Advertisement

அத்தியாயம் தொண்ணூற்றி ஏழு :

பார்வைகள் கண்கள் பார்த்தாலும் அதை உணருவது மனம்!

“யார் கூட வந்தீங்க?” என்றான் கூர்மையாக.

“என் ஹஸ்பன்ட் வெளியே இருக்கார்”  

ஒருவரை அழைத்து ஈஸ்வரை வரச் சொல்ல.. வந்தவன் ரமணனுக்கு மிகவும் மரியாதையாக வணக்கம் சொன்னான். ஒரு சிறு தலையசைபோடு ஏற்று கொண்டவன், “இவங்க பேசினதுக்கு சாரி கேட்டுட்டாங்க, ஆனா இவங்க அடிச்சதுக்கு சாரி கேட்க மாட்டேன் சொல்றாங்க!” என,

“என்ன கம்ப்ளைன்ட் சர் இவங்களது?” என்றான் வர்ஷாவைக் காட்டி.

“கம்ப்ளைன்ட் எல்லாம் இல்லை, நீங்க எதுவும் பண்ணிடக் கூடாதுன்னு ப்ரொடச்ஷன் கேட்கறாங்க”

“எதுவுமே பண்ண மாட்டோம் சர் கண்டிப்பா. ஏன் இவ சாரி கேட்க மாட்டேன்னு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கறான்னு தெரியலை. ஆனா சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நிதானம் இழக்க மாட்டா. அவ சார்பா அடிச்சதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இந்த பொண்ணு தேவையில்லாதது எல்லாம் பேசித் திரியுது. இவங்க பப்ளிசிட்டிக்கு நாங்க ஆள் கிடையாது. என்னை பத்தி எதோ பேசினா விட்டுட்டேன். ஆனா வர்ஷினி இழுத்தா நான் சும்மா விடமாட்டேன்” என தீர்மானமாக கோபமாக சொன்னான்.   

யாரோ என்னவோ செய்து கொள்ளுங்கள் எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல அமர்ந்திருந்தாள்.

“இல்லையில்லை, சாரி எல்லாம் வேண்டாம் சர்” என்று வர்ஷா சொல்லி, ஒரு வாறு சமாதானமாகி விடைபெற்று கிளம்பினாள்.

அவளை பார்த்த வர்ஷினி.. “நான் அடிச்ச அடி, மேக்சிமம் ஒரு வாரம் இருக்குமா, ஆனா நீங்க சொன்ன வார்த்தை..” என நிறுத்தி நேர் பார்வை பார்வை பார்க்க..

“சாரி” என்றாள் வர்ஷா இரு கை கூப்பி..

“உங்க பேட்டில கூட நடிகைன்னு நாங்க இல்ட்ரீட் பண்ணிட்டோம்னு சொன்னீங்க. நடிகைன்ற டெர்மினாலஜி என் வாழ்க்கைல ரொம்ப முக்கியம். மத்தவங்க அதை தப்பா பேசறதையே நாங்க விரும்ப மாட்டோம். இதுல உங்களை நாங்க பேசுவோமா?”

“நம்ம மரியாதை, நம்ம நடந்துக்கற விதத்துல தான் இருக்கு” என,

“சாரி” என அழுத விழிகளோடு மீண்டும் வர்ஷா கேட்க, ஏனோ அவளை பார்க்க வர்ஷினிக்கு பாவமாக இருந்தது.

“நான் இவங்களை பத்திரமா அனுப்பிட்டு வர்றேன் சர் என வர்ஷினி கேட்க.. வர்ஷாவின் விழிகளில் மிரட்சி, 

“ஒன்னும் பண்ணமாட்டாங்க!” என ரமணன் வாக்குறுதி கொடுக்க.. “இவர் என்ன எனக்கு இவ்வளவு பேசுகிறார், என்னை அவ்வளவு தெரியுமா? இல்லை ஈஸ்வருக்காகவா?” என்பது போல வர்ஷினி  பார்க்க, “செல்லுங்கள்” என்பது போல ரமணன் தலையசைத்தான்.

