Advertisement

காலையில்  எழுந்ததும்  கண்  விழித்தவளுக்கு  அங்கிருந்த  ப்ரியனை பார்த்து  மிகச் சாதாரணமாகவே  இருந்தாள்..  அவளுக்கு அச்சமோ. பயமே  எதுவுமே  இல்லை..  
               அவளின். பார்வையை  உணர்ந்தவன்,  “ஏன்டி பூட்டுன  வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்து உட்கார்ந்துருக்கேன்..  கொஞ்சமாவது பயம் இருக்கா  உனக்கு??”… என்றவனை  பார்த்து  கொட்டாவி  விட்டவாறே  பாத்ரூமிற்குள் சென்று விட்டாள்..  
            அரைமணி  நேரத்திற்கு பின் வெளியே  வந்தவள்..  “ஹிம்..  இப்போ  சொல்லு..  பூட்டுன வீட்டுக்குள்ள  நீ  எப்படி  வந்தன்னு  யோசிக்கணும்மா..  அதெல்லாம் என்னால  முடியாது..  நீ  வரமாட்டேன்னு. நினைச்சா  தானே நான். ஷாக்காகனும்..  நீ  இங்கே  தான்  வருவன்னு  எனக்கு  ஏற்கனவே  தெரியும் அதான்  எனக்கு எந்தவித  அதிர்ச்சியும் இல்லை.  ஆச்சர்யமும் இல்லை…  என்றவளை சற்று  பிரமிப்பாக  பார்த்தான்.  
         எத்தனையோ  பெண்களை இதுவரை  பார்த்திருக்கிறான்..  ஆனால்  தைரியம்  விவேகம் எல்லாம்  கலந்த ஒருத்தியை  இன்று  தான்  பார்ககிறான்..  அதற்குள்  காபி  கலந்து  எடுத்து  வந்தவள்  அவனிடம்  ஒரு கப்பை  கொடுத்தாள்… 
        அப்புறம் அந்த மாலினி என்ன  சொல்றா??  என்ற  நந்தினியை  பார்தது கண்ணடித்தவன்..  “ம்ம்.. ரொம்ப  நல்ல  இருக்கா..  வயசாகிடுச்சில்ல  அதான்  கர்ப்பப்பையை  உடனே  எடுக்க  வேண்டிய  கட்டாயமாயிடுச்சி..  கர்ப்பப்பை  புண்ணுப்பட்டு  ஓவர்  ப்ளீடிங்  வேற. ஆனதுனால  எடுத்துட்டாங்க” என்ற  சற்று  வருத்ததுடன் கூறிய  ப்ரியனை  சற்று கடுப்பாகவே  பார்த்தாள்.  
           “என்ன. ஜீவ்  ஃபீல் பண்ற. மாதிரி  தெரியுது..  இங்க  பாரு  நாம  மட்டும். சரியான  நேரத்துல  மூளையை யூஸ்  பண்ணலன்னா  இந்நேரத்துக்கு  நம்ம  கண்மணி  தான்  இந்த  அவஸ்தை எல்லாம் பட்டுருப்பா..  புரியுதா  அதுனால  உன்  சென்டிமென்ட்  சீனெல்லாம்  கொஞ்சம். ஓரங்கட்டி  வச்சிக்கோ.. வந்துட்டான் பெருசா” என கிச்சனை நோக்கி சென்றாள்.  
            இவள் சொல்வதும்  உண்மை தானே… இன்று மாலினிக்கு  பதிலாக கண்மணி இருந்தால் அண்ணாவின் நிலைமை.. அண்ணாவால் தாங்கிக் கொள்ளத்தான் முடியுமா??  என  சிந்தனைகளில் ஈடுபட்டான்..  
            “நான்  உனக்குத்  தான் தாங்க்ஸ்  சொல்லணும்.. நீ  மட்டும்  ஆடியோ சிப்பை  மாலினி வாட்ச்ல பொருத்தலைன்னா.. அவ  பிளான்  பண்ணது நம்மளுக்கு  தெரியாமப்  போயிரும்” 
     
            ம்ம்.. உண்மைதான்.. எனக்கு அந்த  மாலினியை. பார்த்ததுமே புடிக்கலை..  கண்மணியை  அவுங்க  பார்த்த  பார்வை  எதுவுமே  சரியில்லை.  அதான் என்  ப்ரெண்ட்  கண்டுபுடிச்ச சிப்பை மாலினியோட வாட்ச்ல  பொருத்திட்டேன்..  
