Advertisement

அத்தியாயம் எண்பத்தி நான்கு :

வலிகளும் வாதனைகளும் உடலுக்கு இருக்கும் போது மருந்து கொடுக்கலாம்! மனதிற்கு என்ன மருந்து கொடுக்க?

அடுத்த நாள் பொறுமையாக அவளுக்கு விளக்கினான்.. “இது என்னோட வேண்டுதல் வர்ஷினி.. குடும்ப தொழில் சம்மந்தப்பட்டது தான்.. இந்த ஒரு முறை எல்லோர் கூடவும் போய்டுவோம்.. அம்மா அப்பா கூப்பிடும் போது.. என்னால பெரியம்மா பாட்டி எல்லாம் கூப்பிடாம இருக்க முடியாது.. நீ போன நாள்ல இருந்து தனியா தான் நானும் இருக்கேன்” என,

“இல்லை, நான் வரலை, நீங்க போயிட்டு வாங்க” என்றாள்.

“சொன்னா புரிஞ்சிக்கோ, யாரையும் விட்டு என்னால போக முடியாது!” என,

“உங்களை போகவேண்டாம்னு நான் சொல்லலை! நான் வரமாட்டேன்!” என்றாள் பிடிவாதமாக..      

தான் செய்வது அதிகப்படி இவ்வளவு பிடிவாதம் தேவையில்லை.. சரி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை.. தனியாய் இருக்கவும் முடியவில்லை.. எல்லோரோடும் இருக்கவும் முடியவில்லை.. இதெல்லாம் வர்ஷினிக்கு புரிந்து தான் இருந்தது.. அதனால் வாழ்க்கை வர்ஷினிக்கு பிடிப்பற்று போனது தான் உண்மை..

என்னவோ தன்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் பார்க்கும் போது, அவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பது போலவும்.. அப்படி தன்னால் தன் வாழ்க்கையை வைத்துக் கொள்ள முடியவில்லை போலவும் ஒரு தோற்றம்.. அதையும் விட எல்லோரும் என்னவோ ஈஸ்வரை அவள் கஷ்டப்படுத்துகின்றால் என்ற பார்வை பார்ப்பதும் நிச்சயம்..

எல்லாம் கடந்து ஒன்றுமில்லை என்பது போல எல்லோருடனும் போகப் பிடிக்கவில்லை.

இரண்டுமே உண்மை தானே! மற்றவர்களின் பார்வையில் அவள் ஈஸ்வரை கஷ்டப் படுத்துகிறாள் தானே!   

ஏன் என்ன என்று அவளுக்காக யோசிப்பவர் யார்?

இப்படி சில எண்ணங்கள் அவளுக்குள் இருக்கும் போது அவளைத் தவிர வேறு ஞாபகங்கள் ஈஸ்வருக்கு இருக்கக் கூடாது.. விட்டால் அவனுக்கும் தானே இழப்பு…

அவள் மாறவேண்டும் என்பது தான் அவனின் எண்ணமாக இருந்தது..  அவளை அவளாய் இருக்க விட வேண்டும் என்று தெரியவில்லை!

இரண்டு நாட்கள் தன்னைப் போல அது செல்ல.. ஈஸ்வரின் வருத்தமான முகத்தைப் பார்த்து அவளே சொல்லி விட்டாள்.. “எதுக்கு இவ்வளவு கஷ்டம்! ரைட் நவ், ஐ டோன்ட் ஹேவ் எனி கம்ப்ளையின்ட்ஸ்.. பேசாம என்னை டைவர்ஸ் பண்ணிட்டு நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கங்க” எனச் சொல்ல..

அதிர்ந்து போனான் மீண்டும் முதலில் இருந்தா.. முடியவே முடியாது எனத் தோன்றியது..

“ஏய் நீ என்ன லூசா.. அடிச்சிடப் போறேன், என் கண் முன்னே வராத” என்று கத்தினான்..