அதுவரை இறுக்கமாக போலிஸ் ஆஃபிசராக இருந்த ரமணன் அவர்கள் போகவும், ஈஸ்வரை பார்த்து சிரித்தான். “ஒரு வழி பண்றாங்க போல” என,

“எஸ் சார், கொஞ்சம்! கொஞ்சம்!” என்றான் தடுமாறியபடி.

“கொஞ்சமா? ஹ, ஹ,” என்று ரமணன் பெரும் குரலெடுத்து சிரித்தான்.. எஸ்! சென்னை சிட்டி கமிஷனர் வெங்கட ரமணன். அப்போது ஜாயின்ட் கமிஷனர். இப்போது கமிஷனர் சட்டம் ஒழுங்கு. நமது தலைவியின் நாயகன்.

இவன் அவ்வளவு காப்பாற்றி விட்ட பெண்ணின் பெயர் திரும்ப இந்த விஷயத்தில் அடிபட வேண்டாம் என்ற எண்ணம் தான் பேச வைத்தது. அதுவுமில்லாமல் வர்ஷா கம்ப்ளைன்ட் செய்ய வில்லை. ப்ரொடக்ஷன் தான் கேட்டாள்.

“என்னை அவளுக்கு தெரியவேயில்லை” என சொல்லிய குரலில் சிறிது ஆதங்கம் கூட. வர்ஷினிக்கு எங்கே ஞாபகம் இருக்கும், அவள் தான் போதை மாத்திரையின் பிடியில் இருந்தாளே.

“நாங்க அதுக்கு பின்ன அதை பத்தி பேசினதே இல்லை” என்றான் சற்று இறங்கிய குரலில் ஈஸ்வர். பேசும் சந்தர்பத்தை வர்ஷினி அப்போது கொடுக்கவேயில்லை.

“அந்த பையன் அவன் எங்கே?”

“அஸ்வின் எங்க கூட தான் இருக்கான், அப்போயிருந்தே!” என

அதற்குள் உள்ளே வந்தாள் வர்ஷினி. “நிஷா அண்ட் மோஹித் கூட அனுப்பிட்டேன், என் பிரண்ட்ஸ் அவங்க!” என ரமணனிடம் விளக்கம் கொடுத்தவள், “உங்களுக்கு என்னை தெரியுமா சர்” என,

“நாலு வருஷம் முன்ன ஒரு ஆக்சிடென்ட்ல இருந்து உங்களை ரெஸ்கியூ பண்ணினேன். அஸ்வின் அவனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு, உங்களை என் வீட்ல வெச்சிருந்தேன். அன்னைக்கு நைட் உங்க கார் வெச்சு உங்க வீட்டுக்காரரை ட்ரேஸ் செஞ்சு, உங்களை ஒப்படைச்சேன்” என நீளமாகப் பேசினான்.

எப்படி இவரை தெரியாமல் போய்விட்டது என யோசித்தபடி “எனக்கு அப்போ கான்ஷியஸ் இருந்ததா?” என.

“இருந்த மாதிரி தான்!” என ரமணன் ஒரு மென்னகை புரிய,

தானாக ஆதரவு தேடி ஈஸ்வரின் கையினில் கை கோர்த்துக் கொண்டவள், “இருந்திருக்காது! கொஞ்சம் ஹெவி டோஸ்! அன்னைக்கு எனக்கு உயிர் வாழற ஆசை இல்லை!” என்றாள் கம்மிய குரலில்.

“இன்னும் அந்த பழக்கம் இருக்கா?”

