவள், தன் ஒற்றை விரலை அவர்கள் முன் நீட்டி.. ஏய்.. எதுக்கு எங்க அத்தையை அதட்றிங்க… இருங்க இருங்க மாமா வரட்டும் சொல்றேன்..!!”
 
ஏய் உழக்கு மாதிரி இருந்துட்டு என்ன வாய் பேசுற…!! போ.. அடிப்பது போல வர,
 
தேவிக்கு வந்த கோபத்தில் கட்டிலில் இருந்த பாட்டிலை தட்டிவிட  பாட்டில் கீழே விழுந்து உடைந்திருந்தது..
 
கோபத்தில் எழுந்த நால்வரும் தேவியை முறைக்க அதில் ஒருவன் தேவியின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்திருந்தான்.. தேவி வலியில் வீறிட்டிருக்க
 
சனியன்.. பிள்ளையா இது பிசாசு..!!” இன்னும் அடி வைத்திருப்பானோ சுமதி வேகமாக குழந்தையை அவனிடம் இருந்து பறித்திருந்தாள்..
 
 எதுக்கு இப்போ இவள அடிக்கிறிங்க..??”
 
சுமதியை முறைத்தவன் மத்தவங்கள அடிக்க முடியல அதான் இவள அடிக்கிறோம்.. சுமதியை அடிப்பது போல அருகில் வர,
 
இவ்வளவு நேரம் நீங்க அவங்க கூட்டாளிகங்கன்னு தான் அமைதியா இருந்தேன்… மரியாதையா வீட்டவிட்டு வெளிய போங்க..?? இதென்ன குடும்பம் நடத்திற வீடா.. இல்ல தண்ணியடிக்கிற பாரா ..?? சின்ன பிள்ளைக இருக்காங்கன்னு கூட இல்லாம இங்கயே குடிக்கிறிங்க.. இப்ப வெளியில போங்க எதுவாயிருந்தாலும் அவங்க கிட்ட பேசிக்கோங்க..!!”
 
மற்றவனோ சுமதியை இன்னும் நெருங்கி ஏய் என்ன.. சவுண்ட் விடுற..?? எவனுக்கோ பிள்ளைய பெத்துக்கிட்டு இங்க அண்ணேகிட்ட தாலி வாங்கிட்டேன்னு திமிரு… அவளை மேலிருந்து கீழாக நோட்டமிட்டவன் என்னத்த காட்டி அண்ணன மயக்கின.. சரியான கைகாரிதான் நீ..!!”
 
சுமதிக்கு கண்மண் தெரியாமல் கோபம்… ச்சீ வாயமூடு ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசனும்னு தெரியாது..?? உனக்கு அக்கா தங்கச்சியெல்லாம் இருக்காங்க தானே..??”
 
இருக்காங்க இருக்காங்க.. ஆனா உன்னை மாதிரி எவளும் கைகாரியா இல்ல.. இப்படியெல்லாம் அண்ணே ஒரு பொண்ணுக்கிட்ட மயங்குவார்ன்னு தெரிஞ்சிருந்தா என் அக்கா தங்கச்சி எவளையாச்சும் ஒருத்திய அவருக்கு கட்டி வைச்சிருப்போம்.. நீயே எப்ப இங்க வந்தியோ அப்பவே எங்க நிம்மதிய கெடுத்திட்ட..?? மரியாதையா வீட்டவிட்டு வெளியில போ.. போகும்போது இந்த குட்டி பிசாசுக ரெண்டையும் இழுத்துட்டு போ.. வாசலை நோக்கி கைகாட்டியவன்..
 
 டேய் போங்கடா இன்னொரு பாட்டில் வாங்கிட்டு வாங்க…
 
அதற்கு மேல் தாங்கமாட்டாதவள் டேய்ய்ய்ய் என்ன வீட்ட விட்டு வெளியில போக சொல்ல நீ யாருடா..?? இது என் வீடு…?? அவர்கிட்ட பேசிக்கோங்க எதுவாயிருந்தாலும்.. உங்களாலதான் நல்லவரான அவரும் கெட்டுப் போறார்.. மரியாதையா வீட்டவிட்டு வெளிய போங்க.. மறுபடி பாட்டில்கீட்டில் எதுவும் இங்க கொண்டு வந்திங்க என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..
 
நால்வரும் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றிருக்க டேய் இவள வீட்டவிட்டு வெளிய பிடிச்சு தள்ளுங்கடா.. நாம அண்ணன்கிட்ட பேசிக்கலாம்..!!” நால்வரும் சுமதியை நெருங்க பயந்தவள் தேவியையும் அருணையும் அணைத்தாற் போல பிடித்துக் கொண்டாள்..
 
சுமதியின் கையை பிடிக்க வந்தவனின் கை டேய்ய்ய்ய்ய்……” என்ற தீனாவின் அதட்டலில் அந்தரத்தில் அப்படியே நின்றிருந்தது.. வாசலில் நால்வரையும் தீயாய் முறைத்தபடி தீனா ……..!!!!
 
 
                                                       இனி……?????

Advertisement