Advertisement

“அண்ணே கைகளை முன்னால் நீட்டி நான் சொல்ற கொஞ்சம் பொறுமையா கேளு..”
 
“ஏங்க அந்த பொண்ணு வரலைன்னு சொன்னா அப்படியே விட்டுட்டு போயிருவிங்களா..!! நாலு அறை வைச்சு தரதரன்னு இழுத்துட்டு போவிங்களா..? இப்பத்தான் இந்த பொண்ண பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க… இதெல்லாம் நல்ல குடும்பம் இருக்கிற ஏரியாங்க.. உங்க தங்கச்சி மாதிரி ஆளுகளுக்கெல்லாம் இங்க இடம் இல்ல.. இழுத்துட்டுப் போங்க ஒழுங்கா..!!”
 
அவ்வளவுதான் அதுவரை தனக்கில்லாத பொறுமையை இழுத்து பிடித்திருந்தவனுக்கு மீண்டும் கோபம் தலைத்தூக்க.. “வாங்கடா சரியான ஆண்பளை எவனாச்சும் இருந்தா இவ கையத்தொடுங்க பார்ப்போம்..” சுமதியை நடுவில் நிறுத்தி அவன் கைக்கட்டி நிற்க… சுமதிக்கு தப்பே செய்யாமல் தீக்குளித்த நிலை.. அனைவரின் நாக்குகளும் தேள் கொடுக்காய் மாறி சுமதியை கொட்டத்துவங்கியிருந்தது..
 
இதுக்கு அன்னைக்கே நாம செத்துப்போயிருக்கலாம்.. கடவுள் ஏன் ஒரு பச்சக்குழந்தையை கையில கொடுத்து இவருக்கிட்ட விட்டாரு..!! ஏதோ கொஞ்சம் சந்தோசமா இருந்தேன் அது உனக்கு பிடிக்கலையா…?? இவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை.. இத்தனை வருடமாக தன்னை வளர்த்த அண்ணனை எதிர்த்து பேசுறோம்.. அவர் வளர்ப்புக்கு துரோகம் செய்கிறோம் .. தலை குனிந்து நிற்க…
 
தங்கை முன்னால் வந்தவன் “ரொம்ப சந்தோசம்த்தா..!! இத்தனை வருசம் வளர்த்தவனவிட ஆறுமாசம் பழகினவன் முக்கியமானவனா போயிட்டான்.. இவன நம்பி இங்க இருக்கிறேன்னு சொல்றல்ல.. எனக்கு வர கோபத்துக்கு உன்னை இங்கயே தலையை முழுகிட்டு போயிருவேன்.. ஆனா சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன் உன்ன நல்லபடியா வாழ வைக்கிறேன்னு அதான் தடுக்குது என்னை…!! கண்ணை மூடி தன்னை சமன் படுத்தியவன் சரித்தா
 
நீ இங்கயே இரு ஆனா வப்பாட்டியா இருக்காம அவன் கையால ஒரு தாலிக்கட்டிக்க.. நான் சந்தோசமா உன்னை தலைமுழுகிட்டு போறேன்..
 
சுமதிக்கு அடுத்த அதிர்ச்சி.. அந்த தெரு பெண்களுக்கும் அதிர்ச்சிதான்.. இந்த புள்ள அண்ணே கெட்டிக்காரன்தான் தாலி அறுத்து ஒரு கைப்பிள்ளையோட இருக்கிறவளுக்கு மறுதாலி கட்டப்பிளான் போடுறானே.. எங்க பார்ப்போம் இவன் பாட்சா இந்த ரௌடிப்பயலுக்கிட்ட பலிக்கிதான்னு..!!
 
ஓடிப்போய் அண்ணனின் காலில் விழுந்தவள் காலை கெட்டியாக பிடித்துக் கொண்டு.. “இப்ப என்னண்ணே நான் இங்க இருக்கக் கூடாது அவ்வளவுதானே அதுக்கு போய் இப்படியெல்லாம் பேசாத..?? அவங்க எனக்கு உதவிதான் பண்ணினாங்க..??
 
இவங்க எல்லாரும் சொல்றமாதிரி இங்க எதுவும் நடக்கல.. நான் உன்னோட தங்கச்சி அப்படியெல்லாம் பாதை மாறி போகமாட்டேன்.. இப்ப என்ன நான் இங்க இருக்க கூடாது அவ்வளவுதான.. இப்பவே வீட்டவிட்டு போறேன்… ஆனா அங்க நம்ம வீட்டுக்கு வரல.. இங்க ஒரு அம்மா இருக்காங்க அவங்க வீட்டுக்கு போயிருறேன்..” கையெடுத்து கும்பிட தன்னை யாரோ பின்னால் இருந்து இழுக்க என்னவென்று உணர்வதற்கு முன்னால் தீனா சுமதியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்..
 
