Advertisement

தேவ மஞ்சரி  –9  
ஆனானப்பட்ட ருத்ராவையே கலங்க வச்சது ஓர் கவிதைங்க வேதாந்த் தன் மனைவியாக வரப்போறவள் எப்படியெல்லாம் இருக்கணும்னு எழுதி வச்ச ஒரு கவிதை.
என் காதல் கண்ணம்மா
புலர்கின்ற பொழுதினில் நின் மஞ்சள் முக தரிசனம் கண்ணம்மா,
பிறை நுதல் நெற்றியின் திலகம் எனை வாழ்த்திட கண்ணம்மா,
எனை மட்டும் தொடரும் கருவண்டு விழிகளடி கண்ணம்மா,
ரோஜாக்கள்பூக்கும் கன்னங்களில் இதழ் பதித்திட கண்ணம்மா,
அமுதூறும் இதழ் இருவரி கவிதை வாசித்திட கண்ணம்மா,
இடை தவழும் கரும்தோகை மென்மை சுகித்திட கண்ணம்மா,
என் வாழ்க்கையாகிவிடடி கண்ணம்மா என் காதல் கண்ணம்மா.
கண்கள் சிமிட்டிடும் ஒற்றைக்கல் மூக்குத்தி கண்ணம்மா,
சங்குக் கழுத்தில் உறவாடும் பொன்சங்கிலி கண்ணம்மா,
பூஞ்சிறகு கைகளில் வழுக்கிடம் வளையடி கண்ணம்மா,
காந்தள் விரல்களின் மருதாணி சிவப்படி கண்ணம்மா,
இளமை வளைவுகளை அணைத்திடும் பொன்மஞ்சள் புடவை கண்ணம்மா,
அன்னநடை கொலுசின் சிணுங்கல்கள் கண்ணம்மா.
இவையாவும் நானாகிட மாட்டேனோ கண்ணம்மா என் காதல் கண்ணம்மா.
ஒரு குவளை தேநீர் மடிமீதினில் மங்கை பகிர்ந்தருந்தலாம் கண்ணம்மா,
முகம்பார்த்து பரிமாறும் வேளையில் முதல்வாய் உனக்கடி கண்ணம்மா,
உன் அச்சாரம் இன்றி தொடங்காது தினம் தொடராது ராத்திரிகள் கண்ணம்மா,
அலுத்து சலித்து நான் வரும்போதும் உன் புன்னகையில் உயர்ப்பேனடி கண்ணம்மா,
பசி பிணி என்றாலும் அன்னையென்று உன் மடி சொர்கம் கண்ணம்மா,
மோகத்தில் பிடியிடை துவண்டாலும் என் நெஞ்சமே மஞ்சமடி கண்ணம்மா,
நீயே நானாகி வாழ்வோமா கண்ணம்மா என் காதல் கண்ணம்மா.
“நீயே சொல்லு இதில ஒரு விஷயம் உனக்கு செட்டாகுமா? இதுல வேதாந்த் உன்ன லவ் பண்ணி உன் கல்யாணம் முடிஞ்சு அதுக்கப்பறம் பொண்ணு பாத்து எங்க கல்யாணம், எனக்கில எனக்கில எனக்குஇல்லவே இல்ல”நாகேஷின் பணியில் புலம்ப அமரம்பித்தான் சுருட்டை.
கவிதையை படித்த மயக்கத்தில் இருந்த ருத்ரா சுருட்டையை முறைக்க ஆரம்பிக்க, அதை கூட கவனிக்காமல் தன் கவலையில் அழிந்திருந்தான் சுருட்டை.
“மனமிருந்தால் மார்க்கமுண்டு அனைவரும் சிந்தித்து வழியறிவோம் கவலை கொள்ளாதே நண்பனே” மஞ்சரி.
“ப்ரக்ருதிக்கே விரோதமான ஐடியா நான் ஒன்னு சொல்லவா?”மலையப்பன்.
“அது யாருடா அது ப்ரக்ருதி, பாக்க நல்லா இருபாலாடா?” தன் முக்கியமான சந்தேகத்தை சுருட்டை வினவ, பின் மண்டையில் ஓங்கி விழுந்தது அடி.