அசையாமல் அமர்ந்திருந்தவள் “நான் சொல்றதை சொல்லிட்டேன்! அப்புறம் என் வாழ்க்கையை நீ ஸ்பாயில் பண்ற சொல்லக் கூடாது!” என,

இன்னும் பக்குவமாக ஈஸ்வர் கையாண்டு இருக்கலாமோ என்னவோ? ஆனால் ஒரு சலிப்பு அவனைப் பேச வைத்து விட்டது.. 

“போடி! உன் கூட எல்லாம் மனுஷங்க பேசவும் முடியாது இருக்கவும் முடியாது.. என்ன உன் பிரச்சனைன்னு எனக்குப் புரியவேயில்லை.. என்னவோ என்னைத் தவிர உன்னை யாரும் சமாளிக்க முடியாதுன்னு அவ்வளவு கர்வம் எனக்கு.. இப்போ தான் தெரியுது நான் எவ்வவளவு முட்டாள்ன்னு.. நீயும் என் கூட பேசாதே! நானும் உன் கூட பேசலை! நாம இந்த வீட்ல சேர்ந்து இருக்கோம் அவ்வளவு தான்! எப்போ உனக்கு என்னோட சேர்ந்து வாழலாம்னு தோணுதோ அப்போ சொல்லு!” என்று விட்டான் முடிவாக..

வர்ஷினி திரும்ப எதுவுமே பேசவில்லை வாக்குவாதம் செய்யவில்லை. தன் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்..

திருப்பதி பயணமும் நின்று விட்டது.. வீட்டின் வேலையும்.. எதையும் செய்வதற்கு ஈஸ்வருக்கு பிடித்தமில்லை.. எல்லாம் அவனே நிறுத்தி விட்டான்.    

ஆனால் சொந்த வாழ்க்கை தான் இருவருக்குமே அப்படி.. இருவர் வாழ்க்கையிலும் தொழில் வகையில் இன்னுமே ஏறுமுகம் தான்…

“நான் பண்ணட்டுமா?” என்ற கேள்வியே வர்ஷினியிடம் இல்லை.. “நான் பண்ணப் போகிறேன்” என்ற விஷயம் மட்டுமே ஈஸ்வரிடம் தெரிவிக்கப் பட்டது..

ஆம்! தெரிவிக்கத்தான் பட்டது.. ஈஸ்வர் என்னிடம் பேசாதே என்ற பிறகு அவள் பேச முயலவேயில்லை.. திரும்பவும் பெரிய தப்பை தான் செய்து விட்டான் ஈஸ்வர்.. அவனிடம் மட்டுமே கொஞ்சமாவது பேசிக் கொண்டிருந்தவளிடம் நீ பேசாதே என்றால் என்ன செய்வாள்..

அஸ்வினிடம் சொல்ல.. அவன் வந்து தான் ஈஸ்வரிடம் சொன்னான்.. “என்னவோ ஃபிலிம் டிஸ்டிரிபியுஷன் சொல்றாங்க.. நமக்கு இது தேவையா?” என,

“அதையேன் என்கிட்டே சொல்ற?” என்று சுள்ளென்று விழுந்த ஈஸ்வர்.. “அவ கிட்ட சொல்ல வேண்டியது தானே!” என்றான்.

“சொல்ல முடிஞ்சா உங்ககிட்ட ஏன் வந்து சொல்றேன்” என்றான் ஆதங்கமாக.. “ஃபிலிம் இண்டஸ்ட்ரில எந்த பேக்கிரௌண்டும் இல்லாம எப்படி என்ன செய்ய முடியும்? இவங்க வயசென்ன? யாராவது அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டா?” என,

“உன்னால ஒரு வார்த்தை அவ கிட்ட சொல்ல முடியுதா? இல்லை என்னால சொல்ல முடியுதா? ஹஸ்பன்ட் என்னாலயே ஒரு அட்வாண்டேஜும் எடுக்க முடியலை.. இன்னும் யாரால முடியும்.. சும்மா நாம பயந்து அவளோட அச்சீவ்மென்ட்ஸ் தடுக்க வேணாம்.. நீ உன் தொழில் எல்லாம் கொஞ்சம் நாள் மூட்டை கட்டி வெச்சிட்டு அவ கூடவே இரு!”

