Advertisement

அத்தியாயம் எட்டு :

அடுத்த இரண்டு நாட்கள் அந்த வெளிநாட்டவர்கள் அங்கிருந்து கிளம்பும் வரை பிரவீன் விஜயை விடவே இல்லை.

சைந்தவியை கண்களால் பார்க்க மட்டுமே முடிந்தது அதுவுமே சில நிமிடங்கள்.

அந்த லஞ்ச் சென்ற போதே ரிச்சர்ட் விஜயை பார்த்து கேட்டான், “ஆர் யு ஹெர் ஹஸ்பன்ட்” என்று.

“ஆம்” என்று அவன் தலையாட்ட, “யு ஆர் வெரி லக்கி” என்றான் கண்களில் சிறிது பொறாமையோடு.

“எஸ், வெரி மச், ஷி இஸ் வெரி ரிச். எ மில்லினர்ஸ் டாட்டர், பட் டு மேரி மீ ஷி லெப்ட் எவ்ரிதிங் அண்ட் கேம்” என்றான் ஆழ்ந்த குரலில் ஒரு கர்வத்தோடு.

“தென் யு ஷுட் கீப் ஹேர் வெரி ஹாப்பி” என்றான். பின்பு பேச்சு வேறு திசையில் திரும்பி விட்டது. பின் மதியத்திற்கு மேல் அவர்கள் வந்து ஒரு கிளாஸ் போல எடுத்தனர் எப்படி செய்ய வேண்டும் என்று.

பின் அடுத்த நாள் வந்து அவர்களை மீண்டும் கேள்வி கேட்டனர். “ஏதாவது டவுட் இருந்தா இவங்க கிட்ட கேளுங்க” என்று சைந்தவியை காட்டினர். சைந்தவியின் முகத்தினில் இருந்து விஜயிற்கு எதுவும் தெரியவில்லை. எப்படி இப்படி முகத்தினை உணர்வுகள் அற்று வைக்க கற்றுக் கொண்டாள். விஜயின் கவனம் முழுவதும் அவளிடம் தான்.

ஒரு சிறு புன்னகை எப்போதும் யாரை பார்த்தாலும். விஜயை கவனமாக தவிர்த்தாள். கிடைத்த தனிமையில் பிரவீன் விஜயிடம் அவர்களின் வாழ்க்கை பற்றிக் கேட்ட போது, “சொல்ற மாதிரி எதுவும் இல்லை பாஸ், நீங்க தான் என்னை முன்னமே முட்டாள் சொல்லிட்டீங்களே” என்றான்.

அவன் கோபத்தில் சொல்கிறானா விரக்தியில் சொல்கிறானா ஒன்றும் தெரியவில்லை. ஒரு வழியாக இரண்டு நாட்கள் பிறகு அவர்கள் மும்பையில் இருக்கும் கிளைக்கு கிளம்பினர், இன்னம் இரண்டு நாட்களில் ஹைதராபாத் வருவதாக பிரவீனிடம் சொல்லி.

சைந்தவியிடம் அவள் இருக்குமிடம் வந்து மூவரும் சொல்லி கிளம்பினர். அது அவளின் அறிவாற்றலுக்கு அவர்கள் செலுத்திய மரியாதை.

கமாலிக்கு காதில் புகை புகையாக வந்தது. பின்னே விஜய் திரும்ப அவளிடம் பேசவேயில்லை. பிரவீன் அவளிடம் மிகுந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசராக இருந்தார். ஏக கடுப்பில் இருந்தாள் அவள். “ஆஃபிஸ் நான் மேனேஜ் பண்றேன். அவனுங்க இவ கிட்ட சொல்லிட்டு போறானுங்க. அழகான பொண்ணை பார்த்தா இப்படியா வழிவாங்க. எந்த ஊர்ல இருந்து வந்தாலும் ஆம்பளைங்க ஆம்பளைங்க தான்” என பொருமிக் கொண்டிருந்தாள். உண்மையில் அவளும் அழகான பெண் தான் ஆனால் அவர்கள் ஒன்றும் அவளிடம் வழியவில்லை என்பதை மறந்து போனாள்.

அவர்கள் சென்ற அடுத்த நிமிடம் பிரவீன் எல்லோரும் இருக்குமிடம் வந்து “தேங்க்யு கைஸ், வி ஹேவ் மேட் இட் சக்சஸ்ஃபுல்லி” என்றவர், “எ வெரி ஸ்பெஷல் தேங்க்ஸ் டு சைந்தவி. ஷி டிட் வெரி வெல் ட்யுரிங் பிரசென்டேஷன்” என்றார்.

“தேங்க்ஸ் சர்” என்றாள் கடமையாய்.