“இல்லை” என்பது போல தலையசைத்தவளிடம்,  

ரமணன் வேறு எதுவுமே கிளறவில்லை.. “இப்போ எப்படி இருக்கு லைஃப்?” என,

“சந்தோஷமா இருக்கேன்! இன்னைக்கு இந்த பொண்ணு என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணிட்டா!” என சொல்லும் போது கரகரவென்று கண்களில் இருந்து நீர் இறங்கியது. அதுவே காட்டிக் கொடுத்தது ஈஸ்வருக்கு வேறு எதோ இன்னும் பெரிதாக என்பது போல,

“ஹேய் வர்ஷ், என்ன இது?” என்று அவளின் கைகளை அழுத்திப் பிடிக்க.. சுதாரித்து கண்களை  துடைத்துக் கொண்டாள்.

“இது எனக்கு சின்ன விஷயமா, பெரிய விஷயமா தெரியாது. ஆனா எந்த விஷயமா இருந்தாலும் நம்மை இவ்வளவு கொண்டு போக விடக் கூடாது”

“அன்னைக்கு ஏன் நீ சாகர மனநிலைல இருந்த எனக்கு தெரியாது. ஆனா அப்படி ஒரு நிலைமை உனக்கு அவசியமேயிலை. உன்னை சுற்றி நல்ல மனுஷங்க, உன்னை எங்கயும் விட்டுக் குடுக்காத மனுஷங்க இருக்காங்க”       

“நமக்கு எப்பவுமே நம்ம கஷ்டம் தான் பெருசா தெரியும்! ஆனா இதை விட கஷ்டங்கள் இருக்குறவங்க அநேகம் பேர். உனக்கு ஒரு பிரச்சனை வரும் போது உன் பார்வையில பார்க்காதே, அடுத்தவங்க பார்வையில பார்! ஈசியா அதை ஹேண்டில் பண்ண முடியும்!”

“எனக்கு நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரியலை. ஆனா உன் வீட்டுக்காரன் ரொம்ப பெரிய பொசிஷன்ல இருக்கான். சோ, அவனை கவனிக்கறவங்க நிறைய பேர். நீ சின்னதா செய்யற விஷயம் கூட பெருசா எல்லார் பார்வைக்கும் தெரியும்! கவனமா இருக்கணும்!” என,

“ம்ம்” என்பது போல தலையாட்டினாள்..

“ஆண்களோ, பெண்களோ, தனி மனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம்! உன்னோடது ஒழுக்கம் தவறின செயல்ன்னு நான் சொல்ல வரலை, அது ஒரு தவறான பழக்கம் அவ்வளவு தான்! ஆனா ஒழுக்கம் தவறின ஆண்களுக்கு கிடைக்கற மன்னிப்பு, தவறான பழக்க வழக்கங்கள் கொண்ட பெண்ணுக்கு கிடைப்பதில்லை. ஏன் தவறே எதுவும் செய்யாத பெண்கள் கூட பல பழி சொல்லுக்கு ஆளாகிடறாங்க!”   

“குடிப் பழக்கம் இருக்குற ஆண் மகனை சமுதாயம் என்ன கீழயா பார்க்குது, ரொம்ப குடிச்சிட்டு விழுந்தா தான் பார்க்கும். ஆனா எப்போவாவது கூட பெண்கள் குடிக்க முடியுமா, யோசிச்சுப் பார்,  மத்தவங்க பார்வையில் ரொம்ப கீழ இறங்கி போய்டுவ நீ” 

“உண்மையை சொல்லணும்னா, நானே இந்த மாதிரி பழக்க வழக்கம் இருக்குற பொண்ணை மரியாதையா பார்க்க மாட்டேன். அதுக்கு பின்னாடி என்ன காரணமோ ஆராய மாட்ட்டேன். ஆனா உன்னை அப்படி என்னால கொஞ்சமும் நினைக்க முடியலை! இதுக்கு நீ யார்னே எனக்குத் தெரியாது!”     

“வாழ்க்கை உனக்கு குடுத்திருக்கிற பெரிய வரம் இது!” 

