Advertisement

சுமதியை தன் மடிக்கு கொண்டு வந்திருக்க இதுவரை அவன் உருவம் அவள் உள்ளத்தில் பதிந்தது இல்லை இப்போது அவனை கண்களால் நிரப்பிக் கொண்டாள்.. தானே அவனுக்கு எல்லா உறவாக இருக்க வேண்டும் மெதுவாக அவனை நெருங்கியவள் அவன் கழுத்தில் கைப்போட்டபடி அவன் கன்னத்தில் இதழ் பதிக்க எந்த வயதில் வாங்கினால் என்ன முத்தத்திற்கு என்று தனி கிக் இருக்கத்தானே செய்கிறது..
 
கண்களை மூடி மனைவியின் வாசத்தை உள்ளிழுத்து முத்தத்தை ரசித்திருந்தான்.. வாசலில் குணாவின் பேச்சுக்குரல் கேட்க சட்டென விலகியவள் அடுப்படிக்குள் வேகமாக நுழைந்து கொண்டாள்..
 
தேனு சுமதியை பார்க்கவும் அம்மா என்று தாவிக் கொள்ள.. தீனாவுக்கு தரவேண்டிய எல்லா முத்தத்தையும் தன் மகளுக்கு கொடுக்கத் துவங்கினாள்..
 
“என்ன மாப்பிள்ள அடுத்த தெருவுல ஏதும் திருவிழாவா..?? அந்த பக்கம் கூட்டம் களை கட்டுது..”
 
“தெரியல நம்ம பயலுக கிட்ட கேட்டாதான் தெரியும்.. நாளைக்கு கேட்டு சொல்றேன்.. தேவி மாமாவோட வாரியா கடைக்கு போவோம்..?? நீ கேட்ட பொம்மை வாங்கி தர்றேன்..”
 
“ஹே..ஏஏஏஏஏ…கடைக்கா மாமா…!! போகலாம் பார்பி பொம்மை வாங்கி தரனும் சரியா..??”
 
“சரிடா தங்கம் வாங்க..”
 
“மாப்பிள்ள கால் வலிக்கும் இன்னும் ரெண்டு மூனு நாளு போகட்டும் அப்புறமா வண்டி ஓட்டலாம்..??”
 
“பரவால்ல இதெல்லாம் ஒரு காயமா..?? வா தேவி..” மாமாவின் கையை பிடித்துக் கொள்ள அவளை அடிபடாத கையால் தூக்கியவன் தன் தோள் மேல் அமர்த்திக் கொண்டு அருணின் கையை பிடித்து அழைத்துச் செல்ல தேனுவும் ப்பா ப்பா என அழுகை.. அவளையும் மறுதோளில் தூக்கி வண்டியில் அமர்த்தியவன் அருணோடு வண்டியில் கிளம்பிவிட்டான்..
 
குணா தன் தங்கையிடம் வந்தவன் “சுமதி மாப்பிள்ள பார்க்கத்தான் ஆளு கரடு முரடா இருக்காரு தங்கமான குணம்தான்..”
 
“ஆமாண்ணே.. சற்று யோசித்தவள்.. அண்ணே பிள்ளைகள வெளியில கூட்டிட்டு போயிருக்காரே அன்னைக்கு போல யாரும் ஏதாச்சும் பண்ணிருவாங்களோ..?? அவங்க யாருன்னு தெரிஞ்சுச்சாண்ணே..??”
 
“ம்ம் விசாரிச்சுட்டேன்தா.. நீ அன்னைக்கு நம்ம ஏரியாவுக்கு அனுப்புனியே அந்த பொண்ணோட புருசன்தான்.. மாப்பிள்ள அவங்கள வீடு காலி பண்ண வைச்சதுல அந்தாளுக்கு கோபம் அதான் கார கொண்டு வந்து மாப்பிள்ள வண்டியில மோதிட்டான்..”
 