“உனக்கு என்ன லாபமோ, அதை நான் தர்றேன்”  

“ப்ச்” என்று சலித்த அஸ்வின்.. “நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் அவங்க என்னை துரத்துற வரை நான் அவங்க கூட தான் இருப்பேன்! ஆனா இப்போ அது பிரச்சனையில்லை! எனக்கு பயமா இருக்கு.. அவங்க யங், அழகா இருக்காங்க, எப்படி அந்த ஆட்களை எல்லாம் சமாளிப்பாங்க!” என,

“ஏன் மாட்டா.. அவ விஷ்வேஷ்வரன் மனைவி! ஈஸ்வர் ஃபைனான்ஸ் குடும்பத்தோட மருமக.. அவளால முடியலைன்னா வேற யாரால முடியும்.. இவ்வளவு பேக் கிரௌண்ட் அவளுக்கு இருக்கு.. நம்மை மீறி எதுவும் நடக்காது.. விடு!” என்று அஸ்வினை ஈஸ்வர் தான் சமாதானம் செய்யும் படி ஆகிற்று..

“நீங்க எதுக்குமே வரமாட்டேன்றீங்க, நான் என்ன பண்ண?” என,

“எனக்கு மட்டும் இதை பத்தி என்ன தெரியும்? பார்த்துக்கலாம் விடு!” என்றான்.

“ஒரு பொண்ணை, உங்களால சரி பண்ண முடியாதா? ஏன் இப்படி பண்றீங்க?” என்றான் திரும்பவும் ஆதங்கமாக..

ஈஸ்வர் லேசான முறைப்போடு அமர்ந்திருக்க..  

“என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது, அவங்க திரும்ப எங்கயும் போகக் கூடாது! உங்க வாழ்க்கையை விட்டு போகவே கூடாது” என்று டென்ஷனாக பேசியவன் எழுந்து சென்று விட்டான்..

ஈஸ்வர் பார்த்திருந்த போதே.. “அவங்க ஐஸ்வர்யா முதல்ல வேலை பார்த்த ஹாஸ்பிடல்க்கு என்னை கூட்டிட்டு போகச் சொன்னாங்க, ஏதோ நீங்க லோன் கேன்சல் பண்ணிட்டீங்கலாம், என்ன பண்ணட்டும்?” என்று விறைப்பாகக் கேட்க..

“கூட்டுட்டு போகச் சொன்னா கூட்டிட்டுப் போ! ஆனா என்ன நடக்கதுன்னு எனக்கு சொல்லு!” என..

“இதுக்கு நீங்க கூட போக வேண்டியது தானே” என சொல்ல வந்தவன்.. அவனுடைய ஸ்டேடஸிற்கு, அது சரி கிடையாது என்று புரிந்தவனாக.. தலையாட்டி சென்றான்.

“ஐஸ்வர்யாவிடம் எதோ லோன் கேன்சல் பண்ணிட்டாங்கலாம், வர்ஷினி மேம், உங்க ஹாஸ்பிடல் எம் டீ பார்க்கணும் சொன்னாங்க! எனக்கு டைம் பிக்ஸ் பண்ணிக் கொடு!”  

“நான் அங்கே இனிமே போகப் போறதில்லை.. நீயே பண்ணிக்கோ” என..

“ஏன், ஏன் போகலை.. இப்போ தானே மாறின” என..  

“ப்ச், போகப் பிடிக்கலை! விடு, சும்மா துருவாதே, நான் வேற பார்த்துட்டு இருக்கேன்” என,

“பேசாம எங்கேயாவது ஒரு கிளினிக் போட்டு உட்காரு, எதுக்கு ஹாஸ்பிடல்க்கு போகணும்னு என்ன?”