அவளை ஒரு பார்வை பார்த்தவர் “இந்த ப்ராஜக்ட் நமக்கு ரொம்ப முக்கியம். சோ இது ரொம்ப ஸ்மூத்தா போகணும்னு நான் நினைக்கிறேன். இப்போ உங்களுக்கு இந்த ஆஃபிஸ்ல ஏதாவது பிரச்சனை இருந்தா நீங்க என்னை பார்த்து தனியா நேரடியா சொல்லலாம். யார் பேரும் வெளில வராது அண்ட் ப்ராப்ளம் சால்வ் செய்வேன். நான் அந்த கேபின்ல தான் இருப்பேன்” என்று காட்டியவர்,

“அண்ட் எனக்கு இன்னொரு அனௌன்ஸ்மென்ட் கூட இருக்கு” என்று நிறுத்தினார்.

“அச்சோ என்னை மாத்திட்டு இவங்களை போட்டுடாங்களோ” என்று ப்ராஜக்ட் லீடர் பயந்து பயந்து சைந்தவியை பார்த்தான்.

“இவன் நம்மகிட்ட சொன்னதேயில்லை” என்று விஜயை காட்டியவர், “ஆனா இவனோட வைஃப் சொல்லிட்டாங்க” என்றவர் சைந்தவியை காண்பித்து “இவங்க மிஸ்ஸஸ் சைந்தவி விஜயன், நம்ம விஜய் வைஃப்” என்று அறிமுகம் செய்தார்.

எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். “சொல்லவேயில்லை விஜய்” என்று பலர் அவனிடம் கேட்க கூடச் செய்தார்கள்.

“வாழ்த்துக்கள்” என்று ஓரிருவர் சொல்ல,

சைந்தவி சிறு புன்னகையுடன் “ரொம்ப முன்னம் நடந்தது மூணு வருஷத்துக்கு முன்னே” என்று சொல்லி முடித்துக் கொண்டாள்.

“மூணு வருஷமா அப்புறம் ஏன் விஜய் இந்த பேச்சிலர் லுக்” என்று ஒரு பெண் கேட்டே விட, விஜயின் முகத்தினிலும் சிறு புன்னகை அவ்வளவே. “இவங்களா நினைச்சா நானா பொறுப்பு” என மனதினில் நொந்து கொண்டான்.

பின்பு பிரவீன் அவரின் கேபின் சென்று விட்டார். கமாலியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே விஜய் போக, அதுவே சொன்னது அவளை கம்ப்ளயின்ட் செய்ய போகிறான் என்று.

“போடா” என்பது போல அசால்டாக அவளும் நின்றிருந்தாள்.

“நேத்து சைந்தவியை பேசினதுக்கு மிசஸ் ஷாக்கு நீங்க வார்னிங் இஷ்யு பண்ணனும்” என்றான் பிரவீனிடம் எடுத்த உடனே.

“பாதிக்கப்பட்டவங்க தான் கம்ப்ளையின்ட் பண்ணனும் அண்ட் கமாலி சாரி கேட்டா ப்ராப்ளம் முடிஞ்சிடும். அதுக்கு எதுக்கு வார்னிங்” என்றார் அவரும் பொறுமையாகவே.

“சைந்தவிகிட்டன்றதால நான் சொல்றேன். ஆனாலும் எல்லோர்கிட்டயும் அவங்க அதட்டி உருட்டி மிரட்டி பேசறாங்க. என்கிட்டே இதுவரை பேசினதில்லை. சோ நான் கண்டுக்கலை. அப்போவும் மத்தவங்க கிட்ட பேசும் போது நான் சொல்வேன் கம்ப்ளயின்ட் மெயில் அனுப்புங்கன்னு. யாரும் இதுவரை பண்ணலை. அவங்க தான் இங்க ஹெட்ன்றதால”

“நான் பேசறேன். வார்னிங் எல்லாம் வேண்டாம். வொர்க் ல ஷி இஸ் பெர்ஃபெக்ட். சைந்தவி கிட்ட ஒரு சாரி கேட்க சொல்லலாம்”

“ஃபைன்” என நிறுத்தி வேறு விஜயும் பேசவில்லை.

கமாலியை அழைத்து கேட்டனர். “ஸ்ட்ரிக்டா பேசினா தான் இங்க வொர்க் எக்ஸ்ட்ராக்ட் பண்ண முடியும். சோ அப்படி தான் பேசியாகணும்” என்று முடித்து விட்டாள்.

“ஓகே, நீங்க சொல்றது சரிண்ணே வெச்சிக்குவோம். மிசஸ் சைந்தவியை நீங்க ஏன் இன்சல்ட் பண்ற மாதிரி பேசினீங்க”

“லுக் விஜய், உன்னை எனக்கு நல்லா தெரியும். நீ உனக்கு மேரேஜ் ஆகிடிச்சுன்னு சொல்லவேயில்லை. அப்போ அந்த பொண்ணு அப்படி சொல்லும் போது நான் என்ன நினைப்பேன். பொய் சொல்றான்னு தானே” என்றாள் தெளிவாக.

எத்தனை பேரை பார்த்திருப்பாள்! ஒரு ஐ டி கம்பனியில் உயர்ந்த பதவியில் ஒரு பெண்ணாக அவள் இருக்கும் போது எத்தனை பேரை, எத்தனை பிரச்சனைகளை சமாளித்து வந்திருப்பாள். அது தெளிவாக தெரிந்தது.