அவளை விட்டு ஈஸ்வரிட்ம் திரும்பியவன், “எனக்கு என்ன பிரச்சனை? ஏன் அவளுக்கு இந்த பழக்கம் வந்தது? சாக ஏன் விரும்பினா? தெரியலை! ஆனா எதுவா இருந்தாலும் நீங்க தான் காரணம்!” என்றான் ஈஸ்வரை நேர் பார்வை பார்த்து.

ஈஸ்வர் அதை ஏற்றுக் கொள்ளும்படி அமைதியாக இருக்க, வர்ஷினி தான் மறுத்து ஏதோ பேச வந்தாள்.

“நீ தலையிடாதே” என்று ஒற்றை விரல் அசைத்து அவளை அடக்கிய ரமணன், “உங்களை ஹர்ட் பண்ணனும்னு,  இல்லை தப்பு சொல்லணும்னு சொல்லலை! உண்மையில் எனக்கு என்னன்னு தெரியவே தெரியாது. ஆனா நான் ஒரு ஆண்மகனா உங்களை தான் சொல்லுவேன். உங்க மனைவி அவளுக்கு இந்த மாதிரி  ஒரு யோசனை வந்ததுன்ன நீங்க தான் நிச்சயம் ரீசன்!” 

“இது உங்க ரெண்டு பேர் மேல இருக்குற ஒரு அக்கறையில சொல்றேன். இப்போ சரியாகியிருக்கும்னு நம்பறேன். இந்த மாதிரி இனிமே எப்பவும் வரக் கூடாது!” என்றான் ஈஸ்வரை பார்த்து.

“வராது” என்பது போல ஈஸ்வர் தலையசைத்தாலும் இந்த நேரடி குற்றச்சாட்டில் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.   ஈஸ்வரை குற்றம் சொல்லவும் வர்ஷினி சற்று ரமணனை முறைத்து பார்த்தாள், அந்த பார்வையில் சிரித்து விட்டான் ரமணன்.  

“இது ஆணாதிக்க உலகம்ன்றதை விட, ஆண்களை ஆதிக்கவாதிகளா ஏற்றுக் கொள்கிற பெண்களின் உலகம்!” என வர்ஷினியை பார்த்து சொன்னான். இன்னுமே விழிகளில் வர்ஷினி முறைப்பை காட்ட.. “ஹ ஹ” என இன்னும் சிரித்தவன், “உன் வீட்டுக்காரரை நான் எதுவும் சொல்லலை போதுமா” என்றான்.

வர்ஷினி முறைப்பை கைவிட.. “இந்தப் பொண்ணை சந்தோஷமா வெச்சிக்கங்க விஸ்வேஸ்வரன்.. உங்களை சொன்னா என்னை முறைச்சு பார்க்கறா” என,

ஈஸ்வருக்கு மனம் சற்று லகுவாகியது.        

“ஒரு நாள் எங்க வீட்டுக்கு லஞ்ச்க்கு வாங்களேன், வரா உன்னை பார்த்தா சந்தோஷப்படுவா. நீ மயக்கமா இருந்தபோ இந்த பொண்ணு பொம்மை மாதிரி இருக்கான்னு சொல்லிட்டே இருப்பா. அதுவும் நீ கண்முழிச்சப்போ உன்னோட கண் பார்த்துட்டு அவ ஃபிளாட் தான் போ!”

“நாங்க கொஞ்சம் நாள் தான் இருந்தோம், திரும்ப மதுரை ட்ரான்ஸ்பர் ஆனேன்.. திரும்ப இங்க வந்து த்ரீ மந்த்ஸ் தான் ஆகுது. இங்கேயே இருந்திருந்தா கொஞ்சம் நாள் கழிச்சு நாங்களே வந்து மீட் பண்ணியிருப்போம்!” என் நீண்ட விளக்கம் கொடுத்தான்.

அவனுக்கு வர்ஷினியை பிடித்திருந்தது. ஏனென்று சொல்லத் தெரியாமல். பெண்ணாய் போய்விட்டால், அதனால் நட்பு பாராட்ட முடியவில்லை என்பது தான் உண்மை. அதனால் உதவி செய்த பிறகு அதனை கடந்து வந்து விட்டான். இப்போது பார்க்கவும் நன்றாய் பேசுகிறான்.    