    
           ” அதை  மாலினி கோயிலுக்கு  போட்டுப்  போனது  அங்க  வச்சி  பிளான்  பண்ணது எல்லா  தெரிஞ்சதுக்கப்புறம்..  அவ  பொடி  கலந்த  ஜுஸை  அவளுக்கேத் தெரியாம  அவ  பாத்ரூம்  போற  கேப்ல  நீ  மாத்தி  வச்ச  பார்த்தியா  அங்க  இருக்கடி”. என்ற  ப்ரியனை முறைத்தவள்..  
           நீ  மட்டும்  என்ன.. சைக்கிள்  கேப்புல. கண்மணியையும்  மித்ரனையும். ஹனிமூனுக்கு  அனுப்பி  வச்சிட்டேல்ல..  நீ  மட்டும்  என்னவாம்” என இருவரும்  மாற்றி  மாற்றி  பேச  ஆரம்பித்தது..  இறுதியில்  கைகலப்பில் வந்து முடிந்தது..  
           சிறிது  நேரத்தில்  போன். அடிக்கும்  ஓசையில்  கலைந்தவன்..  “ஹலோ  சொல்லும்மா” என்றவனுக்கு எதிர்புறம்  அழுகையில் விசும்பும்  சத்தமே  கேட்டது..  
           “ஹலோ  சிவன்யா.. என்னாச்சி  ஏன். அழுகுற” என்றவனின். காதில்  மேலும்  விசும்பும் ஒலியுடன் கலந்து “அண்ணா  ஜோசப்பை காணும்” என்றதும்  தீச்சுட்டாற்  போல்  உடனே. எழுந்தான்.. 
        “என்ன சொல்ற  ஜோசப்பை  காணுமாம்.  ஹேய்  என்ன விளையாடுறீய்யா நீ..  நடக்க  முடியாதவன் எப்பிடிடி  காணாமப்  போனான்.. இது  மட்டும்  கண்மணிக்கு  தெரிஞ்சது” என்றதும்  சட்டென  நிமிர்ந்து  பார்க்க  அங்கே  நந்தினி  அவனை கண்ணில் கனல்  கக்கும்  பார்வையில்  எரித்துக்  கொண்டிருந்தாள்..  
         “ஆஹ்ஹா..  இந்தப்  பத்திரகாளியை  மறந்துட்டோமே” .. என்றவரை. கலக்கத்துடன். பார்த்தவனின் உச்சிமுடியை  பிடித்து  மாவாட்ட  ஆரம்பித்து  விட்டாள்.. 
          “எங்கேடா  ஜோசப்… என்னடா  பண்ணுன அவனை.. ஜோசப்  மட்டும்  கிடைக்கலை  நானே. உங்க மூணு. பேரையும்  ஜெயில்  தூக்கிப்  போட்டுருவேன்” என்றவளை  சற்று  பீதியுடன்  பார்த்தவன்..  
         “இல்லை  நந்தினி  நாம  எப்படியாவது  தேடிப்பிடிக்கலாம்” என்றவனைப் பார்த்து  முறைத்தவள்..  
          நான். ஏன்டா  உன்கூட  ரோடு ரோடா அலலயணும்..  நீயும்  உன்  அருமை தங்கச்சியும்  போய்  தேடுங்க..  உனக்கு  ஒரு  நாள்  டைம்  தர்றேன்..  அதுக்குள்ள  ஜோசப்பை கண்டுபுடிக்கிற..  இல்லை  உங்க ஹாஸ்பிட்டல்ல சீல்  வைச்சி மூட  வைச்சிருவேன்  பார்த்துக்கோ..  
           சரிடி.. ரொம்ப  பேசாத  போய்த் தேடுறேன்..  அவனை  கண்டுபுடிச்சதுக்கப்புறம்  இருக்கு  அவனுக்கும்  உனக்கும்.. என. வேகமாக  வெளியேறினான்.. 
           மாலினி  மிகவும்  கஸ்டட்டார்..  பாத்ரூம்  செல்வதில்  இருந்து  யாருமில்லாமல் அனாதையாக  படுத்திருந்ததை. தனக்கென்று யாரும்  இல்லையா  என்ற. எண்ணம். மேலோங்கியது..  