சுமதி அண்ணனிடம் கெஞ்சும்போது தீனா வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்க அனைவரின் பார்வை சுமதியின் மேல் மட்டும்தான்.. எப்போதும் அதிகாலையில் பாட்டுபோட்டு அவன் தூக்கத்தை கெடுக்கும் அந்த அம்மன் கோவில் அம்மனின் கழுத்தில் இருந்த தாலி இப்போது சுமதியின் கழுத்தில் .. நிதானமாய் மூன்று முடிச்சை போட்டவன்… அந்த அம்மனின் நெற்றியிலிருந்து கொண்டு வந்திருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் அழுத்தமாய் அகலமாய் இட்டிருந்தான்..
 
அனைவரும் வாயடைத்திருந்தார்கள்.. இது உண்மையா..?? கோபிக்கு இருமடங்கு அதிர்ச்சி தன்னுடைய எண்ணமெல்லாம் கண்முன்னால் தவிடுபொடியாகியதா..!!
 
சுமதியின் தோளில் கைப்போட்டவன் “எவனாயிருந்தாலும் இப்ப பேசுங்கடா…?? இவ இப்ப என் வப்பாட்டி இல்ல… பொண்டாட்டி..!! இப்ப எவன் என்ன செய்ய முடியும்..” கூட்டமே அதிர்ச்சியில் நிற்க , என்னடா வீட்டின் முன்னால் இவ்வளவு கூட்டம் பிள்ளையை தூக்கியபடி வேகமாய் வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்ற ராசாத்தி அம்மாளும் அதிர்ச்சியில் இருந்தார்.. ஆனால் அது இன்ப அதிர்ச்சி.. சந்தோசத்தில் அவருக்கு கண்ணீர் ஊற்ற… தீனாவுக்கு விடிவுகாலம் வந்துருச்சா.. ஆத்தா மகமாயி நீ இவன் வாழ்க்கையில கண்ணு திறந்துட்டாளா..!!
 
அதிக அதிர்ச்சியோ என்னவோ சுமதிக்கு தலை சுற்றுவது போலிருக்க அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள்..குணசேகரனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.. தீனா தாலி கட்டுவான் யாருமே எதிர்பார்க்கவில்லை.. அந்த தெருவாசிகளுக்கு அடச்சே இப்படி சப்புன்னு ஆகிருச்சே.. எப்படியும் அந்த தீனாப்பயல ஒரு வழியாக்கலாம்னு நினைச்சோம் அது நடக்காம போச்சே.. அனைவரும் தங்களுக்குள் முனுமுனுத்தபடி கலைந்து தங்கள் வீடுகளுக்கு செல்ல,
 
 மனோகரிக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.. இதை சாக்கு வைத்தாவது தன் பிள்ளைகளோடு சேர்ந்துவிடலாம் என்று நினைத்திருந்தாள் இப்போது இந்த மனுசன் என்ன பண்ணுவாரோ… வேகமாய் வீட்டிற்குள் நுழைந்த ராசாத்தி அம்மாள் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆரத்தி கரைத்து கொண்டு வந்தவர் மனோகரியின் கையில் திணித்திருக்க அவருக்கு இங்கு நடந்தது எதுவும் தெரியவில்லை..
 
ஏதோ பிரச்சனை அதனால்தான் தீனா சுமதியின் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறான் என்று நினைத்திருக்க மனோகரிதான் சுமதியின் அண்ணியென்று அறியவில்லை… வேண்டா வெறுப்பாக ஆரத்தி எடுத்தவளுக்கு இங்கு நடந்தது தனக்கு நல்லதா கெட்டதா புரியவில்லை..
 
சுமதி இனி அங்கு வரமாட்டாள் மகிழ்ச்சிதான் ஆனால் தான் எப்படி அங்கே போவது யோசனையோடு ஆரத்தி சுற்ற.. அதுவரை தீனாவின் கைப்பிடியில் நின்றிருந்த சுமதி இப்போதாவது அண்ணனிடம் பேசலாம் திரும்ப அதுவரை தங்கையையே பார்த்திருந்தவன் ஏதோ சொல்ல வாய்திறந்து என்ன நினைத்தோ சட்டென்று அந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தான்..
 