“மெயின் ஏரியால ப்ளேஸ் தேடணும், அப்புறம் எல்லாம் அரேஞ் பண்ணனும், அப்புறம் அட்வான்ஸ் கொடுக்கணும், அதை பார்த்துக்க ஆள் போடணும், அவங்களுக்கு சம்பளம் கொடுக்கணும், எடுத்த உடனே பேஷண்ட் வந்திட மாட்டாங்க, எனக்கு இன்னும் வயசாகலை, முக்கியமா கல்யாணமாகலை, என்னை நம்பி டெலிவரி கேஸ் வராது” என பாடம் படித்தவள்..

“சம்பளம் வாங்கிட்டு நிம்மதியா இருக்கலாம்! ரஞ்சனி அவ ஹாஸ்பிடல்க்கு வான்னு சொல்றா! அங்கே ஏற்கனவே ஒரு கைனகாலஜிஸ்ட் இருக்காங்க” என,

“ஏதாவது என்கிட்டே சொன்னியா? எதுக்கு வீட்ல இருக்கேன்னு கேட்டேன் தானே! நீ ஒன்னுமே சொல்லலை! அப்பா இறந்ததினாலன்னு நானே நினைச்சிக்கிட்டேன்” என்றான் சற்று கோபத்துடனே..

“வர்ற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம், வேண்டாம், சொல்ற.. முதல்ல எப்படியோ இப்போ நீ என்னோட பொறுப்பு.. அப்பா இப்போ கிடையாது.. உன்னோட மைண்டை கல்யாணத்துக்கு பிக்ஸ் பண்ணிக்கோ ஐஸ்வர்யா.. இப்போவே உனக்கு இருபத்தி எட்டு வயசு.. இன்னும் சிக்ஸ் மனத்ஸ் கழிச்சு கண்டிப்பா பண்ணிக்கணும்!” என,

“நீங்க கொண்டு வர்றது எனக்குப் பிடிக்கலை” என்றாள்..

“என்ன மாதிரி நீ எதிர்பார்க்கிற? டாக்டரா? இல்லை பிசினெஸ் பண்றவங்களா? இதுவே ரொம்ப லேட், இன்னுமே தள்ளிப் போட்டா எதுவுமே அமையறது கஷ்டம்.. படிச்சு முடிச்ச நாள்ல இருந்து சொல்றோம்” என்று அவளின் அம்மா இடையில் வர..

என்ன மாதிரி என எப்படிச் சொல்வாள், ஈஸ்வர் போல என்றா? இல்லை ஈஸ்வரை விட இன்னும் பெட்டராக என்றா?

“ப்ச், எனக்கேத் தெரியலை” எனச் சலிப்பாக சொன்னாள்.

“பழசெல்லாம் நினைக்காதே” என சொல்லி, அதன் மூலம் கூட அவளுக்கு பழையது ஞாபகம் வருவது அஸ்வினிற்கு பிடிக்கவில்லை..

அவனிற்குமே ஈஸ்வரை விட உயர்ந்தவனாக மாப்பிள்ளை பார்க்க ஆசை தான்.. பண விஷயத்தில் முடியாவிட்டாலும் குணத்திலாவது அவனை விட உயர்ந்தவனாக பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

பின் வேறு பேசாமல் “எங்களை கூட்டிட்டு போறியா” என,

“நானும் இன்னும் ரெசிக்னேஷன் கொடுக்கலை.. ஈவ்னிங் போக முடியுமா, பார்க்கலாம்!” என,

“சரி” என்றவனிடம், சிறிது நேரத்தில், “ஈவ்னிங் போகலாம்” என அவர்கள் இருப்பதை உறுதி செய்து கொண்டு ஐஸ்வர்யா சொல்ல..

ஐஸ்வர்யா அங்கே முன்பே சென்று விட.. அதன் பின் தான் வர்ஷினியும் அஸ்வினும் வந்தனர்..

ஐஸ்வர்யாவை பார்த்து ஒரு அறிமுகப் புன்னகை வர்ஷினி பூக்க.. ஐஸ்வர்யாவும் பதிலுக்கு சிரித்தாள்.. தன்னை பார்த்து அவர்கள் தான் முதலில் சிரிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை..   