“நீ எப்படிண்ணே இவங்க அடிப்பட்ட இடத்துக்கு போன..??”
 
“ நீ கோபமா வீட்டவிட்டு போன இரண்டு மூனு நாளைக்கு அப்புறம் இங்க வந்திருந்தேன்தா.. அப்பதான் மாப்பிள்ள நீ இங்க இல்லைங்கிற விபரத்தை சொல்லி உன்னையும் மருமகளையும் எப்படியாச்சும் இங்கு கூட்டிட்டு வந்திடச் சொன்னாரு.. அதான் நான் உனக்கு போன் பண்ணினேன்.. எப்படியும் நான் சொன்னா நீ வீட்டுக்கு வருவன்னு தெரியும்..
 
இருந்தாலும் மனசு கேட்காமத்தான் மதியம் வேலை முடியவும் இங்க கிளம்பினேன்.. பஸ்ஸ விட்டு இறங்கி நடந்து வந்துட்டு இருக்கேன் மாப்பிள்ள எதிர்த்தாப்புல வண்டியில வந்தார் ..கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன் அவரு என்னை கவனிக்கல.. அப்பத்தான் அந்த வண்டி வந்து மோதுச்சு.. நல்ல அடி அங்கயே அவருக்கு மயக்கம் வந்திருச்சு.. 
 
நான்தான் ஆசுபத்திரியில காட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.. பிள்ளைக மட்டும் ஒத்தையில இருக்குங்களேன்னு கிளம்பி போனேன்.. அங்க போயும் மனசு கேட்கல.. அதுவரைக்கும் நீ வீட்டுக்கு வரல.. அதான் பிள்ளைகள கூட்டிட்டு கிளம்பி வந்தேன்தா… அவனையும் நான் விடல.. மோதும் போது அவன் முகத்தை பார்த்துட்டேன் போலிஸ்ல கம்பிளைண்ட் கொடுக்கலாம்னு சொன்னா மாப்பிள்ளைதான் விடல..??
 
விசாரிச்சப்போதான் மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார்ன்னு தெரிஞ்சுச்சு.. அங்கயும் போய் அந்த ஆள்கிட்ட சண்டை போட்டேன்.. பாவம் அவன் பொண்டாட்டிதான் என் கால்ல விழுந்து கெஞ்சுச்சு அதான் போய் தொலைறான்னு விட்டுட்டு வந்தேன்..
 
“நல்ல வேளைண்ணே அந்த நேரத்தில நீ வந்த..?? எப்படியாச்சும் எடுத்து சொல்லுண்ணே இந்த வேலையே வேணான்னு..!!”
 
“சொல்லியிருக்கேன்தா.. நான் வேலை பார்க்கிற கம்பெனியில கூட வேலையிருக்கு பார்ப்போம்.. இவரோட கோபம்தான் கொஞ்சம் பயமாயிருக்கு 2000…3000 பேர் வேலை பார்க்கிற இடத்துல வம்பு இழுக்கவே பாதி பயலுக வேலைக்கு வருவானுக.. நெழிவு சுழிவு வேணும்.. எதையும் கண்டுக்காம போக பழகனும்.. பார்ப்போம் இன்னும் பத்துநாள் போகட்டும்.. யோசிப்போம்..”
 
சற்று நேரத்தில் தீனா திரும்பியிருக்க பிள்ளைகள் மூவரின் கையிலும் கைகொள்ளா விளையாட்டு சாமான்களும் திண்பண்டங்களும்..
 
“ஐயோ… ஏன்டா மாமாவுக்கு இவ்வளவு செலவு வைச்சிங்க..?? ஏன் மாப்பிள்ள இவ்வளவு ஒன்னுரெண்டு வாங்கி கொடுத்தா பத்தாதா..!!”
 
