Advertisement

இருவரும் துண்டை காணோம் ..துணியை காணோம் என்று ஓடவும், சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை ஒரு முறை முறைத்தவன் “சாப்பிட மட்டும்தான் வாயத்திறக்கனும்..?? அத மீறி எதாச்சும் பேசினிங்க அடுத்து பேச வாயிருக்காது..!!” சுமதியின் கையை பிடித்து வீட்டிற்குள் கொண்டு வந்தவன் இறுக அணைத்திருந்தான்..
 
“ஏய் என்னடி.. கட்டினவன் நான் கையைக்கூட தொட்டதில்ல..!! கண்ட பயலும் கண்ட இடத்தில தொட வர்றான்..?? பேசாம கண்ண மூடிட்டு நிக்குற..?? என்ன இதுக்குத்தான் இந்த தொழிலை தொடங்குனியா..??” வாய் சுமதியை கிழித்து நார் நாராய் தொங்கவிட்டுக்கொண்டிருக்க கைகளோ தான் இங்கு வர சற்று தாமத்திருந்தால் என்ன நடந்திருக்கும் கொதிக்கும் மனதை அடக்க வழியில்லாமல் அவன் விட்ட செயலை இவன் தொடர்ந்திருந்தான்..
 
சுமதிக்கு இன்னும் அதிர்ச்சி நீங்கவில்லை.. முதலில் ஒரு வகை அதிர்ச்சி என்றால் இப்போதோ வேறு வகையில்..!! ஆத்தி இந்த மனுசன் ஏன் இப்படி இறுக்கி பிடிச்சிருக்காரு..?? இதுவரை எந்த ஆணின் கைகளும் தொடாத பாகங்களை தீனாவின் கை தொட்டிருக்க உள்ளுக்குள் ஏதோ போலிருந்தாலும் அவனின் இறுக்கம் வலியைத்தான் கொடுத்திருந்தது… அதைவிட அவனின் பேச்சு.. இதுக்கா நான் இட்லிக்கடை வைச்சேன்..?? ரொம்பத்தான்..!! கோபமாக அவனை விட்டு விலகப்பார்க்க ம்ம் இம்மி அளவுக்கூட அசையமுடியவில்லை..
 
இறுக்கி அணைத்தவனின் முகம் அவள் தோள்ப்பட்டையில்..!! அதிலிருந்த தாடியும் மீசையும் அவள் வெற்றுத்தோளில் குத்த தொடங்கியிருந்தது.. சுமதிக்கு பெரும் இம்சை.. தீனாவுக்கு சுகமாய் இருந்தது போல இன்னும் இன்னும் அவளுள் புதைந்து கொண்டிருந்தான்.. இவளுக்கு பெரும் சுழலுக்குள் மாட்டிய நிலை அவனின் முரட்டுப்பிடியை தாங்க முடியவில்லை..
 
மென்மை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பான் போல..!! மிஷினில் மாட்டிய கரும்பு போல அவனுள் மாட்டிக் கொள்ள இனிப்பை தனியாய் பிரிக்க துவங்கியிருந்தான்.. எவ்வளவு நேரம் சென்றதோ கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் தங்கள் நிலையை மறக்க துவங்கியிருந்தனர்..
 
திடிரென “அப்பா… ப்பா..!!” தேனு குப்புற படுத்தபடி தொட்டிலில் இருந்து தன் முகத்தை மட்டும் வெளியில் நீட்டி தீனாவை கூப்பிட சுமதியை மறந்தவன் அவளை அப்படியே விட்டுவிட்டு தேனுவிடம் விரைந்திருந்தான்.. தீனா சென்றது கூட தெரியாமல் இன்னும் அணைத்திருக்கிறானோ அப்படியே நின்றிருந்தாள்.. அன்று அண்ணன் சொன்ன கணவன் என்ற பெயருக்கு சக்தி அதிகம் தானோ..!! முதலில் முரட்டுத்தனமாய் தோன்றிய அணைப்பு போக போக சுகமாய் மாறியிருக்க கணவன் தன்னை விட்டுப் பிரிந்தது கூட தெரியவில்லை..
 
எவ்வளவு நேரம் கழிந்ததோ ஏதோ ஒலியில் தன் சுயநினைவு திரும்ப தீனாவிற்குதான் போன்.. தேனுவை தூக்கியபடி போனை பேசிக் கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் “இந்தாத்தான் இருக்கா.. தர்றேன்.. நீங்களே பேசிக்கோங்க.. ஏய் இந்தா புள்ள பேசு..!!”
 
இவரு போன்ல இருந்து நமக்கு யாரு .. குழப்பமாக போனை வாங்கி காதில் வைக்க.. “ரொம்ப நல்லதுத்தா..?? உன்னைப்பத்தி கேள்வி படுற விசயமெல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு..??”  மறுபக்கம் குணாவின் கோபக்குரல்..
 
அண்ணன் எப்படி இவரு போன்ல “அண்ணே…” இழுக்க..
 