“நமக்கெல்லாம் ஒரு கவலைனா இவனுக்கு மட்டும் ஒரு கவலை இன்னும் ஒன்னு போடு ருத்ரா” மண்ணாங்கட்டி.
“நீ சொல்லிட்த்தொலையெண்டா” ஏழுமலை.
“இந்த அச்சம், மேடம், நாணம், பயிர்ப்பு இதெல்லாம் இவளுக்கே சொல்லித்தந்தால் என்ன” தன புருவங்களை உயர்த்தி மலையப்பன் வினவ.
அனைவர் முகத்திலும் சிந்தனை ரேகைகள் படர்ந்தது.
“முயற்சிப்போம் முயற்சி திருவினையாக்கும்”மஞ்சரி அவர்களின் சிந்தனையை கலைத்தாள்.
“அதெல்லாம் எங்க ருத்ராவால முடியும் இல்லாருத்ரா?” வினவியவாறே ருத்ராவை நோக்கி பார்வையை திருப்பினான் மண்ணாங்கட்டி, அவன் பார்வையை தொடர்ந்த அனைவரும் திருடனுக்கு தேள் கொட்டியதை போல் முழித்துக்கொண்டு காதுவரை செயற்கையாய் இதழ்களை விரித்துகொண்டு தொண்டைக்குழி ஏறி இறங்க நின்றிருந்தவளை கண்டதும் பொங்கி வந்த சிரிப்பினை இதழ்களுக்குள்ளே புதைத்தனர்.
ருத்ராவின் பயிற்சி தொடங்கியது
அறையில் ஒரு பெரிய பலகையை கொண்டுவந்து மாறியவர்கள், ருத்ராவை நடுவில் நிறுத்தி சுத்தி சுத்தி வந்தனர்.
” வேதாந்த்தோட கவிதைப்பிரகாரம் அவருக்கு நம்ம சிவாஜி ரஜினி மாதிரி தமிழ் தொட்ட பொண்ணுதான் வேணும்னு புரியுது” ஏழுமலை.
“க்கும் அது எங்க இங்க இருக்குது நெஸ்ட்டு” சுருட்டை.
“முதலில் தேவையானதை வரிசை படுத்துங்கள் பிறகே நாம் செய்ய வேண்டியது புலப்படும்”மஞ்சரி.
“கவிதைல இருந்து நமக்கு கிடக்கிற டிப்ஸ் என்னனா
1.நெத்தில பொட்டு, 2. ஓத்தகல் மூக்குத்தி, 3. நீளமான முடி,4. புடவை,5. கழுத்துல செயின்,6. கைல வளவி,7. கால்ல கொலுசு” மலையப்பன் பலகையில் வரிசை படுத்த.
“டேய் டேய் மருதாணி மறந்துட்டாயே” ஏழுமலை
“ரைட், இது எல்லாத்துக்கும் மேல வெட்டகம் வேற பட சொல்லிதரனும்” சுருட்டை
“நம்ம லிஸ்ட்ல பெரிய ஓட்ட இருக்குடா, ருத்ராவுக்கு பாய்கட் முடிடா ” அலறினான் ஏழுமலை
” டேய் நாம சினிமாக்காரங்கடா இது ஒரு பெரிய விஷயமா” மலையப்பன்
“ஹி ஹி ஆமால” ஏழுமலை
“ரொம்ப பண்ணாதீங்க டா, நம்ம ருத்ரா அழகுடா இதெல்லாம் பண்ணா மகாலக்ஷ்மி மாதிரி இருப்பா”மண்ணாங்கட்டி
“இவன் ஒருதேன், எப்பப்பாரு ருத்ரா புகழ் பாடிகிட்டு” அலுத்துக்கொண்டான் மலையப்பன்
“என்னடா பெருசா பேசுறீங்க மூக்குத்தி மட்டும் குத்திட்டா சரியா போய்டும், மத்த எதுவும் பெரிய விஷயம் இல்ல” மண்ணாங்கட்டி
“அப்போ மூக்குத்தியில இருந்து ஸ்டார்ட் பண்ணுவோம், சரிதானே மஞ்சரி” ஏழுமலை