அந்த ஒரு பாங்கு ஐஸ்வர்யாவைக் கவர்ந்தது.. அஸ்வின் “அவர் ரூம் போகலாமா?” என,

“வாங்க” என்று உள்ளே அழைத்துப் போக.. சஞ்சயின் ரூமில் யாருமில்லை.. அவர்கள் மூவரும் காத்திருக்க.. ரௌண்ட்ஸ் முடித்து அப்போது தான் வந்தான்..

ஐஸ்வர்யாவை எதிர்பாராதவன் கண்கள் அவளிடம் சில நொடிகள் நிலைத்து திரும்பி எல்லோரையும் பார்த்து பின்பு அவளிடமே நிலைத்தது..

“சொல்லுங்க டாக்டர்” என..

“இவங்க உங்களைப் பார்க்கணும் சொன்னாங்க” என,

“சொல்லுங்க மேம்” என்றான் வர்ஷினியைப் பார்த்து.. “ரியல்லி சாரி, எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது.. என் ஹஸ்பன்ட் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்!” என்றவள்.. “நான் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ முடியுமா?” என்றாள்.

“இல்லை, தேவையில்லை” என்றவன்.. “நாங்க இந்த ஹாஸ்பிடல் விலை பேசிட்டோம், அடுத்த மாசம் சைன் ஆகுது. மோஸ்ட்லி டைம் கூட தேவையிருக்காது!” என,

“என்ன ஹாஸ்பிடல் கைவிட்டு போகப் போகிறதா?” ஐஸ்வர்யாவிற்கும் அதிர்ச்சி..

“நோ ப்ளீஸ், என்னால உங்க லோன் கேன்சல் ஆகி, அதனால உங்க ஹாஸ்பிடல் கைவிட்டு போகற நிலைமை வேண்டாம்” என்றாள் தன்மையாக.

“இது முடிஞ்சு போன விஷயம் மேம்” என்றான் பேச்சு முடிந்தது என்பது போல.

“யோசிக்கலாமே, விக்கறது ரொம்ப பெரிய விஷயம்!” என ஐஸ்வர்யாவும் சொல்ல,

“விக்காம என்ன பண்ண டாக்டர்.. நீங்க இங்க இருப்பீங்கலான்னு கேட்டு தானே எல்லா எக்யுப்மென்ட்சும் வாங்கினோம்.. அதுல எவ்வளவு இன்வெஸ்ட் செஞ்சிருக்கோம்.. நீங்க இப்போ ரிசைன் பண்றீங்க”

“யாரை போய் உங்க அளவுக்கு எஃபீஷியண்டா நாங்க திரும்ப சேர்ப்போம்.. தேடினோம் கிடைக்கலை.. இந்த இடம் வாங்கறதுலயே எங்கம்மாவோட சம்பாத்தியம் முழுசும் போச்சு.. கட்டினது முழுசும் பைனான்ஸ் பணத்துல.. இதுல வேற கடனை வாங்கி தான் எக்யுப்மென்ட்ஸ் எல்லாம் வாங்கினோம்”

“எங்களால சமாளிக்க முடியலை, வேற ஆப்ஷன் கிடையாது டாக்டர்” என்றான்.

“ஏன்? ஏன் நீங்க வேலையை விட்டு நிக்கறீங்க” என்று வர்ஷினி ஐஸ்வர்யாவிடம் கேட்க,

“இது என்னடா இவள் இப்படிக் கேட்கிறாள்” என ஐஸ்வர்யா பார்த்து இருந்தாலும் பதில் சொல்லவில்லை…

“நீங்க சைன் பண்ணின காண்ட்ராக்ட் கூட உங்களுக்கு நினைவில்லையா டாக்டர்.. ஆக்சுவலா பார்க்கப் போனா நீங்க எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும்.. நாங்க அதைக் கூட கேட்கலை” என,

அது ஒரு வகையில் ஐஸ்வர்யாவிற்கு கோபத்தைக் கொடுக்க.. “நான் எதுக்கு கொடுக்கணும்.. வொர்கிங் அட்மாஸ்பியர் நல்லா இல்லைன்னா நான் என்ன பண்ண? எல்லாம் எனக்கு டாலரேட் பண்ணனும்னு ஒன்னும் கிடையாது!” என,

அதுவரையில் பேசாமல் இருந்த அஸ்வின் ஐஸ்வர்யாவிடம் “என்ன டாலரேட் பண்ணின நீ, என்ன நடந்தது” என்றான் கோபமாக.