“வாய மூடு சுமதி.. என்னதான் ஆச்சு உனக்கு..?? புருசன் கூட சண்டை போட்டு புள்ளையோட வெளியில போயிட்டியாமே..??”
 
 நம்மள பத்தி என்னென்ன சொல்லிக்கொடுத்தாரோ தெரியலையே..??
 
“என்ன சுமதி காதுல கேட்டுச்சா இல்லையா..??”
 
“இல்லண்ணே அது வந்து இவரு பார்க்கிற வேலை..??”
 
“இதோ பாரு எதுவும் தேவையில்ல எனக்கு..?? புருசன் பொண்டாட்டி பிரச்சனை நீங்கதான் பேசி முடிவெடுக்கனும் எதாயிருந்தாலும் என்கிட்ட கொண்டு வரக்கூடாது.. இது நீயா தேர்ந்தெடுத்த வாழ்க்கை நீதான் சரி செய்யனும்.. எந்த மாமனார் மாமியார் இருக்காங்க..?? இல்ல கொழுந்தன் கூட்டாளி நாத்தனார் நங்கைன்னு இருக்காங்க உன்னை புடுங்க…?? பாவம் ஒத்த மனுசர் எதாச்சும் தப்பு பண்ணினா பொறுமையா எடுத்து சொல்வியா அதவிட்டு வீட்ட விட்டு வெளியில் வந்திருக்க..?? 
 
ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திதான் அன்னைக்குத்தான் இங்க வரமாட்டேன்னு சொன்ன அதுக்கு ஒரு காரணம் இருந்திச்சு.. இப்ப வந்தா என்ன ..?? நீ வேற ஒருத்தருக்கு மனைவியாகிட்ட இப்பவாச்சும் புருசன் கூட கோபம்னா அண்ணன தேடி வரக்கூடாதா..?? அந்த அளவுக்கு பெரியாளா ஆகிட்ட..!!
 
இதோ பாரு சுமதி சாயங்காலம் அண்ணே வீட்டுக்கு வருவேன்.. அதுக்குள்ள முடிவெடு..!!  உன் புருசன் வீட்லயா..?? இல்ல கோபம் போற வரைக்கும் அண்ணன் வீட்ல இருக்கியான்னு..?? அத விட்டுட்டு தன்நினைச்ச மூப்பும் தனுசு குடியிருப்புமா இருக்க கூடாது புரியுதா..??” தங்கை சொல்ல வந்ததை காதில் வாங்காதவன் கோபமாய் போனை வைத்திருக்க இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல தேனும் தீனாவும் உற்சாகமாக தங்கள் உலகத்தில் இருந்தனர்..
 
ராசாத்தி அம்மாள் வரும்வரை அங்கேயே இருந்தவன் “இதோ பாரு கெழவி இட்லி கடை போடுறதா இருந்தா அங்க வந்தா மட்டும்தான் போடனும்..?? அத விட்டுட்டு இங்க இருந்து அந்த வேலையை பார்த்திங்க நாளைக்கு ஒரு தட்டு, சேர்க்கூட உன் வீட்ல இருக்காது..!! இந்த புள்ள நான் என்ன வேலை பார்த்தேன்னு கோபமா வந்துச்சோ அதே வேலையை உன் வீட்ல பார்க்கிறமாதிரி ஆகிடும் எந்த பணமும் வாங்காம..?? புரிஞ்சு நடந்துக்கோ..?? அப்பப்போ சொல்லு கெழவி நான்தான் அவ புருசன்னு வரவா..!!”
 
சுமதியின் அருகில் வந்தவன் “நான்தான் உன் புருசன்… மறந்துறாத..!! இல்ல இன்னைக்கு நடந்துகிட்டா போல அடிக்கடி நடக்கும் எப்படி புள்ள நல்லாயிருந்துச்சுள்ள..??” ஒரு கண்ணை சிமிட்ட வில்லன் போல இருந்துட்டு பேச்சப்பாரு..?? இத்தனை நாட்களில் அவன் மேல் கோபம் எல்லாம் போய் கணவன் என்ற நினைப்பு லேசாக வந்திருக்க இன்று அதை தன்னிடம் அத்துமீற இருந்தவர்களை தண்டித்தும் தன்னுடைய அணைப்பாலும் உறுதி செய்திருந்தான்..
 
“ஏத்தா சுமதி எவனோ காவாலி பய உன்கிட்ட ஒரண்ட இழுத்தானாம்..?? தீனாதான் அவன வெளுத்து கட்டினான் போலயே..!! இப்பதான் தெரு முக்குல விசயத்தை கேள்விப்பட்டு ஓடியாந்தேன்..?? ஆரம்பத்திலேயே என்கிட்ட சொல்லியிருந்தா வெளக்கமாத்தால ரெண்டு காட்டு காட்டியிருப்பேன்ல..??” ராசாத்தி அம்மாள் பேசிக் கொண்டே செல்ல சுமதிக்குள் ஏகப்பட்ட குழப்பம் …
 