            அப்போது  தான். விஷயம்  கேள்விப்பட்டு  உள்ளே  வந்தார்  திவாகர்..  மாலினியைப்  பார்த்ததும்  அவர்  கண்களில்  கண்ணீர்  ஊற்றெடுத்தது.   
             “மாலினி. என்னாச்சி.. ஏன். இப்படி  படுத்திருக்குமா?? ” என்றவரின் அக்கறையான கேள்வி. வித்தியாசமா. இருந்தாலும்  “தனக்காக  தன் கணவன் அழுகிறான்..  தனக்காகவும்  கண்ணீர் சிந்த ஒருத்தன் இருக்கிறான் ” என்ற  எண்ணமே புது கர்வத்தைக் கொடுத்தது.. 
            சிறிது  நேரம்  அழுதுவிட்டு  வெளியே  வந்த  திவாகர்  இரு  கண்களையும்  உடனே  துடைத்தவர்.. “ச்சீ.. கருமம்  எவ்ளோ  நேரம்  அழுது  நடிக்க வேண்டியதா  இருக்கு.
இந்த  சினிமாக்காரங்க எல்லாம் எப்படித்தான் அழுறானுங்களோ” என்றவருக்கு சற்று  முன்பு  சென்னையில்  பேசிய டீலிங்  நியாபகத்திற்கு  வந்தது..  
              ஒரு  மணி  நேர காத்திருப்புக்கு  பின் வந்தவன்.. 
           அப்புறம்  “எப்படி  இருக்கீங்க  திவாகர்” என்றவரைப்  பார்த்து  சற்று  பம்மிய  குரலில்..  
             நல்லா  இருக்குறேன் சார்..  அப்புறம்  என  இழுத்தவரை  கண்டு  சிரித்தவர்..  
      
               “எனக்கு  ஓ  நெகட்டிவ்  குரூப்  இரத்தம்  இருக்கிறவங்களோட  ஹார்ட். வேணும் ” என்றதும்  சற்று  அதிர்ச்சியான  திவாகர்..  
               என்ன  சார். ஹார்ட்டா??  அதெல்லாம்  இப்போ  எடுக்க  முடியாது  சார்..  இப்போ  நிறைய  ஹாஸ்பிட்டல்ல  உஷாராகிட்டாங்க.. போலீஸ்காரங்க  வேற. மோப்பம் புடிச்சிக்கிட்டு. திரியுறானுங்க  சார்” என்ற  திவாகரை. பார்த்து  சிரித்தவாறே,  
               திவாகர்  உங்களால் முடியாததா?   இந்த  ஒரு டீலை  முடிச்சிக்  கொடுத்துடுங்க..  உங்களுக்கு  இரண்டு  கோடி  ரூபா  கிடைக்கும்  என்றதும் அதுவரை சிறிது தயக்கத்துடன் இருந்தவர்.. அமௌண்டை கேட்டதும்  முடிவே. செய்து  விட்டார்..  இந்த  டீலை  முடித்துக்  கொடுத்து  விட வேண்டுமென” 
            அதை  நினைத்துக்  கொண்டே  வந்தவருக்கு  மாலினியின் இரத்தமும் ஓ நெகட்டிவ் என்பது சட்டென மூளையில்  வந்து  பதிவு  செய்ய..  அப்பொழுதே  முடிவு  செய்து விட்டார்..  மாலினியின் இதயத்தை  எடுப்பதென..  அதனால்  தான்  இந்த  நடிப்பும்  நாடகமும்..  
             குன்னூர். சென்றவர்களுக்கு அங்கிருந்த  ஒரு  வீட்டை  விலை  கொடுத்து வாங்கியிருந்தான்  ப்ரியன்..  மூன்று பெட்ரூமுடன் உள்ள  அறையை  பார்த்ததும் இதுவரை  கண்மணியின் முகத்தில்  இருந்த  இறுக்கம் தொலைந்து  இலகுவாக  இருந்தது..  
             எங்கும் பச்சைப்  பசலென. புல்வெளியும்  தேயிலைத்  தோட்டத்தையும்  பார்த்தவளுக்கு  மனதில் சொல்லொண  அமைதி  ஏற்பட..  அங்கிருந்த  செடியை  தொட்டுப் பார்த்துக்  கொண்டிருந்தாள்.  அவளுடைய  தலைசுற்றல் வாந்தி கூட  மட்டுப்படுவதை. போல் உணர்ந்தாள்.. 