அன்றைக்கு அந்த ஆக்சிடென்ட் பார்த்த போது.. ஒரு முறை ஸ்ரீதரும் வராவும் சென்று ஆக்சிடெண்டில் மாட்டி அவன் காப்பாற்றிய நினைவுகள் தான். அதுதான் அஸ்வின் சொல்லவும், இவனும் வர்ஷினியை உடனே தூக்கி யாரென்று தெரியாமலே தன்னுடைய வீட்டிற்கே பத்திரமாக கொண்டு வந்து விட்டான்.

எந்த பிரச்சனையும் அவளை அணுகாமல், அவள் அந்த இடத்தில் இருந்ததே யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான். அந்த இரு இளைஞர்களும் ஆக்சிடண்டில் இறந்து விட, இதில் அரசியல்வாதியின் பையன்கள், அதில் இவர்கள் பெயர் எதிலும் வராமல் பார்த்துக் கொண்டான்.

வர்ஷினியை தூக்க முற்பட்டு தான் எல்லாம் அந்த சமயத்தில் என்பது அஸ்வின், ஈஸ்வர், ரமணன் அண்ட் வர்ஷினி தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவளுக்கும் தெரிய வந்திருக்காது! ஆனால் போதை அது இதென்று எந்த செயலிலும் வர்ஷினி ஈடுபடக் கூடாது, மற்றும் கத்தி குத்து வாங்கி அவளை காப்பாற்றிய அஸ்வினின் செய்கையும் அவளுக்கு தெரியாமல் இருக்க கூடாது என்று ஈஸ்வர் அதனை சொல்லி விட்டிருந்தான்.       

“சாரி சர், எனக்கு எதுவுமே தெரியலை அப்போ! தெரிஞ்சிக்கவும் நான் விரும்பலை! இவர் கிட்ட இருந்து பிரியறதுலயே முழு கவனமா இருந்துட்டேன்!” என்றாள்.

“நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் சங்கீத வர்ஷினி. உன்னை சுற்றி உன்னை எதுவும் அணுகாமல் பார்த்துக்குற நல்ல மனிதர்கள் இருக்காங்க! ஏன் நான் உட்பட! நீ யார் என்னன்னு எனக்குத் தெரியாது! ஆனாலும் செஞ்சேன்! அன்னைக்கு நீ எங்க பார்வையில எல்லாம் படாம அந்த பசங்க கிட்ட மாட்டியிருந்தா என்ன ஆகியிருக்கும்?”  

“பயம் வேணும்! பெண்களுக்கு கண்டிப்பா பயம் வேணும், இந்த மாதிரி விஷயங்கள்ல! வீணா பிரச்சனையில மாட்டிக்கக் கூடாது!”  

“அன்னைக்கு இவர் உன்னை தேடி தவிச்ச தவிப்பை நான் பார்த்திருக்கேன். ஒரு வார்த்தை கூட உன்னை குற்றம் சொல்லாம ப்ரொடக்ட் பண்ணினார். அது எல்லோராலும் கண்டிப்பா முடியாது!”

“ஒரு முறை என்னோட வரா டீன் ஏஜ்ல இருக்கும் போது ஒரு டான்ஸ் கிளாஸ் போனா. அங்கே அவ பழகற ஆட்கள், அந்த சூழ்நிலை பார்த்தே அவளை மட்டும் இல்லை, அவளோட அம்மா அண்ணான்னு எல்லோரையும் ஒரு வழி பண்ணினேன்!”