சுமதியின் கையை பிடித்த தீனா விறுவிறுவென வீட்டுக்குள் அழைத்துச் செல்ல ராசாத்தி அம்மாளும் பின்னாலே சென்றிருந்தார்.. இப்போது மனோகரி அவள் தாய் கோபி மட்டும் அங்கு நின்றிருக்க யாரும் அவர்களை கண்டு கொள்ளவில்லை.. கடைசிவரை தேனைப்பற்றிய பேச்சு வரவே இல்லை…
 
“என்னடா கோபி இப்படி நடந்து போச்சு..??”
 
“வாய மூடுங்க எல்லாம் உங்களாலதான்..!! வரவும் நைசா பேசி அவள கிளப்பி கொண்டு போயிருக்கலாம் .. அத விட்டுட்டு சண்டைப்போட்டு இந்த தெருவ கூட்டி.. உன் புருசன வரச் சொல்லி சண்டைய பெருசாக்கி காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டி போனவன் மாதிரி இந்தா இவன் வந்து கொத்திட்டு போயிட்டான்.. சனியங்க ரெண்டு பேரும் என் உசிர வாங்கத்தான் வந்திருக்கிங்க போல.. எங்காச்சும் போய் தொலைங்க.. என் கண்முன்னாடி நிக்காம..!!” வழியில் போன ஆட்டோவை கைகாட்டியவன் தான் மட்டும் அதில் ஏறி சென்றுவிட்டான்..
 
“ம்மா என்னமா அவன் இப்படி விட்டுட்டு போயிட்டான்…??”
 
“தெரியும்டி அவன் இதுமாதிரிதான் செய்வான்னு.. நட்டநடு ரோட்டுல இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டானே.. டி உன் புருசன் கைல கால்ல விழுந்தாவது மன்னிப்பு கேளு அதவிட்டா நமக்கு வேற வழியில்ல..”இருவரும் புலம்பியபடி நடையை கட்ட ,
 
“இப்ப என்னபுள்ள பண்ணினேன் உன்ன..?? இப்படி அழுதுட்டு இருக்க..??”
 
குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை..
 
“ஏய் வாயத்திறக்க போறியா..?? என்ன இல்ல இன்னும் ஊமக்கோட்டான் மாதிரித்தான் இருக்கப் போறியா..??”
 
“ஏப்பா தீனா எதுக்கு இப்போ அவள அதட்டுற..?? திடிருன்னு இப்படி தாலி கட்டினா யாருக்கும் கஷ்டமாத்தான் இருக்கும்.. கொஞ்ச நேரம் இந்த பிள்ளைய விடு.. அப்புறமா பேசிக்கலாம்…”
 
“நீ வாயமூடு கிழவி.. இந்தப்புள்ளைக்கு நான் நல்லதுதான் பண்ணினேன்.. கண்டவளுகளும் தப்பா பேசினாளுக.. அதான் தாலிய கட்டினேன் அது தப்பா..!!”
 
“தீனா நீ ஆம்பள எல்லாம் தப்பா தெரியாது ஆனா இவ பொம்பள அதுவும் ஏற்கனவே ஒருத்தனோட வாழ்ந்து பிள்ளை வேற பிறந்திருக்கு.. ஆனா அவனாலயும் இவ ஏதும் சொகப்பட்டாப்புல தெரியல.. எல்லாம் பொம்பளைங்க வாங்கி வந்த வரம் அப்படி..” அவர் தன் புலம்பலை துவங்க சுமதியை பார்த்தவன் ஏதும் சொல்லாமல் தன் வண்டியை கிளப்பியிருந்தான்..
 
காலம் யாருக்கும் காத்திருக்காமல் பகல் பொழுது போய் இரவும் வந்திருக்க அதுவரை தீனா வரவில்லை.. சுமதியும் அப்படியேதான் இருந்தாள்.. ராசாத்தி அம்மாள்தான் குழந்தையையும் கவனித்துக் கொண்டு சமையலையும் ஏனோ தானோவென்று முடித்திருக்க தீனா வீடுவரும்போது ராசாத்தி அம்மாளும் தேனும் நல்ல உறக்கத்தில்.. ராசாத்தி அம்மாள் தன் அறையில் படுத்திருக்க எப்போதும் கதவை திறந்து வைத்து படுப்பவர் இன்று என்ன நினைத்தாரோ கதவடைத்து உறங்கியிருந்தார்..
 
தேனும் சுமதியும் உள்ளறையில் படுத்திருக்க  அந்த அறைக்குள் நுழைந்தவன் கதவை தாழிட்டிருந்தான்..!!!
 
                                                    இனி…………….??????

Advertisement