              கண்மணியின். முகத்தில்  இருந்த  நிம்மதியை ஜீவனின்  முகத்தில்  புன்னகையை  வரவழைத்தது..  அவளை நெருங்கி  அணைத்தவாறே  நின்றவன்..  “இடம்  ரொம்ப  அழகா  இருக்குல்ல” என்றவனை  பார்த்து  புன்னகைத்தவாறே  “ம்ம்” என்றாள்..  
           அவளைத் தன் நெஞ்சோடு  அணைத்தவாறே  நின்றிருந்தான்.  எவ்வளவு  நேரம்  நின்றிருந்தான் என  அவனுக்கும் தெரியாது..  அவளுக்கும்  தெரியாது..  
           அங்கு  வேலை  செய்யும்  வேலைக்காரர்களின்  சத்தத்தில்  களைந்தவன்.. கண்மணியை. அணைத்தவாறே  வீட்டிற்குள்  அழைத்து  வந்தான்..  யூ ஃபீல் பெட்டர்  கண்மணி  என்றவனின்  குரலில்  இருந்த  அக்கறையும் காதலும்..  கல் இதயமான  கண்மணியை அசைத்துப்  பார்த்தது..  
           “ம்ம்” என்றவளின் நெற்றியில்  இதமாக  முத்தமிட்டவன்..  “இன்னைக்கு  ஃபுல்லா நீ  ரெஸ்ட்  எடு..  நாளைக்கு  நாம  ஊரை  சுத்திப்  பார்க்கலாம்” என்றவனுக்கு  பதிலாக  தலையை  தான்  ஆட்டினாள்..  
           
           ஹாஸ்பிட்டலில்  இருந்து  தப்பி  ஓடி  வந்தவனுக்கு  எந்தத்திசையில்  போவதென்பதே. முதலில்  புரியவில்லை.  ரோட்டில் வருபவர் போவோர் எல்லாம் தன்னைப் பார்க்கும். பரிதாபப்  பார்வையை  கூட  உணராமல் சென்றவனுக்கு  ஒரு  விஷயம்  மட்டுமே  நன்கு. புரிந்தது..  இது சென்னை  அல்ல  என்பது.  
            தான்  எங்கிருக்கிறோம்  என  கண்களை  சுழற்றியவனுக்கு அங்கு கடையில்  வைத்திருந்த போர்டில் இருந்த  தஞ்சாவூர்  என எழுதியிருந்ததை. பார்த்தவனுக்கு  “தான்  எப்படி  இங்கே  வந்தோம்??” என்ற  கேள்வியே  பிரதானமாக  இருந்தது… 
         இருந்தாலும் முயற்சியை  விடாதவன்  அங்கிருந்த  டாக்சியை  பிடித்து  அண்ணா  குன்னூர்  போகணும்” என்றவாறே  காசுக்கு என்ன செய்யலாம்  என. யோசித்தவனுக்கு கழுத்தில் இருந்த  செயின்  உதவியது..  இந்த  செயின்  ஆசை  ஆசையாக  கண்மணி  சீட்டுப்பணம்  போட்டு  சேர்த்து  வைத்து  வாங்கியது..  
             அதை விற்கனும் எனும்  போதே  இதயம்  கனத்தது..  ஆனாலும்  இது  அவளுக்காக  என்ற  எண்ணமே  விற்கத்  தூண்டியது.. அதை அங்கிருந்த  கடையில். விற்றவன் குன்னூர் வந்து  இறங்கினான்.. 
               குன்னூர் சிறிய  ஊராக  இருந்தாலும்  கண்மணியை. எங்கிருந்து. கண்டுபிடிப்பதென தெரியவில்லை.. அதிக  நேரம்  காலை  தொங்கப்  போட்டவாறே  காரில்  வைத்திருந்தது  வேற  விண்விண்ணென்று வலிக்க  ஆரம்பித்தது..  இருந்தாலும்  முயற்சியை  கை  விடாதவன்  தேடிக்  கொண்டேயிருந்தான்..  ஒரு  நாள் முழுவதும்  அலைந்து  திரிந்தவனின்  கண்ணில்  சிக்கினாள்  கண்மணி…

Advertisement