“நீ என்னடான்னா ட்ரக்ஸ் எடுத்துட்டு, ஒரு பப்ள போய் உட்கார்ந்து இருக்க! இவர் உன்னை ஒரு வார்த்தை கூட சொல்லலை!” என்று ஈஸ்வரையும் சாட,

“அவ்வளவு நல்லவர் எல்லாம் இல்லை, என்னை அடிச்சிருக்கார், திட்டியிருக்கார், அந்த நேரத்துல ஒன்னும் சொல்லலை, ஏன்னா என்னை பத்தி தெரியும்! திட்டினா திரும்ப செய்வேன்னு!” என்று ஒரு முறுவலோடு ஈஸ்வரின் கைகளை இறுக்கியபடி சொல்ல.. ஈஸ்வர் முகத்திலும் ஒரு புன்னகை!

“என்ன நாம காரணங்கள் சொல்லிக்கிட்டாலும், தப்பு! தப்பு தான்!” என ரமணன் சொல்ல..

“ஆம்” என்பது போல ஆமோதித்தாள்.      

“கணவன்னு ஒருத்தன் காதல்ல உனக்காக செய்யறது வேற. ஆனா மத்தவங்களும் உன்னை நல்லா பார்த்துக்கறாங்க!”

“நம்ம கிட்ட எல்லாம் இருக்கும்னு நினைச்சா இருக்கு, இல்லைன்னா இல்லை. நம்முடைய வாழ்க்கை மீதான பார்வைகள் தான் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.. இந்த வாழ்வை முடிச்சிக்குற எண்ணம், பிரியற எண்ணம், இல்லை வேற பழக்க வழக்கங்கள் எல்லாம் இனிமே எப்பவும் உனக்கு வரக் கூடாது” என சற்று கடினமாகவே கூறினான். 

“ம்ம்” என அவளும் ஸ்திரமாக ஒரு வாக்குறுதி கொடுக்க, அதன் பிறகே விட்டான் ரமணன்.   

பின்பு ஈஸ்வரிடம் கை குலுக்கி, “இன்னும் இன்னும் நீங்க வாழ்க்கையில வளர என் வாழ்த்துக்கள்” என..

வர்ஷினியின் ஹாலிவுட் படம், பிறகு ஃபிலிம் டிஸ்டிரிபியுஷன் என எல்லாம் ஈஸ்வர் பெருமையாக சொல்ல..

“ம்ம், குட் வொர்க்.. இவ்வளவு திறமை இருக்குற பொண்ணு எந்த சின்ன விஷயத்துலையும் சறுக்கக் கூடாது” என்றான்.  

“ஓஹ், எஸ்!” என்று ரமணனை பார்த்து கை நீட்ட, அவளின் கைகளை பற்றி ரமணன் குலுக்க, மற்றொரு கையாலும் அவனின் கைகளை பிடித்துக் கொண்டவள், “தேங்க் யு வெரி மச், அன்னைக்கு எனக்கு எதுவும் ஆகாம, என்னோட பேர் எதுலயும் வராம  பார்த்துக்கிட்டதுக்கு” என்றாள்.

வர்ஷினியின் நெகிழ்ச்சியை புரிந்தவன், “இனிமே அந்த மாதிரி எதுவும் ஆகாது. நான் சொல்றேன் நீ நல்லா இருப்ப” என,

“ம்ம்” என தலையசைத்த வர்ஷினியை.. அணைவாய் பிடித்துக் கொண்ட ஈஸ்வர், “அந்த மாதிரி ஆகவே ஆகாது! என அவனும் சொல்ல..

“வீட்டுக்கு வாங்க” என்று அழைப்பு விடுத்தான் ரமணன்.               

மீண்டும் பல முறை நன்றி கூறி, வெளியில் வந்தனர்! மனது என்னவோ இருவருக்கும் நிறைவாய் இருந்தது.

தாஸும் அஸ்வினும் காரின் அருகில் நிற்க, பத்து இன்னொரு காரின் அருகில் நின்றான்! வர்ஷாவை அனுப்ப வெளியில் வந்த போதே, “ஒரு பிரச்சனையும் இல்லை” என்று பத்துவிடம் சொல்லி வந்திருந்தாள்.      