இன்னைக்கு இவரு வரலைன்னா நமக்கு என்ன வேணா நடந்திருக்கலாம்.. அந்த கோபி பயக்கிட்ட தப்பிச்சு கண்டவனும் நம்மள தொடுற அளவுக்கு விட்டுடமோ… அண்ணன் பேசியது நினைவுக்கு வர என்ன முடிவெடுப்பது..?? நாளை கடை போட்டால் என்ன நடக்கும் தீனா சொல்லியே சென்றிருக்க என்ன செய்வது அண்ணன் வீட்டுக்கா..? இல்லை திரும்ப இங்கயே போயிருவமா..?? ஏகப்பட்ட யோசனைகள்…
 
பகல் பொழுது வேகமாய் கரைந்து இரவு பொழுது வந்திருக்க இன்னும் சுமதியால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.. “சாப்பிடுங்கம்மா..” ராசாத்தி அம்மாளுக்கு சாப்பாட்டை பரிமாறியவள் இன்னும் யோசனையிலேயே இருக்க…
 
ஒரு சிறுவன் வந்து கதவை தட்டி “பாட்டி தீனா அண்ணன் மேல ஏதோ வண்டி மோதிருச்சு போல கால்ல கட்டுப்போட்டு வீட்டாண்ட பார்த்தேன் ..??” பாதி சொல்லியும் சொல்லாமலும் ஓட இருவருக்கும் அதிர்ச்சி..
 
ராசாத்தி அம்மாள் அழவே ஆரம்பித்துவிட்டார்.. “ஆத்தி இப்ப என்னாச்சுன்னு தெரியலையே..!!” ஓஓஓவென ஒப்பாரி வைக்க தேனுவை தூக்கிக் கொண்டவள் ராசாத்தி அம்மாளோடு அடித்துப்பிடித்து வீட்டிற்கு செல்ல அங்கு ஹாலில் கிடந்த கட்டிலில் தீனா படுத்திருந்தான்.. ஒரு காலில் கட்டுப்போட்டிருக்க  கையிலும் கட்டு..
 
அனாதை போல படுத்திருந்தவனை பார்க்கையில் சுமதிக்கும் அழுகையே..!! தூங்காமல் கண்மூடி படுத்திருக்க இவர்களின் சத்தத்தில் விழித்தவன் பார்த்தது தனக்காக அழும் சுமதியின் முகத்தைதான்..!! தேனுவோடு அவன் அருகில் வந்திருக்க அவளின் கண்ணீர் துளியில் ஒன்றிரண்டு அவன் கைகளில் விழுந்திருந்தது.. தனக்காக வந்த இந்த கண்ணீர் துளிகளை பார்த்து மகிழ்ச்சியே தீனாவுக்கு.. அதுவரை மனதில் இருந்த வெறுமை மாறி மகிழ்ச்சி கண் ஊற்றெடுக்க ஆரம்பித்தது..
 
ராசாத்தி அம்மாவோ “ஆத்தி தீனா என்னாச்சு?? எவன்டா உன்னை இவன் இப்படி பண்ணினான்..?? அவன் நாசமா போக..!! வெளங்காம போக..!! போற இடத்தில அவன் வண்டி பிரேக் பிடிக்காம தண்ணி லாரி மோத..??” இன்னும் ஏதேதோ சாபம் கொடுத்துக் கொண்டிருக்க,
 
“ந்தா நிப்பாட்டு கெழவி..!! இப்படியெல்லாம் எனக்குத்தான் சாபம் கொடுப்பாங்க.. நீயென்ன வேற ஆளுக்கு கொடுத்திட்டு இருக்க…?? விடு..?? இதெல்லாம் ஒரு அடியா ஓவரா சீன் போடுற.. !!”அடிபட்டதில் துளிவருத்தம் கூட இல்லாமல் மகளை பார்த்தவன் “தேனுக்குட்டி வாங்க அப்பாக்கிட்ட..??” அடிபடாத கையால் மகளை தூக்கிக் கொள்ள,
 
தன் அப்பாவின் கையில் இருந்த கட்டை பார்க்கவும் தன் அம்மாவை அழைத்து கட்டை காட்டியவள் “ப்பா ஊ.. ஊ…” தொட்டு தொட்டுப்பார்க்க தன் தந்தைக்கு ஏதோ காயம் என்று மட்டும் புரிந்ததோ…!! மகளின் பாசம் புரிய வாரி அணைத்துக் கொண்டான்.. தன் குடும்பம் தன்னிடம் மீண்டும் வந்துவிட்டதா..?? மகள் முகமெங்கும் ஒரு இடமில்லாமல் முத்தமிட துவங்கியிருந்தான்..
 
              “ ஆனந்த யாழை மீட்டுகிறாய்
                                   அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்..
                           அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
                                   அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்..

                           இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்

                                   பாஷைகள் எதுவும் தேவையில்லை..
                           சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
                                   மலையின் அழகோ தாங்கவில்லை..
                           உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
                                   அது போதவில்லை இன்னும் வேண்டுமடி..
                           இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
                                   எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி..

                           ஆனந்த யாழை மீட்டுகிறாய்
                                     அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்..
                          அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
                                    அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்…….”

 
 
                                                          இனி…………..???????

Advertisement