“அச்சோ, இவன் இருப்பதை மறந்து விட்டோமே” என நொந்து கொண்டவள்..

“ஒண்ணுமில்லை” என்று அவசரமாகத் தலையாட்ட,

“என்ன ஒண்ணுமில்லை? சொல்லு!” என்று மிரட்டினான்.

“ஏன் அவங்களை மிரட்டுறீங்க” என சஞ்சய் கேட்க,

“ஏன் அதுல உங்களுக்கு என்ன வந்தது?” என்று அஸ்வின் சஞ்சய்யைக் கேட்க,

“இப்படித் தான் அன்னைக்கு வந்து என் தம்பியை அடிச்சிட்டு போனாங்க உங்க கணவர்.. இப்போ யாரை திரும்ப கூட்டிட்டு வந்து இவங்களை மிரட்டுறீங்க” என்று வர்ஷினியைப் பார்த்து கேட்க..

“நாங்க மிரட்டுறது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணுனீங்க இவ ரிசைன் பண்ற அளவுக்கு? முதல்ல அதைச் சொல்லுங்க!” என அஸ்வின் எகிற,

“அஸ்வின் என்ன பேசற நீ?” என ஐஸ்வர்யா பதற..  

“அஸ்வின்” என்ற வர்ஷினியின் ஒரு அதட்டல் அஸ்வினை நிதானப்படுத்தியது..

“என் கணவர் அடிச்சிட்டார் மட்டும் சொல்றீங்களே, உங்க தம்பி பேசினது நியாயமா? ஒரு டாகடர் கிட்ட வர்ற பேஷன்ட்சை நீங்க இப்படி தான் கிரிடிசைஸ் பண்ணுவீங்களா? தப்பில்லையா?”

“அது கொஞ்சம் அதிகம் தண்டனையா போச்சு! அது தப்புன்னு புரிஞ்சு தான், நான் சரி பண்ண வந்திருக்கேன்! இப்போ எதுக்கு தேவையில்லாத பேச்சுக்கள்.. என்னால உங்க ஹாஸ்பிடல் கைவிட்டு போறதை என்னால அனுமதிக்க முடியாது டாக்டர்!” என்றாள் வர்ஷினி.

“என் ஹாஸ்பிடல் நான் அதை விப்பேன், என்ன வேணா செய்வேன், நீங்க என்ன பண்ண முடியும்!”

“விக்க வைக்க முடியும்னா? விக்காம இருக்க வைக்க முடியாதா?” என,

“ஹச்சோ” என தலையில் கைவைத்துக் கொண்டால் ஐஸ்வர்யா.. நேரடியாக வர்ஷினியிடமே “நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி” எனச் சொல்லியவள்,

“ஏன் சர் பிடிவாதம் பிடிக்கறீங்க?” என்று சஞ்சயிடம் திரும்பப் பேச..

“வேற என்ன பண்ண முடியும்? விதார்தை அடிச்சவங்க ஹெல்பை நான் ஏத்துக்க முடியாது” என தெளிவாகச் சொல்ல..

“உங்க தம்பியை அடிச்சவங்க உதவியை நீங்க ஏத்துக்க முடியாது! ஆனா உங்கம்மாவோட சம்பாத்தியத்தை அழிக்க முடியுமா?” என,

சஞ்சய் அசந்து நின்றான்.

“இது என்னோட ஹஸ்பன்ட் மணி கிடையாது டாக்டர்.. எனக்கு என்னோட சொந்த இன்கம் இருக்கு.. ஈஸ்வர்க்கு கொஞ்சம் கம்மியா, என் அப்பா கொடுத்த பிசினஸ்! அது மட்டுமில்லாம.. என்னோட வேலை இருக்கு.. அதுவுமே ஹெல்ப் பண்ற அளவுக்கு இருக்கு.. சோ இதுல அவர் எங்கேயும் இல்லை! என்னோட ப்ரபோசல் இது!”

