“சோ நடக்கலை, நடந்திருக்க வாய்ப்பிருக்கு, திஸ் இஸ் எ பையாஸ், அண்ட் ஐ வான்ட் தி டெசிஷன் டு பீ ஃப்ரம் கம்பனிஸ் சைட், தப்போ தவறோ தெரிஞ்சி நடந்ததோ, தெரியாம நடந்ததோ, அது குற்றம் ன்ற வகையறாகுள்ள வந்துடற போது… அது மன்னிப்பா தண்டிப்பான்னு கம்பனி முடிவு செய்யணும், அதிகார துஸ்ப்ரயோகம் இல்லாம”
“ஹுயிமிலியேஷன் ஷுட் நாட் பீ பெர்மிட்டட் அட் எனி காஸ்ட்”
“எல்லாத்துக்கும் கம்ப்ளைன்ட் பண்ணினா தான் கவனிக்கனும்னு இல்லை” என்று மிகுந்த நிமிர்வோடு சொன்னாள். சற்றும் மேலதிகாரிகள் பயமில்லை. அவளின் பேச்சில் அயர்ந்து அமர்ந்திருந்தனர்.
“நீ கிளம்பும்மா” என்று விட்டார் பிரவீன்.
அவள் சென்றது கூட இருந்தவர்களைப் பார்த்து, “ஃபிரண்ட்ஸ், நான் சொன்னேன், விஜயன் வரட்டும் அவன் கிட்ட பேசி இதை சுமுகமா முடிச்சிக்கலாம், கமாலி ஷா வேணும்னு பண்ணியிருக்கமாட்டாங்க, ப்ரொபெஷனல் ஹிக் காஃப்ஸ். ஸ்டுபிட் லேடி, இப்படி ஆகும்ன்னு அதுக்கும் தெரியாது, ஒரு மன்னிப்போ இல்லை, ஒரு சஸ்பென்ஷன், ஒரு அப்ரைசல் கட்ன்னு ஏதாவது ஒன்னு பண்ணலாம்னு”
“நீங்க என் பேச்சை கேட்காம இந்த பொண்ணைக் கூப்பிட்டு விட்டுட்டீங்க”
“இப்போ மிஸ் சைந்தவி சொல்றது என்னன்னா, என்குயரி கமிட்டின்னு உட்கார்ந்து இருக்கீங்களே, நீங்க என்ன கிழிக்கறீங்கன்னு நான் பார்க்கறேன்னு மறைமுகமா சொல்லிட்டு போறாங்க” என்றார் சன்ன சிரிப்போடு.
“வெரி க்ளவர்” கூடவே வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
வெளியே வந்தவள் நேராக விஜயனிடம் சென்று, “உள்ள போற, அவனுங்க என்ன ஆக்ஷன் எடுக்கன்னு கேட்டா, நடந்ததை உங்க பார்வைக்குக் கொண்டு வந்துட்டேன், நீங்க என்ன செய்தாலும் எனக்கு ஓகே, உங்களுக்கு தெரியாதது ஏதும் எனக்கு புதுசா தெரியாதுன்னு சொல்ற”
அவளின் வார்த்தை விளையாட்டுப் புரியாமல் “ஏன்? ஏன் சொல்லணும்? அவளுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும்! அவனுங்க அவளுக்கு ஃபேவர் பண்ண வாய்ப்பிருக்கு. ஏன்னா எதுவும் பிரச்சனை ஆகலை”
“பண்ணா பண்ணிட்டுப் போறானுங்க. நான் சொல்றதை மட்டும் சொல்லு… புரியுதா, எனக்கு தான் எல்லாம் தெரியும்னு பேசாதே. உனக்கு தெரியாததும் இருக்கும், வேற பேசினேன்னு தெரிஞ்சது…” என்று அழுத்தமான மிரட்டலான குரலில் சொல்லியவள், “கிளம்பு” என்றாள் பார்வையில். அவ்வளவு ஆளுமை. அவனின் பழைய சைந்தவி தான் அவனின் கண்களுக்கு.
அந்த ஆளுமை, அவளை ஆள ஆசை கொள்ள வைத்தது.
இந்த ஆளுமை தான் அவளின் அழகையும் விட அவளின் பின் போக நினைத்து, அவளை அவனின் பின் வர வைத்தான்.