“பரவால்ல இருக்கட்டும்.. சுமதி கையில் பையை திணித்தவன் நைட் சாப்பாடு கடையிலே வாங்கிட்டேன்.. பசங்களுக்கு எதுவேணும்னு பார்த்து வைச்சுக் கொடு..”
 
தீனா கட்டிலில் அமர அவன் அருகில் அமர்ந்த குணா “மாப்பிள்ள நாங்க நாளைக்கு வீட்டுக்கு போகலாம்னு இருக்கோம்..”
 
“ஏன் அதுக்குள்ள இன்னும் பத்து நாள் இருந்துட்டு போங்க.. அடுத்த ஏரியாவுல நாளையில இருந்து ஒரு வாரம் திருவிழா போல.. இருங்க அதெல்லாம் முடிஞ்சு போகலாம்..”
 
குணாவுக்கும் ஒன்றும் அவசரமில்லை.. அங்கு மனைவி இல்லாமல் குழந்தைகளை தனிமையில் விட்டு செல்கிறோமே என்ற கவலையில் இருந்தவனுக்கு போக்குவரத்து தான் தூரமாக தெரிந்ததே தவிர பிள்ளைகளை பற்றிய கவலையில்லாமல் இருந்தான்..
 
அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு படுத்திருக்க இந்த சில நாட்களில் நடப்பது போல தீனா மாடிப்படி அருகே அமர்ந்திருந்தான்.. அனைவரும் தூங்கவும் சுமதியும் கணவனை தேடி வந்திருந்தாள்.. ஏதோ காதலர்களை போல இந்த இரவு நேர சந்திப்பு இருக்கவும்  இருவரும் மகிழ்ச்சியாகவே இதை அனுபவித்தனர்..
 
நல்ல ரோஸ் நிற சேலையில் தீனா வாங்கி கொடுத்திருந்த மல்லிகை சரத்தை தலை நிறைய வைத்திருந்தவள் நெற்றியில் குங்குமம் அதன் மேல் திருநீறு  கழுத்தில் தாலிக் கயிறோடு சங்கிலி.. கைநிறைய கண்ணாடி வளையல் காதில் பொன் சிமிக்கி.. குணா தங்கைக்கென்று தன்னால் முடிந்ததாக பத்து பவுன் நகை வாங்கி கொடுத்திருக்க தீனா எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை.. தீனாவுக்கு ஒரு மோதிரமும் வாட்சும் வாங்கி கொடுத்திருந்தான்..
 
தீனா அடுத்த படியில் தலைவைத்து கீழ்படியில் கால் நீட்டி படுத்திருக்க கணவன் அருகில் சென்றவள் அவனை இடித்தபடி அருகில் அமர்ந்திருந்தாள்.. எப்போதும் போல மனைவியின் அண்மை அவனை மயக்க,
 
“ என்ன புள்ள எல்லாரும் தூங்கிட்டாங்களா..??”
 
“ம்ம்ம்..”
 
“ஹோய்.. ஏதாச்சும் பேசுடி..”
 
“என்ன பேச..??” மனைவியின் கழுத்தில் கைப்போட்டு தன்னிடம் இழுத்துக் கொண்டவன்..
 
“என்ன வேணா பேசு..”
 
“வேணாம்.. நான் ஏதாச்சும் பேசினா கோபம் வரும் உங்களுக்கு..!!”
 
“க்கும்.. அப்போ கோபம் வர்ற மாதிரி ஏதோ பேச போற..?”
 
இல்லை என தலையாட்டியவள் “எனக்காகவும் தேனுக்காவாச்சும் இந்த வேலையை விடக்கூடாதா..?”
 
“ஆஹா… ஆரம்பிச்சுட்டியா.??. டெய்லி இதான் பேசுற..?? வேற ஏதாச்சும் பேசுடி.. ராத்திரியில இதான் பேசுவாங்களா..!!”
 