    வீடே அல்லோகலப்பட்டுக்கொண்டு இருந்தது, அது வேற ஒன்னும் இல்லங்க ருத்ராவுக்கு மூக்கு குத்த முயற்சிபண்ணிட்டு இருகாங்க
” டேய் சாண்டு நீ கால பிடி, ஹில்சு நீயும் ஸ்பிரிங்கும் கையைப்பிடிங்க நா மமுகத்த ஆடாம பிடிக்கிறேன், யோவ் ஆசாரி என்ன பேந்த பேந்த முழிக்கிற வந்து குத்துயா ரொம்பநேரம் தாக்குப்பிடிக்க முடியாது” மலையப்பன் அனைவருக்கும் கட்டளையிட ஒருவழியாய் மூக்கு குத்தும் படலம் முடிந்தது
   அடுத்து பின்னலிட மஞ்சரி கற்று கொடுக்க, பல மணிநேர முயற்சிக்கு பின் அவள் தாலயில் இருந்த சவுரி முழுவதும் முடுச்சுகளாய் மாறிப்போயிருக்க பரிதாபமாய் நின்றாள் ருத்ரா. அவள் நிலை கண்டு வாய் பொத்தி சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தாள் மஞ்சரி. இறுதியில் ருத்ராவுக்கு பதில் நண்பர்கள் நால்வரும் பின்னலிட கற்றுக்கொண்டனர்.
  அடுத்து புடவை அணியவும் நளினமாய் நடக்கவும் பயிற்சி தொடங்கியது இதில் ருத்ரா நடந்ததை விடவும் விழுந்ததே அதிகமாய் இருந்தது. தலையில் கைவைத்து அமர்ந்த மஞ்சரி ” பூமியில் புதையல் உண்டு என்பது நான் அறிந்ததே ருத்ரா ஆனால் அதை நீ இப்படித்தான் எடுக்க வேண்டுமா?”
” நா என்ன பண்ணட்டும் எங்க எங்கயோ பொய் மாட்டுது எப்டியாப்பட்ட ஸ்டான்ட்டையும் ஒரே டேக்ல செஞ்சிடுவேன் ஆனா இது” பெருமூச்சு எழுந்தது ருத்ராவிடம்
  ருத்ராவின் நடையையும், உடையையும் மாற்றுவதில் ப்ரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர் நண்பர்கள் மாதங்கள் கழிந்ததில் நடந்த ஒரே நல்ல விஷயம் ருத்ராவின் முடி இயற்கையாகவே முதுகுக்கு வளர்ந்திருந்தது.
  ஒருநாள் தலையை தலையை புடவை அணிந்து அண்ண நடையிட்டு வந்த ருத்ராவை நண்பர்கள் வெற்றிப்புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே காலில் மாட்டிய புடவை அவிழ்ந்தது பாவாடை அணிந்து பழக்கம் இல்லா ருத்ரா மேலே புடவையும் கீழே ஜீன்ஸுமாய் விழித்தபடி நிற்க முதலில் அதிர்ந்த நண்பர்கள் பின் விழுந்து விழுந்து சிரித்ததில் கடுப்பானாள் ருத்ரா புடவையை அவிழ்த்து வீசிவிட்டு நண்பர்களை அடிக்க துரத்த அலறி அடித்து ஓடிய நண்பர்களை கண்டு மஞ்சரி மனம் விட்டு சிரித்தாள்
“தான் இவ்வளவு மனம் விட்டு சிரிப்பது இங்கு சேர்ந்த பின்புதான், என்னை மகிழ்வித்த இவர்களின் நகை என்றும் வாடாமல் காத்தருள்வாய் எம்பெருமானே” மனதார வேண்டிக்கொண்டாள்.
இவர்களின் நகை மறையும் நாள் வெகு விரைவில் என்று காலம் கைகொட்டி சிரித்தது.

Advertisement