திருமணதிற்கு பின் சைந்தவியிடம் அது எங்கு சென்றது என்று தெரியவில்லை. மீண்டும் காண்கிறான், அப்படி ஒரு உவகை ஒரு உல்லாசம். அவள் என்ன சொன்னாலும் தலையாட்டும் மனநிலை.
மீண்டும் என்ன சொல்லவேண்டும் என்று சொல்லி அனுப்ப… உள்ளே சென்றவனும் அதையே சொல்ல… கமிட்டி இப்போது முழித்தது.
விஜயனை வைத்து சிறியதாக முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தனர். ஏனென்றால் எதுவும் நடக்கவில்லை, ஆனால் நடந்திருக்கலாம் என்ற சூழல் அவ்வளவே.
சைந்தவியின் பேச்சிற்கு பிறகு நிச்சயம் ஆக்ஷன் எடுக்காமல் இருக்க முடியாது. இட்ஸ் ரெகார்டட். இது இன்னும் மேலிடத்தின் கவனத்திற்கு ஒரு வேளை சென்றுவிட்டால், அவர்கள் கம்பனியின் போர்ட் மெம்பெர்ஸிற்கு பதில் அளிக்க வேண்டும்.
இப்போது அவர்கள் நடவடிக்கை எடுங்கள் என்று கேட்கவில்லை, இவர்கள் தான் எடுக்க வேண்டும், அதுவும் அதிகார துஷ்ப்ரயோகமின்றி!
ஆக்ஷன் பெண்டிங் என்று போட்டு… மிஸ் கமாலி ஷா வை அழைத்து “லீவ் ல போங்க என்னன்னு சொல்றோம்” என்று சொன்னர்.
“ஏன்? ஏன்? ஏன்? நான் ஏன் லீவ் ல போகணும் முடியாது” என்றாள் பதட்டமாய்.
“என்ன?” என்று அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள்.
“நான் இந்த கம்பனிக்காக எத்தனை உழைப்பை போட்டிருக்கேன், நேத்து வந்த ஒரு பொண்ணுக்காக என்னை இப்படி பண்ணுவீங்களா, அழகா இருந்தா அவ சொன்னா நம்பிடுவீங்களா?” என்று பேசி வைக்க.
அதுவரை எப்படியாவது பிரச்சனையை சுமுகமாக முடித்து வைத்து, இனி இப்படி செய்யக் கூடாது என்று மிஸ் கமாலி ஷா விற்கு வார்னிங் கொடுக்க வேண்டும் என்ற ஐடியாவில் இருந்த டீமின் சில மக்கள், கமாலியின் பேச்சில் முகம் சுளித்தனர்.
பிரவீன் வெகு நிதானமாக, “எங்ககிட்டயே இப்படி பேசறிங்கன்னா அப்போ உங்களுக்கு கீழ வேலை பார்க்கறவங்கக்கிட்ட என்ன பேசுவீங்க? ஒரு வேலை அந்த பொண்ணு அழகா இருக்குன்ற பொறாமையில நீங்க போலிஸ்ல மாட்டி விடப் பார்த்தீங்களோ, அதனால நாங்களும் அந்த பொண்ணோட தோற்றத்தை முன் நிறுத்துவோம்னு நினைக்கறீங்களா? அப்போ நாங்கள்ளாம் ஜொள்ளு பார்ட்டின்னு சொல்றீங்க, ஃபிட் பார் நத்திங்ன்னு சொல்றீங்க…”
“இல்லல்ல, நான் அப்படி சொல்லலை, அந்த பொண்ணு தேவையில்லாம சீன போட்டிருப்பான்னு சொல்றேன்”
“அப்போ தேவையில்லாம யாரும் சீன போட்டா கண்டுபிடிக்க முடியாத இடத்துல நாங்க இருக்கோம்னு சொல்றீங்க. அப்படி ஒரு ஆளுங்களா இருந்தா நீங்க சொல்றத தான் நம்புவோம்” என்றார்.
சொல்லாமல் சொல்லிவிட்டார் நீங்க தான் சீன போடறீங்க என்று.
கமாலி ஷா என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க.
“எப்போதும் பொண்ணுங்களை தப்பா பேசாதீங்க, அவங்க தப்பாவே இருந்தா கூட அதை நாம சொல்லவேண்டிய அவசியமில்லை. அத தான் இந்த நிமிஷம் நாங்க இங்க கடை பிடிக்கறோம்” என்று கடுமையான குரலில் சொன்னவர்.