“என்னோட மணி தேவையே இல்லைன்னா, இன்னும் ஒரு ப்ரபோசல் இருக்கு.. பேங்க் அப்ரோச் பண்ணுங்க.. நான் சுயுரிடி கொடுக்கறேன், கண்டிப்பா அமௌன்ட் சாங்க்ஷன் ஆகும்!” என்று வர்ஷினி பேச..

அதில் தேர்ந்தெடுத்த ஒரு நிறுவனரின் பேச்சும் ஒரு ஆளுமையும் இருந்தது..

சஞ்சய் தயங்க..

“சரி! இந்த ப்ரபோசல் அப்படியே இருக்கட்டும். இதை நீங்க அக்சப்ட் பண்றதை தவிர வேற சாய்ஸ் நான் குடுக்கப் போறது இல்லை” என வர்ஷினி சொன்ன விதம்.. “இதனால் தான் ஈஸ்வர்க்கு இவளைப் பிடித்ததோ? என்னால் எல்லாம் இப்படிப் பேச முடியுமா?” என நினைத்துப் பார்த்திருக்க..

ஐஸ்வர்யாவைப் பார்த்து “ஏன்? நீங்க ரிசைன் பண்ற அளவுக்கு இவரோட லூசு தம்பி என்ன பண்ணினான்?” என,

“ஐயோ” என்று பார்த்திருந்தனர் ஐஸ்வர்யாவும் அஸ்வினும்..

“என்ன கலாட்டா பண்றீங்களா?” என சஞ்சய் எழுந்து விட..

“உங்களுக்கு வர்ற கோபம் தான் எல்லோருக்கும்! அதுக்கு தான் சொன்னேன்! பொண்ணுன்னு லிமிட்ல நிக்கறீங்க.. பையன்னா என்னடான்னு கேட்டு இருக்க மாட்டீங்க! சட்டையை பிடிச்சு இருக்க மாட்டீங்க.. அதை தான் என் வீட்டுக்காரர் பண்ணியிருப்பார், அந்தக் கோபம் லோன் கேன்சல் பண்ணியிருப்பார்.. அதை சரி பண்ண ஒரு வாய்ப்போட வந்தா அக்சப்ட் பண்ணிக்கணும், அதை விட்டு என் தம்பியை அடிச்சிட்டாங்கன்னு பேசிட்டு நிற்கக் கூடாது, ஹாஸ்பிடல் விக்கறேன்னு முட்டாள்தனம் பண்ணக் கூடாது!” என வர்ஷினி பேசி,

“ஏன் நிக்கறீங்க? உட்காருங்க!” என சஞ்சயிடம் கை நீட்டி சொன்ன விதத்தில்.. 

“பா என்ன வகையான மிரட்டல் இது? என்ன ஆளுமை?” அவனிடத்தில் வந்து அவனையே அமரச் சொல்கிறாள்! ஐஸ்வர்யா வர்ஷினியை ஆ என தான் மனதிற்குள் பார்த்தாள்.. இவளிடத்தில் ஈஸ்வர் விழுந்தது தவிர்த்திருக்க முடியாது என தான் தோன்றியது! தவறு செய்த ஈஸ்வரை எப்படி நியாயப் படுத்துகிறாள் என தோன்ற ஐஸ்வர்யாவின் முகத்தில் முறுவலே வரப் பார்த்தது.. இது சிரிக்கும் சமயம் அல்ல எனப் புரிந்து வர்ஷினியை விழி எடுக்காமல் பார்த்தாள்.

 “ஹப்பா, இவளின் வீட்டுக்காரனே பரவாயில்லை” என்ற முடிவிற்கு சஞ்சய்யை வர வைத்து விட்டாள்..

உடல் வலிமை அல்ல! மன வலிமை அல்ல!  செய்யும் செயல்களின் திண்மை, நேர்மை!

 

Advertisement