அவர்கள் எல்லோரையும் பார்த்து பளிச்சென்று புன்னகைத்தாள்.

“ஆமாம்! என்ன எனக்கு குறை? என்னை சுற்றி எல்லோரும் நல்ல உறவுகளே! எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது!” எனத் தோன்றியது.

அப்போதும் தாஸ், “என்ன பாப்பா நீங்க? இப்படி போலிஸ் ஸ்டேஷன் வர்ற வேலையெல்லாம் வெச்சிக்க கூடாது! அய்யா இருந்தா எவ்வளவு கஷ்டப் படுவார்! சின்னதா ஏதாவதுன்னா சொல்லிடுங்க! நான் அவங்களை கொன்னுட்டு கூட ஜெயில் போய் உட்கார்ந்துக்குவேன்! இனிமே இப்படி பண்ணாதீங்க!” என கறாராகப் பேசினான்.  

“ஒரு தடவை பண்ணுவீங்க, அப்புறம்..” என சிரிப்போடே கேட்க..

“தப்பிச்சு வந்து அடுத்ததும் பண்ணுவேன்! எத்தனை கொலை பண்ணினாலும் ஒரு ஜெயில் தான் பாப்பா!” என்றான்.

“அப்படி எந்த அவசியமும் வராது, இனிமே கவனமா இருப்பேன்!” என்று தெளிவாய் சொன்னாள்.

ஆம்! என்னை சுற்றி எல்லோருமே நல்ல மனிதர்கள் என்ற எண்ணம் அழுத்தமாய் பதிய.. எல்லோருமே இன்னும் புதிதாய் தான் அவளின் கண்களுக்கு தெரிந்தார்கள்!   

 “பத்துண்ணா.. வீட்டுக்கா போறீங்க?” என,

“ஆம்” என்பது போல தலையசைத்த பத்துவிடம், “நான் உங்களோட வீட்டுக்கு வர்றேன்!” என கிளம்பி, ஈஸ்வரிடம் “நீங்க என்னை அப்புறம் பிக்கப் பண்ணிக்கங்க” எனச் சொல்லி, தாஸிடம் தலையசைத்து விடைபெற்று, அஸ்வினிடம் “தேங்க்ஸ்” என்றாள்.

எதற்கு என்று புரியாமல் அவன் விழிக்க, “அவ அப்போ அப்போ லூஸ் ஆகிடுவா அஸ்வின்” என்று ஈஸ்வர் கடிய.. பழைய விஷயம் என்று புரிந்தது.

“லூஸ் ஆனதுனால தான் விஸ்வா, உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க!” என அஸ்வின் வர்ஷினியை சார்ந்து பேச..

“அது” என அஸ்வினுக்கு ஹய் ஃபை கொடுத்து, “நான் தான் ஓட்டுவேன் பத்துண்ணா” என்று பத்துவிடம் கார் சாவி வாங்கி கிளம்பினாள்.

“மெதுவா போ” என்று அப்போதும் அவளை அதட்டி ஈஸ்வர் கூறவும்.

“என்னவோ நீங்க சொன்னவுடனே இவ கேட்டுடற மாதிரி ஏன் இந்த பில்ட் அப்!” என பத்துவும் பேச..

“என்னங்கடா இது, ஊருக்குள்ள அத்தனை பேரும் நம்மை ஓட்டரானுங்க!” என ஈஸ்வர் முறைத்து நின்றான். 

“உங்க ரகசியம் ஊருக்கே தெரிஞ்சிடுச்சு!” என்று வர்ஷினி கலகலத்து சிரிக்க..

“போடி!” என்று கொஞ்சலாக திட்டி கிளம்பினான் ஈஸ்வர்.

வர்ஷினியின் மனது மாறியிருந்தாலும் தெளிந்திருந்தாலும், அவளின் பிரத்யேக உணர்வுகள் அவளுடனே!

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்..

       

 

Advertisement