“நான் மேரேஜ் ஆகிடிச்சுன்னு சொல்லலை, அதே சமயம் மேரேஜ் ஆகலைன்னு உங்ககிட்ட எப்போவாவது சொன்னேனா. அவ பொய் சொன்னான்னு வெச்சா கூட  உங்களுக்கு என்ன இதுல? நீங்க எங்க வர்றீங்க? இது என்ன உங்க ப்ராஜக்டா அது ஒரு பிரன்ட்லி வெளில இருந்து வந்த மெம்பெர்ஸ் கூட.  நீங்க பேச வேண்டிய அவசியமே இல்லை”

“அடுத்தவங்களை இன்சல்ட் பண்ணிட்டு அதுக்கு காரணம் கற்பிக்காதீங்க மிசஸ் ஷா. உங்களோட வேலை ப்ராஜக்ட் ப்ரெசென்ட் பண்றது. அதை உங்களால பண்ண முடியலை. உங்களுக்கு கீழ இருக்குறவங்க பண்ணும் போது உங்களுக்கு டாலரேட் பண்ண முடியலை” என்று கமாலியை பிட்டு பிட்டு வைத்தான்.

கமாலி என்ன பதில் கொடுப்பது என்று யோசிக்கும் போதே “ஒன்னு வார்னிங் இல்லை சாரி ரெண்டும் இல்லைன்னா நான் இந்த விஷயத்தை ஆஃபிஸ்க்கு வெளில ஹேண்டில் பண்ண வேண்டி வரும்” என்றான் அலட்சியமாக.

“என்ன மிரட்றியா, என்ன பண்ணிடுவ என்னை?” என்றாள் கோபமாக கமாலி.

“சே, சே, உன்னை என்ன பண்ணுவாங்க, பொண்ணுங்களை எல்லாம் நான் எப்பவும் எதுவுமே பண்ண மாட்டேன். ஆனா உன்னோட மொத்த குடும்பமும் என்கிட்டே சாரி கேட்கற மாதிரி பண்ணிடுவேன். தெரிஞ்சோ தெரியாமலோ பண்ணிட்ட, ஆனா அதுக்கான ஃபீலிங் கொஞ்சம் கூட இல்லை. எப்படி பதில் சொல்ற நீ. ஐ நெவர் தாட் மிஸ் ஷா டு பீ லைக் திஸ்” என்றான் வெறுப்பை காண்பித்து. மரியாதையை விட்டு ஒருமைக்கும் தாவியிருந்தான்.

“விஜய்” என்று அவனை அதட்டிய பிரவீன் “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும், இவ்வளவு மோசமா பேசிக்கறீங்க” என்றார் கடுமையாக.

“நான் சொல்றதை சொல்லிட்டேன், உங்க இஷ்டம்!” என எழுந்து நடந்து விட்டான்

அவன் சென்ற பிறகு பிரவீன் கமாலியை பிடி பிடி என பிடித்து விட்டார். “ஒரு ப்ரசென்டேஷன் பண்ண சொன்னா பே பேன்னு முழிச்சிட்டு நிக்கறீங்க. என்ன சும்மா அதையும் இதையும் பேசறீங்க. அந்த பொண்ணு இல்லைன்னா இந்த நேரம் ப்ராஜக்ட் அப்படி சொதப்பி இருக்கும்”

“நீங்க சைந்தவி கிட்ட எப்படி பேசினிங்கன்னு நானும் தான் இருந்து பார்த்தேன். நீங்க பேசினதை வெச்சு அந்த பொண்ணை தப்பா நினைச்சு நானும் முறைச்சு பார்த்தேன். எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா இது”

“உங்களுக்கு வார்னிங்கும் இருக்கு, சாரியும் கேட்கணும்” என்றார் மேலதிகாரியின் கட்டளையோடு.

“விஜய் எனக்கு க்ளோஸ்ன்றதால இந்த டெசிஷன் இல்லை, வாட் யு ஹேவ் டன் இஸ் ராங்” என்றார் கடுமையாக. கமாலியின் முகம் தொங்கிப் போயிற்று.

பின்பு சைந்தவியை அழைத்தார். கமாலி அவளை பார்த்து “சாரி” என, அங்கு பிரவீனும் இருக்க, இந்த சாரி அவரால் எனப் புரிந்தது. “சாரின்றது மனசுல இருந்து வரணும் சர், சும்மா வார்த்தைல ஒன்னும் வரப் போறதில்லை” என்றாள். கமாலி சட்டென்று அன்று அப்படி சொன்னது சைந்தவியின் மனதை வெகுவாக காயப்படுத்தி இருந்தது.

“உட்காருங்க மிசஸ் சைந்தவி”

“நோ சர் தேங்க் யு” என்றவள் “எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் கூடவே.

“வெளில இருங்க மிசஸ் கமாலி”

Advertisement