“கோ இன் லீவ், ஆர் வி வில் கிவ் சஸ்பென்ஷன், அதுக்கு பிறகு உங்க மேல என்ன நடவடிக்கை எடுக்கன்னு முடிவு பண்ணுவோம். இந்த ரெண்டும் முடியாதுன்னா நீங்க வேலையை விட்டு கிளம்பிட்டே இருக்கலாம்”
“இந்த கன்சர்ன்காக நீங்க மட்டுமில்லை எல்லோரும் தான் உழைக்கறாங்க அண்ட் இலவசமா எதுவும் செய்யலை, இல்லை அதிகப்படியா எதுவும் செய்யலை, யு ஆர் கெட்டிங் பெயிட் ஃபார் தட். அண்ட் நீங்க இல்லைனாலும் ஏன் நானே இல்லைனாலும் இந்த கன்சர்ன் நடக்கும். இஸ் தட் பைன்” என்று முடித்து விட்டார்.
மாலை வீட்டிற்கு வரும்வரை சைந்தவி விஜயனிடம் வேறு எதுவும் பேசவில்லை, விஜயனும் பேசவில்லை.
வீட்டுக்குள் நுழைந்ததும் அவளைக் கண்டுகொள்ளாமல் சென்று குளித்து வந்தான். அவள் சோபாவில் அமர்ந்திருக்க, பாலைக் காய்ச்ச ஆரம்பித்தான், காஃபிக்காக.
அவனை முறைத்தவாறே அவளும் சென்று குளித்து விட்டு வர, விரிந்த சிரிப்புடன் அவளுக்கு காஃபி கொடுத்து அவனும் காஃபியோடு அமர்ந்தவன், “ம்ம், அப்புறம் ரொம்ப கோபமா இருக்க போல, காஃபி குடிச்சிட்டு தெம்பா சண்டை போடு” என்றான் கிண்டலாக.
சொன்னதை செய்தவள், பின் எழுந்து நின்று, “எனக்குத் தெரியாம உங்களை யாரு கம்ப்ளைன்ட் குடுக்க சொன்னா” என்று விஜயனை நோக்கி கத்தியவாறு இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துப் பார்த்தாள்.
விஜயனும் எழுந்து நின்று அவளுக்கு பதில் சொல்லாமல் அவளையே ரசனையாய் பார்த்திருந்தான்.
அந்த பார்வையில் என்ன உணர்ந்தாளோ… “என்ன?” என்றாள் முறைப்புடன் கூடிய சலுகையாய்.
“இப்போ தான் எனக்குப் பழைய சைந்தவியை பார்க்கற மாதிரி இருக்கு”
“தோடா” என்று சொன்னவளின் பார்வையில் அவனின் மீதான கரை காணாத காதல் தெரிந்தது.
வேகமாய் அவளை பிடித்திழுத்து இடையோடு இறுக்கிப் பிடித்தவன், “உனக்கு ஏன் என்னை பிடிச்சது?”
“அவ புத்திசாலி, அதுதான் என்னை பிடிச்சதுன்னு சொல்ல வேண்டியது தானே” என்றாள் மயக்கும் குரலில்.
கர்வமாய் உணர்ந்தவன் “அது தான் சொன்னேன். ஆனா உனக்கு ஏன் என்னை பிடிச்சது” என்றான் மீண்டும்.
அவனின் முகத்தின் அருகில் சென்றவள் அவனின் கண்களைப் பார்த்து “தெரியலையே” என்றாள்.
சொன்னவளின் உதடுகளை மெதுவாக உரசியவன், உரசி உரசியே மோகத் தீயை பற்ற வைக்க… வெந்து வெந்து தான் போனாள்.
“என்ன பண்றீங்க? என்னால முடியலை!” என்ற அவளின் பிதற்றல்களை உள் வாங்கி…
“எதுக்கு முடியணும்? முடிய வேண்டாம், வேண்டவே வேண்டாம். சாரி ரொம்ப சாரி உன்னை விட்டதுக்கு” என்று சொல்லியபடி உதடுகளை விட்டு உடல்களை உரசவிட்டு இன்னும் இன்னும் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்தான்.
தணியவேயில்லை. மீண்டும் மீண்டும் விரும்பியே வெந்து தான் போனாள்.
தணிக்கும் வகையும் இருவருக்கும் தெரியவில்லை. தணிய விடவும் மனதில்லை.