மெதுவாக திரும்பி அவன் முகம் பார்த்தவள் இன்னும் நெருங்கி அவனை அணைத்துக் கொள்ள,
 
“என்ன புள்ள… ஏய்… என்னமா…?? தன் மடிக்கு கொண்டு வந்திருந்தவன் சொல்லுமா..??” அவள் கழுத்தில் தன் விரல் கொண்டு வருட..
 
அவள் தேகம் கூசி சிலிர்த்தாலும் கணவனைதான் இன்னும் இறுக்கியிருந்தாள்.. “எனக்கு ரொம்ப நாளைக்கு உங்க கூட வாழனும்னு ஆசை இருக்குங்க.. நமக்குன்னு ரெண்டு மூனு பசங்க வேணும்.. அவங்கள எல்லாம் நல்லா வளர்த்து ஆளாக்கனும்.. நீங்க இதுமாதிரி தொழில் பார்த்தா எப்போ எவன் என்ன செய்வான்னு தெரியாது.. சத்தியமா நீங்க இல்லாம நானும் தேனுவும் இருக்கமாட்டோம்.. எனக்காக இத விடக்கூடாதா..??”
 
இத்தனை நாட்களை போல இப்போதும் அவன் அமைதியாக இருக்க தினமும் இரவு சுமதி இதை பற்றி பேசுவதும் தீனா மறுப்பதும் என இதுதான் நடந்து கொண்டிருக்கிறது..
 
“அடிப்பக்கி இப்போ இதுவா பேசுவாங்க வேற பேசனும்டி..” என்றும் போல இன்றும் பேச்சை திசை திருப்ப முதல் முறையாக கோபம் சுமதிக்கு… ஒருவாரமா கெஞ்சுகறேன் ஓவராதான் பண்றாரு இவரு..!!
 
சட்டென மடியை விட்டு இறங்கியவள் “போங்க போங்க நீங்க எப்படியோ போங்க.. எனக்கு பிடிக்கவே இல்ல.. என்னவோ பண்ணுங்க நான் போறேன்..” அவனை விட்டு விலகி செல்ல,
 
எட்டி அவளை பிடித்தவன் வாகாக கைகளில் ஏந்தியிருந்தான்..
 
“ஐயோ ஏங்க அடிப்பட்ட கை.. விடுங்க வலிக்க போகுது…”
 
“உஷ்ஷ் சத்தம் போடாத..?? மயக்குற புள்ள..!!”  அவள் இதழை சிறை செய்தவன் அப்படியே மாடியேறியிருந்தான்…
 
“ஏங்க… தேனு முழிச்சிருவா..??” பதறியவள் சற்று நேரத்திலேயே அவன் முத்தத்தை ரசித்து அதில் மூழ்க துவங்கி தானும் அதில் பங்கு கொள்ளத் துவங்கினாள்..
 
                       “சிறகை நீங்கினால்
                              பறவையில்லை திரியை
                      நீங்கினால் தீபமில்லை
                                உன்னை நீங்கினால்
                     நானில்லை உனக்கிது
                                புரியவில்லை

                     உடலை நீங்கினால்
                              உயிருமில்லை ஒலியை
                    நீங்கினால் ஒளியுமில்லை
                             உன்னை நீங்கினால்
                    நானில்லை உனக்கிது
                              தெரியவில்லை

                    பூமி சுற்றுவது
                            நின்றுவிட்டால் புவியில்
                   என்றுமே மாற்றமில்லை
                           புருஷன் சுற்றுவது நின்று
                   விட்டால் எந்நாளும்
                            பெண்வாழ்வில் ஏற்றங்கள்
                     இல்லை

                   பொத்தி வைத்த
                           ஆச வந்து
                   நெத்தியில துடிக்குது

                   பொத்தி வைத்த
                         ஆச வந்து
                  நெத்தியில துடிக்குது

                  தொட்ட இடம்
                        பத்திக் கொள்ளும்
                  தூரத்தில் ஒதுங்கி நில்லு….”

 
                                                                     இனி………??????

Advertisement